மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 18 அக்டோபர், 2013

மனசின் பக்கம் : நய்யாண்டியில்லை உண்மைதான்...

ந்த வாரம் முழுவதும் விடுமுறையில் கழிந்துவிட்டது. விடுமுறைக்கு எங்கெங்கோ போக வேண்டும் என்று திட்டம் வகுத்திருந்தோம். ஆனால் எங்கும் செல்லாமலேயே முடிந்துவிட்டது. துபாய்க்குச் சென்றால் தேவா அண்ணனைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். விடுமுறை ஆரம்பிப்பதற்கு முதல்நாள் தேவா அண்ணன் போன் செய்து அபுதாபி வந்தால் கட்டாயம் உன்னைப் பார்க்க வருகிறேன் என்றார். அவரும் வரவில்லை... நானும் போகவில்லை. விரைவில் தேவா அண்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் இந்த ஒரு வாரகால விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருக்கலாம். எல்லாம் முடிந்தபின் யோசனை செய்து என்ன லாபம். வரும் ஞாயிற்றுக்கிழமை மாட்டைப் பூட்டினால் இனி விடுமுறையின்றி பாரம் சுமக்க வேண்டியதுதான்.

ந்த விடுமுறையில் நிறைய படங்கள் பார்த்தாச்சு... அவற்றில் புதியவை நய்யாண்டியும் வணக்கம் சென்னையும்... நய்யாண்டிக்கு நல்ல விமர்சனம் இல்லாத போதிலும்... தனுஷுக்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லாத படமாக இருந்த போதிலும்... களவாணி, வாகைசூடவா அளவிற்கு இல்லை என்று எல்லாரும் சொன்ன போதிலும்... நய்யாண்டி என்னைப் பொறுத்தவரை ஒருமுறை பார்க்கலாம். களவாணியையும் வாகைசூடவாவையும் இப்போது தூக்கி வைத்துப் பேசினாலும் வாகை சூடவாவை நாம் வெற்றிப்படமாக்கினோமா? இல்லையே அப்புறம் அந்த இயக்குநர் தனது லாபத்திற்காக இப்படி ஒரு படமெடுப்பதில் என்ன தவறு. தனுஷுக்கு விஜய் பில்டப்புக்கள் தேவையில்லைதான். இருந்தும் கொஞ்சம் ரசிக்க வைத்தது.

ணக்கம் சென்னை... கலைஞர் குடும்பத்தில் இருந்து இன்னுமொருவர் சினிமாவிற்குள் பிரவேசம். நடிக்கத் தெரியாத சிவாவை வைத்து இந்தப் படத்தை எடுத்ததற்கு வேறு யாரையாவது வைத்து எடுத்திருக்கலாம். ரொம்பப் போர் அடிக்கும் ஒரு கதை, வழவழ கொழகொழ நாயகன் என இடைவேளை விடுவதற்கு முன்னரே தூங்க வைத்துவிட்டது. விமர்சனங்கள் சொன்ன அளவிற்கு கிருத்திகா வெற்றி பெற்றாரா என்பது முழுப் படத்தையும் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.

லைச்சரத்தில் ஒரு வார ஆசிரியனாய் இருந்தபோது திரு. சீனா ஐயா அவர்களின் நீண்டதொரு கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால் ஐயா அவர்களின் கருத்து பெரும்பாலும் ஒற்றை வரியில்தான் இருக்கும் ஆனால் எனக்கு நீண்டதொரு கருத்து கிடைத்தது எனது பாக்கியமே. இதே சந்தோஷத்தை இரு தினங்களுக்கு முன்னர் எழுத்தாளர் திரு. முத்துநிலவன் அவர்கள் எனது கவிதையைப் படித்துவிட்டு எழுதிய கருத்து கொடுத்தது. பிரபலமானவர்களின் கருத்துக்கள் நம்மை சந்தோஷப்படுத்தும் அளவிற்கு இருக்கிறது என்றால் நமது எழுத்து அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்தானே... ஆனால் அந்தளவுக்கா நாம எழுதுறோம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இருந்தும் எனது எழுத்துக்கு தங்கள் எண்ணத்தில் தோன்றிய கருத்தை எழுத்தாக்கிய இரண்டு இமயங்களுக்கும் நன்றி.

