மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 4 நவம்பர், 2014அழகோவியம்


நீலமும் பச்சையும்
நிறைந்து இருக்க...

சிகப்பும் வெள்ளையும்
சிதறிக் கிடக்க...

கருப்பும் மஞ்சளும்
கலந்தே இருக்க...

மற்ற கலர்களும்
எச்சமாய் கலந்திருக்க...

கிரையான்ஸ் ஜாலத்தில்
கிறுக்கிய ஓவியம்...

அவளைப் போலவே
அழகாய் இருக்க...

அழகுடாவென தலைகோதி
அன்பு முத்தமிட...

'நல்லாக்காப்பா' என
மழலையில் கேட்டபடி...

இரட்டிப்பு முத்தம்
இட்ட கன்னத்தில்...

எச்சில் ஓவியம்
இன்னும் அழகாய்..!

-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

 1. எளிமையான வரிகளில் அருமையான சிந்தனை !

  பதிலளிநீக்கு
 2. மழலை படைத்த ஓவியம் மனதை நிறைத்த கவிதை அழகுடன் அழகுச்சேர அமிர்தமாய் அள்ளி பருகும் மழலையின் எச்சில் முத்தம் ஆகா ...

  பதிலளிநீக்கு
 3. எச்சில் ஓவியம்
  இன்னும் அழகாய்..!//

  அருமை.
  அழகு கவிதை.

  பதிலளிநீக்கு

 4. நல்ல கவி வரிகள் நண்பரே,,,

  பதிலளிநீக்கு
 5. அருமையான அழகான வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 6. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 7. குழந்தையின் முத்தம் - அந்த ஓவியத்திற்கு ஈடேது.

  நல்ல கவிதை. பாராட்டுகள் குமார்.

  பதிலளிநீக்கு
 8. அருமையான வரிகள்! 7 ஆம் தேதிதான் பயணம்...இதை எப்படி தவற விட்டோம்....

  பதிலளிநீக்கு
 9. நல்லாக்கப்பா ....ஆஹா ரசித்தோம்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...