மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 18 ஜூலை, 2019

பிக்பாஸ் : சாக்லெட்டும் தண்ணீரும் கூடவே கடிகாரமும்

Image result for பிக்பாஸ் - 3 நாள் 23 படங்கள்

பிக்பாஸ் - கடந்த இரண்டு நாட்களாக மொக்கையும் மோகனின் முத்தமுமாகத்தான் கழிந்தது. வனிதா இல்லாத குறை நன்றாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. முன்னரே சொன்னது போல் நானே சின்னம்மா என மீரா களத்தில் இறங்கினாலும் களமாட முடியாமல் கண்ணீருடனே நிற்கிறது.

செவ்வாய்க்கிழமை ஓளிபரப்பப்பட்ட திங்கள்கிழமை நடந்து என்னவில்... என்னத்தை நடந்துச்சு... ஒண்ணுமே நடக்கலை என்றாலும் சின்னப்பிள்ளைத்தனமான பிரச்சினைகள்தான்... வாழைப்பழம், திரும்பத் திரும்பப் பேசுறே காமெடிகளின் பிக்பாஸ் வெர்சன் மற்றும் மோகனின் மோகனங்கள் மட்டுமே.

மோகனின் வயது காரணமாகக் கூட பாத்ரூம் கழுவ முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம்... ஆனாலும் அவரே எல்லாம் பார்த்துடுறாரு... நான் வாஷ்பேசந்தான் கழுவுறேன் இருந்தாலும் எனக்கு அந்தத் தண்ணி ஒத்துக்கலை... என்னை சமையல்ல போட்டுடுன்னு தலைவி சாக்சியிடம் சொன்னதில் அவருக்கு பாத்ரூம் கழுவுவதில் உடன்பாடில்லை என்பதாகவேபட்டது. தானே அந்த அணியின் தலைவர் என்கிற போது மற்றவர்களிடம் தன் நிலையை விளக்கியிருக்கலாம் அதைச் சாக்சியிடம் போய்ப் பேச வேண்டியதில்லை... சமையலா அங்க உங்க எதிரி சரவணன் இருக்காரு.... வச்சிச் செஞ்சிருவாரு.. என்று சாக்சி உண்மையைச் சொல்ல, அப்ப பாத்திரம் சுத்தம் பண்றேன்னு சொல்ல, அங்கயும் தண்ணிதானே இருக்குன்னு சாக்சி சொல்லவும்... விளக்கெண்ணெய் குடித்த வெள்ளாடு நிலமை ஆயிருச்சு அவருக்கு.

அப்புறம் சாக்சி பேச, சேரன் இதை எங்ககிட்டயே சொல்லியிருக்கலாமே என்றதும் நான் தலைவிக்கிட்டதான் சொன்னேன்னு குரலை உயர்த்தினார். ரேஷ்மா மற்றும் அபி அவர் முன்னரே பாத்திரம் கழுவ முடியலைன்னு சொன்னதை எடுத்து இயம்பியதும் சாக்சிதான் சொன்னா... நான் சமையல்தான் கேட்டேன்னு மாற்றினார்... அப்புறம் எப்பவும் போல் பொரணி டிஷ்கசன்... அதுல ஒரு பியூட்டி என்னன்னா சாக்சியோட குசுகுசுன்னு பேசிட்டு வெளிய வந்த மோகன், அங்க லாஸ்லியா நிக்கவும் என்ன செய்யுறதுன்னு தெரியாம 'நீ நல்லவள்'ன்னு ஏதோ பேச, நீ என்னத்தையோ பேசுய்யான்னு சிரிச்சிக்கிட்டே லாஸ்லியா போயாச்சு.

அதுக்கு அப்புறம் ரேஷ்மா, அபி, சாக்சி பேசுறாங்க... எல்லாருமே முதுகுக்குப் பின்னாலதான் பேசுறாங்க முகத்துக்கு நேரா பேசுறதில்லைன்னு சாக்சி... யாரு சாக்சி சொன்னாங்க மோகன் ஐயாக்கிட்ட... அப்ப ரேஷ்மாவும் நின்னாங்க... இவங்க யாருமே முதுகுக்குப் பின் பேசுபவர்கள் அல்ல... பொரணி மட்டுமே பேசுவார்கள் மறைவாய்ப் போய்... பேச்சு வார்த்தை முடிந்ததும் வலுக்கட்டாயமாக மூவருக்கும் முத்தம் கொடுத்து... போனஸாய் அவர்களிடமும் வாங்கி தன் அன்றைய கட்டிக்கொடு வைத்தியத்தில் வரவை வைத்துக் கொண்டார் மோகன். எனக்கு மகள்கள்தான் என்று சொல்லி கேமராக்கள் முன்னிலையில் அடிக்கடி கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார்... நம்ம வீட்டுல பெத்த பிள்ளைக்கு முத்தம் கொடுத்தாக் கூட, ஆமா சின்னப் பப்பா... தூக்கி வச்சிக் கொஞ்சுறியளோன்னு திட்டுறானுங்க... ம்... என்ன உலகமய்யா இது.

