மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 18 ஜூலை, 2010எகனை மொகனை

(நன்றி : கூகுள் தேடுபொறி)
எப்போதும் போல
காலையில் பால் விற்க
வந்த செண்பகம்...
சிநேகமாய் சிரித்தாள்...

பதிலுக்கு சிரிக்க
பத்திக் கொண்டது
தர்ம பத்தினிக்கு...

காய்க்கார கனகா
'ஏம்ப்பு வாரம் ஒருவாட்டிதான்
வாரீக... நல்லா இருக்கீகளா?'
என்றதற்கு

சிரித்தபடி பதில் அளித்ததால்
சிரிப்பைத் துறந்தாள்
தர்ம பத்தினி...

வருவோர் போவோரெல்லாம்
சிநேகமாய் பேச...
நீங்க பேப்பரை வச்சிக்கிட்டு
என்ன படிக்கிறீங்கன்னு
தெரியும் வாங்க உள்ளே...

சிரித்தபடி செல்ல
இப்ப எவ வந்தா...?
சந்தேகத்துடன் கேட்டவள்

தொலைக்காட்சி நாடகத்தில்
நண்பனுடன் பேசிய மகளை
கடிந்து கொண்ட அம்மாவை...
வசை பாடிக் கொண்டிருந்தாள்..!

-'பரிவை' சே.குமார்

42 கருத்துகள்:

 1. எல்லாரையும் என் மனசு வாங்க மனசு வாங்க என்று அழைத்து உள்ளீர்கள். உங்கள் மனசை ஒருத்தரிடம் கொடுத்து விட்டு, இப்படி அழைக்கலாமா. (சும்மா தமாஷ்)

  பதிலுக்கு சிரிக்க
  பத்திக் கொண்டது
  தர்ம பத்தினிக்கு...

  இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு கூடாது.

  பதிலளிநீக்கு
 2. அனுபவமும் கவிதை தான்..! அசத்துங்க

  பதிலளிநீக்கு
 3. அன்புடன்,
  நலம் நலமறிய ஆவல்.தங்கள் குழந்தைகள் மற்றும் தங்களின் பிறந்த நாளை வாழ்த்தலாம் வாங்க பதிவிற்கு அனுப்பலாமே...முகவரி-vazthalamvanga@gmail.com.
  உங்கள் இ-மெயில் முகவரி அனுப்பவும். தொடர்பு கொள்கின்றேன்.வாழ்க வளமுடன்,வேலன்.

  பதிலளிநீக்கு
 4. பதிலுக்கு சிரிக்க
  பத்திக் கொண்டது
  தர்ம பத்தினிக்கு...

  இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு கூடாது..

  athaanee.

  kumar sorry tamil fant not working.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பதிவுகளை ரீடரில் காணாமேன்னு நினைத்தேன்..இப்போ அனைத்தும் ஒரே ப்ளாக்கில் போட்டீங்களா??

  பதிலளிநீக்கு
 6. ஏனிந்த முரண்பாடுன்னு கேட்டுட வேண்டுயதுதானே?
  கவிதைக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. கவிதை நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள். (சொந்த அனுபவமா...)

  பதிலளிநீக்கு
 8. இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்.

  பின்ன சமாதானம் ஆகிடுவாங்க :)

  //துறந்தால்//

  //துறந்தாள்//

  பதிலளிநீக்கு
 9. இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்.

  பின்ன சமாதானம் ஆகிடுவாங்க :)

  //துறந்தால்//

  //துறந்தாள்//

  பதிலளிநீக்கு
 10. நல்லா இருக்குங்க குமார்.:)

  டெம்ப்ளேட்டும் நேர்த்தியா இருக்கு!

  பதிலளிநீக்கு
 11. வாங்க இளம் தூயவன்...

  முதல் முறை என் வலைப்பூவில் நீங்கள்... யாரிடம் கொடுத்தால் என்னங்க... எல்லாரையும் அரவணைக்க மனசு வேணுமில்ல...

  குசும்பு இல்லை நண்பரே நடப்புத்தானே இது...

  பதிலளிநீக்கு
 12. வாங்க யோகேஷ்...

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

  பதிலளிநீக்கு
 13. வாங்க வானம்பாடிகள் சார்...

  உங்கள் வருகை எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 14. வாங்க கௌசல்யா...
  நமக்கு எந்த அனுபவமும் அப்படி வாய்க்கவில்லை...
  வருத்தமே.... ஹா...ஹா...ஹா...

