இரண்டு சீசன்களில் மக்களிடம் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்கள் இன்னும் எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக இருக்க வேண்டுமேயொழிய மரண மொக்கையாக நகரக்கூடாது.
இந்த சீசனில் கடந்த வாரங்களில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்குகள் எல்லாமே மொக்கையாகத்தான் இருந்தது என்றால் இந்த வாரம் மரண மொக்கையான டாஸ்க்கைக் கொடுத்திருக்கிறார். சேரன், மது, தர்ஷன், மீரா தவிர மற்றவர்கள் எல்லாம் பிக்பாஸ் என்ன சொன்னாரோ அதைச் செய்வதை விடுத்து மொக்கை போடுகிறார்கள்.
இப்படியே போய்க் கொண்டிருந்தால் சீரியல் பார்ப்பதே மேல் எனப் பெண்கள் சன் டிவிப் பக்கமாப் போயிருவாங்க பிக்பாஸ்... திரைக்கதையில் மாற்றம் கொண்டு வாங்க பிக்பாஸ்... அரைத்த மாவையே அரைக்காதீங்க பிக்பாஸ்... காதலை வைத்துக் கல்லாக் கட்டலாம்ன்னு மனப்பால் குடிக்காதீங்க.
எப்பவும் போல் கெட்ட ஆட்டத்துக்கு அப்புறம் பாம்புப்பட்டி, கீரிப்பட்டின்னு ரெண்டு அணியாப் பிரிஞ்சி பட்ஜெட் டாஸ்க்குக்கான விளையாட்டை ஆட வேண்டும் என்று சொன்ன பிக்பாஸ் ஒவ்வொருவரும் எப்படி விளையாட வேண்டும் எனச் சொன்னார்.
பாம்புப்பட்டிக்கு நாட்டாமை சேரன், கீரிப்பட்டிக்கு நாட்டாமை மது.
பாம்புப்பட்டியில வ.வா.ச உறுப்பினர்களாக கவின் - சாண்டி, வ.வா.ச தலைவியாக சாக்சி, கணவன் மனைவியாக முகன் - அபிராமி. நாட்டாமைக்கு அடுத்த நிலை மற்றும் திருடியாக ரேஷ்மா...
அப்புடியே அந்தப்பக்கம் போனாக்க அம்மாவாக மீரா, மகனாக தர்ஷன், மருமகளாக ஷெரின், மைனராக சேரன், எதுலயும் சேத்தியில்லாம துறுதுறுன்னு திரிய வேண்டிய லாஸ்லியா.
சேரன் குழுவுக்கு பாத்ரூமூம் பாத்திரம் கழுவுமிடமும்... ரெண்டுமே கழுவுற இடம்தான்... மதுமிதா குழுவுக்கு ஹாலும் சமையல் இடமும்... சாப்பாடு வேணுமின்னா தட்டத் தூக்கிட்டுப் போயி அவங்க கொடுக்கிற சின்ன டாஸ்க்கை செஞ்சிட்டு வாங்கிக்கணும்... அதே போல அவங்க பாத்ரூம் போகணுமின்னா குடத்தை எடுத்துக்கிட்டுப் போய் அவங்க சொல்ற டாஸ்கைச் செஞ்சிட்டு போகணும்.
பிக்பாஸ் சொன்னதை உள்வாங்கியது மதுவும் சேரனும்... ஆனா கடைசி நாளில் யார் நல்லா நடிச்சாங்கன்னு கேட்டதும் மத்தவங்கள்ல யாரையாச்சும் ரெண்டு பேரைத் தூக்கிட்டு நிப்பானுங்க பாருங்களேன்... ஏன்னா மதுவும் சேரனும் பெரும்பாலானோரின் மனசுக்கு ஆகாதவர்கள்.
