மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 17 நவம்பர், 2014

தொடர் பதிவு : கனவில் வந்த காந்தி

ங்கள் தேவகோட்டையின் அஞ்சா நெஞ்சர் அண்ணன் கில்லர்ஜி அவர்கள் மிகவும் சிறந்த வலைப்பதிவர்களில் ஒருவர். இவர் கனவில் வந்த காந்திஜி கேட்ட கேள்விகளுக்கு சுவையாகவும் சிந்திக்கும் வண்ணமும் அழகான பதில்களைக் கொடுத்து அதனை தொடருமாறு பத்து மிகப் பெரிய அறிஞர் பெருமக்களை அழைத்திருந்தார். சரி இது சுத்தி வரும் எல்லாருடைய எண்ணங்களையும் படிக்கும் மாணவனாக இருக்கலாம் என்ற பெரிய நம்பிக்கையில் இன்று பதிவிட்ட அன்பின் ஐயா தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களும் அன்பிற்குரிய ஆசான் ஐயா கரந்தையார் அவர்களும் என்னையும் இதில் இழுத்து விட்டு விட்டார்கள். எனக்கென்ன கவலையின்னா முத்து நிலவன் ஐயா முதற்கொண்டு பெரும் பெரும் அறிஞர் பெருமக்கள் எல்லாம் எழுதிய... எழுதும் தொடர் பதிவில் நம்ம என்னத்தை எழுதப் போறோம்ன்னுதான்... இருந்தும் முயற்சித்துப் பார்ப்போம் என்று கோதாவில் குதித்தாச்சு... நான் குதிச்சது சேற்றிலா அல்லது சந்தனத்திலான்னு நீங்கதான் சொல்லணும். நம்ம என்னத்தைச் சொல்லப் போறோம்... அதனால அடிப் போட்டவரு... அவரை பின்பற்றினவங்க பதிவுகளைப் படிச்சிட்டு அப்புறமா நம்ம பதிவுக்குள்ள வரலாம்.

த்தனையோ தொடர் பதிவுகள் வந்திருந்தாலும் வித்தியாசமான இந்த தொடர்பதிவு ஓட்டத்தை துவங்கி வைத்த அண்ணன் கில்லர்ஜியின் பதிவைப் படிக்க



டுத்து ஆன்மீகப் பதிவுகளின் இந்து மகா சமுத்திரம் தஞ்சையின் மைந்தர் திரு. செல்வராஜூ ஐயா அவர்களின் பதிவைப் படிக்க...



ப்புறம் இலக்கியப் பெட்டகம் எங்கள் கரந்தையார் ஆசான் திரு. ஜெயக்குமார் ஐயா அவர்களின் பதிவைப் படிக்க...

My Photo


************************
ரி, இனி நமக்கிட்ட அண்ணல்ஜி(G) அவர்கள் இப்படிப்பட்ட கேள்வியை கேட்டிருந்தா... எப்படி சமாளித்திருப்போமுன்னு பார்க்கலாம்.

"என்ன தம்பி... தூக்கமோ?" - இது கனவில் வந்த காந்திஜி.

"ஆம் ஜி... நல்ல இளங்காலைக் குளிரில் தூக்கம் அடித்துப் போட்டது போல் வருமல்லவா... இதில் தூக்கமோ என்ற கேள்வி எதற்கு?" - இது அடியேன்.

"ம்... தூங்கு... நான் கேட்கப் போகும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே தூங்கு..."

"சரி... கேள்விகளை தாங்கள் கேட்கிறீர்களா இல்லை நான் கேட்கட்டுமா..."

"அடேய்... தூங்க மூஞ்சி நாந்தான் கேக்குறேன்னு சொன்னேன்..."

"சரி... கேளுங்க.. கேளுங்க... நான் ரெடி... நீங்க ரெடியா... அந்த கண்ணாடியை சரியா மாட்டிக்கிட்டு கேளுங்க..."

"லொள்ளு... பதில்ல இருக்கட்டும் இந்த பேச்செல்லாம்... "

"ம்க்கும்... கேள்வி கேக்கிறது ஈசி... பதில் சொல்றதுதானே கஷ்டம்... பெரிய பெரிய ஆளுக எல்லாம் சூப்பர பதில் சொல்லும் போது நான் சொதப்பிட்டா..."

