மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 5 ஜூலை, 2010பந்தயம்


மாட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர்ந்து பந்தயமாடு குறித்து பேசிக் கொண்டிருந்தவர் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக சண்டையின் ஆரம்ப அறிகுறி தென்பட ஆரம்பித்தது.

"கோத்தா... இவுக கிழிச்சிப்புடுவாக... அட போடா இவனே... மாட்டப்பத்தி பேச வந்துட்டான். உனக்கு என்னடா தெரியும்?" அமில வார்த்தைகளை கலந்து அள்ளி வீசினார் வேதாசலம். இவர் கரிசல்பட்டி அழகரின் மாட்டை ஓட்டும் சாரதி. எல்லா இடத்திலும் முதல் பரிசை தட்டி வருவதால் அவரது மீசை எப்போதும் முறுக்கியே இருக்கும்.

"என்ன சித்தப்பு பேசிக்கிட்டிருக்கும் போதே வார்த்தையை விடுறீங்க... கொட்டிப்புட்டா அப்புறம் அள்ள முடியாது" வீட்டில் வளர்க்கும் மயிலைக் காளையை பந்தயக் காளையாக மாற்றத் துடிக்கும் ராசப்பன்.

"பின்ன என்னடா... ஒரு காளங்கன்டை வச்சிக்கிட்டு நீ பேசுறே..? நான் மாடு கொண்டு போன அவனவன் ஒதுங்கிப் போவான்... தெரியுமா.?"

"இப்ப அதுக்கு என்ன... நீ ஒடலையே... பக்க சாரதியா வர்ற முத்துதானே ஓடுறான்..." இடையில் புகுந்தார் நாராயணன்.

"முத்து ஓடுனா... ஓட்டுறது நாந்தானே..."

"சரி... நீ என்ன சொல்ல வர்றே... ராசப்பன் பந்தய மாடு ஓட்டக்கூடாதுங்கிறியா..?

"அவனுக்கு பந்தய மாட்டைப் பத்தி என்ன தெரியும்... பந்தயத்தைப் பத்தி பேச வந்திட்டான். அவன் வச்சிருக்கிற காளைக்கு ஒரு ஜோடி சேர்த்து வயலை உழச் சொல்லு... நல்லா உழும்."

"அடங் கோ.... என்ன சொன்ன என் மசுராண்டி... எனக்கு பந்தயத்தைப் பத்தி தெரியாதா... அடியே நாங்கெல்லாம் வீம்புக்கு வெசங்குடிக்கிறவங்க பரம்பரை... யாரைப்பாத்து என்ன பேசுறே...? அடுத்த வருஷத்துக்குள்ள உன்னைய நான் பந்தயத்துல வண்டி ஓட்டி ஜெயிக்கலை நான் ஒருத்தனுக்கு பொறக்கலைடா..."

"சரி.. ஒருத்தனுக்குதான் பொறந்தேன்னு நிரூபிக்க முடிஞ்சா பாக்கலாம்."

"பாக்கலாம்... பாக்கலாம்"

"என்ன வேதாசலம் சின்ன பயகிட்ட வீம்பு பேசிக்கிட்டு..."

"சின்னப்பய மாதிரியா பேசுறான்... மயிரு எப்படி புடுங்குறான்னு பார்ப்போம்..." என்றபடி கிளம்பினார்.

"மச்சான்... உடனே ஒரு மாடு வாங்கணும்...?"

"ஏண்டா... உனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..."

"மச்சான்... மாடு வாங்கணும்... கழுத்து காதுல கிடக்குறதை அடகு வச்சாவது வாங்கியாகணும்... எங்காத்தா ஒருத்தனுக்குதான் முந்தி விரிச்சான்னு அந்த கருங்காலிப் பயகிட்ட நிரூபிக்கணும்."

"அட அவன் எல்லா இடத்துலயும் ஜெயிக்கிற திமிர்ல பேசிட்டுப் போறான்... விடுவியா... அதை விட்டுட்டு..."

"நீ வரதுன்னா வா... இல்ல நான் வேற ஆளை வச்சி மாடு வாங்கிறேன்..."

