மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 25 நவம்பர், 2010



மாறாத நினைவுகள்



நிகழ்காலத்தின்
நிஜத்தில் வாழ்ந்தாலும்
கடந்த காலத்தின்
நினைவுகளாய் நீ..!

பாடப் புத்தகத்தில்
பக்கமெல்லாம் கிறுக்கிய
உன் பெயர் இதய
நோட்டிலிருந்து
இறங்க மறுக்கிறது..!

பேருந்துப் பயணத்தில்
கார்குழல் பறக்க
பயணிக்கும் பெண்
உன் ஞாபகச் சாரலை
விதைத்துச் செல்கிறாள்..!

தோள் சாய்ந்த காதலர்கள்
கண்டால் கைகள் தானாக
நீ சாய்ந்த தோளை
தடவிக் கொள்கின்றன..!

மழை நாளில் தலை
துவட்டும் மனைவி
துவட்டாமல் விட்டுச்
செல்கிறாள் நீ
துவட்டிய நாட்களை..!

பள்ளிக் குழந்தைகள்
பறக்கும் அவசரத்தில்
கொடுக்கும் முத்தங்கள்
நீ அவ்வப்போது
கொடுத்த முத்தங்களை
முத்தெடுக்க வைக்கின்றன..!

ஹோட்டலில் எதிரே
கொறித்துச் சாப்பிடும்
கொஞ்சும் குமரிகள்
நீ சாப்பிட்ட நினைவுகளை
ஊட்டிச் செல்கிறார்கள்..!

பூத்திருக்கும் பூக்களெல்லாம்
உன் புன்னகையையும்
பூச்சூடிய கூந்தலையும்
மனசுக்குள் மணக்க வைத்து
இதழ்களில் பூக்க வைக்கின்றன..!

பிரிவின் வலியை
பிரசவித்த அந்த நாளும்
அதன் பின்னான வாழ்வும்
எல்லாவற்றையும் மாற்றின...
நினைவுகளைத் தவிர..!

-'பரிவை' சே.குமார்.

27 கருத்துகள்:

  1. //மழை நாளில் தலை
    துவட்டும் மனைவி
    துவட்டாமல் விட்டுச்
    செல்கிறாள் நீ
    துவட்டிய நாட்களை..!
    //

    arumai

    பதிலளிநீக்கு
  2. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா
    http://mathisutha.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. ////தோள் சாய்ந்த காதலர்கள்
    கண்டால் கைகள் தானாக
    நீ சாய்ந்த தோளை
    தடவிக் கொள்கின்றன..!////

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரம்...

    பதிலளிநீக்கு
  4. வார்த்தைகளின் கோர்வைகள் மிக அருமை..குமார்..

    என்ன மதி சோறுபோச்சேன்னு கவலையா?

    பதிலளிநீக்கு
  5. //பிரிவின் வலியை
    பிரசவித்த அந்த நாளும்
    அதன் பின்னான வாழ்வும்
    எல்லாவற்றையும் மாற்றின...
    நினைவுகளைத் தவிர..!//

    arumayana varigal anna :)

    பதிலளிநீக்கு
  6. \\பிரிவின் வலியை
    பிரசவித்த அந்த நாளும்
    அதன் பின்னான வாழ்வும்
    எல்லாவற்றையும் மாற்றின...
    நினைவுகளைத் தவிர..!\\
    அருமை!!

    பதிலளிநீக்கு
  7. //பள்ளிக் குழந்தைகள்
    பறக்கும் அவசரத்தில்
    கொடுக்கும் முத்தங்கள்
    நீ அவ்வப்போது
    கொடுத்த முத்தங்களை
    முத்தெடுக்க வைக்கின்றன..!//

    மிகவும் ரசித்தேன்.

    ஆமா...//எனக்குத் தன் சுடு சோறு //

    அப்படின்னா என்ன?

    பதிலளிநீக்கு
  8. அன்றாட வாழ்க்கையோடு கோர்த்த வார்த்தைகள் அதிகமாகவே சொல்கின்றன பிரிவின் வலியை...