  பதிலளிநீக்கு
 15. வாங்க வேலன் சார்...
  கண்டிப்பா மெயில் அனுப்புறேன். தொடரட்டும் உங்கள் அன்பும் நட்பும்.

  பதிலளிநீக்கு
 16. வாங்க மலிக்காக்கா...
  ரொம்ப நாளாச்சேன்னு பார்த்தேன்... எதுக்கு வருத்தமெல்லாம்... எழுத்து () சரியாயிடுச்சா?

  பதிலளிநீக்கு
 17. வாங்க மேனகாக்கா...
  ஆமா, ஒரே வலைப்பூவுக்கு மாத்தியாச்சு... வேலைப்பளூ அதிகம்... நாங்கு வலைக்கும் பதிவு ரெடி பண்ண மனசுக்கு முடியலை... அதான் ஒரே வலைப்பூவிற்கு மாறியாச்சு.

  கவிதை பிடித்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க கவிஞர் கருணாகரசு சார்,
  கேட்டா சொன்னாத்தானே... எங்கே பதில் கிடைக்குது... அதுக்கும் பாட்டுதான் கிடைக்கும்...

  சொந்த அனுபவம் நமக்கு இல்லைங்க... எதோ பார்த்தது... கேட்டது... படித்தது... அவ்வளவே... இதுவரை படலை.

  கவியரங்கம், வானொலியின்னு கலக்குறீங்க... இன்னும் உயர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. வாங்க அக்பர்...

  மிட்டாயில் கலக்குறீங்க போங்க...
  ஆமா சண்டையும் சமாதானமுமே நல்ல வாழ்க்கையில்லையா?

  எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. துறந்தால்... துறந்தாள் ஆயாச்சு.

  பதிலளிநீக்கு
 20. வாங்க ஷங்கர்...
  கருத்துக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 21. //Congrats!

  Your story titled 'மனசு: எகனை மொகனை' made popular by tamilish users at tamilish.com

  Here is the link to the story: http://www.tamilish.com/story/304983

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  பிரபல பதிவாக்கிய தமிழிஷ்க்கும் அதற்கு காரணமான நட்பு வட்டத்திற்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 22. நல்ல ரசனை.. எதார்த்தம் நிரம்பிய கவிதை..எல்லோர் வீட்டையும் சென்று பார்க்கும் கவிதை...

  பதிலளிநீக்கு
 23. வாங்க செந்தில்...

  என் கவிதை உங்கள் உள்ளத்தை தட்டிப் பார்த்ததில் சந்தோஷம். உங்கள் ரசனைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. யதார்த்தமான கவிதை!
  வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 25. :)... நல்லாருக்கு..

  இப்டி பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வைக்கணும்ல... :o)

  பதிலளிநீக்கு
 26. உண்மையான அனுபவங்கள்தான் சில நேரங்களில் கவிதைகளுக்கு மகுடம் அமைக்கிறது . மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 27. வாங்க மனோ அம்மா,

  நல்லாயிருக்கீங்களா? ரொம்ப நாளா பதிவைக் காணோம்.

  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வாங்க கலகலப்பிரியா...

  முதல் வருகைக்கு நன்றி.

  அப்புறம், நீங்க சொல்றது உண்மைதான்...

  பதிலளிநீக்கு
 29. வாங்க சங்கர்...
  நமக்கு இதுபோல அனுபவங்கள் இல்லைன்னு நினைக்கிறேன்.

  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. வாங்க தமிழ்பறவை...
  பாலைவன் பூமியில கிடக்கிற நமக்குள்ள என்ன அனுபவங்க பேசப்போகுது.

  பதிலளிநீக்கு
 31. வாங்க ஆர்கே...

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!

  பதிலளிநீக்கு
 32. வாங்க வானதி...

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வாங்க அம்பிகா...

  கருத்துக்கு நன்றி சொல்ல மறந்தாச்சு... சாரி...

  நன்றிங்க........!

  பதிலளிநீக்கு
 34. இந்த வாழ்க்கை நடைமுறையில் கொஞ்சம் முரண்கொண்டது... பெண்களுக்கென்றால் சொல்லவாவேண்டும்...

  அருமை...

  பதிலளிநீக்கு
 35. வாங்க பாலாசி...

  கருத்துக்கு நன்றி/

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...