"நீ திருந்த மாட்டே... இரு பாக்கியண்ணங்கிட்ட ஒத்தக்காளை ஒண்ணு இருக்கு... கொடுக்கிறதா சொல்லியிருந்துச்சு... நாளைக்கு காலையில போய் பாத்துப் பேசலாம்.."

"சரி மச்சான்... அப்புறம் காலையில வயலுக்கு போறேன்னு நிக்கக்கூடாது. கருக்கல்ல போறோம். மாட்டோட வாறோம்... சரியா"

"சரி... மத்த வேலைய பாரு.."

மாடு வாங்கி ஒரு வாரம் ஆச்சு... அதை கவனிப்பதிலே பெரும்பாலான நேரத்தை செலவிட்டான் ராயப்பன்.

"பங்காளி ஓடக்கரையில நடக்கிற பந்தயத்துக்கு வேதாசலண்ணன் போகுது போல"

"எப்ப பந்தயம்..?"

"இன்னும் ஒரு மாதம் இருக்குன்னு நினைக்கிறேன்... எதுக்கு கேக்குறே..?"

"நாமளும் போறோம்..."

"என்னது லூசாடா நீ... மாடு வாங்கி ஒரு வாரம்தான் ஆகுது... முதல்ல சும்மா ஓட்டிப்பாரு... அப்புறம் பாக்கலாம். அதைவிட்டுட்டு போயி அசிங்கப்பட்டு நிக்காதே.."

"இல்ல நாம களம் இறங்குறோம்... அவங்கிட்ட முதல்ல தோத்தாலும் பரவாயில்லை."

"வேண்டாண்டா... ஓடக்கரை பந்தத்துல உச்சாணி, சீவல் மாடுகள்லாம் ஓடும் நாம எல்கையை தொடுறதே கஷ்டம். பேசாம இரு பூங்குடி பந்தயத்துல ஓட்டலாம்."

"நல்லா சொல்லுங்கண்ணே. கழுத்து, கையில கிடந்த நகையை அடகு வச்சு மாடு வாஙகியாந்திருக்காரு... அவரு பேசுனா இவருக்கென்ன வெட்டி வீராப்பு... ஒரு வாராமா மாடுதான் பொண்டாட்டி..."

"சரி விடும்மா... ஆசைப்படுறான்... அடிபட்டா தானா திருந்துவான். நான் வாரேண்டா"

"சரி போகயில நாராயண மச்சான் இருந்தா வரச்சொல்லிட்டுப் போ"

"ம்......"


டக்கரை....

நடுமாடு பந்தயத்தில் கலந்து கொள்ளுபவர்கள் பெயர் கொடுக்கலாம் என்று அழைக்க, நாராயணனை அழைத்து "வேதாச்சலம் சித்தப்பா பேர் கொடுத்தவுடனே நம்ம பேரை கொடுத்துட்டு வா மச்சான்"

"வேணாண்டா... முதல் முதல்ல விரட்டுறோம் சின்ன மாட்டுலயோ... கரிச்சான்லயோ போடலாம்."

"சொல்றதை செய்யி மச்சான்... பங்காளி நீதான் ஓட்டுறே... மச்சான் பங்காளி பேரை சாரதியாவும், நம்ம சரவணன் பேரை பக்க சாரதியாவும் போடு..."

"என்னடா சொல்றே... நானா... நீயே ஓட்ட வேண்டியதுதானே..."

"வேண்டாம் நீ ஓட்டு... சரவணன் நல்லா ஓடுவான்..."

"என்னமோ செய்யி... வேதாச்சல அண்ணன் முன்னால நம்ம மானத்தை எல்லாம் மாட்டை விட்டு ஓட்டப்போறே.."

மாடுகள் சீட் வாங்கி வரிசைக்கு வந்தாச்சு. வேதாசலம் முதல் இடத்திலும் ராயப்பனின் மாடு ஆறாவது இடத்திலும் இருந்தன. போட்டி தொடங்கி மாடுகள் ஓட ஆரம்பித்தன.

மரத்தடியில் அமர்ந்திருந்த ராயப்பனிடம், "ஏண்டா உனக்கு இந்த வேண்டாத வேலை... அவனுக்கு முத சீட்டு ... நமக்கு ஆறாவது... அவனை எப்படி நாம தோக்கடிக்கிறது... சொன்னா கேக்குறியா?"

