மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

மனசு பேசுகிறது : எழுத்து - 1


ழுத்து என்பது அவ்வளவு சீக்கிரத்தில் எல்லாருக்கும் வந்து விடுவதில்லை. அது ஒரு வரம். அந்த வரத்தை இறைவன் சிலருக்குத்தான் கொடுத்திருக்கிறான். அந்த வரத்தைப் பெற்ற எல்லோரும் அதை கடைசி வரை தொடர்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லனும். மேலும் எழுதும் எல்லோராலும் வாசிப்பாளனைக் கவர முடிகிறதா என்றால் இல்லை என்பதே என் பதில்.  வசீகரிக்கும் எழுத்துக்காரர்களுக்கு மத்தியில் என்னைப் போன்று எழுதப் பழகுவோரும் இருக்கிறோம் என்றால் எங்களை இணைத்தது இந்த எழுத்துத்தான்.

இந்த வலையுலகத்து வந்த பிறகுதான் விதவிதமான எழுத்துக்களைப் படிக்க முடிகிறது. எத்தனை விதமான எழுத்துக்கள். அவற்றின் முன் என்னோட எழுத்து எல்லாம் பாமரத்தனமானவைதான் என்று அடித்துச் சொல்லலாம். ஜாம்பவான் எழுத்தாளர்களின் எழுத்து பற்றி நாம் அறிவோம். எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லை. படிப்பவரை அதற்குள் இழுத்துச் செல்ல வேண்டும். படித்து முடிக்கும் போது நமக்குள் அதன் தாக்கம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் பலரை எனது நட்பு வட்டத்தில் வைத்து வாசித்து சுவாசிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இந்த வலையுலகம்தான்.

என்னைக் கவர்ந்த முதல் எழுத்து எங்கள் பேராசானின் எழுத்து. அவரது கதைகளில் வாழ்க்கையை வடித்துத் தருவார். மிகச் சிறந்த எழுத்தாளர். எத்தனை மொழிபெயர்ப்புக்கள்... படிக்கும் காலத்தில் அவரின் எழுத்துக்கள் எல்லாத்தையும் வாசித்த மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் மிகுந்த சந்தோஷம். எதனையும் ரசனையான எழுத்தாக மாற்றக் கூடியவர் எங்கள் ஐயா. ஒரு வாழ்க்கையை கவிதையாக வடிக்க வேண்டுமா... இல்லை கதை ஆக்க வேண்டுமா... ரெண்டுமே வேண்டாம் கட்டுரையாக எழுத வேண்டுமா... எப்படியும் எழுதுவார். அதுதான் அவரின் தனிச் சிறப்பு. ரசித்துப் படிக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.

இப்போது பத்திரிக்கைத் துறையில் இருக்கும் எனது சகோதரனின் எழுத்து அச்சுக் கோர்த்தது போல முத்து முத்தாக இருக்கும். எப்படி ஆரம்பிக்கிறானே அப்படியே கடைசி வாய் இருக்கும்.. எத்தனை பக்கம் எழுதி முடித்தாலும் கடைசி வரிக்கும் முதல் வரிக்கும் எழுத்தில் வித்தியாசம் தெரியாது. படிக்கும் காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளன். கதைகள் எல்லாம் நிறைய பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. வாழ்க்கைப் பாதையில் இன்று பத்திரிக்கைத் துறையில் இருந்தாலும் அதற்காக எழுதுவதோடு நிறுத்திவிட்டான். கதைகள் எல்லாம் இப்போது எழுதுவதே இல்லை. பலமுறை நானும் சொல்லிப் பார்த்து விட்டேன். என்னத்தை எழுதச் சொல்றே... பத்திரிக்கைக்கு தயார் பண்ணவே சரியா இருக்கு என்று சொல்லிவிடுகிறான். அவனது எழுத்தைத் தொடர்ந்தால் எழுத்துலகில் மிகச் சிறந்த இடத்தைப் பிடிப்பான்.

கல்லூரித் தமிழாசிரியரான எனது நண்பன் பேராசிரியர் முருகன் நல்ல தமிழுக்குச் சொந்தக்காரன். இவனது கதைகள் எல்லாம் அடிமட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும். படிக்கும் காலத்தில் நிறைய எழுதுவான். அவற்றை முதலில் வாசிக்கும் பாக்கியவான் நான்... சிங்கப்பூர் தமிழ் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றான். தற்போது கூட சில கதைகளை புத்தகமாக்கியிருக்கிறான். தொடர்ந்து எழுதுகிறான் என்று நினைக்கிறேன். 

