மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 25 அக்டோபர், 2013வீடியோ : சூப்பர் சிங்கரில் என்றென்றும் ராஜா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் என்றென்றும் ராசா சுற்றில் புதன் கிழமை வரையில் பார்த்ததில் சில பாடல்களை இங்கு பகிர்ந்துள்ளேன். ல்லாருமே நன்றாக பாடினார்கள். திவாகர், பார்வதி, சோனியா, தீப்தி, மதுமிதா, சாய் விக்னேஷ், சரத் சந்தோஷ்,  கிருஷ்ணா, கணேஷ் என அனைவரும் அருமையாக பாடினார்கள். நடுவர்களில் சுஜாதா மட்டும் தமில் பேசுகிறார்.... மற்றவர்கள் அழகான தமிழ் பேசுகிறார்கள். சரி நடுவர்களைப் பற்றி பிறகு பேசுவோம்...  தீப்தி மிக அருமையாகப் பாடினார்.... ஆனால் அந்த இணைப்பை இங்கு கொடுத்தால் விடியோ கிடைக்கவில்லை... இதேபோல் மற்ற சிலரின் பாடல்களையும் இணைக்க முடியவில்லை.இப்போ என்னால் இணைக்க முடிந்த சிலரின் பாடல்களைப் பார்ப்போம்.


பாடல் : இது ஒரு பொன்மாலைப் பொழுது...
பாடியவர் : திவாகர்பாடல் : புத்தம் புது காலை...
பாடியவர் : சோனியா
பாடல் : பருவமே...
பாடியவர் : பார்வதி
பாடல் : ஏதோ நினைவுகள்...
பாடியவர் : மதுமிதா
பாடல் : பூங்காற்று சதிராடுது...
பாடியவர் : சரத் சந்தோஷ்
பாடல் : தோகை இளமயில்...
பாடியவர் : சாய் விக்னேஷ்
ராஜாவின் இசையை மிக அழகாக இசைத்தார்கள் இசைக்குழுவினர்... புதன், வியாழன் பகுதிகளை இன்றுதான் பார்க்க வேண்டும்... இணையத்தில் பார்ப்பதால் நேரம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்.

மற்றும் ஒரு வீடியோ பகிர்வில் தொடர்வோம்...
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

 1. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலே, பார்க்கின்றவர்களை பார்த்தாலே .................

  வேண்டாம் கெட்ட வார்த்தை.

  பாவம் பாடுற பசங்க. இவனுங்க திறமையை காட்டுறதுக்கு அதுகள பாடுத்துற பாடு இருக்கே.

  கொடும.

  பதிலளிநீக்கு
 2. இசை நிகழ்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று தனி இடம் உண்டு.
  நிகழ்ச்சியினை இனிதே பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரரே...

  பதிலளிநீக்கு
 3. அருமையாக இருந்தது,நன்றி!

  பதிலளிநீக்கு
 4. தொலைக்காட்சி நிகழ்சின்னா நான் பார்க்கிரதுனிந்த சூப்பர் சிங்கர்தான்.!
  அவ்வளவு விருப்பமானது.

  நீங்கல் குறிப்பட்ட பாடகர்களும் மற்றும் போட்டியில் இருக்கும் அனைவருங்கூட ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவரில்லை...

  அருமையான பகிர்வு.
  மிக்க நன்றி சகோ! வாழ்த்துக்கள்!

  த ம.5

  பதிலளிநீக்கு
 5. நான் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதே இல்லை குமார்....

  ஏனோ பிடிக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 6. இணையத்தில் எந்த தளத்தில் பார்க்கிறீர்கள்? கிடைத்தால் நன்று...

  பதிலளிநீக்கு
 7. வாங்க ஜோதி அண்ணா...
  உண்மைதான்.
  இங்கு டிவி எல்லாம் இல்லை...
  மொக்கை போடும் நாடகங்களைப் பார்ப்பதில்லை...
  கொஞ்சம் ரிலாக்ஸ்க்குக்காக இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன்... இப்போ 13 பேரும் அருமையாக பாடுகிறார்கள். நடுவர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை... பாடல்களை மட்டும் ரசிப்பேன்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க தனபாலன் சார்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மகேந்திரன் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க சகோ. யோகராஜா....
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சகோ. இளமதி
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க வெங்கட் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஸ்கூல் பையன்...
  கண்டிப்பாக இணைப்புத் தருகிறேன்...
  http://www.youtube.com/watch?v=TnkOEUMfwds&feature=c4-overview-vl&list=PLsSTkBgqx7ovRwlVocNa6SFEDaKsUow4H
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. குமார் என்னோட வருத்தமும் ஆதங்கமும் என்ன தெரியுமா?

  இந்த நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் இளையர்களைப் பற்றியே. இந்த நிகழ்ச்சியை தொடக்கத்தில் நானும் விரும்பிப் பார்த்தேன். சில வருடங்களில் பலரும் வளர்ந்துவிட்டனர். சில பிரபல பாடகர் என்கிற ரீதியில். ஆனால் பெண் குழந்தைகள் வர வர ஒப்பனைகளில் கவனம் செலுத்துவதும், பாடல்களுக்கு தேவையில்லாத பாவனைகள், ஆட்டம் என்று டிஆர்பி ரேட்டிங் என்பதை காரணத்தில் வைத்து அவர்களை பாடுவதை விட பல விசயங்களில் ஒரு ரசிக்கக்கூடிய பொம்மை போல மாற்றி விடுகின்றார்கள். ஒரு கிராமத்தில் இருக்கும் தகப்பன் தாய் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு நீதிமான்கள் பேசும் பேச்சை கால் வாசி தமிழ் முக்கால்வாசி ஆங்கிலத்தை எப்படி புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் திறமையை வளர்க்க வேண்டும் என்று நினைப்பு வரும்?

  நம் ஊரில் அல்டாப்பு என்போமே அது போலத்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...