மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 21 அக்டோபர், 2014வலைச்சர இரண்டாம் நாள் : தமிழா... தமிழா...

லைச்சர இரண்டாம் நாள் பகிர்வாக 'தமிழா... தமிழா...'. நாம் தமிழர் என்றாலும் வரலாறுகளையும் தமிழ் இலக்கியங்களையும் எல்லாப் பகிர்வர்களும் பகிர்ந்து விடுவதில்லை. அப்படி இலக்கியத் தரம் வாய்த்த பதிவுகளை அதிகம் பதிவிடும் மிகச் சிறந்த பதிவாசியர்களைப் பற்றிய பகிர்வுதான் தமிழா... தமிழா....
இன்றைய பகிர்வில்...

தமிழ் என்றதும் ஞாபகத்தில் வருவது தமிழாசிரியர்கள்தான். பள்ளி முதல் கல்லூரி வரை இவர்களை ஐயா என்றுதான் அழைப்போம். பள்ளியில் படிக்கும் காலத்தில் ஐயாக்கள் எல்லாம் வேஷ்டி சட்டையில்தான் வருவார்கள். கூடுதலாக ஒரு ஜோல்னாப் பையும் இருக்கும். அவர்களைப் பார்த்தாலே தமிழாசிரியர் என்பது சொல்லாமல் தெரிந்துவிடும். ஆனால் கல்லூரிக்குப் போனபோது வேஷ்டி கட்டிய ஐயாக்களைப் பார்க்க முடிவதில்லை. எல்லோருமே பேண்ட்தான். வீட்டில் வேஷ்டியுடன் தரையில் அமர்ந்து எழுதும் எங்க பழனி ஐயாவைக் கூட கல்லூரியில் வேஷ்டியில் பார்க்க முடியாது.

இப்ப நம்ம நண்பன் எந்தக் கல்லூரியில் தமிழ் படித்தானோ அதே கல்லூரியில் ஆசிரியனாய்... இவனெல்லாம் எப்பவும் பேண்ட்தான்... படிக்கும் போது இவன் யாப்புமொழிஇலக்கியம் அது இதுன்னு என்னென்னவோ சொல்லுவான். கவிதையெல்லாம் எழுதுவான். நமக்கு தமிழ் என்பது ஏட்டளவில் மட்டுமே... அதிக ஈடுபாடெல்லாம் கிடையாது.. இப்ப மட்டும் இருக்கான்னு கேக்கப்படாது. ஏதோ நெல்லுக்கு இரைத்த நீர் பில்லுக்குக் கிடைப்பது மாதிரி வலைப்பூக்களில் பகிரப்படும் தமிழில் சிலவற்றைப் படித்து நம்ம தமிழ் அறிவை அப்ப அப்ப அருகம்புல்லாட்டம் வளர விட்டுக்கிறதுதான்... சரி... சரி... எதுக்கு இப்ப அதையெல்லாம் கிண்டிக்கிட்டு வாங்க நண்பனைக் கிண்டுவோம்.

தொடர்ந்து வாசிக்க அங்க... அதாங்க... வலைச்சரத்துக்கு வாங்களேன்....

அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும்ன்னா இந்த பாட்டையும் பாத்துட்டுப் போங்க...

-'பரிவை' சே.குமார்

4 கருத்துகள்:

 1. சிறந்த பகிர்வு
  தங்களுக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
  thama 2

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...