மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 20 அக்டோபர், 2014

வலைச்சரத்தில் முதல் நாள் : இவன் யாரோ... இவன் யாரோ...

லைச்சர ஆசிரியனாய் ஒரு நாள் பதிவு போட்டாச்சு. இன்னைக்கு நம்மளைப் பற்றி சொல்லும் நாள் என்பதால் சுலபமாக பகிர்வு போட்டாச்சு... நாளை முதல் நமக்கு இருக்கு... எப்படியும் விரட்டிப் பிடிப்போம்... விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியின்னு சொல்லியிருக்காங்க... அதானால முடிந்தளவு தேடிப் பிடிப்போம்.

இன்று காலை வலைச்சரத்தில் இட்ட பதிவில்...

சிறுகதை எழுதுவது எனக்குப் பிடிக்கும்... எனது வலையில் கூட 67 சிறுகதைகள் பதிந்திருக்கிறேன். நாம ஒரு கருவைப் பிடித்து அதை  எழுதலாம்என நினைத்து... நினைத்து... நாட்களைத் தள்ளிப் போட்டு வந்து ஒரு நாள் இரவில் விழித்திருந்து எழுதி பதிவிட்டால் சில பதிவுத் திருடர்கள் திருடர்கள் திருடி தங்கள் பதிவாக்கி விடுகிறார்கள். எனவே சிறுகதைகளைப் பகிர்வதை நிறுத்தி விட்டேன். நாம புத்தகம் போடலாம்ன்னு கனவோட இருக்கும் போது அவங்க புத்தகம் போட்டுட்டா... அதான் யோசனையின் முடிவாய் நிறுத்தம்.
சமீபத்தில் கூட ஒரு போட்டோவை தேடிய போது நான் போட்டோ போட்டோ வேறோரு தளத்தில் இருந்தது. அங்க போன நம்ம தளத்தோட பெயரில் அப்படியே போட்டிருக்காங்க... பதிவின் கீழ் வரும் என்னோட பேர் கூட அப்படியே இருக்கு. அப்புறம் ஆங்கிலத்தில் ஒரு மெயில் தட்டினேன். அதற்கு எது தங்களது என்பதை இணைப்புடன் சொல்லுங்கன்னு சொன்னானுங்க... சொன்னதும் இப்போ அந்த இணைப்பு வேலை செய்யலை... சொக்கா... கொஞ்சமில்லை மக்கா என்னோட பதிவில் மொத்தம் 463.இன்னும் நண்பர்களும் இருக்கிறார்கள். படத்தைப் பாருங்கள் தெரியும். இதேபோல் ஒருவனைப் பற்றி பல சகோதரிகள் சொல்லியிருந்தார்கள். அந்தாளு எல்லாமே அவன் எழுதுனமாதிரி பதிவுகளில் படமெல்லாம் போட்டு கலக்கிட்டான்னா பாருங்களேன்.

வாசிக்காதவர்கள் தொடர்ந்து வாசிக்க கோவிச்சுக்காம வலைச்சரம் வாங்க....

அப்புறம் மதுரை வலைப்பதிவர் சந்திப்புக்கான அழைப்பிதழ் திரு. தமிழ்வாசி பிரகாஷ் (பதிவர் மாநாடு ஒருங்கிணைப்பாளர்) அவர்களால் வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது. அதை அப்படியே சுட்டு இங்கயும் போட்டாச்சு... விழா சிறக்க வாழ்த்துக்கள்.


நாளை மற்றுமொரு வலைச்சர பகிர்வில் சந்திப்போம்... நன்றி.

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் குமார்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

3-ஆம் முறையாகவும் வலைச்சரத்தில் பேனா எடுத்து ஆசிரியர் ஆனதற்கு நல்வாழ்த்துக்கள் திரு. சே. குமார்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் நாள் பதிவினை அங்கேயும் படித்தேன். வாழ்த்துகள் குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைச்சர ஆசிரியர் ஆனமை குறித்து வாழ்த்துகள் குமார். :)

ராமலக்ஷ்மி சொன்னது…

வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள்!

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளும்!

துரை செல்வராஜூ சொன்னது…

வாழ்க நலம்..
அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..