மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 16 அக்டோபர், 2021

பிக்பாஸ் - 5 : 3. சொல்லிக்க ஒன்றுமில்லை

பிக்பாஸ் சீசன்-5 கடந்த வாரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி விரிவான அலசல் தேவையில்லை என்றே நினைக்கிறேன். போன சீசனைவிட  ரொம்பவே மொக்கயாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

முதல் வார இறுதியில் கமல் அடித்து ஆடுவார் என்று நினைத்தால் என்னத்த அடித்து ஆடுறது. இவனுக ஏதாவது பண்ணியிருந்தால் பரவாயில்லை, கதையைச் சொல்லுங்கடான்னா அம்புட்டுப் பேரும் இதுக்காகவே அப்பா அப்புடி, அம்மா இப்புடி, புள்ள இப்படின்னு சோகக்கதை சொல்லியிருக்கானுக இதை வச்சிப் பேசுவோமுன்னு பேசி, இவனுக அடிச்சிக்க மாட்டனுங்கன்னு அவரும் கொஞ்சமா நாரதர் வேலை பார்த்து விட்டுத்தான் போனார் என்றாலும் புயல் உருவாகியிருக்கு மழை வரும்ன்னு சொன்ன போது மேகமூட்டமாய் இருந்து வானம் மீண்டும் வெளிவாங்குதைப் போல் ஆகிவிட்டது. புஸ்வானம் சீறும் என நெருப்பை வைத்து விட்டுத் தள்ளி நின்று பார்க்கும் போது அது ஒண்ணுமே பண்ணாம வீணாப்போறது மாதிரித்தான் ஆயிப்போச்சு.

இந்த வாரமும் கதைகள் சொன்னார்கள், எல்லாருமே அழுகாச்சிக் கதைகளைத்தான் அள்ளிவிட்டார்கள் ராஜூவைத் தவிர. நிரூப் நான் இந்த நிலைக்கு வரத் தண்ணியடிச்சிட்டு ஆட்டம் போட்டு, ஆக்ஸிடெண்டுல கால் ஒடிச்சி கிடக்க யாஷிகாதான் எனக்கு கால் மாதிரி, அவதான் என்னோட உயர்வுக்கு உறுதுணையா இருந்தா அப்படின்னு சொன்னான்.

பிரியங்கா அப்பா செத்த கதையை அம்மாவை அவள், இவள் என அழைப்புக்களுடன் சொல்லி முடித்தார்.

தாமரைச் செல்வி இரண்டு திருமணம் - இரண்டுமே வாழ்க்கையை வாழவிடவில்லை என்றார் - பற்றிச் சொல்லி தன் மகனைப் பார்க்க முடியாத காரணத்தை அழுது கொண்டே சொன்னார். இவரை நாடகங்களில் பார்த்தவரை ரொம்பவே பிடிக்கும், பபூன் ராதாகிருஷ்ணன் இங்கு நடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு வேதனைக் கதை இருக்கு, உங்களைச் சிரிக்க வைக்கிறாங்க, நீங்க அவங்களைக் கேவலமாப் பேசுறீங்க... இந்த வருமானமே இவர்களின் நாளைய வாழ்க்கை என்று சொல்வார். இத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு இருப்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தாமரைச் செல்வியின் கதைக்கு எல்லாருமே அழுதார்கள் என்றாலும் அவர் ரொம்ப அப்பிராணியாக, எதுவும் தெரியாதவராகக் காட்டிக் கொள்வதை நடிப்பு என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ராஜூவோட கதை ரொம்பவே நகைச்சுவையாய் நகர்ந்தாலும் அப்பாவின் இறப்பும் அதன் பின் பாக்யராஜிடம் உதவி இயக்குநராய் இருந்தது என கொஞ்சம் வித்தியாசமாய் கதை சொன்னார். இடையிடையே மிமிக்கிரியும் கலந்து கட்டி ஆடினார்.

