மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 20 ஜூலை, 2010சிறு பூக்கள்...


பிரியாணியில் கோழி...
மிச்சத்தை கொத்திப்
பார்த்தது குஞ்சு..!

-----
நாடு காக்க வேண்டுதல்
பிள்ளையாரிடம்...
காணாமல் போனது சிலை..!

-----

சந்தோஷமாய்
பறந்து பார்த்தது
குருவிக்குஞ்சு...
கன்னிப் ப்யணம்..!

-----

நெருக்கத்தில் புழுக்கமாய்
நெஞ்சுக்குள் மறக்க
முடியாத காதலி..!

-----

மங்கள நிகழ்ச்சி
வாசலில் கட்டப்பட்டது...
வெட்டப்பட்ட வாழை..!

-'பரிவை' சே.குமார்.
எனது முந்தைய ஹைக்கூ கவிதைகளை படிக்க இங்கே சொடுக்கவும். கிறுக்கல்கள்.

27 கருத்துகள்:

 1. முதல் ஹைக்கூ அசத்தல்.. மற்றவை ரசனை மிக்கவை..

  பதிலளிநீக்கு
 2. //மங்கள நிகழ்ச்சி
  வாசலில் கட்டப்பட்டது...
  வெட்டப்பட்ட வாழை..!//
  உண்மை - இது தேவையா ?

  பதிலளிநீக்கு
 3. முதல் கவிதையை மிக ரசித்தேன் குமார்

  பதிலளிநீக்கு
 4. ஐந்து கவிதைகளும அருமை குமார்..

  பதிலளிநீக்கு
 5. எல்லாமே ’நச்’

  வெட்டப்பட்ட வாழை... சூப்பர்

  பதிலளிநீக்கு
 6. அருமைங்க... முதல் இரண்டும், கடைசியொன்றும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது... சிறு பூக்களாக தெரியவில்லை... புயலாகவே இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 7. மொத்த கவிதைகளும் அழகு, வாழ்த்துக்கள் குமார்.

  பதிலளிநீக்கு
 8. அருமை.ஐந்தாவது பிடித்தது.

  பதிலளிநீக்கு
 9. வாங்க பத்மா...
  கருத்துக்கு நன்றி..!

  வாங்க செந்தில்...
  ரசனைக்கு நன்றி..!

  வாங்க கார்த்திக்...
  உண்மைதான் நண்பரே.. உங்கள் ரசனைக்கு நன்றி..!

  பதிலளிநீக்கு
 10. வாங்க வானம்பாடிகள் சார்...
  கருத்துக்கு நன்றி...என்றுமே முரண் அழகுதானே ஐயா..!

  வாங்க சரவணன்...
  உங்கள் ரசனைக்கு ரொம்ப நன்றி..!

  வாங்க தேனம்மை அக்கா...
  வருகைக்கு நன்றி... நீண்ட நாட்களுக்குப் பிறகு பின்னூட்டம்..?

  பதிலளிநீக்கு
 11. வாங்க கதிர் அண்ணா...
  உங்கள் ரசனைக்கு நன்றி..!

  வாங்க பாலாசி...
  பூக்களை நீங்கள் புயல் என்று சொன்னதற்கு நன்றி..!


  வாங்க முனைவரே...
  வாழ்த்துக்கு நன்றி நண்பரே..!

  பதிலளிநீக்கு
 12. வாங்க பிரியா...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

  வாங்க சௌந்தர்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

  பதிலளிநீக்கு
 13. வாங்க அம்பிகா...
  பிடித்ததற்கும் படித்ததற்கும் நன்றி..!

  வாங்க மேனகா...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

  பதிலளிநீக்கு
 14. மொத்த கவிதைகளும் அழகு ( ஹைகூ?)

  முதலாவது மிக அருமை.

  பதிலளிநீக்கு
 15. அனைத்து ஹைக்கூக்களும் அருமை
  எனினும் முதலாவதை மிக
  ருசித்தேன், அல்ல இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 16. ///நெருக்கத்தில் புழுக்கமாய்
  நெஞ்சுக்குள் மறக்க
  முடியாத காதலி..!///

  ஹ்ம்ம்.. அருமையான வரிகள் :-)

  ////மங்கள நிகழ்ச்சி
  வாசலில் கட்டப்பட்டது...
  வெட்டப்பட்ட வாழை..! ////

  ரொம்ப சூப்பர்..... குமார் :-)

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. எல்லாமே ரொம்ப நல்லா இருக்குங்க...

  பதிலளிநீக்கு
 19. அனைத்தும் அருமை நண்பா.. முதலும் கடைசியும் உள்ள ஹைக்கூ மனசை தொட்டது..

  பதிலளிநீக்கு
 20. நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள கவிதைகள் நண்பா...அருமை.

  பதிலளிநீக்கு
 21. //மங்கள நிகழ்ச்சி
  வாசலில் கட்டப்பட்டது...
  வெட்டப்பட்ட வாழை//

  ஹைக்கூ வின் மின்னல் போன்ற தாக்கம் இக் கவிதையில் உண்மையில் உணரமுடிந்தது.
  மிகச் சிறப்பு.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...