கவினும் சாண்டியும் என்ன செய்யணும்ன்னு சொன்னதை விட்டுட்டு ஏதோ செஞ்சிக்கிட்டு இருக்காங்க... அவங்க சித்தப்பு சரவணன் எதிரணி என்பதால் அங்கிட்டு ஒடுறானுங்க... சேரனையும் சந்தடி சாக்கில் திட்டுறானுங்க... முந்தைய பகுதியில் நைனாவாய் கலக்கிய சாண்டி இந்த டாஸ்கில் செய்வதெல்லாம் எரிச்சல் வருவதாய்த்தான் இருக்கிறது.
விளையாட்டின் விதியே ஜாலியான டாஸ்க்குக்களைக் கொடுப்பதுதான் என்பதை சேரன், மது தவிர யாரும் உள்வாங்கலைன்னுதான் தெரியுது. சாக்சியெல்லாம் என்ன செய்யுறோம்ன்னே தெரியாம செய்யுது... அபிக்கு முகனை கணவனாய் கொடுத்துவிட்டதால் முகத்தில் பூரிப்போ பூரிப்பு... அம்புட்டுப் பூரிப்பு... முகனும் கட்டிப் பிடித்து நிற்பதில்தான் கவனம் செலுத்துகிறான்... கவினுக்கு சாக்சி பின்னே திரியவே சரியா இருக்கு... கவின் அழுதான்... இனி திருந்திருவான்னு நினைச்செல்லாம் பிக்பாஸ் பாக்காதீங்க... அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க.
முன்முடிவுகளுடன் ஒரு விஷயத்தையோ ஒரு மனிதரையோ எதிர்க்கொள்பவர்கள் எப்பவுமே நான் பேசுவதுதான் சரியெனவே நிற்பார்கள்.. அடுத்தவரைப் பேச விடமாட்டார்கள்... அப்படியான ஒரு ஆள்தான் மீரா.... சேரனுடன் சண்டை போட வேண்டும் என்பதே அவரின் எண்ணமாய்... அந்த எண்ணத்துக்கு எண்ணெய் ஊத்த சரவணன்... எல்லாரும் கொடுத்தபடி நடக்கிறார்கள் என்பது தெரியாமலேயே விளையாடினால் என்னாகும்... அதுதான் நடக்கிறது. சம்பந்தமில்லாமல் சேரனுடன் மோதுகிறார். மனுசனுக்கு மரியாதை இல்லை என்றாலும் வயசுக்குக் கொடுக்கலாம்... ஒவ்வொரு வார விளையாட்டிலும் ஏதேனும் பண்ணி தான் இருக்கும் இடத்தை எல்லாருக்கும் காட்டுவதில் குறியாக இருக்கும் மீரா, என்ன ஏது என்பதைப் புரிந்து சண்டை போடலாம்.
சேரன் சரியாய்ப் பயணிக்கிறார்... என் முகத்தை இன்னும் காட்டலை எனக் கோபத்துடன் பேசுகிறார்... மது அடுத்தவர் முகத்தை வைத்து அவரின் குண நலனைச் சொல்லும் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். மீரா சரியாகப் பயணித்துச் சேரனை தாக்குகிறேன் என தன் கதாபாத்திரத்தில் இருந்து இறங்கிவிட்டார். மீராவைச் செமையாகத் தாக்குகிறான் தர்ஷன்.
'உனக்கு நாந்தானேம்மா கொள்ளி வைக்கணும்..? வைக்கிறேன் வைக்கிறேன்...' என்ற தர்ஷனின் டைமிங்க் காமெடியும் 'எந்தக் கையைப் புடிச்சி இழுத்தான்... வலது கையைத்தானே... அப்ப இடது கையையும் புடிச்சி இழு... அதுதான் தண்டனை...' என்ற சேரனின் தீர்ப்பும் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி இருந்தது.
அப்புறமெல்லாம் மரண மொக்கை... இதே மொக்கைதான் இன்றும் தொடரும் என்றால்... சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்றாகும்.
