மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் :சரவணனை புறவாசல் வழி வெளியேற்றிய பிக்பாஸ்

Image result for bigg boss saravanan
ரேஷ்மா வெளியேற்றமே சாக்சி என்னும் சண்டைக்கோழி கூட்டுக்குள் இருக்க வேன்டும் என்பதால்தான் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. சாக்சியைப் பொறுத்தவரை இந்த வாரம் நாமினேசனில் வருவது உறுதி என்பதை கண்டிப்பாக உணர்ந்திருப்பார். இதுவரைக்கும் இரண்டு முறை அவருக்கான அறுவடையில் சிக்கிய கோழிகளெல்லாமே சீக்குக் கோழிகள்தான்... ஆனால் இந்தமுறை அப்படி நிகழ வாய்ப்பிருக்குமா என்பதை மிகத் தெளிவாக யோசித்திருக்கிறார்.

ஆம்... சாக்சியைப் போல் லாஸ்லியாவும் இந்த முறை நாமினேசனில் இருப்பது உறுதி. கவின் விஷயத்தில் அவரின் நடவடிக்கைகள் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி உடனிருப்பவர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதால் அவருக்கும் நாமினேசனில் இடமிருக்கும். அப்படிப் பார்க்கப் போனால் தன்னைப் பின்னுக்குத் தள்ளி மக்கள் மனதில் லாஸ்லியா நிற்பார் என்பதை சாக்சி உணர்ந்தே இருந்தார்.

இந்த முறை தப்பிக்க யாரை நாமினேசனுக்குள் இழுக்க வேண்டும் என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருந்ததால் ரேஷ்மா போகும் போது நான் போறேன்னு சீனைப் போட்டு அழுதவர் அதற்கு அடுத்த நிமிடமே சிறு புன்னகையுடன் வலம் வர ஆரம்பித்துவிட்டார். நீ போனதுக்கு நானே காரணமென ரேஷ்மாவின் வெளியேற்றத்துக்குப் பின்னர் முகன் பொங்கிப் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தான்.

முகன், சாக்சி, அபி மற்றும் ஷெரின் நால்வரும் சிறைக்குப் பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 'நான் முகனுடன் பேசுவதில் உனக்கேதும் பிரச்சினை இருக்கா?' என மெல்ல அபியிடம் ஆட்டையைத் தொடங்குகிறார் சாக்சி. அதில் முத்திக் கொள்ள, ஷெரின் இப்ப இது தேவையா... எப்பப் பார்த்தாலும் எதையாவது தூக்கிட்டு வந்து என்னோட மண்டையில போடுறதுல குறியா இருக்கீங்களேனு சொல்றாங்க. அபி ஒரு கட்டத்தில் கோபமாய் அங்கிருந்து நகர்கிறார்.

அபி தோள் சாய்ந்து அழ முகன் பின்னாலயே வருவான்னு நினைக்கிறாங்க... ஆனா அவன் சாக்சிக்கிட்டதான் இருக்கான்... இது சாக்சிக்கு இரண்டு லட்டை அல்வாவில் உதிர்த்துவிட்டுச் சாப்பிட்டது போல் இருக்கிறது. அபிக்கோ வேப்பெண்ணையில் பாவாய்க்காய் சமைத்துச் சாப்பிடச் சொன்னது போலும் செட்டிநாடு சிக்கன்ல காய்ந்த மிளகாயை இரண்டு மடங்கு போட்டது போலும் இருக்க, அழக் கிடைத்த தோள் லாஸ்லியா மட்டுமே. 

லாஸைப் பொறுத்தவரை சாக்சியால் பாதிக்கப்பட்டவள் அபி என்பதால் கூடுதலாய் ஆறுதல் கொடுக்கிறார். கூடவே எல்லாரிடமும் சொல்வது போல் அவளிடம் கதை என்றும் சொல்கிறார். உனக்கும் அவளுக்கும் ஒரு புருஷனுக்குச் சண்டை... எதுக்குடி அவ எம்புருஷனுக்கிட்ட வர்றா... அவ கதையே வேண்டான்னு சொல்றேன்... கதைக்கச் சொல்றேன்னு ஒரு பார்வை பார்த்துட்டு பாரு எம்புருஷனை நான் அழுதுக்கிட்டு இருக்கேன்... அங்க அவகூட உக்காந்து லவ்விக்கிட்டு இருக்கான். அவனுக்கு அவன் பிரச்சினை மட்டுமே... நான் இம்புட்டு அழுகிறேனே கண்ணத் தொடச்சி விடணும்ன்னு கூடத் தோணலை பாருன்னு பண்ணு மாதிரி முகத்தை விரிக்க, அதைக் கேமரா பக்கத்துல காட்ட, பஞ்சரனா டயரு மாதிரி முகம்... சத்தியமா சின்னப்பிள்ளைங்க பாத்தா பயந்துடுங்க.