"உன்னைய வச்சிக்கிட்டுதானே அவரு ஒரு அப்பனுக்கு பொறந்தியான்னு கேட்டாரு..?"

"கேட்டான் நான் இல்லைங்கள... அதுக்காக பழகாத மாடை அந்தப் பயலுககிட்ட கொடுத்து... ஒண்ணுகிடக்க ஓண்ணு ஆச்சின்னா யாரு பொறுப்பாகுறது... கோபத்துல உனக்கு கண்ணு தெரியலை..."

"இப்ப என்ன மச்சான்... தோத்தாலும் பரவாயில்லை... ஓடுற வரைக்கும் ஓடிட்டு வரட்டும்..."

"ஆமா.. அப்பத்தான் அவன் இன்னும் கேவலம் பேசுவான்... உங்கூட வராம வயலுக்கு போயிருக்கலாம்..."

"இரு மச்சான்... பஞ்சாயத்தார் வண்டி வாரமாதிரி சத்தம் கேக்குது... எதோ சொல்றான் தெளிவா கேக்கலை..."

"என்ன சொல்லப் போறான்... வேதாச்சலம் வண்டி முதல்ல வருதும்பான்... போனா வண்டியில செட்டிகுளம் ராயப்பன் வண்டி எல்கையில கொடி வாங்கலைம்பான்..."

"இரு வெறுப்பேத்தாதே... இப்ப நல்லா கேக்குது..."

'முதலாவதாக செட்டிகுளம் ராயப்பன் மாடு வந்து கொண்டிருக்கிறது. மற்ற வண்டிகளைவிட ரெண்டு கிலோ மீட்டர் வித்தியாசத்தில் வந்து கொண்டிருக்கிறது. சாரதி கண்ணன் திறமையாக வண்டியை ஓட்டி வருகிறார். அவருக்கு உறுதுணையாக பக்க சாரதி சரவணன் செயல்படுகிறார். இதோ பாய்ந்து வருகிறது செட்டிகுளம் ராயப்பனின் மாடுகள்'

"மாப்ளே... நம்ப முடியலைடா... நம்ம மாடா...?"

"மச்சான் நாம நிரூபிச்சிட்டோம். நம்ம மானத்தை காத்திட்டாங்க..."

இருவரும் கட்டிக் கொண்டு சந்தோஷத்தை பறிமாறிக்கொள்ள, ரோட்டில் துள்ளி வந்து கொண்டிருந்த வண்டியில் கண்ணன் எழுந்து நின்று கம்பை சுழற்றிக் கொண்டிருந்தான். அது தூரத்தில் மூன்றாவது வண்டியாக வந்து கொண்டிருக்கும் வேதாசலத்தை கேலி செய்வது போலிருந்தது.

-'பரிவை' சே.குமார்

42 கருத்துகள்:

 1. மாட்டு வண்டி ரேஸ் ....சிறு வயது ஊர் ஞாபகம். பகிர்வுக்கு நன்றி. எப்படி நலமாய் இருகிறீங்களா?

  பதிலளிநீக்கு
 2. கருத்துக்கு நன்றி தோழி.

  நலமாய் இருக்கிறேன்...!

  மனசில் தொடரட்டும் உங்கள் நட்பு...

  பதிலளிநீக்கு
 3. பந்தய மாடுகளைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் எண்ணங்களில்
  அருமை . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. சிறுகதை மிகவும் நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 5. ரேஸ்ல ஓடுற மாடுமாதிரி எழுத்தும் வேகமாக.

  நல்லாயிருக்கு குமார்.

  பதிலளிநீக்கு
 6. "மனசு" - மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
  கிராமிய கதை நல்லா இருக்குதுங்க.... !

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா6/7/10, முற்பகல் 2:44

  நல்லா வந்திருக்கு கதை

  பதிலளிநீக்கு
 8. சிறு வயது ஞாபகம் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. குமார்ஜி, வந்தாச்சா!

  சந்தோசம். கதையும்(கதையா, பகிர்வா?) அருமை!

  பதிலளிநீக்கு
 10. @ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  //பந்தய மாடுகளைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் எண்ணங்களில்
  அருமை . பகிர்வுக்கு நன்றி//

  உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சங்கர்.