எனது பாசத்திற்குரிய நண்பன் தமிழ்க்காதலன், அருமையான கவிஞன்... இவனது கவிதைகள் எல்லாமே கதை மட்டும் பேசாது... காலத்தோடு கலந்து பேசும். இவனும் நானும் ஒரு கருவிற்கு கதையும் கவிதையும் எழுதியிருக்கிறோம். எனது கதையைவிட இவனது கவிதையே சிறப்பானதாக இருந்தது என்பதே உண்மை. கவிதைகளில் சொற்கள் விளையாடும். வலைப்பூ ஆரம்பித்து அதில் எழுதி வந்தவன் பின்னர் தமிழ்குடில் என்ற அமைப்பை ஆரம்பித்து சமூக சேவைகளில் இறங்கி இன்று இயற்கை வேளாண்மையில் சாதிக்க ஆரம்பித்திருக்கிறான். இவனும் எழுத்தை நிறுத்தி வைத்திருப்பது வருத்தமாக இருக்கிறது என்றாலும் தொடர்ந்து எழுதுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவனது வலைத்தளம் இதயச்சாரல் 

வலைப்பூக்களில் என்னைக் கவர்ந்த எழுத்துக்களில் ரசித்து ரசித்துப் படிக்க வைக்கும் எழுத்து தேவா அண்ணனுடையது. இங்கு துபாயில்தான் இருக்கிறார். சிலமுறை பேசியிருக்கிறேன். வேலை காரணமாக பேச நினைத்தும் பேச முடியவதில்லை. இவரது எழுத்துக்கள் மிகுந்த ரசனையுடன் கூடிய எழுத்து. வாசிப்பவனை அதற்குள் இழுத்துச் செல்லும் எழுத்து... எழுத்தை ரசித்து ரசித்து எழுதும் எழுத்தாளர் இவர். இவரது தளம் WARRIOR 

நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து ஒரு தெளிவுடன் படிக்க வேண்டுமா...? அப்படியென்றால் எங்கள் சிவகங்கைச் சீமையில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் சாதிக்கும் அண்ணன் ஜோதிஜி அவர்களின் தேவியர் இல்லத்துக்குப் போக வேண்டும். ஒவ்வொரு பதிவும் நீளமாக இருந்தாலும் நமக்குத் தேவையான தகவல்களைவிட அறியாத தகவல்களை எல்லாம் அழகாய் எடுத்துச் சொல்லும். அண்ணனிம் தளம் தேவியர் இல்லம் 

இதேபோல் தனது எழுத்து எண்ணும் ஆயுதம் கொண்டு மிகச் சிறப்பாக கவிதையோ கட்டுரையோ எழுதுவதில் வல்லவர் ஈரோடு கதிர் அண்ணா. நிறைய கீச்சுக்கள் எழுதுவார். நிறைய பத்திரிக்கைகளில் எழுதியிருக்கும் இவர் சிறந்த பேச்சாளர் வேறு. இவரின் எழுத்துக்கள் ரசனையோடு இருக்கும்... நிறைய கிராமத்து வாசம் அடிக்கும். இவரின் தளம் கசியும் மௌனம்.

எல்லோருக்கும் தெரிந்த வலையுலக சூப்பர் ஸ்டார் அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் திருக்குறளுக்கு விளக்கமாய் பதில் எழுதுவதும் எழுதும் பதிவுகளில் பாடல்களை இணைத்து அவற்றிற்கு விளக்கம் கொடுத்தும் கலக்கலாக எழுதுவார்கள். இப்போ மதுரை பதிவர் திருவிழாவில் ரொம்ப பிஸியின்னு நினைக்கிறேன். நம்ம பக்கமெல்லாம் வந்து ரொம்ப நாளாச்சி. இவரது வலைத்தளம் திண்டுக்கல் தனபாலன்.

