பிக்பாஸில் ஏன் இப்படி மொக்கை போடுகிறார்கள்..?
இதுவரைக்கும் கொடுத்த டாஸ்க்குகள் எல்லாமே அப்படி ஒன்றும் பிரமாதமானவை இல்லை.
இந்த வாரம் பாட்டுப் போட்டா ஆடணும்... அதுவும் என்ன செய்து கொண்டிருந்தாலும் அப்படியே விட்டுட்டு ஓடிவந்து ஆடணும்... இதுதான் பட்ஜெட் டாஸ்க்.
பிக்பாஸ் யார் யாருக்கு எந்த நடிகரின் வேடம் என்றும் என்ன பாடல் என்றும் சொல்லியபடி, நடிகர்/ நடிகை போல் உடையணிந்து, அவர்களின் நடை, உடை, பாவனையோடு வலம் வர ஆரம்பித்தார்கள்.
சொன்ன பாடல் ஒலிக்கும் போது யாருக்கான பாடலோ அவர் லிவிங்க் ஏரியாவில் போடப்பட்டிருக்கும் சிறிய ஸ்டார் வடிவ மேடையில் ஆட வேண்டும்.
காலையில் பள்ளி எழுச்சிப் பாடலுக்கு சாக்சி வலிப்பு வந்த வான்கோழி மாதிரி ஒரு ஆட்டம் போட்டாச்சு... பின்னே நாங்க நாமினேசன்ல இருக்கமுல்ல... ஆட்டத்தைப் பார்த்து கொஞ்ச நாள் ஆடட்டுமேன்னு விட்டு வைப்பாங்கன்னு கணக்குப் போட மாட்டோமா என்ன...
நடிகர் / நடிகையின் கெட்டப்பும்... நடை, உடை, பாவனையும்... அய்யோ பாவம்... ஒரிஜினல் பார்த்தா ஊரை விட்டே ஓடினாலும் ஆச்சர்யமில்லை...
சின்னக்கவுண்டர் விஜயகாந்தாய் சரவணன்... திடீர்ன்னு பார்த்தா கேப்டன்தான் உள்ள வந்துட்டாரோன்னு தோணும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடந்து கொண்டார்.
ஜானி ரஜினியை கொஞ்சமாய் தன் நடை உடையில் கொண்டு வந்தார் சேரன். மதுமிதாவும் உருளைக்கிழங்கு வெட்டும் இடம் செம.
அஜித்தாய் கவின்... அய்யோ பாவம்.
சிம்புவாய் சாண்டி... முடியல போதும். டான்ஸ் மாஸ்டர் என்றாலும் அவர் ஆடிய டான்ஸ் அந்தளவுக்கு இல்ல...
விஜய்யாய் முகன்... ம்ம்ம்ஹூம்.
கமலாய் தர்ஷன்... ஹிஹி.
பத்மினியாய் அபிராமி... பரதம் தெரியும் என்ற ஒரே காரணமாக இருக்கலாம்.
தமனாவாக சாக்சி... அய்யோ அய்யோ.
குஷ்புவாக ஷெரின்... சொல்வதற்கில்லை.
சரோஜாதேவியாக மது... ஒவருக்கும் ஓவர் நடிப்புடா சாமி.
த்ரிஷாவாக லாஸ்லியா... பாவம் த்ரிஷா. டான்ஸ் மட்டும் சூப்பர்.
ரேஷ்மாவுக்கு...?
சரவணன் பாத்ரூம் போனப்போ பாட்டுப் போட்டாங்க...
கவின் சாப்பிட்டப்போ பாட்டுப் போட்டாங்க...
எல்லாப் பாட்டுக்கும் எல்லாருமே கூட்டமா (குறிப்பா பெண்கள்) ஆடுறாங்க...
சரவணன் சாண்டியிடம் சாக்சிக்கும் ஷெரினுக்கும் நடிக்கவே தெரியலைன்னு குற்றம் சொல்கிறான் கவின்.
மேலும் அபி தாமதமாக வந்தால் மணி ஒலித்தது... இன்னும் பிரச்சினையெல்லாம் வரும்...கடைசியில நான் சரியாத்தானே வந்தேன்னு நாடகம் போடும் என்றும் சொன்னான் கவின்.
அதே நேரம் லாஸ்லியாகூட அபிராமிக்கு பின்னேதான் வந்தார்... ஆனா கவின் கண்ணுக்கு அபிராமிதான் தெரிஞ்சிருக்கார்.
லாஸ்லியாவிடம் கடலை போட நேரம் பார்த்துக் காத்திருந்து தல போல ஒட்டியும் ஒட்டாமலும் பேசி தன் காதலை மெல்லக் கடத்திக் கொண்டிருந்தான் கவின்.
சரோஜாதேவி மாதிரிப் பண்ணுன மது, டாஸ்க் முடிஞ்சு இலங்கை மற்றும் மலேசியா பற்றி லாஸ்லியா மற்றும் முகன் சொல்லிக் கொண்டிருந்த போதும் கண்ணைப் படபடவென அடித்து செயற்கைப் புன்னகை செய்து கொண்டிருந்தது கடுப்பைக் கிளப்பியது.
மொத்தத்தில் இந்த வாரம் ஆடல் பாடல் வாரம்.
ஆடல் பாடல் நடந்து கொண்டிருக்கிறது... குத்தாட்ட நடிகைகளுக்கு எல்லாம் இன்னும் சான்சு வரலை... இன்று கிடைக்கும்... ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டம்.
பிக்பாஸ் தொடரணுமா..?
-'பரிவை' சே.குமார்.
0 எண்ணங்கள்:
கருத்துரையிடுக