  பதிலளிநீக்கு
 11. @மனோ சாமிநாதன் said...
  //சிறுகதை மிகவும் நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!///

  உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அம்மா.

  பதிலளிநீக்கு
 12. @அக்பர் said...
  //ரேஸ்ல ஓடுற மாடுமாதிரி எழுத்தும் வேகமாக. நல்லாயிருக்கு குமார்.//

  பந்தயம் நல்ல வேகமாக இருந்தால்தானே நல்லது அக்பர். உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அக்பர்.

  பதிலளிநீக்கு
 13. @Chitra said...
  //"மனசு" - மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
  கிராமிய கதை நல்லா இருக்குதுங்க.... !//

  வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
 14. @சின்ன அம்மிணி said...
  //நல்லா வந்திருக்கு கதை.//

  கருத்துக்கு மிக்க நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 15. @r.v.saravanan said...
  //சிறு வயது ஞாபகம் பகிர்வுக்கு நன்றி.//

  வாங்க சரவணன், கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. @ பா.ராஜாராம் said...
  //குமார்ஜி, வந்தாச்சா!
  சந்தோசம். கதையும்(கதையா, பகிர்வா?) அருமை!//

  வாங்க அண்ணா, உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. முதலில் மனசுக்கு வாழ்த்துக்கள் நண்பா.. அப்புறம் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..:)

  பதிலளிநீக்கு
 18. பா.ரா அவர்களுக்கு,
  பந்தயம் மனதில் உதித்த கதைதான்... பகிர்வல்ல.
  சில உண்மைகள் இதில் கலந்திருக்கின்றன. ஆனால் கற்பனையே அதிகம்.

  பதிலளிநீக்கு
 19. @ தேனம்மை said...
  //முதலில் மனசுக்கு வாழ்த்துக்கள் நண்பா.. அப்புறம் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..:)//

  வாழ்த்துக்கு நன்றி தேனக்கா.
  ஆம் முயற்சியிருந்தால் கண்டிப்பாக முன்னேறலாம் என்பது உண்மையே.

  பதிலளிநீக்கு
 20. உங்க "மனசு"... க்கு வந்திட்டோம்..குமார் :-)

  வட்டார வழக்குடன் கதை அருமை...!!

  உங்க குடும்ப படமும் அருமை :-))

  பதிலளிநீக்கு
 21. "மனசு" க்கு வாழ்த்துக்கள்..

  "பந்தயம்" கதை அருமையாக உள்ளது நண்பா.. அவனின் நம்பிக்கையே அவனை வெற்றி பெறச் செய்து விட்டது..

  நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.. உங்கள் "பந்தயம்" ஒரு உதாரணம்..

  பதிலளிநீக்கு
 22. மன்னிக்கவும் நண்பா உங்கள் படைப்பை இன்றுதான் பார்த்தேன்.. மண்வாசனை வீசும் அற்புதம்.. தொடர்ந்து எழுதுங்கள்..

  பதிலளிநீக்கு
 23. நல்ல எழுத்துக்கள். நான் இதுவரை உங்களின் பதிவுகளை படித்ததில்லை. உங்கள் மனசு மிக உயர்வாய் உள்ளது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. @வானதி said...
  //super! very nice profile photo.//

  நன்றி வானதி.

  பதிலளிநீக்கு
 25. @ Ananthi said...
  //உங்க "மனசு"... க்கு வந்திட்டோம்..குமார் :-)

  வட்டார வழக்குடன் கதை அருமை...!!

  உங்க குடும்ப படமும் அருமை :-))//

  வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. @ திவ்யாஹரி said...
  //"மனசு" க்கு வாழ்த்துக்கள்..

  "பந்தயம்" கதை அருமையாக உள்ளது நண்பா.. அவனின் நம்பிக்கையே அவனை வெற்றி பெறச் செய்து விட்டது..

  நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.. உங்கள் "பந்தயம்" ஒரு உதாரணம்..//

  ஆம் நல்லது நினைத்தால் நல்லதுதான் நடக்கும். வாங்க தோழி, ரொம்ப நாளைக்கு அப்புறம் திரும்பி வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. @ கே.ஆர்.பி.செந்தில் said...
  //மன்னிக்கவும் நண்பா உங்கள் படைப்பை இன்றுதான் பார்த்தேன்.. மண்வாசனை வீசும் அற்புதம்.. தொடர்ந்து எழுதுங்கள்..//
  முதல் வருகைக்கு நன்றி நண்பா.
  எதற்கு மன்னிப்பெல்லாம்... அதெல்லாம் பெரிய வார்த்தை . அது எதுக்கு நமக்கு... நம் நட்பு தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 28. @ Karthick Chidambaram said...
  //நல்ல எழுத்துக்கள். நான் இதுவரை உங்களின் பதிவுகளை படித்ததில்லை. உங்கள் மனசு மிக உயர்வாய் உள்ளது.
  வாழ்த்துக்கள்.//

  முதல் வருகைக்கும் உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா. அடிக்கடி வாங்க.

  பதிலளிநீக்கு
 29. கிராமத்து மணம் கமழும் அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 30. @அம்பிகா said...
  //கிராமத்து மணம் கமழும் அருமையான பதிவு.//


  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அம்பிகா

  பதிலளிநீக்கு
 31. நண்பரே... இன்றுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.. எளிய, அருமையான சொல்லாடல்களால் கிராமிய மணம் வீசும் கதை.. பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்..
  காதல் அனாதைகள்- கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் கனமாய் இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 32. @தமிழ்ப்பறவை said...
  நண்பரே... இன்றுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.. எளிய, அருமையான சொல்லாடல்களால் கிராமிய மணம் வீசும் கதை.. பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்..
  காதல் அனாதைகள்- கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் கனமாய் இருந்திருக்கும்.//  முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே..!

  சுருக்கினால் சாராம்சம் போய்விடுமோ என்பதால் குறைக்கவில்லை. நெடுங்கவிதைகளில் இதுதான் நீளமானது என்று நினைக்கிறேன்.

  உங்கள் மனம் திறந்த கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. அன்பின் குமார்

  பந்தயம் அருமையான சிறுகதை. மண் வாசனை வீசும் சொல்லாடல்கள். இயல்பான நடை. நேற்று காரைக்குடியில் இருந்து நாச்சியார்புரம் வழியாக மதுரை வரும் போது - காரைக்குடி நாச்சியார்புரம் சாலையில் பநதயம் நடை பெற்றது. நேரில் கண்டோம். என்ன வேகம் - என்ன ஓட்டம் - இக்கதையினைப் படிக்கும் போது அந்த நினைவுதான்.....

  நல்வாழ்த்துகள் குமார்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 34. நீண்ட நாளைக்கு மனசில் அசைபோட வைக்கும் கதை வாழ்த்துகள் குமார்!

  பதிலளிநீக்கு
 35. உள்ளூர் மொழி வழக்கெல்லாம் சேர்த்து கதை நல்லா சொல்லியிருக்கீங்க.. மாட்டு வண்டிப் பந்தயம் நேரில் பார்த்ததே இல்லை. உங்க கதையைப் படிச்சதும் ஆசை வந்திடுச்சு...

  பதிலளிநீக்கு
 36. பந்தயம் பார்த்த திருப்தி சகோ.குமார்.மிக்க அருமை.

  பதிலளிநீக்கு
 37. ரேக்ளா ரேஸ் நல்லா வந்திருக்கு சே.குமார்.

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 38. அருமையா இருக்கு இன்னும் எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க

  பதிலளிநீக்கு
 39. சிறுகதை மிகவும் நன்றாக இருக்கிறது! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 40. உங்கள் ‘மனசு’ என்ற வலைப்பூவின் பெயரே அருமை, உங்கள் மனசு போலவே. கதையும் கிராமிய மணத்துடன், காளை மாட்டுப் பாய்ச்சலில் கொண்டு சென்ற நடை அருமை. கோபம் கொண்டவர்களின் வார்த்தைகள் முற்றி வெட்டுக்குத்து என்று கொண்டு செல்லாமல், சவாலை ஏற்று வெற்றிக்கொடி நாட்டியதாக முடித்துள்ளதும் அருமை.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 41. அழகான கதை வாழ்த்துக்கள்

  இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

  தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...