இதேபோல்தான் மற்ற கதைகளும், இந்த கதை சொல்லும் டாஸ்க் சரிதான்... அதைக் கேட்பவர்கள் புரிந்து கொண்ட விதத்தில் விருப்பம், விருப்பமின்மை, இதயம் எனக் குறிக்கள் கொடுப்பதற்கு இது மூன்றிலும் ஒவ்வொன்றைக் கொடுத்து இதை நீங்க ஒருத்தருக்குப் பயன்படுத்திட்டு எடுத்து மீண்டும் பயன்படுத்தலாம் என்று சொல்லாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொடுத்து ஆரம்பத்தில் அழுகையைப் பார்த்து விருப்பம், இதயமெல்லாம் அள்ளிக் கொடுத்துட்டு இப்ப எல்லாருக்கும் விருப்பமின்மையே வக்கிறாங்க... இது என்ன விளையாட்டுன்னே புரியல.

இங்க சொல்ல வேண்டியது அந்த யூடிப்பரை சீக்கிரமே அடிச்சி வெளுத்துருவானுங்கன்னு தோணுது, ராஜூக்கிட்ட மொக்க போடப் போயி நண்பா நான் காண்டுல இருக்கேன்... வாயக் கெளறுனே அடிச்சிருவேன்னு சொல்ல, அதை மனதில் வைத்து இந்த வாரத்தில் நல்ல, கெட்ட ஆட்கள் யாருங்கிறதுல நடுவரா இருந்த யூடிப்பர், ராஜூ சரியில்லன்னு சொல்லி, நல்லவன் இமேஜை அவன் மேல் பொருத்தாமல் பார்த்துக் கொண்டான்.

வருண் கதை சொல்லும் போது 'இது... இதுன்னு எதையோ சொன்னான். சாவித்திரி பேரன் கதையில் தங்க ஸ்பூன்ல எல்லாம் சாப்பிடலை, குடிசையிலும் இருந்தோம் என்றார்.

நேற்று முத்தாளம்மன் நாடகம் ஆயுதபூஜைக்காக போட்டார்கள்... அய்யோ பாவத்தே, முத்தாளம்மன் மூணு வருசத்துக்கு ஊருக்குள்ளயே வரமாட்டா... இதுல சின்னப் பொண்ணுக்கு மூக்கு மேல கோபம் வேற... சின்னப்பொண்ணோட முகந்தான் விரைவில் வெளியில் தெரியும்ன்னு நினைக்கிறேன். ஏன்னா இந்த வாரத் தலைவர் பதவிக்கான போட்டியில் கூட தன்னால் தாமரையை வெல்ல முடியாது என்பதால் தானே பலூனை உடைத்து விட்டு விட்டுக் கொடுத்தேன் என்றும் தாமரை சரியில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

தாமரை, பாவனி தவிர எல்லாரும் வெளியேற்றப் படலத்தில் சிக்கியிருக்காங்க... இன்று தெரியலாம் யாரந்த துரதிஷ்டசாலின்னு.  நமிதா வெளியேற்றத்தால புதுவரவு இருக்கும் போல.

ஏதோ ஒரு காதல் கதைக்கு... இல்லையில்லை இரு காதல் கதைக்கு பூஜை போட்டுட்டாங்க போல பிரியங்கா நீருப்புக்கிட்ட மறச்சிச் சொன்னுச்சு... முழுசா நனஞ்சா பின்னா தெரியத்தானே போவுது. யூடிப்பர் பாவனிக்கு நூல் விட்டுக்கிட்டு இருக்கான்னு மட்டும் தெரியுது.

பாவனி ஆர்மி விரைவில் உருவாகும் என்றே தோன்றுகிறது. எதார்த்தமாய் வலம் வரும் மனுசியாக அவரே இருக்கிறார்.

இந்த வாரமும் சும்மாவே தின்னு தின்னு ஓட்டிக்கிட்டு இருக்கானுக.

தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சின்ன மனம் சின்னப் போண்ணு...!