சமீபகாலமாக நான் விரும்பிப் படிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர் விமலன் அண்ணா. இவரது பார்வைக்குச் சிக்கும் எல்லாம் அழகிய கதையாக மாறிவிடும். மனுசன் எழுத்துக்குள் நம்மை இழுத்துச் சென்று கட்டிப் போட்டு விடுவார். படிக்க ஆரம்பித்தால் சகோதரர் ஜெயசீலன் சொன்னது போல் வாசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். கொஞ்சம் விட்டாலும் மீண்டும் முதலில் இருந்து வாசிக்க வேண்டும். ஏன் என்றால் லயித்துப் படித்தால் மட்டுமே அதன் ரசனையை அப்படியே உள் வாங்க முடியும். இவரது வலைத்தளம் சிட்டுக்குருவி

நல்ல இலக்கியக் கட்டுரைகளைப் படிக்க தயங்காமல் இவர்களது தளங்களுக்குச் செல்லலாம். இவர்கள் என்றால் முத்து நிலவன் ஐயாவும் கரந்தை ஜெயக்குமார் ஐயாவும்தான். எதைப் பற்றி எழுதினாலும் அதில் ஒரு ஈடுபாட்டுடன் எழுதும் ஆசிரியர்கள். இவர்கள் பல தகவல்களை நமக்குத் தருவார்கள். முத்து நிலவன் ஐயா சமீபத்தில்தான் மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இவர்களின் தளங்கள் முறையே வளரும் கவிதை ,  கரந்தை ஜெயக்குமார்.

இங்கு சொன்னது கொஞ்சம்தான்... இணையத்தில் இன்னும் நிறைய எழுத்துக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் படிக்கும் போதெல்லாம் எனது எழுத்தைப் பற்றி யோசிக்க வைக்கும் என்றால் மிகையில்லை. இதில் நிறைய நண்பர்களைப் பற்றிச் சொல்ல நினைத்து இணைப்புக் கொடுக்க நேரம் எடுக்கும் என்பதால் சிலரோடு நிறுத்தி விட்டேன். எனவே ரசனைக்குரிய எழுத்துக்காரர்களை ரசித்துப் படித்ததோடு மட்டுமல்லாமல் சில பகுதிகளில் தொடர்ந்து  பகிரலாம் என்று நினைத்திருக்கிறேன்.

-தொடர்ந்து எழுதுவோம்...
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

தாங்கள் சொல்லிய விடயங்கள் அத்தனையும் உண்மைதான் எல்லாவற்றுக்கும் வலையுலகந்தான் காரணம்... இப்படி எழுத வந்திருக்காவிட்டால் புத்தகங்களும் பத்திரிகையும் படித்திருப்போம் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

என்னையும் தங்கள் வலையில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே
தொடருங்கள் இப் பதிவினை, தங்களைக் கவர்ந்த பதிவர்களை எங்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்
நன்றி நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 2

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல அறிமுகங்கள் குமார்.

r.v.saravanan சொன்னது…

தேவா வின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும் நீங்கள் குறிப்பிடும் நண்பர்களின் தளங்களை நானும் தொடர்ந்து படித்து விடுகிறேன். உங்கள் தம்பியை தொடர்ந்து எழுத சொல்லுங்கள் குமார்

துரை செல்வராஜூ சொன்னது…

தங்களைக் கவர்ந்த பதிவர்களைப் பற்றிய சிறப்பான அறிமுகம்.. அருமை..
பாராட்டுகள்..

ரிஷபன் சொன்னது…

வசீகரிக்கும் எழுத்துக்காரர்களுக்கு மத்தியில் என்னைப் போன்று எழுதப் பழகுவோரும் இருக்கிறோம் என்றால் எங்களை இணைத்தது இந்த எழுத்துத்தான்.// எழுத்தின் வசீகரம் அது. இந்த ரசனைக்கு மனசு சுலபமாய் வசப்பட்டு விடுகிறது

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பல்வேறு வகையான எழுத்துக்கள் நம்மை ஈர்த்து ஒட்டிக்கொள்ளும்! எழுத்தையும் எழுத்தாளர்களையும் பெருமைப்படுத்திய உங்கள் எழுத்தும் சிறப்பு! நன்றி!

J.Jeyaseelan சொன்னது…

நல்ல அறிமுகம் சார்...

Yarlpavanan சொன்னது…

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

மோகன்ஜி சொன்னது…

நல்ல அறிமுகங்கள் குமார். இவர்களில் இன்னும் சிலரை நான் வாசிக்க வேண்டும்

தனிமரம் சொன்னது…

பலரினை இணைப்பது பதிவுலகம் பாரதம் என்று வட்டம் கடந்து உங்களுக்கு பிடித்த பதிவர்களின் தொகுப்பு எனக்கும் பிடிக்கும் தேவியர் இல்லம் நம்ம தனபாலன் சார் .கரந்தை ஐயா தொடரட்டும் விருப்பம்....