தர்ஷனுக்கு ஷெரினையும் முகனுக்கு அபிராமியையும் மனைவியாக்கியதுதான் பிக்பாஸ் இந்தப் போட்டியில் செய்த மிகப்பெரிய தவறு. முகனுக்கு லாஸ்லியாவையும் தர்ஷனுக்கு சாக்சியையும் ஆக்கியிருந்தால் கவினும் அபிராமியும் படும்பாட்டை ரசித்திருக்கலாம்... இப்ப முகனும் அபியும் லவ்வோ லவ்வு... கவினும் சாக்சியும் மறுக்கா லவ்வு... அப்புறம் எங்கிட்டு இந்தத் டாஸ்க் மக்களை லவ்வும்.
மதுவின் பேச்சு டாஸ்க் தாண்டி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்... மீராவின் செயல் எல்லாருக்கும் எரிச்சலூட்டும்.
இனிமே வயசுக்கு வந்து என்ன வராட்டி என்னன்னு கவுண்டமணி சொல்றது போல சரவணனன் எந்தப் போட்டியிலும் தீவிர நாட்டமெல்லாம் கொள்வதில்லை... தன்னோட டார்க்கெட் சேரனை ஒரு அடி அடிச்சாலோ போதும்ன்னு தள்ளியே நிற்கிறாரு.
போன பதிவில் சொன்னது போல் வெளியேற்றப்படலாம் என்ற எண்ணத்தில் மக்கள் மனதில் நல்ல பேர் வாங்க கவினோடு குலாவ ஆரம்பித்துவிட்டார் சாக்சி. லாஸ்லியா எந்த வேலையும் பார்க்காம அப்படியேதான் நாலு வாரமாச் சுத்திக்கிட்டு இருக்கு. எப்பத்தான் வேலையெல்லாம் பாக்குமோ தெரியலை. இந்த வாரமும் செல்லப்பிள்ளை கதாபாத்திரம்... வெளங்கிடும்.
ரேஷ்மாவுக்குப் பொறந்தநாளாம்.... ராத்திரி 12 மணிக்கு பாட்டுப் போட்டு... கேக் அனுப்பி... கூடவே பையன் பேசிய வீடியோவும் போட்டு எப்பவும் போல மகிழ்வாய் கொண்டாட வேண்டிய பிறந்த தினத்தை எழவு வீடாக்கி தன் கடமையை நிறைவேற்றிக் கொண்டார் பிக்பாஸ். சாண்டி அழுது தொலைச்சார்... இப்ப எல்லாரும் அழ ஆரம்பிச்சிட்டானுங்க... அதுவும் ரேஷ்மா அழுததையெல்லாம் பார்க்கும் போது... ஏன் பொறந்தோமுன்னு அழுகுறாங்களோன்னு தோணுது...
நாட்டுப்புறச் சேலைக்கட்டு அங்க இருக்க ஒருத்தருக்குக் கூட கட்டத் தெரியாதுன்னு ஊருக்கே தெரியும்... இவங்களுக்கெல்லாம் சேலை கட்டிவிட்டு மேக்கப் போட்டு விட்டங்க பட்ட கஷ்டத்துக்குக் கூட பலனில்லை... செத்தவன் கையில வெத்தலை பாக்கு வச்ச மாதிரி இந்தத் டாஸ்க்கை ஏனோதானோ செஞ்சிக்கிட்டு இருக்காங்க...
பிக்பாஸ் கொஞ்சம் அடிச்சி ஓட்டுங்க இல்லேன்னா சண்டி மாடுங்க அந்த இடத்தை மட்டுமே சுத்திச் சுத்தி வரும் என்பதை மனசில வையுங்க...
மொத்தத்தில் மரண மொக்கை...
அப்ப இன்னைக்கு...?
பிக்பாஸ் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
0 எண்ணங்கள்:
கருத்துரையிடுக