மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 5 ஜனவரி, 2016மார்கழிக் கோலங்கள் - 2

மார்கழி மாதம் என்றாலே எல்லாருடைய வீட்டு வாசலிலும் கலர்கலராய் பூக்கள் பூக்கும்... புறாக்கள் பறக்கும்... கிளிகள் கொஞ்சும்... மயில் ஆடும்... இப்படி அனைத்துமே கோலங்களாய்... அழகழகாய் ஜொலிக்கும்... ரோட்டில் போகும் போது எந்த வீட்டு கோலம் அழகா இருக்குன்னு பார்க்கத் தோணும்.. எல்லாருமே அவரவர் பாணியில் அழகாய்த்தான் போடுவார்கள். சிலது மிகவும் கவரும்... சிலது கவரும்... சிலது கலவரப்படுத்தும். இருந்தும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல கோலம் போட்ட அனைவருக்கும் அவர்களின் கோலம் அழகாய்த்தான் தெரியும்.

புள்ளி வைத்து கோலம் போடுவதில் இப்ப இருக்கும் பெண்கள் கில்லாடிகள் என்றால் புள்ளி வைத்தோ வைக்காமலோ பின்னல் கோலங்கள் போடுவதில் அந்தக் காலப் பெண்கள் கில்லாடிகள்... எங்கம்மா பின்னல் கோலம் ஓரிடத்தில் ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றி மீண்டும் அதே இடத்தில் வந்து முடிப்பார். அதுவும் அழகாகத்தான் ஒருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகச் சுற்றுவார். சிலவற்றை கழுகு போல் மாற்றுவார், சிலவற்றை பாம்பு ஆக்குவார்... சிலவற்றில் விளக்கு ஏற்றுவார்... இப்படி பின்னல் கோலங்களில் கூட தினுசாய்... புதுசாய் வரைவார்கள். 

புள்ளிகளிலும் நேர் புள்ளி, இடுக்குப் புள்ளி, ஒன்று விட்டு ஒன்று என பல விதமாக புள்ளி வைப்பார்கள். கையில் மாவெடுத்து இடுவதில் கூட ஒரு நேர்த்தி இருக்கும்... எல்லா இடத்திலும் கோடு ஒரே போல வரும். அதெல்லாம் ஒரு கலைதான். எத்தனை கோலப்புத்தகம் வந்தாலும் தங்கள் கைபட நோட்டில் வரைந்து வைத்திருக்கும் கோலங்களில் தினம் ஒன்றாய் தேடிப்பிடித்து போடுவதிலும் யாராவது புதிதாக ஒரு கோலம் போட்டிருந்தால் அதைப் பார்த்து புள்ளிகளை எண்ணி வைத்துக் கொண்டு வீட்டில் வந்து வரைந்து பார்ப்பதிலும் பெண்கள் கில்லாடிகள். இப்பல்லாம் மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டு வந்து போட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள்.

இனி என் மனைவி எங்கள் வீட்டு வாசலில் போட்ட மார்கழிக் கோலங்கள் சில...
இந்தக் கட்டுரையை காலையில் பதிய எண்ணி எழுதியாச்சு... ஆனால் போன பதிவிலேயே சேனையில் பானு அக்கா அவர்கள் போட்டோவில் பெயரைப் போடுங்கள் என்று சொல்லியிருந்தார்.  படங்களில் பெயரிட்டு பதிய நேரம் எடுக்கும் என்பதாலும் அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டது என்பதாலும் மாலை வந்து பார்த்துக் கொள்ளலாம் என கிளம்பிவிட்டேன்.

ஜனவரி மாதம் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்... ஆம் என் அன்பு மனைவிக்கும் எங்கள் அன்பு மகனுக்கும் பிறந்தநாள் (நானும் ஸ்ருதியும் மார்ச்சில்). இன்று (ஜனவரி - 5) என் மனைவி நித்யாவின் பிறந்தநாள்... இன்றைய பதிவு அவருக்கான... அவர் குறித்த பகிர்வாக இருக்க வேண்டும் என்பதால் மார்கழிக் கோலங்களை மீண்டும் பதிவாக்கியாச்சு.

ஒருவருடைய வாழ்க்கையில் நல்லவனாய் வளர்வதற்கும் நல்லவனாய் வாழ்வதற்கும் இரண்டு பெண்கள் முக்கியமானவர்கள்... எனக்கு கிடைத்த அந்த இருவராலுமே நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன். முதலாமர் என்  அம்மா... எங்களை வளர்த்ததில் அப்பாவைவிட அம்மாவுக்கே அதிகப் பங்கு... மேலும் நாங்கள் நன்றாக படித்து பட்டம் பெற எங்க அம்மாபட்ட கஷ்டங்களை இங்கு எழுத்தில் எழுதிவிட  முடியாது.  மற்றொருவர் என் மனைவி... மதுரையில் பிறந்து வளர்த்து நகர வாழ்க்கையில்.. அதுவும் பரபரப்பான நகர வாழ்க்கையில் வாழ்ந்து பழகியவர், எங்களது திருமணத்துக்குப் பிறகு கிராமமும் நகரமும் கலந்த வாழ்க்கையில் வாழப்பழகி என்னோடு பயணித்து... என் வலிகள், கஷ்டங்கள், சந்தோஷங்கள் எல்லாவற்றிலும் தோளோடு தோள் நிற்பவர்.