"என்னவோ பண்ணு... எல்லாரும் கேட்ட உடனே பதிலைச் சொல்லி கலக்குறாக... நீ என்னடான்னா... சரி ஆரம்பிக்கிறேன்" என்ற அண்ணல் அதிரடியாய் கேட்க ஆரம்பித்தார்.

1. மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என விரும்புகின்றாய்?

று பிறவியா? இந்தப் பிறவியில என்ன சாதித்து விட்டோம்... அடுத்த பிறவி எடுத்து சாதிக்க...

அப்படியே மறு பிறப்பு இருந்தால் எங்கள் சிவகங்கை சீமையில் தேவகோட்டைக்கு அருகே இருக்கும் எங்கள் ஊரில் இதே பெற்றோருக்கு மகனாகவும்... இந்தப் பிறப்பில் நான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் என் அன்பு மனைவிக்கு கணவனாகவும் (அவரு விருப்பமும் இதுவாத்தான் இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை) எனது இரண்டு செல்வங்களுக்கும் மீண்டும் தந்தையாகவும் பிறக்க ஆசை ஜி.

அண்ணல் : வெரிகுட்... வெரிகுட்...

2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால்..?

நானா... விட்டுருவானுங்களா... அப்பன் மகன விடமாட்டேங்கிறான்... அண்ணன் தம்பிய விட மாட்டேங்கிறான்... இதுல கிராமத்துல பொறந்து அரசியல் அரிச்சுவடே அறியாத என்னையா விடுவானுங்க... திருப்பாச்சி அருவாள தீட்டி வச்சிருவானுங்க ஜி... கொஞ்ச காலமாச்சும் வாழ ஆசை... சரி... உங்க விருப்படி ஆட்சியாளனாக ஆனால்... லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தும் திரு.சகாயம் ஐ.ஏ,எஸ். அவர்களைப் போன்றோரின் துணையுடன் லஞ்ச மற்ற, வறுமையற்ற வளமான பாரதத்தை உருவாக்கப் முயற்சி செய்வேன்... பின்னால குழி தோண்டாத அமைச்சர்கள் இருக்கும் பட்சத்தில் அதில் வெற்றியும் பெறுவேன்.

அண்ணல் : சகாயத்தை கிரானைட் கொள்ளையவே விசாரிக்க விடமாட்டேங்கிறாங்களே... சரி விடு... நல்ல பதில்... நல்ல பதில்...

3. இதற்கு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?

திர்ப்பு எங்க இல்லாம இருக்கு சொல்லுங்க ஜி... கல்யாணமா இருந்தாலும் சரி... காது குத்தா இருந்தாலும் சரி... எவனாவது ரெண்டு பேர் எதிர்க்கத்தான் செய்கிறான்... அவ்வளவு ஏன் வலைப்பதிவர் மாநாடு நடத்துனா அங்க ரெண்டு பேரு என்னைக் கவனிக்கலைன்னு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க... உள்நாட்டுக்காரனே எதிர்ப்பான்... வெளிநாட்டுக்காரன் எதிர்க்காமலா இருப்பான்... எதிர்ப்பில் எதிர்த்து வெற்றி நடை போட்டால் எதிர்ப்பெல்லாம் புஸ்வானமாகிவிடும்... இந்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கு... அதனால எவன் எதிர்த்தாலும் அதையெல்லாம் பற்றி கவலையே படமாட்டேன்... என் பாதையில் நான் பயணிப்பேன்..

அண்ணல் : ஆமா... ஆமா... எனக்கு எம்புட்டு எதிர்ப்பு இருந்துச்சு தெரியுமா... அத்தனையிலும் வெற்றி பெறலையா... சரி... என் பாதையில் நான் பயணிப்பேன்னு சொன்னே பாரு... கிரேட்... கிரேட்...

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

ளைஞனுக்கு திட்டம் தீட்டினாலே செயலாக்க முடியலை... அப்புறம் முதியவர்களுக்கு என்ன திட்டம் தீட்டுறது. ஆனா பாருங்க... பெரியவங்க வயசாயிடுச்சின்னு கவலைப்படாம இருக்க... கையில ஆளுக்கு ஒரு லேப்டாப் கொடுத்து கேம் விளையாடுங்க... மனசுல பட்டதை இதுல பதிஞ்சி வையுங்கன்னு சொல்லி அவங்களை சுறுசுறுப்பா செயலாற்றச் செய்வேன். முடங்கிக் கிடக்காமல் மூச்சிருக்கும் வரை எதாவது செய்து கொண்டே இருங்கள் என்று சொல்லி அவர்களை இளைஞர்களாக வாழச் செய்வேன்.

