மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 21 அக்டோபர், 2021

பிக்பாஸ் - 5 : 4. பிக்கப் ஆகாத பிக்பாஸ்

சென்ற வார இறுதியில் கமல் வந்தார், என்னத்தைப் பேச என நினைத்துக் கதைகளில் நீந்தி - நீச்சலின் ஊடே நானும் ஐந்து வயதில், எங்கண்ணன் என்னய வளர்த்த விதம் என்றவற்றைத் தவறாமல் சொல்லி- பேசிக் கொண்டே போனார். இடையிடையே ஆம்புலன்ஸ் அரசியல் பேசினார்.


பொதுப்படையாச் சொல்லப் போன இந்த இரண்டு வாரத்தில் கமல் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போலத்தான் செயல்பட்டார் - இதுக்குச் சர்வைவர் நல்லாயிருக்கு -  என்றுதான் சொல்ல வேண்டும். கடிதல் நன்று என்பதை மறந்து ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்ங்கிற மாதிரித்தான் பேசினார்.

யார் சிறந்த போட்டியாளர் - போன வாரத்தில் - என்பதில் அபிலாஷின் தில்லு முல்லு வேலையை காட்டிக் கொடுப்பார் என்று பார்த்தால் அவன்தான் ஏதோ அடிச்சிக்க வைக்கிறான் அவனையும் பல்லைப் புடிங்கிறாதேன்னு பிக்கி இவர் பல்லைப் பிடிங்கிட்டார் போல, சாமிக்குப் படையலைத் தட்டில் வைத்து மேல் மூடியைத் திறந்து பார்த்தாப் பாத்துக்க இல்லாட்டிப் போன்னு காமிக்கிற மாதிரிப் பேசிட்டுப் பொயிட்டார். அபிலாஷை வெளியேற்ற நீங்க எம்புட்டு ஓட்டுப் போட்டாலும் விஜய் டிவி இறுதிவரை அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்குன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். 

பிக்பாஸ்க்கு உலகமெங்கும் செம வரவேற்பு இருக்கு, உலகத்தில் தரமான நிகழ்ச்சி இது ஒண்ணுதான்னு ரொம்பவே புகழ்ந்துக்கிட்டார் கமல், உலகநாயகனுக்கு நடிக்கவா சொல்லித் தரணும். இத்தனை சீசனில் போன சீசன்தான் மோசம்ன்னு நினைச்சோம், அதெல்லாம் இல்லை நாங்க அதைவிட மோசம்ன்னு ஸ்காட்லாந்துக்கிட்ட தோத்த பங்களாதேஷ் மாதிரி இருக்கானுங்க.

பிரியங்கா - இவங்க பேரை ப்ரியங்கா என்றுதான் சொல்றாங்க - அபிலாஷ், அர்னால்டோட கூட்டணி வச்சிக்கிட்டு மத்தவங்க கூடாம இருக்க அதிகமாவே பாடுபடுது. சூப்பர் சிங்கர்ல நல்லபுள்ளன்னு சொன்னவனெல்லாம் ஆத்தாடி அர்ச்சனாவுக்கு அக்காவா இருக்கும் போலயேன்னு புலம்பிக்கிட்டுத் திரியிறானுங்க. இடையிடையே ஒரு ஆட்டம் வேற போடுது, ஆத்தாடி... வீட்டுல அடக்கி வளக்கல போல.

பாவனி - நம்ம ஓவியா மாதிரி ஓவியமா இருக்கும்ன்னு நெனச்சா, அந்நியன் கணக்கா அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்கு, தமிழ்ல சொல்றத அது ஒரு மாதிரிப் புரிஞ்சிக்கிட்டு எல்லார் கூடவும் ஒரு ஏழரையை இழுத்துக்கிது, அப்புறம் கூடிக்கிது. ராஜூக்கிட்ட மோதுனப்போ உனக்கும் எனக்கும் சண்டை வர மொழிப் பிரச்சினைதான் முக்கியக் காரணம், அதனால முக்காம இருன்னு சொல்லிட்டான். அதே அடுத்து அபினய்யை அங்கிட்டும் இங்கிட்டும் போட்டு விடுது. அவனும் சந்தானம் மாதிரி தலயாட்டிக்கிட்டே இருக்கான். எங்கே அவன் நமக்குப் பிராக்கெட் போடுவானோன்னு ஒரு எண்ணம் அதற்குள் இருப்பதாலேயே அபினய்யை அடிச்சி அடக்கப் பாக்குது.