அடுத்து நிகழ்ந்ததுதான் வாழைப்பழ காமெடி... சாக்லெட் விவகாரத்தில் கவினுக்கு இருமுனைத் தாக்குதல்... கவினைப் பொறுத்தவரை 'மச்ச்சான்' அப்படின்னு சொல்லிக்கிட்டே, தேங்காய்க்காக நிக்கலை தேங்காய் உடைக்கிற இடத்துல நிக்கிற பிள்ளைங்க மேல சில்லுப்பட்டு காயங்கீயம் ஆயிடக் கூடாதுன்னுதான் நிக்கிறேன்னு சொல்ற மாதிரி, தானே காதலைச் சொன்ன அபியை அத்துவிட்டுட்டு சாக்சி, லாஸ்லியான்னு இரட்டை மாட்டு வண்டியில ஜம்முன்னு போயிக்கிட்டு இருந்தான். சாக்சி லவ்வைச் சொல்ல, சரியின்னு அது பின்னால போனவனுக்கு இதுக்கிட்ட கிரிசுகெட்ட குணம் இருக்குன்னு தெரிஞ்சு ஷேப்பா ஒதுங்குறப்போ லாஸ்லியா மெல்ல உள்ள வர, இது நமக்குத் தோதாயிருக்கும்ன்னு அவனும் கொஞ்சமாய்ச் சாய, சாக்லெட் ரூபத்தில் வந்தது பிரச்சினை.

எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்த தலைவி சாக்சி, கவினுக்கும் ஒண்ணு கொடுத்துவிட்டு தன்னோட சாக்லெட்டையும் கொடுக்கிறார். லாஸ்லியாவுக்கு கவின் ஒரு சாக்லெட் கொடுக்கிறார். இந்த சாக்லெட் பரிமாற்றம் போட்டுக் கொடுப்போர் சங்கத்திற்குள் லாஸ்லியா மூலம் வர, நான் கொடுத்த சாக்லெட் எங்கே... அவகிட்ட கொடுத்தியான்னு சாக்சி கவினுக்கிட்ட கேட்க, மச்சான் நீ ஒரு சாக்லெட் எனக்குக் கொடுத்தே... அப்புறம் உன்னோட சாக்லெட்டையும் எனக்குக் கொடுத்தே... அப்ப எங்கிட்ட ரெண்டு சாக்லெட்டா... இப்ப நான் லாஸ்லியாக்கிட்ட நீ கொடுத்த சாக்லெட்டைக் கொடுத்தேன்... ஆனா நீ கொடுத்த சாக்லெட்டை நாந்தான் வச்சிருக்கேன்' அப்படின்னு ரெண்டு பழத்துல ஒண்ணு இந்தாருக்கு கதையா எதையோ சொல்ல சாக்சி என்னைத் தனியா விடு அப்படின்னு கவினை அடிக்காத குறையாச் சொல்லிட்டுப் போக, அங்கிட்டு லாஸ்லியா சேரனிடம் அழுதுக்கிட்டு இருந்துச்சு... என்னமோ சேரன் கம்பெடுத்து கவினை அடிக்கப் போற மாதிரி சின்னப் பிரச்சினைதான்... நீங்க அடிச்சிக்கிடுச்சுப் புடாதீங்கன்னு ரேஷ்மா ஏத்திவிட்டுச்சு. ஆனாலும் தந்தைப் பாசம் சேரனின் கண் கலங்கியதில் தெரிந்தது. சத்தியமாக மோகன் வைத்யாவின் பாசமாய் இல்லை. அணைப்பிலும் லாஸ்லியா நெஞ்சோடு சாய்ந்து கிடந்ததிலும் அப்பா மகள் உறவுதான் தெரிந்தது.