அண்ணல் : நல்லது.... நல்லது... 

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?

வனுகளை சுத்தம் பண்ணுறதுங்கிறது ரொம்பக் கஷ்டம் ஜி... ஒரே வழி வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். இப்ப இருக்க மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாத்தையும் விரட்டிட்டு படிச்ச பயபுள்ளகளுக்கு மட்டுமே அரசியல்வாதியாகிற தகுதி இருக்குன்னு சட்டம் கொண்டு வருவேன். அதற்காக ஆன்லைனில் தேர்வு எழுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்துவேன். கல்வி அறிவிருந்தால் மட்டுமே ஒரு நல்ல அரசை அமைக்க முடியும்ன்னு செயல்படுத்திக் காட்டுவேன்.

அண்ணல் : (அப்ப அருவா உறுதிடி...) நல்ல திட்டம்.... சாத்தியப்படுத்தினால் நன்று.

6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதி மன்றங்களுக்குப் போனால்?

ன்லைனில்தானே பரிட்சை எழுதப் போகிறார்கள். வினாக்களை நிறைவு செய்யும் போது நீ பாஸா பீஸான்னு சிஸ்டமே சொல்லிடும். அப்புறம் மதிப்பெண் தவறுன்னு எப்படி சொல்லுவாய்ங்க... எவனும் நீதி மன்றம் போக முடியாது... அதுக்கெல்லாம் அம்மா பாலிடிக்ஸ் மாதிரி அதிரடி சட்டம் போட்டுருவோமுல்ல... சிவகங்கை சீமையில இருந்து வந்தோம்ன்னு சொன்னா 'பசி' மாதிரி பதுங்கியே இருப்போமுன்னு நினைச்சிடாதீங்க... மருதுபாண்டியன் மண்ணுல பிறந்தவன் எல்லாம் 'பசி' மாதிரி இருக்கமாட்டான். அம்புட்டுக்கும் ஆப்பு கரெக்டா ரெடி பண்ணி வச்சிருவோம்.... நீதிமன்றத்துல இருக்கவனெல்லாமே இப்படி பரிட்சை எழுதி வந்தவனாத்தான் இருப்பான். இந்த மாதிரி கேசை எடுத்து வாதாட நினைக்கவே மாட்டான். ஏன்னா இந்த மாதிரி வழக்கு தொடுத்தால் அதற்கான தண்டனைகளை கடுமையாக்குவோம்.

அண்ணல் : இங்க எதுக்கு அரசியல்... பசியே இப்ப ருசி மாத்தப் பாக்குது... சரி... சரி... கேக்க நல்லாத்தான் இருக்கு... கேப்பையில நெய் வடியுமா?

7. விஞ்ஞானிகளுக்கு என்று ஏதும் இருக்கின்றதா?

விஞ்ஞானிகளுக்கு எப்பவும் போல்தான்... அவர்களுக்கு புதிதாக எதுவும் செய்யும் எண்ணம் இல்லை... ஆனால் விவசாயிகளுக்குச் செய்வேன்... கருவை மண்டிக்கிடக்கும் நிலங்களை எல்லாம் சீர் செய்து மீண்டும் பசுமை மணக்கச் செய்வேன்.. நாட்டில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி நீக்கமற விவசாய பொருட்கள் கிடைக்கச் செய்வேன்... அதற்காக லட்சங்களை அல்ல கோடிகளையும் கொடுத்து லட்சியத்தை நிறைவேற்ற வைப்பேன்.

அண்ணல் : பலே... பலே... விவசாய நிலமெல்லாம் வீடுகளாகி வருவது வருத்தமே... இது ரொம்ப நல்ல திட்டம்...

8. இதை - உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்களும் செய்வார்களா?

செய்ய வைக்க என்னென்ன முயற்சிகள் உண்டோ அத்தனையும் செய்து வைத்து விடுவேன். ஆட்சிக் காலத்தில் மக்கள் கையை ஓங்கச் செய்வேன்... அடுத்து வருபவன் செய்யத் தவறினால் அவர்கள் கையை ஓங்குவார்கள் இல்லையா.

அண்ணல் : அடடே... சூப்பருடா...

9. மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக?