அண்ணாச்சி ரொம்ப பாதுகாப்பா விளையாடுறாரு, அவரைத் தன்னோட வட்டத்துக்குள்ள வச்சிக்க பிரியங்கா முயற்சித்த வேளையில் அவர் தானாகவே ராஜூவுடன் இணக்கமாகிவிட்டார். இதைப் பொறுக்காத சிங்கர் கூட்டணி - ஆமா அதென்ன சிங்கர் கூட்டணின்னு யோசிக்காதிங்க, ப்ரியங்கா, அபிலாஷ், அர்னால்ட் அம்புட்டுத்தான் - எப்படியும் ராஜூ கூட்டணியை அத்து விடணும்ன்னு பாக்குது. இவனுக தலகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் அவன் எப்பவும் ஒரு மர்மச் சிரிப்போட மரமண்டைகளை ஓட விட்டு, புலம்ப விட்டுடுறான். ராஜூ எல்லாருடைய மனசையும் அள்ளுவான்.

சிபி- அப்பப்ப அடிச்சிம் ஆடுறான், அழகாவும் பேசுறான். வருண் கூட நம்ம கைப்பாவையா இருப்பான்னு சிங்கர் கூட்டணிக்கு ஒரு நப்பாசை, அவனோ அக்சராவுக்கு அன்லிமிட்டேட் அன்பைப் பொழிவதால் சிங்கர் அணிக்கு மட்டுமின்றி பாவ அணிக்கும் - அதாங்க பாவனி) காதுல புகைச்சல். அதற்காக அக்சராக்கிட்ட மோதி, வருணுக்கும் அபினய்க்கு ஆட்டையைக் களைச்சி என்னென்னமோ பண்ணினாலும் அத்தனை படமும் பிளாப் ஆனாலும் அசைக்க முடியாத அஜீத் கணக்கா ராஜூ இருக்கதால இவனுக எல்லாருமே அவன் பாதுகாப்பை நாடி ஓடிக்கிட்டு இருக்கானுங்க.

இந்த வார பட்ஜெட் போட்டியான பஞ்சபூத காசுகளைத் திருடும் போட்டியில் இந்த சிங்கர் அணி வித்தியாசமா விளையாடுறானுக, பிக்பாஸ் கொடுத்த விதிமுறைகளை எல்லாம் தூக்கி வீட்டுக்கு வெளியில வீசிட்டு அவனுகளாப் புது விதிமுறைகளை உருவாக்கிக்கிட்டு விளையாடுறானுங்க. இதுல என்ன கொடுமைன்னா சிங்கர் அணி தாமரைக்கு கொடு, சின்னப்பொண்ணு அம்மாவுக்குக் கொடுன்னு உருட்டிக்கிட்டே ராஜூ அக்சராவுக்கு உதவுறதை எப்படியும் பிரச்சினை ஆக்கி, ராஜூவை கெட்டவனாக்கி எல்லாரையும் அவனுக்கு எதிராக் கெளப்பனுங்கிற முயற்சி எடுத்தானுங்க அவன் லெப்ட்ல வாங்கி ரைட்டுல தூக்கி வீசிட்டுப் பொயிட்டான்.

தாமரையையும் சின்னப்பொண்ணையும் வச்சி நாங்க நல்லவங்கன்னு காட்டிக்க சிங்கர் அணி சீரியஸா வேலை செய்யிறதுக்குக் காரணம் மக்கள் மத்தியில் நாங்க நல்லவங்கன்னு காட்டிக்க என்பதை ராஜூ மட்டுமே உணர்ந்திருக்கிறான் என்று தோன்றுகிறது.

இந்த காயின் போட்டியில நம்மளை ரொம்பவே குழப்பிவிட்டிருக்காங்க... என்ன செய்யிறானுங்கன்னே தெரியல. அபிலாஷ் மைக்குக்கு மேல பேசுறதைப் பாக்கும் போது குடுத்த காசுக்கு மேல கூவுறான்னு தோணுது, அவனைப் பார்த்தாலே போன தடவை ஆரியைப் பார்த்த மாதிரியே இருக்கு.

மொத்தத்தில் இந்த முறை பிக்பாஸ் பிக்கப் ஆகுறதே சிரமம்ன்னுதான் தெரியுது.

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஓரே கூச்சல் தானோ...!?

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

ஸ்காத்லாந்துகிட்ட தோத்த பெங்ளாதேஷ் - ஹாஹா