    பதிலளிநீக்கு
  9. ///தோள் சாய்ந்த காதலர்கள்
    கண்டால் கைகள் தானாக
    நீ சாய்ந்த தோளை
    தடவிக் கொள்கின்றன..!
    /////////////

    இந்த வரிகளின் உண்மைகளில் நானும் பல நாட்கள் தொலைந்து ஒபோய் இருக்கிறேன் . கவிதை அருமை கவிஞரே

    பதிலளிநீக்கு
  10. பிரிவின் வலியை
    பிரசவித்த அந்த நாளும்
    அதன் பின்னான வாழ்வும்
    எல்லாவற்றையும் மாற்றின...
    நினைவுகளைத் தவிர..!

    பிரசவித்தபின் மரணம் பிரிவிற்குதான்...நினைவுகளுக்கு அல்ல...//
    இந்த வரிகள் சரியாக வருமா குமார் சார்...?
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  11. காதலியின் நினைவுகளைச் சேர்த்து,
    கோர்த்து, கவிதையாக்கிவிட்டீர்கள்.
    பலே!

    பதிலளிநீக்கு
  12. வாங்க எல்.கே...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க ம.தி.சுதா...
    இன்னைக்கு சுடு சோற எல்.கே. சாப்பிட்டுட்டாரு போல...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க மலிக்கா அக்கா...
    சகோதரர் மதிக்கு சுடுசோறு சாப்பிடுறதுல அவ்வளவு பிரியம்... எனக்கு எப்பவுமே பழைய சோறும் ஊறுகாயும் தான் பிடிக்கும்... அபுதாபி வந்துட்டு அந்த சாப்பாடு போச்சுக்கா.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க இந்து...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க அம்பிகாக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க எஸ்.கே...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஸ்ரீஅகிலா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    முன்னெல்லாம் எல்லாரும் வட எனக்குன்னு சொன்னாங்க... இப்ப சுடுசோறுக்கு வந்திருக்காங்க... இது என்னன்னா... பதிவ போட்டவுடனே சூடா படிச்சிட்டு முத பின்னூட்டம் போட போறவங்க சொல்றதுதான்.... விடுங்க... நாமெல்லாம் சுடு சோறுக்கு அடிச்சுக்க வேண்டாம்.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க சுசிக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க வெறும்பய அண்ணா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க பனித்துளி...
    நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை... அதற்கே உங்களுக்கு நன்றி.
    எல்லாருக்கும் இருக்குமில்ல.... எனக்கு இல்ல... எனக்கு இல்ல....

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க வேலன்...
    வரிகளைப் பாருங்கள்...
    அவர்கள் பிரிந்த நாளும் அதற்குப் பிறகான வாழ்க்கை பயணத்துல மாற்றங்கள் வந்தன என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர மரணம் என்று சொல்லவில்லை... சரிதானே வேலன்...

    உங்கள் வரிகளும் நல்லாத்தான் இருக்கு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. பிரிவின் வலியை
    பிரசவித்த அந்த நாளும்
    அதன் பின்னான வாழ்வும்
    எல்லாவற்றையும் மாற்றின...
    நினைவுகளைத் தவிர..!

    ....அருமையாக எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  20. உணர்வுகளின் வரிகள் அருமை குமார் :)

    பதிலளிநீக்கு
  21. அருமை தோழா.... நல்லா வந்திருக்கு.
    # கொஞ்சும் குமரிகள்
    நீ சாப்பிட்ட நினைவுகளை
    ஊட்டிச் செல்கிறார்கள்..!
    # துவட்டும் மனைவி
    துவட்டாமல் விட்டுச்
    செல்கிறாள் நீ
    துவட்டிய நாட்களை..!

    இவைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  22. நீ சாப்பிட்ட நினைவுகளை
    ஊட்டிச் செல்கிறார்கள்..!

    அற்புதம்

    பதிலளிநீக்கு
  23. நினைவுகள், நினைவுகள , நினைவுகள ..நினைக்க வைத்துவிட்டீர்கள்! அருமை!!

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...