மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 21 நவம்பர், 2014

வீடியோ : ஜெமினியின் ஜெம் ராகங்கள்

ஜெமினி கணேசன்.

மலஹாசனுக்கு காதல் இளவரசன் பட்டம் கிடைக்காம போகக் காரணமே இந்த ஆளுதான்... என்னடா இவன் புதுக்கதையாக் கிளப்புறானேன்னு பாக்குறீங்களா? ஆமாங்க... இந்தாளு மட்டும் காதல் மன்னன்கிற பட்டத்தை பறிச்சி வச்சிக்கலைன்னா பின்னால வந்த நம்ம முத்தகாசனுக்கு காதல் மன்னன்னு பட்டம் கொடுத்திருப்பாங்க...  ஆனா ஆளு விடவே இல்லையே... அந்தப் பட்டத்தை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டதும் இல்லாம வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே இருந்தாருல்ல... ஒருவேளை இன்னைக்கு இருக்க மாதிரி சூப்பர் ஸ்டாரு... அடுத்த சூப்பர் ஸ்டாரு... மூணாவது சூப்பர் ஸ்டாருன்னு பட்டம் மாறிக்கிடே இருக்க நிலை அன்னைக்கி இருந்திருந்தா காதல் மன்னன் பட்டம் கமலுக்குப் போயிருக்கும்.

புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசன் அவர்கள் தான் பார்த்த ஆசிரியர் வேலையை விட்டு விட்டு சினிமா உலகிற்குள் வந்து ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பார்த்ததால் பின்னாளில் கதாநாயகனாக ஆனபோது  சிவாஜி நாடகத்தில் நடித்த கணேசன்... சிவாஜி கணேசன் ஆனது போல் தான் வேலை பார்த்த நிறுவன பெயருடன் தனது பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.

எப்படி கமல் ரஜினி  கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு அடுத்த நிலை நாயகர்களாக பலர் இருந்தாலும் விஜயகாந்த் பேசப்பட்டாரோ அதே போல் எம்ஜிஆர் சிவாஜியின் காலத்தில் அவர்களுக்கு அடுத்த நிலையில் பலர் இருந்தும் ஜெமினி முன்னிலையில் இருந்தார் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. மலைகள் இரண்டு வெவ்வேறு பாணியில் பயணிக்க இடையில் இவரோ காதல் ரசம் சொட்டச் சொட்ட நடித்து சாம்பார் கணேசன் என்று அன்பாக(!) அழைக்கப்பட்டாலும் காதல் மன்னனாக உயர்ந்து நின்றார். அவரின் பாடல்கள் சில இங்கே... கேளுங்கள்... ரசியுங்கள்... பின்னர் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நிலவும் மலரும் பாடுது...



தனிமையிலே இனிமை காண முடியுமா...




வாடிக்கை மறந்ததும் ஏனோ..?




பிருந்தாவனமும்  நந்தகுமாரனும்...




காலங்களில் அவள் வசந்தம்...




அழகிய மிதிலை நகரினிலே...




பாட்டுப் பாடவா...




ஓ ஹோ எந்தன் பேபி...




வாராயோ வெண்ணிலாவே...




அன்று ஊமைப் பெண்ணல்லோ...




காலையும் நீயே மாலையும் நீயே...



பாடலை ரசித்தீர்கள்தானே... ஏன்னா என்னடா இவன் பாட்டைப் போட்டு பதிவு ரெடி பண்ணிடுறானேன்னு நினைச்சிட்டீங்கன்னா... எழுத நினைத்து சில வேலைகளால் தள்ளிப் போட நேர்ந்ததால்தான் இது போல பாடல்களைப் பகிர்வாக்குகிறேன்னு முன்னமே சொல்லியிருக்கேன். அப்படியிருந்தாலும் பழைய பாடல்களாகத் தேடித்தேடித்தானே தருகிறேன்... அப்ப இதுவும் பதிவுத் தேடல்தான் என்பதை நினைவில் கொள்க. அப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு. இருந்தாலும் வீடியோ பகிர்வும் அதற்கான தேடலும் வாராவாரம் ஆரவாரமாகத் தொடரும்.

நன்றி.

பாடல்களை யூடிப்பில் சேகரித்து வைத்திருந்தவர்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்

10 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

நல்ல விளக்கம் கொடுத்து இரசிக்கவைக்கும் பாடல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…


அனைத்துமே எனக்கு பிடித்த பாடல்கள் நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஜெமினி கணேசனைப் பற்றிய நல்ல பதிவு. அழகான புகைப்படங்கள். தாங்கள் இணைத்துள்ள பாடல்கள் மிகவும் அருமையானவை. நன்றி.

கோமதி அரசு சொன்னது…

என்றும் இனிமை, தேனும் பாலும், தேன் கிண்ணம், தேனருவி என்று பழைய பாடல்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் இந்த பாடல்களை எப்போது கேட்டாலும் அலுக்காத பாடல்கள்.

பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆஹா.... ஆஹா.... என்னென்றும் ரசிக்கும் பாடல்களின் தொகுப்பு...!

துரை செல்வராஜூ சொன்னது…

திரு ஜெமினி கணேசன் அவர்களை நினைவு கூர்ந்த விதம் அருமை..

அவர் நடித்த படங்களின் பாடல்களில் உண்மையிலேயே மெல்லிசை ததும்பும்.

மடையர்கள் அவரை சாம்பார் என்று அவமதித்து அற்ப சந்தோஷம் கொண்டார்கள்..

இனிய பாடல்களின் - அருமையான தொகுப்பு..

கவிதை வானம் சொன்னது…

ஆம்மாம் அண்ணேன்....சின்னவயசுல பார்த்த படம் தேன்நிலவு அதில வருகிற பாடல்கள் எல்லாம் இன்னும் மனதில் அந்தக் காட்சிகளுடன் தேன் மழையில் நனைந்த இன்பம் ....நல்ல பதிவு

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! என்ன அருமையான பாடல்களின் தொகுப்பு! மிகவும் இனிமையான பாடல்கள்! மிகவும் ரசித்தோம் கேட்டு...

பகிர்வுக்கு மிக்க நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அதுவும் ராஜா ஜிக்கி தான் பெரும்பாலும் அழகான குரல் வளம் இருவரும்க்கும்...