ஷெரின் வந்து பேச, அபி எம்புருஷந்தான் எனக்கு மட்டும்தான் அப்படின்னு பாடிக்கிட்டே இருக்க, நீ தேவையில்லாமத் தேரை இழுத்து தெருவுல விடப்பாக்குறே... முதல்ல இதை விட்டு வெளியில் வான்னு செமையா ஒரு அட்வைஸ்... ஷெரின் இப்பல்லாம் ரொம்ப நிதானமா... தெளிவாப் பேசுது... எல்லாருக்கும் பிடிக்கும் பெண்ணாய் இதழ் விரிக்கிறது ஷெரின் என்னும் செவ்வந்திப் பூ.

அப்புறம் முகன் வந்தான்... பய ரொம்பக் கோபக்காரன்னு தெரியும்... அபி அடக்கியே வாசித்தாலும் பொண்டாட்டியவிட அவகிட்ட என்ன பேச்சுங்கிற மாதிரி பேசுது... நீ அழுதேன்னு நான் தவிச்சிக்கிட்டு இருக்கேன்... ஆனா நான் அழும்போது நீ தடிமாடாட்டம் அவகிட்ட உக்காந்திருக்கேன்னு கொஞ்சம் கூடுதலாய்ப் புலம்ப, பய சொல்லிப் பார்த்தான் கேக்கலை... கோபக்காரனா... போட்டான் ஒண்ணு... புள்ள பயந்து நடுங்கிருச்சு... கட்டில் உடைஞ்சிருச்சு.

அப்புறம் எல்லாரும் வந்தாக... ஆறுதல் சொன்னாங்க.. முகனுக்கு கட்டும் போட்டாங்க... அவனும் விவரத்தைச் சொன்னான்... அப்புறம் அபிராமிக்கிட்டயும் உன்னைய என் பிரண்டாத்தான் நினைக்கிறேன். ஆனா நீ பொண்டாட்டிங்கிற நினைப்புல இருக்கே... இதெல்லாம் நல்லதுக்கு இல்லை... உன்னால வெளியில எனக்காக காத்திருக்கவ விட்டுட்டுப் போயிடுவா போல இருக்கு....முதல்ல என் நிலமையை யோசிச்சிப்பாரு... அப்படி இப்படின்னு பேசி சமாதானப் படுத்துகிறான். அபியின் இந்த நடவடிக்கையால் அந்தப் பொண்ணு இன்னேரம் எஸ்ஸாகியிருக்கும். நடுத்தெருவில் நிக்கப்போறான் முகன்... அது மட்டும் உறுதி.

மறுநாள் காலையில் வழக்கமான ஆட்டம்... அபி நானெல்லாம் சரியாயிட்டேன்னு காட்ட ரொம்பவே குதிச்சாங்க.... அப்புறம் ஷெரின் தன் உதவியாளனாய் சாண்டியை வைத்துச் சொல்லிக் கொடுத்த டம்ப்ரீஷ் மொழிப் பாடம்... என எல்லாமே எப்பவும் போல்தான். ருசிக்கவும் இல்லை... ரசிக்கவும் முடியலை.

கக்கூஸ்க்குள்ள சாக்சியும் அபியும் கட்டித் தழுவி ஒருவருக்கு ஒருவர் மன்னிப்புக்கோரி, உனக்கு நான் எனக்கு நீன்னு எல்லாம் வசனம் பேசிக்கிட்டாங்க. அப்ப அங்க வந்த லாஸ்லியா முகத்துல எரிஞ்சிக்கிட்டு இருந்த ஆயிரம் வாட்ஸ் பல்பை ஆப் பண்ணின மாதிரி ஒரு உணர்ச்சி. அங்கிருந்து வெளியான அபி எப்பா எப்படிடா வாழப்போறேன்னு கத்திக்கிட்டே போயி முகன்கிட்ட நானும் சாக்சியும் லவ்விட்டோம்.. இனி சண்டை போடமாட்டோம்ன்னு சொல்ல, முகன் முகத்தில் சந்தோசச் சாரல்.

