மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 9 நவம்பர், 2010சொல்ல மறந்த கவிதைகள்மறக்கமாட்டேனென்று

மழைநாளில்

சொல்லிச் சென்றாய்...

மழைக்கால காளானாய்

நான் பூத்திருக்க...

மனைவி அணைப்பில்

குடைக்குள் நீ குழந்தையோடு..!
தண்ணீரில் விழும்

மழைத்துளியாய் நான்

சிலிர்த்து நிற்க...

முத்தச்சூடு கரையுமுன்

அடுத்த முத்தத்திற்கு

தயாராகிறாய் அவசரமாய்..!
 
    
 

மனைவிக்கு பூ வாங்கும் நீ

அருகில் நிற்கும்

என்னைப் பார்த்தபடி

எனக்கு எப்பவும் மல்லி

ராசியில்லை என்கிறாய்...

புரிந்து சிவக்கிறேன் நான்..!

புரியாமல் ரசிக்கிறாள் பூக்காரி...!
 
 
-'பரிவை' சே.குமார்.

29 கருத்துகள்:

 1. //அருகில் நிற்கும்

  என்னைப் பார்த்தபடி

  எனக்கு எப்பவும் மல்லி

  ராசியில்லை என்கிறாய்...

  புரிந்து சிவக்கிறேன் நான்..!

  புரியாமல் ரசிக்கிறாள் பூக்காரி...! ///

  நானும் புரிந்து ரசிக்கிறேன்...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அழகான கவிதைகள். ரொம்ப நல்லாருக்கு குமார்.

  பதிலளிநீக்கு
 3. இப்போவாச்சு ஞாபகம் வந்துச்சே...

  பதிலளிநீக்கு
 4. நல்லா இருக்கு..
  அந்த இரண்டாவது பாரா மிகுந்த விசையா இருக்கு..

  பதிலளிநீக்கு
 5. ///
  மனைவிக்கு பூ வாங்கும் நீ
  அருகில் நிற்கும்
  என்னைப் பார்த்தபடி
  எனக்கு எப்பவும் மல்லி
  ராசியில்லை என்கிறாய்...
  புரிந்து சிவக்கிறேன் நான்..!
  புரியாமல் ரசிக்கிறாள் பூக்காரி...! //

  ஹா ஹா ஹா..
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் குமார்.. :-)))))

  ரொம்ப நல்லா இருக்குங்க மூன்றுமே அருமை..

  பதிலளிநீக்கு
 6. கவிதைகள் நல்லா இருக்கு நண்பா... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. காதலுக்கு கவிதையும், வெறுமையும் மட்டும் தான் சொந்தம்.

  பதிலளிநீக்கு
 8. //புரிந்து சிவக்கிறேன் நான்..!
  புரியாமல் ரசிக்கிறாள் பூக்காரி...! //
   
  சூப்பர் பாஸ் :-)

  பதிலளிநீக்கு
 9. மூன்றாவது கவதை சூப்பர்.. குமார்..

  பதிலளிநீக்கு
 10. வாங்க சிநேகிதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சரவணன்...
  புரியுதா...? சரி... சரி....
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க வானம்பாடிகள் ஐயா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க ஸ்டார்ஜன்...
  நலமா...? வேலைப்பளூ குறைஞ்சிருச்சா..?
  அக்பர் வந்தாச்சா?
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க பிரபாகரன்...
  இப்ப இல்ல எப்பவுமே ஞாபகத்துல இருக்கத்தான் செய்யுது.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க பாலாஜி சரவணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சித்ரா மேடம்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 13. வாங்க ஆனந்தி...
  என்ன ஊருக்குப் போயாச்சா...?
  ரொம்ப நாளாச்சு...? சுகந்தானே..?
  உண்மை புரிஞ்சா வெளிய சொல்லக்கூடாது... சரியா?
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க தமிழ்க் காதலன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தமிழ் உதயம்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க உழவன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க தேனம்மை அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. ///வாங்க ஆனந்தி...
  என்ன ஊருக்குப் போயாச்சா...?
  ரொம்ப நாளாச்சு...? சுகந்தானே..?
  உண்மை புரிஞ்சா வெளிய சொல்லக்கூடாது... சரியா?
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ////

  வந்துட்டேன்.. வந்துட்டேன்.
  நா நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?

  சரி சொல்லல........!! :-))))

  பதிலளிநீக்கு
 17. கவிதகள் & படங்கள் எல்லாமே அருமை, குமார்.

  பதிலளிநீக்கு
 18. ஹா ஹா ஹா..
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் குமார்.. :-)))))
  //

  அதேதான் கேட்கவந்தேன் .

  நல்லாயிருக்கு அனைத்து கவிதையும்..

  பதிலளிநீக்கு
 19. படங்கள் அருமை
  கவிதைகள் அதை விட அருமை வாழ்த்துக்கள் குமார்

  பதிலளிநீக்கு
 20. குமார்...முதாலவதும் மூன்றாவதும் மனதை நெருடினாலும் அழகாயிருக்கிறது !

  பதிலளிநீக்கு
 21. வாங்க ஆனந்தி...
  நல்லாயிருக்கேன்.... ஆமா சொல்லப்புடாது...

  வாங்க வானதி
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க மலிக்கா அக்கா...
  அதான் ஆனந்திக்கு பதில் சொல்லியாச்சில்ல... அதையே திரும்ப கேட்டா என்னக்கா அர்த்தம்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க ஹேமா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க சி.பி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க செந்தில்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...