மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 11 நவம்பர், 2014வீடியோ : வசந்தம் வீசும் பரதம்

திவு எழுத சோம்பேறித்தனம் வந்தால் இருக்கவே இருக்கு பாடல் பதிவு என்று அதற்கான பாடல் தேடலில் இறங்கி விடுவது வழக்கமாகிவிட்டது.  இரண்டு நாட்களாக இணையம் இழுக்க மாட்டேன் என்கிறது. கணிப்பொறியோ தூங்கி எழுந்த குழந்தை போல தூக்க கலக்கத்திலேயே இருக்கிறது. வயல்ல உழுகும் போது கோணச்சால் அடிக்கும் மாட்டை இழுத்து ஏர் ஓட்டுவது போல இழுத்து ஓட்டினாலும் ஸ்கைப்பில் ஊருக்குப் பேச முடியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. 

அப்படிப்பட்ட சூழலிலும் பாடல்களைத் தேடிப் பிடித்த போது அந்தகாலத்தில் வந்த நாட்டியப் பாடல்களைப் பகிரலாமே என்ற எண்ணம்... நிறையப் பாடல்கள் இருந்தாலும் இணையப் பிரச்சினை... ஒரே தொகுப்பாக பல பாடல்கள் வேண்டாம்... என்ற காரணங்களால் சில பாடல்களை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன். இந்தப் பாடல்களை வைத்து இவன் பழங்காலத்தான் போல... வெளஞ்ச கட்டை போலன்னு எல்லாம் நினைக்கக் கூடாது. நாற்பதை எட்டிப் பிடிக்கப் போற வயசுதான்... ஆமா சொல்லிப்புட்டேன். 

எந்தக்காலத்தில் வந்த பாடலாக இருந்தாலும் இசையை ரசிக்க வயதை ஒரு காரணமாகக் கொள்ள முடியாதல்லவே. தில்லானா மோகனாம்பாள் பாடல்கள் என் மொபைலில் வீடியோவாக இருக்கின்றன... ஆஹா... பத்மினியின் நாட்டியம்... அட... அட... என்ன அழகு. இன்று பாடல் தேடும் போது எம்.ஜி.ஆரும் பத்மினியும் போட்டி போட்டு ஆடும் நடனம் பார்த்தேன். எப்பா நாட்டியப் பேரொளி எங்கே... நம்ம வாத்தியாரை தப்பாச் சொன்ன ரசிகர்களுக்கு கோவம் வரும் இருந்தாலும் நாயகன் ஜெயிக்கணுமுன்னு பேரொளியை கீழ விழ வச்சிட்டாரு இயக்குநரு... நம்ம வாத்தியாரோட ஆட்டம் என்ன ஜோருன்னு பாட்டைப் பாருங்க தெரியும்... என்னால எனது மனசுக்குள் என்றும் குடிகொண்டிருக்கும் மக்கள் நாயகன் ராமராஜன் பரதம் ஆடுவதாக நினைத்து சிரிக்கத்தான் முடிந்தது... மன்னிக்கவும் வாத்தியாரின் ஆட்டத்தை ரசிக்க முடியலை.

வஞ்சிக் கோட்டை வாலிபனிம் பரத நாட்டிய திலகங்கள் பத்மினிக்கும் வைஜெயந்தி மாலாவுக்கும் போட்டிப் பாடல்... என்ன நடனம்... என்ன நடனம்... ஆஹா... அழகு... அதே போல் மற்ற அனைத்துப் பாடல்களுமே நாட்டியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களே... நீங்களும் கேட்டுப் பாருங்க.. கண்டிப்பா ரசிப்பீங்க.

பாடல் : மறைந்திருந்து பார்க்கும் மர்மம்...
படம் : தில்லானா மோகனாம்பாள்பாடல் : மன்னவன் வந்தானடி...
படம் : திருவருட்செல்வர்
பாடல் : கண்ணும் கண்னும் கலந்து...
படம் : வஞ்சிக் கோட்டை வாலிபன்
பாடல் : தண்டை கொண்டு நடந்த...
படம் : மன்னாதி மன்னன்
பாடல் : யாரடி நீ மோகினி
படம் : உத்தம புத்திரன்
பாடல் : மாதவி பொன் மயிலாள்...
படம் : இரு மலர்கள்
பாடல் : வசந்த முல்லை போல...
படம் : சாரங்கதாராபாடல் பகிர்வு தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

17 கருத்துகள்:


 1. அனைத்துமே அருமையான தேர்வு ரசித்தேன், தேன், தேன்.

  பதிலளிநீக்கு
 2. ரசனைக்கு வாழ்த்துக்கள்
  நன்றி ...

  பதிலளிநீக்கு
 3. பழைய நாட்டியப் பாடல்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 4. அத்தனையும் எக்காலத்தும் ரசிக்கும் பாடல்கள் தான்..

  பதிலளிநீக்கு
 5. நாட்டியப் பாடல்களின் தொகுப்பா..... என்ஜாய்!

  பதிலளிநீக்கு
 6. என்றறென்றும் தெவிட்டாத பாடல்கள்

  பதிலளிநீக்கு
 7. சிறந்த தெரிவு
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 8. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

  சகோதரர் மதிசுதா போட்டிருந்த கருத்து தவறுதலாக அழிந்து விட்டது.

  அவரின் கருத்து இப்படித்தான் இருந்தது. கொஞ்சம் மாறியிருக்கலாம்.

  "எனக்கும் சிறுவயதில் பரத நாட்டிய கிறுக்கு பிடித்திருந்தது. ஆனால் வீட்டில் தடுத்து விட்டார்கள்"

  நன்றி சகோதரரே...

  சகோதரர் மதிசுதா மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 9. அனைத்து பாடல்களும் அருமை,ரசித்தேன்--மகிழ்ந்தேன் !!

  பதிலளிநீக்கு
 10. பொன் மயில் தோகை விரிக்கும் அழகை நானும் அடிக்கடி ரசித்துப் பார்ப்பதுண்டு !

  பதிலளிநீக்கு
 11. அருமையான எவர் கிரீன் தொகுப்பு நண்பரே! மிக மிக ரசித்தோம்! கேட்டுக் கொண்டிருக்கின்றோம்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...