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கரில் பாடகர் மனோவின் மனைவி மற்றும் மகள் வந்திருந்தனர். மனோ தன் மனைவி குறித்து சிலாகித்துப் பேசினார். அப்போது அங்கு இருந்த டி.எல்.மகராஜன் அவர்கள் ஒரு நிகழ்வைச் சொன்னார். ஒருமுறை மனோ வீட்டிற்கு வருமான வரித்துறையில் இருந்து சோதனைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கணக்கில் இருக்கும் நகை, பண விபரங்களை திருமதி.மனோ அவர்கள் கொடுத்ததும் ஒரு பெண் அதிகாரி பெரிய பாடகர் வீடு... நகை பணமெல்லாம் இம்புட்டுத்தானா? ஆமா வைரமெல்லாம் எங்க இருக்கு என்று கேட்டு தொந்தரவு செய்ய, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த திருமதி. மனோ அவரது கையைப் பிடித்து மனோ இருக்கும் இடத்துக்கு இழுத்துச் சென்று 'இதோ இவர்தான் என்னோட வைரம்' என்று சொன்னாராம். கணவன் மனைவிக்குள்ளான அன்பிற்கு இதைவிட வேறு என்னத்தைச் சொல்வது என்றார். 

மிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகளில் 350க்கு மேல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 100, 101 என்ற இடத்திற்கு வந்தபோது அட நூறாவது இடத்துக்கு வந்துட்டமேன்னு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு வலைச்சர ஆசிரியனாய் இருந்த வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 50க்கும் 75க்கும் இடையில் ஏற்ற இறக்கமாய் வந்து நின்றது. தற்போது மேலும் முன்னேறி 30க்குள் வந்துவிட்டது. இதற்கு எனது எழுத்துக்களை வாசிக்கும் உங்களுக்குத்தான் முதல் நன்றி. ஏதோ கிறுக்கினாலும் அதைப் பொறுமையாகப் படித்து கருத்துச் சொல்லும் அனைவருக்கும் நன்றி. அனைவரின் எழுத்துக்களையும் எல்லாரும் படிக்கும் விதமாக பரந்தவெளிக்குக் கொண்டு செல்லும் தமிழ்மணத்துக்கு நன்றி.

கோதரர் ரூபன் அவர்கள் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்புக் கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். போட்டிக்கான தேதியை நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 31.10.2013 வரை கால நீட்டிப்புச் செய்திருக்கிறார். வலைப்பூ வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம் என்று சொல்லியிருப்பது சிறப்பு. கவிதைப் போட்டி பற்றி விரிவான விளக்கம் அறிய கீழே இருக்கும் சுட்டியில் போய் தெரிந்து கொள்ளுங்கள்.


2013-10-18_082010

ன்ன உறவுகளே எல்லோரும் எங்கே கிளம்பிட்டீங்க..? ரூபனின் தளத்துக்குத்தானே... ஆம் உறவுகளே எல்லோரும் எழுதுங்கள்... பரிசு என்ற இலக்கை நோக்கி எழுதாமல்... நம்மாளும் முடியும் என்று எழுதுங்கள்... வெற்றி நிச்சயம்... கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்வோம்...
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனசின் பக்கம் மிளிர்கிறது..பாராட்டுக்கள்..!

பெயரில்லா சொன்னது…

சொந்தக்கதை , படக்கதை , வலைக்கதை என்று அனைத்தும் கலந்த
சுவையான கலவையாக இருந்தது இந்த கதம்பப்பதிவு .

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் குமார்!.. எண்ணங்களை இயல்பாகப் பகிர்ந்துள்ளீர்கள்.. மகிழ்ச்சி!..

Unknown சொன்னது…

நன்று!///சூப்பர் சிங்கர் பற்றிய பகிர்வில்,அந்தப் பாடகி 'சோனியா' பற்றியும் சொல்லியிருக்கலாம்.மனதைப் பிழிந்த,அதிர்ச்சியான,சோகமான பகிர்வு அது!இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சான்னு முதல் அதிர்ச்சி.அப்புறம்.............பாடக் கூடாது ன்னு...................சரி விடுங்க.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் தளத்திலும் எனது இனிய நண்பரின் அறிவிப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல...

Riyas சொன்னது…

அண்ணே அபுதாபியில எங்க இருக்கிங்க நாங்களும் அந்தப்பக்கம்தாண்னே..

கவியாழி சொன்னது…

கலக்கல் விடுமுறையோ? வருத்தமும் புரிகிறது

மகேந்திரன் சொன்னது…

அறுஞ்சுவைப் பெட்டகம்...

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் எண்ணங்களை நாங்களும் படித்தோம், தொடர்ந்தோம்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோதரி. ஸ்ரவாணி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. யோகராஜா
நான் சூப்பர் சிங்கர் இணையத்தில்தான் பார்ப்பதுண்டு. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று எபிசோட் சேர்த்துப் பார்ப்பேன். சோனியா பற்றி நீங்கள் சொன்னபிறகு நேற்றிரவு பார்த்தேன். கண் கலங்கிவிட்டது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துரை அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. ரியாஸ்...
அபுதாபியில் ஹம்தானில்தான் இருக்கிறேன். தாங்கள் எங்கு இருக்கிறீர்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கண்ணதாசன் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மகேந்திரன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஸ்ரீராம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.