ந்தியனாய் நாம் எது செய்தாலும் புதுமைதானே ஜி... எல்லா நாட்டுலயும் எல்லாம் இருந்தாலும் நமக்கிட்ட இருக்க வளம் எல்லாம் எல்லா நாட்டுலயும் இல்லையில்ல... அதையெல்லாம் பாதுகாத்து ஒரு வளம் நிறைந்த பாரதத்தை... வளமையான பாரதத்தை உருவாக்குவேன். அப்புறம் ஐயா கரந்தையார் சொன்னது போல நூறு சதவிகித வேலை வாய்ப்பை உருவாக்குவேன்.

அண்ணல் : பதிலில் காப்பி அடிக்கிறாயா?

நான் : பதிவையே காப்பி அடிக்கிறானுங்க... நான் ஐயாவோட பதிலைத்தானே காப்பி செய்திருக்கிறேன்.. விடுங்க ஜி...

அண்ணல் : பதில் தெரியுதோ இல்லையோ நல்லாச் சமாளிக்கத் தெரியுது... ஆனா இந்தியனாய் அப்படின்னு சொன்னே பாரு... அந்த ஒற்றை வார்த்தையே போதுமே... ஆஹா... வளமான பாரதம் காண வாழ்த்துக்கள்.

10. எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டும்? -  என இறைவன் கேட்டால்..?

ஹா... ஹா... இம்புட்டும் செய்தால் இன்றைய இந்தியாவில் பாவம் செய்தவனாகிவிடுவேன் என்பது உண்மைதான்... என்ன இங்க இருக்க அரசியல் வியாதிகளுக்கு பாவி ஆவேன்னு நினைச்சால் இறைவனுக்குமா... அது சரி... மறு பிறவியாக வேறு பிறவியா... வேண்டாம் ஜி... வேண்டவே வேண்டாம்... மானிடனாய் பிறந்து மற்றவர்களை இம்சித்தது போதும்... மானிடன் அல்லாத மறு பிறப்பும் வேண்டாம்.

அதுசரி... மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்ன்னு ரெண்டாவதா ஒரு கேள்வி கேட்டீங்க... நானும் அதே ஊரில் பிறக்கணுமின்னு சொன்னேன். இங்க மானிடப் பிறவி இல்லைங்கிறேள்... முரணாக இருக்கிறதே... சரி... சரி... தூக்கக் கலக்கம் இருவருக்கும்... கொஞ்சம் மாற்றி வந்திருக்கலாம்... விட்டுடுவோம். 

அண்ணல் : எங்கு பிறக்கணுமின்னு கேட்டேன்... மானிடனாய்ன்னு சொல்லலையே (சமாளிப்பு) கடைசி கேள்விதானே விடு... விடு... எல்லோரும் மறுபிறவி கேட்கும் போது நீ வேண்டாங்கிறே... சரி உன் விருப்பம் அதுவெனில் நான் என்ன செய்ய முடியும். எல்லாம் இறைவன் சித்தம்.

அம்புட்டுத்தானே... ஆளை விடுங்க சாமி.

இரு... நல்லா பதில் சொன்னாய்... இனி உன்னோட நண்பர்கள் முகவரி கொடு... அவர்கள் கனவில் போய் நான் காலாய்க்கணும்... என்ற அண்ணல் நான் கொடுத்த இஞ்சி டீயை ருசித்துக் கொண்டிருக்க, நானோ நண்பர்கள் முகவரியைத் தேடினேன்... கிடைத்ததில் முத்துக்கள் பத்தை முன்னே வைத்தேன். 

அன்புச் சகோதரி ஸஷிகா கிச்சன் மேனகா சத்யா அவர்கள்

பாசமிகு அண்ணன்  WARRIOR  தேவா  அவர்கள்

அன்பின் ஐயா அசை போடுவது வலைச்சரம் சீனா  அவர்கள்

நேசமிகு அண்ணன் தேவியர் இல்லம் ஜோதிஜி  அவர்கள்

அன்பான அக்கா வானம் வெளித்த பின்னும் ஹேமா  அவர்கள்

எனது இனியவன் இதயச்சாரல் தமிழ்க் காதலன்  அவர்கள்

பாசக்கார அண்ணன் குடந்தையூர் ஆர்.வி. சரவணன்  அவர்கள்

அருமை அண்ணன் வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்கள்

கவிதை நாயகன் தம்பி  கலியுகம் தினேஷ் குமார் அவர்கள்

எனதுயிர் அக்கா  தூரிகைச் சிதறல் காயத்ரி  அவர்கள்...