அப்புறம் பிக்பாஸ் பட்ஜெட் டாஸ்க்கை ஆரம்பித்தார். கடிகாரத்தோட அலாரத்தை இத்தனை நொடிக்குள் நிப்பாட்டிட்டா 700 மதிப்பெண்கள் என்றும் இதேபோல் நாலு முறை நடத்தப்படும், மொத்தம் 2800 மதிப்பெண்கள் என்றும் சொன்ன நொடிக்குள் நிப்பாட்டவில்லை என்றால் ஒவ்வொரு 10 நொடிக்கும் 100 மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் சொன்னார்.முதல் முறை சாண்டியும் மீராவும் அவர்களுக்கு உதவ சேரன் சென்றார். சொன்ன செகெண்ட்ஸ்க்குள்ள நிப்பாட்டல என்பதால் 600 மதிப்பெண்கள்... வெளியில் வந்த மீராவை கவின் ஜாலியாய்ச் சீண்ட, 'போர்ட்ராய்' எல்லாக் கிரிடிட்டுமே சாண்டிக்குத்தான் போகுது... நான்தான் எடுத்தேன்... அவன் பரிச்சிட்டான்... மக்கள் முன்னாடி நான் எப்பவுமே தப்பாத்தான் போர்ட்ராய் பண்ணப்படுறேன்னு கண்ணுல ஜலம் வச்சி டீச்சர் என்னைச் சும்மா சும்மா கிள்ளிட்டான்னு ஆரம்பிச்சி வச்சிச்சு... என்ன திரும்பத் திரும்ப பேசுறேன்னு வடிவேலு கணக்கா பேசிச்சா.... ஸ்ஸ்ஸ்... அப்பா அதை எழுதணும்ன்னா... சரி விடுங்க அடுத்த பதிவுல எழுதுவோம்.

லாஸ்வியாவும் 'அவ கூட கதை... உங்களுக்குள்ள பிரச்சினை இல்லைன்னா நான் உங்கூட கதைக்கிறேன்'னு சாக்லெட்டைத் திருப்பித் தர, கவின் பஞ்சரான புல்லட் மாதிரி ஆயிட்டான். சரி மேக்கப் போட்டிருக்கே... கலைஞ்சிரும் உள்ள போ அப்படின்னு எங்க சாக்சி பார்த்த மேலும் புயல் வலுவடைஞ்சிருமோன்னு விரட்டி விட்டான்.  அந்தப்புள்ள அவன் இதுக்குத்தான் விரட்டுனான்னு நல்லாவே தெரிஞ்சிக்கிட்டு சேரனிடமும் தர்ஷனிடமும் சொல்லியிருக்கு. அதை ரேஷ்மா கேட்டுட்டு சாக்சிக்கிட்ட சொல்லுச்சு. அது சேரன்கிட்ட போயி நின்னுச்சு... சேரனும் அவன் எதுக்குச் சொன்னான்னு தெரியாது... பட் நீ வர்ற மாதிரி இருக்கதாலதான் சொன்னாள்ன்னு சொல்றார். அவர் எதையும் மறைக்கலை... மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

என்ன  சாக்சி-கவின்-லாஸ்லியாவோட தில்லானா மோகனாம்பாள் கண்ணைக் கட்டுதுல்ல... அப்புடித்தான் எனக்கும் கட்டுச்சு... இதுக்கு இடையில டீச்சர் அடிச்சிட்டான் மீரா கதை வேற ரெண்டு நாளா ஓடுச்சு... சரி... சரி... கொஞ்சம் ரிலாக்ஸா சாக்லெட் மற்றும் மீரா கதையை அடுத்த பதிவுல பார்ப்போம்.

அதுக்கு முன்னாடி ஜாலியா கொஞ்சம்... சாக்லெட்டை திருப்பி வாங்கிட்டு சோகமா பாத்ரூம்ல போயி உட்கார்ந்தவங்கிட்ட சாண்டி என்னாச்சு... என்று கேட்க, விவரம் சொன்னதும் 'சரி விடு... அந்தச் சாக்லெட்டைக் கொடு... சாப்பிடலாம்' என்றதும் 'பேசிப் பாக்கிறேண்ணே... ஒத்துவரலைன்னா ஆளுக்குப் பிப்டி பிப்டி' சாப்பிடலாம்ண்ணே..' என்றான் கவின். ஆஹா... இதுதான் ஆண்கள்...

அதே மாதிரி மோகனை வழியனுப்ப சாண்டி பாட்டு வேற ரெடி பண்ணி வச்சிருக்கார். மோகனுக்குத் தெரியாது தெரிஞ்சா அம்புட்டுத்தான்... கண்ணுல ஜலம் வச்சிக்கிட்டு கேட்டியா சேதியவென கட்டிக்கொடு வைத்தியம் பண்ண ஆரம்பிச்சிருவாரு....

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

தங்கள் கண்ணோட்டம் அருமை

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

நலமா....

என்னதான் நடந்தாலும் இறுதியில் முடிவு வருந்தனே.. தங்களின் சிறப்பு பார்வைக்கு நன்றி. அண்ணா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுறுசுறுப்பாக இல்லையே...!

G.M Balasubramaniam சொன்னது…

வந்த சில நாட்களுக்குள் காதலாம் கத்தரிக்காயாம்