எப்போதும் என்னைத் தட்டிக் கொடுத்து விட்டுக் கொடுத்து வாழப் பழகியவர்... கஷ்டப்பட்டாலும் நஷ்டப்பட்டாலும் எங்கள் வளர்ச்சிக்கு என்னைவிட அதிகம் சிரமப்பட்டவர்... எந்த வேலை என்றாலும் சலிக்காமல் பார்த்து முடிக்கக் கூடியவர்.. எங்களை இகழ்ந்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வாழ்ந்து காட்டுபவர்... முதுகுக்குப் பின்னே பேசினால் தெரியாது என்று முகத்துக்கு நேரே பேசுபவர்களின் வார்த்தைகளை எல்லாம் படிக்கட்டுக்களாக்கி எங்கள் பயணத்தை வெற்றிப்பாதை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பவர்... எங்கள் வாழ்வின் வெற்றியில் என் பங்கைவிட அவரின் பங்கே அதிகம். என் துணை... எனக்கான துணை... இப்படி ஒரு அன்புத் துணையாக அமைந்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். எங்கள் வாழ்வின் சந்தோஷங்கள் என்றும் இப்படியே தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.


என் அன்பு மனைவி... நித்யா குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்...  என் அன்பு வாழ்த்துக்கள் நித்தி...

தங்கள் அன்பும் ஆசியும் வேண்டி...
-'பரிவை' சே.குமார்.

30 கருத்துகள்:

 1. கோலங்கள் வழக்கம்போல் அருமை தங்களின் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
  தமிழ் மணம் என்னவாயிற்று நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தமிழ்மணம் அப்ப அப்ப வருது... போகுது... ஒண்ணும் புரியலை...
   வாழ்த்துக்கு நன்றி அண்ணா...

   நீக்கு
 2. பிறந்த நாளுக்கும், அழகாய் கோலம் போடுறதுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. அருமை.

  பிறந்தநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. நம்ம வீட்டுக்கோலம் நமக்கு ரெம்ப அழகு. நித்யா மேடத்துக்கு சல்யூட். அழகு கொஞ்சும் கைவண்ணம், மிளிரும் கலைவண்ணம், சூப்பர்ப்பா

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும் சேர்த்தே சொல்லி விடுங்க. கோலங்கள் அத்தனையும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
   தாங்கள் சொன்னதை அவரும் வாசித்தாச்சு... நானும் சொல்லியாச்சு...

   நீக்கு
 5. கோலங்கள் சிறப்பு! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. http://www.chenaitamilulaa.net/t50850-topic#476572

  தையிலே பிறந்த தையல் நித்யா மேடம்... !
  குமாரின் மனம் கவர்ந்த கோல அழகிக்கு வாழ்த்து சொல்லலாம் வாருங்கள்.

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நித்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   பார்த்தேன் அக்கா... ரொம்ப நன்றி அக்கா...

   நீக்கு
 7. கோலங்கள் அழகு.

  எங்களது வாழ்த்துகளும்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. கோலங்கள் அனைத்தும் அருமை. சகோ நித்யா குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க செந்தில் சார்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நித்யா..

  அழகான கோலங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
   முதல் வருகைக்கும் நன்றி.

   நீக்கு
 11. எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு
  அன்னை அபிராமவல்லி நல்லருள் பொழிவாளாக!..

  அன்பின் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
   தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியே எங்களை வாழ வைக்கும்...

   நீக்கு
 12. மிக அழகான கோலங்கள். நித்யா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. மிக மிகத் தாமதம். மன்னிக்கவும்..சகோதரிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். தங்கள் குடும்பம் இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்ந்திடமும் வாழ்த்துகள்! கோலங்கள் கலக்கல்! வாழ்த்துகள் சகோதரிக்கு. சொல்லிடிங்கள் எங்கள் சார்பாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசி சார்...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
   சொல்லியாச்சு... அவரும் நன்றி சொல்லச் சொல்லியாச்சு...

   நீக்கு
 14. தாமதத்திற்கு மன்னிக்கனும் சகோ,
  என் அன்பின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கோலமும் அழகு,, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் மனிவிக்கு என் தாமதித்த வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 16. தங்கள் மனைவிக்கு தாமதமான பிறந்தாள் வாழ்த்துக்கள் சகோ!!

  கோலமும்,கலர் காம்பினேஷன் கலக்கல்...இந்த எல்லா கோலங்களையும் சேவ் பண்ணிட்டேன்,தப்பா எடுத்துக்காதீங்க..

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...