ம்... அப்புறம்...

அண்ணல் : போதும் போதும் பத்தாச்சு... பத்தாச்சு...

நான் : ஐயோ பத்தாச்சா.... கனவுல வந்து இப்படி பத்து மணி வரைக்கும் படுக்க வச்சிட்டிங்களே... இனி வேலைக்குப் போனா மாதிரித்தான்...

அண்ணல் : அடேய்... கிறுக்கா... பத்து பேர் ஆச்சு... மத்தவங்களுக்கும் வேணுமின்னு சொல்ல வந்தேன்... சரி... ஓகே... இனி இந்தப் பத்து பேரையும் உண்டு இல்லைன்னு பண்ணனும்... அதுக்குள்ள எத்தனை பத்து வருதோ தெரியலயே... ஒருத்தனை கனவுல கேள்வி கேக்கப் போக இப்படி மாட்டிவிட்டு தூங்காம அலைய வச்சிட்டாரே...

நான் : (மனசுக்குள் : அதான் எங்க தூக்கத்தை கெடுத்துட்டீரே..) என்னது உங்களுக்குப் பத்தா?

அண்ணல் : அப்பா... சாமி... ஆளைவிடு... விட்டா எல்லா நோயும் இருக்கானான்னு கேப்பே போல... வர்றேன்... எந்திரிச்சி வேலைக்குப் போ... பை..பை... சியூ...

நான்.. சியூவா... வேண்டாம்... வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...

பக்கத்து கட்டில்காரர் (சத்தமாக) : ஏன்டா நாதாரி... நைட் வேலை பாத்துட்டு வந்து படுத்தா... விடிஞ்சிம் எந்திரிக்காம வேண்டாம் வேண்டான்னு கத்தி தூக்கதைக் கெடுக்குறே...?

ஐயோ.... விடிஞ்சிருச்சா... ஓடுறா.. ஓடுறா குமாரு... பாத்ரூமுக்குள்ள வேற எவனாச்சும் நுழைஞ்சிருக்கப் போறான்னு அவசரமாக பாத்ரூம் அருகே ஓட உள்ளே பூட்டியிருந்தது.

நான் வாசலில் காத்திருக்கிறேன்...

தொடர் பதிவை ஆரம்பித்த அண்ணனுக்கும் என்னை அதில் கோர்த்து விட்ட ஐயாக்களுக்கும் ஆவலாக எழுதும் நட்புக்களுக்கும் என்னைத் தொடர்ந்து எழுத இருக்கும் நட்புக்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்...

(ரொம்ப பெரிசா போச்சு... கோவிக்காதீங்கோ... மீ எஸ்கேப்... ரெண்டு நாளைக்கு)

-'பரிவை' சே.குமார்.

22 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கில்லர்ஜி ஆரம்பித்து வைத்தார். நண்பர்களின் தொடர் இணைப்பு நீண்டு கொண்டே செல்கிறது. பதில்களைப் படித்தேன். அருமை. வாழ்த்துக்கள்.

Menaga Sathia சொன்னது…

அருமை சகோ,அனைத்து கேள்வி பதில்களையும் ரசித்தேன்.என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி சகோ...நேரமிருக்கும் போது நிச்சயம் தொடர்கிறேன்..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தொடர்பதிவு களை கட்டி விட்டது
இடையில் அண்ணலின் கம்மென்ட்ஸ் அருமை . என்னையும் கோர்த்து விட்டார் முத்துநிலவன் ஐயா

KILLERGEE Devakottai சொன்னது…


நண்பரே தேவகோட்டைக்காரன்னு நிரூபிச்சுட்டீங்க,,, நீங்க பக்கத்துல இல்லை இருந்தால் உங்களுடைய கைக்கு ஒரு முத்தம் கொடுத்திருப்பேன் பரவாயில்லை இந்க வாரம் வெள்ளிக்கிழமை கொடுத்துக்கிறேன் காந்தி தேவகோட்டைக்கு வந்து அந்த செட்டியார் வீட்டில் தங்கியதால்தான் அந்த ரோட்டுக்கு ‘’காந்தி ரோடு’’ என பெயர் வைத்தார்கள் அப்படிப்பட்டவர் தேவகோட்டைகாரர் கனவில் வருவது சந்தோஷமே... வாழ்த்துக்கள் கலக்கல் பதிவு.

