மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 3 நவம்பர், 2014வீடியோ : கமலின் காதல் கீதங்கள்

ன்று நவரச நாயகனாக இருந்தாலும் காதல் இளவரசன் கமலின் காதல் பாடல்களுக்கு முன் வேறு எந்த நடிகரும் போட்டிக்கு வரமுடியாது. மனுசன் காதல் பாடல்களில் உருகி... தவித்து... அப்படியே உண்மையான காதலர்கள் போல கலக்கி விடுவார்... பத்தாததுக்கு முத்த மழை வேறு... இப்பல்லாம் டைரக்டா லிப் டு லிப்தான் தலைவரின் பாணி... ம்... பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்... அது நமக்கெதுக்கு... வாங்க பேசுவோம்..

கமல் 60... திரையுலகில் எத்தனை பேர் வந்தாலும் நடிகர் திலகம் சிவாஜியின் பெயர் எப்படி காலாகாலத்துக்கும் பொன் எழுத்தில் பதிக்கப்பட்டிருக்குமோ அதே போல் நவரச நாயகன்... சூப்பர் ஆக்டர் கமலின் பெயரும் உலக சினிமாவில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை எல்லோரும் அறிவோம்..

கமல் 60... திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டரில் நடிகர்களின் முதல்வரே என்று அடித்து விட்டார்களாம்... உடனே பத்திரிக்கைகள் நடிகர்களின் முதல்வர் என்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்புன்னு செய்தி போடுறாங்க... இதிலென்னய்யா தப்பு இருக்கு... இன்னைக்கு வந்த நண்டு சிண்டெல்லாம் வருங்கால முதல்வர்ன்னு போடலாம்... ஊழல் வழக்கில் பதவி இழந்த முன்னாள் முதல்வர் மக்கள் முதல்வராகலாம்... ஒரு போஸ்டர்தானேய்யா அடிச்சானுங்க... முதல்வராகப் போறார்... கட்சி ஆரம்பிக்கப் போறார்ன்னு எதையும் கிளப்பி விடலையே எதுக்கு இந்த குய்யோ முறையோ எல்லாம்... பத்திரிக்கைகள் சினிமா நடிகர்களின் பின்னால் திரிவதை நிறுத்தி மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்லலாமே...

கமல் 60... சரிங்க... நமக்கு எதுக்கு இந்த அரசியல்... நம்ம இப்ப நல்ல பாடல்களைக் கேட்கலாம்... அதிலும் கமலின் காதல் பாடல்களைக் கேட்கலாம்... ரசிக்கலாம்... நாமும் கமல் அறுபதைக் கொண்டாடலாம்... 


படம் : காக்கி சட்டை
பாடல் : கண்மணியே பேசுபடம் : காதல் பரிசு
பாடல் : கூக்கூ என்று குயில்...படம் : சத்யா
பாடல் : வளையோசை கலகல...படம் : உன்னால் முடியும் தம்பி
பாடல் : இதழில் கதை எழுதும்...படம் : சிங்கார வேலன்
பாடல் : இன்னும் என்னை என்ன...படம் : வறுமையின் நிறம் சிகப்பு
பாடல் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது....படம் : மீண்டும் கோகிலா
பாடல் : சின்னஞ் சிறு வயதில்...படம் : இளமை ஊஞ்சலாடுகிறது
பாடல் : ஒரே நாள் உனை நான்...படம் : சிப்பிக்குள் முத்து
பாடல் : துள்ளித் துள்ளி...


கமலின் காதல் பாடல்கள் இன்னும் இன்னும் என்று போய்க் கொண்டே இருக்கும்... என்னைக் கவர்ந்த பாடல்களில் சில பாடல்களை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். இவை தங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

கமல் 60-க்கு வாழ்த்துக்கள்.

மீண்டும் நல்ல பாடல்களுடன் மற்றுமொரு வீடியோ பகிர்வில் சந்திப்போம்.

பாடல் பகிர்வு தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

 1. அடடே... உங்கள் ரசனை ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது அய்யா. அப்படியே ரசிக்கத் தந்ததற்கும் நன்றி. அந்த நவரசம் சொட்டும் நாயகன், சதங்கை ஒலியை சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். நானும் அந்த நிகழ்வைப் பார்த்தேன். கமல்-50என்ற பழைய நிகழ்ச்சிதானே அது? (இது புதிதா என்னும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டீர்கள்) எனினும் ரசனைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் பாட்டுக்கள் சகோ. ஆனா யூடியூப் ஓபன் ஆகலையே.

  பதிலளிநீக்கு
 3. நிலவன் ஐயாவின் வருகைக்கு நன்றி.
  இது புதியது... அதாவது கமலின் 60வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர்தான் இப்போது தினசரிகளின் ஹாட் டாபிக்... என்பதை இணையத்தில் வரும் பத்திரிக்கைகளின் மூலம் அறிந்தேன்... நடிகர்களின் முதல்வர் என்று போட்டு விட்டார்களாம்... கமல் 50 , அவரின் அம்பது ஆண்டு கால சினிமா வாழ்க்கை குறித்த நிகழச்சி அல்லவா?

  பதிலளிநீக்கு
 4. வாங்க சகோதரி...
  யூடியூப்பில் இங்கு பிரச்சினை இல்லையே... சரியாகத்தானே வேலை செய்கிறது....

  பதிலளிநீக்கு
 5. நல்ல பாடல்கள்..
  மீண்டும் நல்ல பாடல்களுடன் சந்திக்க ஆவல்!..

  பதிலளிநீக்கு
 6. இனிமையான காணொளிகள் நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. சிம்லா ஸ்பெஷல் என்ற படத்தில் லுக் லவ் மீ டியர் வெண் மேகமே வா என்று ஒரு பாடல் இருக்கிறது. அதுகூட இதே கமல் ப்ராண்ட் காதல் சேஷ்டைகள் கொண்ட பாடல்.

  பதிலளிநீக்கு

 8. மூலை முடுக்கெங்கும்
  முணுமுணுத்த
  இனிய பாடல்கள்
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 9. எல்லாப் பாடல்களுமே அருமையான பாடல்கள்.

  பதிலளிநீக்கு
 10. masala.fm என்ற வணொலி கமல் 60 என்ற நிகழ்ச்சியை 5-11-14 கலை 11 மணியிலிருந்து 7-11-14 மால 6 மணிவரை நடத்துகிறது ! பங்களா,மகாரஷ்ற்றா,கர்னாடகா,ஆந்திரா,நாகபுரி என்று பல்வேரு மானில கமல் ரசிகர்களின் வாழ்த்து செய்திகளை சேகரித்து நேற்று மால 5 லிருந்து 6 வரை R.J .hansa kaashyap ஒலிபரப்பினர்கள் ! சமஸ்கிருதம்,மராட்டி,தெலுங்கு,கன்னடம்,பங்களா,இந்தி என்று பலமோழிகளில் அவர்கள்பெசியது சிறப்பாக இருந்தது ! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 11. அனைத்துப் பாடல்களுமே அருமையான பாடல்கள்....

  மீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி குமார்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...