மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 19 அக்டோபர், 2014வலைச்சர ஆசிரியனாய் மீண்டும்...


ரு வார காலத்திற்கு வலைச்சர ஆசிரியனாய் இருக்க சீனா ஐயா அவர்களின் அன்பு அழைப்புக்கு மறுப்பு சொல்ல நினைத்த சூழல் மறுப்புச் சொல்ல முடியாமல் அன்பினால் அடித்துச் செல்லப்பட்டது. 

எங்களது புராஜெக்ட் அரசு அலுவலகத்தில் இந்த மாதத்துடன் முடிவடைவதால் ஒரு நாளைக்கு தொடர்ந்து பதினோரு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்கிற சூழ்நிலை.. பத்துப் பேர் பார்க்க வேண்டிய பணியை கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நான், இரண்டு மலையாளிகள், ஒரு பாகிஸ்தானி என நான்கு பேர் பார்த்து வருகிறோம். விரட்டித்தான் பணிகளை முடித்து வந்தோம். கடைசி நேரத்தில் சர்வே பணியில் சொதப்பலாகிவிட எல்லா வேலைகளும் எங்கள் தலையில் விழுந்துவிட்டது. விரட்டி முடிக்க பார்ப்பதால் சனிக்கிழமைகளில் கூட பணிக்குச் செல்கிறோம்.

இந்த பிரச்சினையால்தான் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நண்பர்களின் தளங்களுக்குச் செல்லவில்லை. ஒரு சிலரின் தளங்களில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறேன். இங்கும் இடுகைகள் அதிகம் எழுத முடியவில்லை. இருப்பினும் எதாவது எழுதினால் இவனை நம்ம பக்கம் ஆளையே காணோம் என்று நினைக்காமல் வந்து கருத்திடும் நட்புக்களை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது.

இனி ஒருவாரம் அலுவலகப் பணியுடன் வலைச்சரப் பணி இருப்பதால் இங்கு எழுத நேரம் இருக்காது. நட்புக்களின் தளத்திற்கு நேரம் கிடைக்கும் போது தவறாமல் வருவேன். ஆனா நீங்க எல்லாரும் தினமும் வலைச்சரம் வந்து என்ன பண்ணியிருக்கேன்னு ஒரு எட்டு பார்த்து உங்க கருத்தையும் தட்டி விட்டுட்டு வர மறக்கக் கூடாது. 

ஆங்... சொல்ல மறந்துட்டேனே... வலைச்சரத்தில் பலரால் பலமுறை அறிமுகமான நான் அதே வலைச்சரத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியனாக சீனா ஐயா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களால் அமர்த்தப்பட்டிருக்கிறேன். என்னால் முடிந்தவரை இந்த ஒரு வார காலத்தில் செய்து முடிக்கிறேன். அதற்கு தங்கள் ஆதரவு கண்டிப்பாக வேண்டும்.

நாளை முதல் வலைச்சரத்தில்... 

அங்க இன்னைக்கு சீனா ஐயா அவர்கள் நம்மளைப் பற்றி அதிகமாச் சொல்லியிருக்காங்க... செவ்விருந்தோம்பி வரவிருந்து காத்திருத்தல் அப்படின்னு மீனைப் பிடிக்கப் போற கொக்கா காத்திருக்காங்க.,.. மீன்னா அங்க போயி கலக்கிட்டு வந்திடுவோமான்னு கலக்க ஆரம்பிச்சிருச்சு... நீங்களே பாருங்க...

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  சே.குமாரினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்படியே ரிலாக்ஸா யாரோ இவன்... யாரோ இவன்... அங்க போயி என்ன பண்ணப் போறானோ இவன் என்று எனக்காக யோசித்தபடி இந்தப் பாடலையும் ரசித்துச் செல்லுங்கள்...-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் குமார். எத்தனை பணிகள் இருந்தாலும் இது போன்ற வாய்ப்பையும் ஏற்றுக் கொள்ளுங்க. நெருக்கடியான சூழ்நிலைகள் தான் நம் திறமைகளை வெளியே கொண்டு வரும். உங்களை மாதிரி இரண்டு மடங்கு பணிச்சுமையில் நான் இருக்கின்றேன்.

  அப்புறம் இந்த காணொளி காட்சியை இந்த அதிகாலை வேலையில் முழுமையாக ரசித்தேன். நீண்ட நாளைக்குப் பிறகு காதல் தொடர்பான காட்சிகள் பாடல்கள் என் மனதில் இடம் பிடித்தது.

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 2. தங்கள் பணி
  சிறப்பாகவும் வெற்றியடையவும்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் குமார். கலக்குங்க.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் நண்பரே
  கடுமையான அலுவலகப் பணிகளுக்கு இடையிலும், வலைச்சர பணி
  பாராட்டுக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 5. உங்களது மந்திரக் கரங்களால்
  வலைச்சரம் இன்முகம் பூக்கட்டும்
  வளர் சோலையாய் செழிக்கட்டும்
  வாசமிகு பூக்களால் மணக்கட்டும்

  மூன்றாவது முறையாக ஆசிரியர் பொறுப்பு ஏற்றமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..சகோதரரே.

  பதிலளிநீக்கு
 6. இந்த முறை ஊருக்கு கிளம்பும் நாளில் நான் நகருக்கு வந்ததற்கும் விமானம் ஏறுவதற்கும் இடைவெளி இரண்டு மணி நேரங்கள் தான் இருந்தது சகோதரரே.... அப்படியே விமானதளம் சென்றுவிட்டேன்... வந்தவுடன் வலைச்சரப் பணியும் முடித்துவிட்டேன்....

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் குமார்.
  அருமையான பாடல் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 8. ஒருவார ஆசிரியர் பணி என்பதையே என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை ...நெருக்கடியான நேரத்தில்மூன்றாவது முறையாக பொறுப்பு ஏற்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் !
  த ம +1

  பதிலளிநீக்கு
 9. மனமார்ந்த வாழ்த்துகள் குமார்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...