மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 26 அக்டோபர், 2014வலைச்சர ஏழாம் நாள் : ஒரு வானவில் போல

வலைச்சர ஏழாம் நாளான இன்று 'ஒரு வானவில் போல...' என்ற பகிர்வில்...

நம்ம நாட்டைப் பொறுத்தவரை நாலு பேருக்கு நல்லது செய்யிறவனை நாலு ஊருக்குத்தான் தெரியும். நடிகனையும் அரசியல்வாதியையும் நாய்க்கும் தெரியும் என்று எனது நண்பன் சொல்லுவான். ஆம்... அது உண்மைதான் என்ற போதிலும் தமிழ் எண்ணும் உயிர் இன்று முகம் பார்த்து அறியாவிட்டாலும் உலகமெங்கும் நட்பைக் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட பிரபல முகம் கிடைக்க காரணமாய் இருந்தது... இருப்பது ஒன்றே ஒன்றுதான்... அதுதான் வலைப்பூ.
கல்லூரியில் படிக்கும் போதும் தேவகோட்டையில் கணிப்பொறி மையம் நடத்திய போதும் அம்மாவை சைக்கிள் கூட்டிக் கொண்டு கடைக்குப் போகும் போது எதிர்படுபவர்களில் பலர் கையைக் காண்பித்துச் செல்வார்கள். அதையெல்லாம் கவனித்துக் கொண்டே வரும் அம்மா, வீட்டிற்கு வந்ததும் தம்பி சம்பாரிச்சி சொத்துச் சேர்த்து வச்சிருக்கோ இல்லையோ ஆனா ஆளுகளை நல்லாப் பழகி வச்சிருக்குன்னு சொல்லுவாங்க. உண்மைதான் இன்றும் தேவகோட்டையில் எனக்கு ஒரு உதவி என்றால் உறவுகளைவிட நட்புக்களே முன் நிற்பார்கள். இப்பவும் காசு பணம் இருக்கோ இல்லையோ வலைப்பூ மூலமாக உலகளாவிய உறவுகளாய்... ஐயா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, தோழன், தோழி என எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்களை இறைவன் எனக்களித்து இருக்கிறான். அப்படி எனக்குக் கிடைத்த உறவுகளில் சிலரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இது முழுக்க முழுக்க எனது உறவு வட்டம்தான். இன்றைய பதிவில் புதியவர்கள் இல்லை... ஆனால் பல புதியவர்கள் அறிய வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து வாசிக்க...அப்படியே போகாமல் இந்தப் பாட்டையும் பார்த்துட்டுப் போங்க...

காதல் மயக்கம்... அழகிய கண்கள்....

-'பரிவை' சே.குமார்.

2 கருத்துகள்:

 1. அன்பின் குமார்..
  தங்கள் அன்பினுக்கு ந்ன்றி..

  மகளின் வளைகாப்பு இன்று.
  நேற்று இரவு சிவகாசிக்குச் சென்று - இன்று காலையில் விசேஷத்தினை சிறப்பாகச் செய்து விட்டு சற்று முன் தான் தஞ்சைக்குத் திரும்பினோம்.

  வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தது கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள குமார்!

  வலைச்சரத்தில் என் வலைத்தளத்தினை அறிமுகம் செய்திருப்பதற்கு என் அன்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...