குறிப்பு – நண்பா இலக்கம் இப்பொழுது கலக்கமாகி விட்டது தலைப்பே சாந்தி பூந்தி ஆகிப்போய் விட்டது (நம்பருக்கு வெயிட்டிங்க்) இதை எடுத்து விடுங்கள் நண்பா.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

நகைச்சுவை உரையாடல்களுடன்
பதிவு கலக்கல்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தமிழ்மணம் வாக்கு 3.

KILLERGEE Devakottai சொன்னது…

Tamil Manam 1

ஜோதிஜி சொன்னது…

நன்றி குமார். நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.

Unknown சொன்னது…

உங்கள் பதிலுக்கும் அண்ணல் பதில் சொல்லி இருப்பதால் நீங்க பாஸ் !
த ம 1

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

சகோதரர் குமார் அவர்களே! நீங்கள்தான் மறக்காமல் திரு சகாயம் அவர்களை நினைவூட்டினீர்கள். எங்கள ஊர்க்காரரான அவரை -இதுபோலும் பதிலகளில்- நானேமறந்தது குறித்து வெட்கப்படுகிறேன். இடையிடையே காந்தியாரின் குறுக்கீடும் வேறு எந்தப் பதிவிலு்ம் இல்லாத புதுமைதான். “இப்ப இருக்க மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாத்தையும் விரட்டிட்டு படிச்ச பயபுள்ளகளுக்கு மட்டுமே அரசியல்வாதியாகிற தகுதி இருக்குன்னு சட்டம் கொண்டு வருவேன். அதற்காக ஆன்லைனில் தேர்வு எழுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்துவேன்“ இதில் நானும் நீங்களும் ஒத்தகருத்தில் இருப்பதறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
காந்திக்கு இஞ்சி டீ! ரொம்ப அழகான கற்பனை நண்பரே மிகவும் ரசித்தேன்.

UmayalGayathri சொன்னது…

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.
ஆங்காங்க்கே தென்படும் வழக்கு மொழி சிறப்பு.இப்படி கேட்டு எம்புட்டு நாளாச்சு..!!!

தம + 1

Avargal Unmaigal சொன்னது…

வித்தியாசமாக பகிர்ந்து இருக்கிறீர்கள் ரசித்தேன் பாராட்டுக்கள்

அருணா செல்வம் சொன்னது…

சுவாரசியமாக இருந்தது.
வாழ்த்துக்கள் குமார்.

மகிழ்நிறை சொன்னது…

பாருங்க அண்ணா!! காந்தி எங்களை கேள்விமட்டும் தான் கேட்டார், ஆனா உங்களை இடையிடையே பாராட்ட வேற செய்திருக்கார்!! ஊரெல்லாம் இதே பதிவை போட்டாலும் குமார் அண்ணனுக்கு மட்டும் தான் அந்த லக்:)) சூப்பர் ணா!

துரை செல்வராஜூ சொன்னது…

ஜியின் கேள்விகளுக்கு பதில் கொடுத்ததோடு - பதிலுக்கு பதில் என அசத்தி விட்டீர்கள்..

இதற்குத் தான்,

இளைய தலைமுறையின் எதிரொலியாகிய தங்களுடன் காந்திஜி - உரையாட வேண்டும் என விரும்பினேன்..

அருமை.. அருமை..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சமீபத்திய நிகழ்வுகளோடு + அண்ணலின் பதில்களோடு ரொம்பவே ரசித்தேன்...

தினேஷ்குமார் சொன்னது…

கலக்கல் அண்ணே சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து என்னையும் சந்திக்க வைத்து விட்டீர்கள் விரைவில் காணுகிறேன் கனவு ....

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி...

Unknown சொன்னது…



சுவைபடச் சொன்னீர் அனைத்தும் நன்றி! வாழ்த்து!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! வித்தியாசமான நகைச்சுவை உணர்வோடு அருமை அருமை! ரொம்பவே ரசித்தோம் ரசித்தோம்.....அட்டகாசம் போங்க! கலக்கிட்டீங்க! அதுலயௌம் அந்த முதியோர் பதில்.....4, 5, 6 அட்டகாசம்.....வேறு வார்த்தைகள் இல்லை! பாராட்டுக்கள்! நண்பரே!

yathavan64@gmail.com சொன்னது…

கனவில் வந்த காந்தி

மிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr

("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)