அடுத்து நாமினேசன்... எல்லாரும் அபிக்கு மன அழுத்தம்... சாக்சிக்கு மனப்பேய்... லாஸ்லியா லூசாயிட்டான்னு குத்தோ குத்துன்னு குத்த, முகன் மட்டுமே எனக்குப் போட்டியாய் இவர்களைப் பார்க்கிறேன்னு தர்ஷன் மற்றும் சரவணனைச் சொன்னான். இந்த வார நாமினேசனில் இதுவே பெஸ்ட்... இந்த விளையாட்டில் யார் எனக்குச் சரியான போட்டி... அவர் இருந்தால் எனக்குப் பிரச்சினை என்பதாய்த்தான் சிந்திக்க வேண்டுமே தவிர, காதலுக்காக கத்திக்கிட்டு இருக்கவங்களை வெளியேற்றனுமின்னு சொல்லறதில்லை என்பதை சேரன் கூட உணரவில்லை. சாக்சி எப்பவும் உன்னோடு நிற்பேன்னு அபிக்கிட்ட சொல்லிட்டு ரூமுக்குள்ள அபிதான் என்னோட லிஸ்ட்ல இருக்கான்னு சொல்லிட்டாங்க... என்ன ஒரு வில்லி ஆத்தா நீயி...

சாக்சி போட்ட ஸ்கெட்சுக்குள்ள அபி அழகா சிக்கிக்கிச்சு என்றாலும் முகன் விஷயத்தில் அபி நடந்து கொள்ளும் விதம் மிகவும் கேவலமானதுதான். ஏதோ புதிதாய்த் திருமணமாகி வந்த தம்பதி போல் அவனின் பின்னேயே சுற்றிக் கொண்டு, அவனுக்காய் வாழ்வதாய் காட்டிக் கொண்டிருத்தல் என்பது ரொம்பக் கேவலமா இருக்கு. எங்கே போன வாரம் கவின்-லாஸ்-சாக்சி முக்கோணக்காதல் கொன்னு எடுத்த மாதிரி இந்த வாரம் முகன்-அபி-சாக்சின்னு சுத்திருமோன்னு பயம் வந்திருச்சு. நல்லவேளை கட்டில் உடஞ்சதால நம்ம பயம் ரொம்ப நேரம் நீடிக்கலை.

நாமினேசனுக்குப் பின் லாஸ்லியா போன வாரம் பண்ணுனதுக்கு இப்ப மன்னிச்சிக்கங்கன்னு சொன்னதெல்லாம் செம நடிப்பு... அட இதை முதல்லயே சொல்லியிருந்தா நானெல்லாம் உனக்கு ஓட்டுப் போட்டிருக்க மாட்டேனேன்னு சாண்டி, சரவணன் சொன்னது சிறப்பு.

ஷெரினும் தர்ஷனும் ஒரு காப்பிக் கப்பை வைத்துக் கொண்டு காபிக்காதல் செய்ய, சாண்டியும் கவினும் உள்ளிருந்து பார்த்து இவன் எப்ப வண்டியில ஏறப்போறானோ தெரியலைன்னு கலாய்த்துக் கொண்டிருந்தது சிறப்பு என்றால் கேமரா செல்லும் வழி தன் காந்தக் கண்ணால் பயணித்து டேய் அவனுக நம்மைத்தான் கலாய்க்கிறாங்கன்னு கண்டு பிடிச்சது அருமை. 

என்னைக்குமில்லாத திருநாளா இன்னைக்கு எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டாங்க.. இதுல கவின்-முகன்-அபியின்னு கருப்புக் கலர் மாட்ச் டிரஸ் வேற... அப்ப ஷெரின்-தர்ஷனுக்குப் போட்ட பாட்டுன்னு கலக்கலாய் பாடினானுங்க... எவங்குடி எக்கேடு கெட்டா எனக்கென்ன நாங்க இப்படித்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்ன்னு ரெண்டு பேரும் அடிக்கிற லூட்டி பல நேரங்களில் மன இறுக்கத்தைக் குறைப்பதாய் அமைகிறது. கவின் லாஸ்லியா பின்னால போகாம இப்படியே இருந்தா நாம ஜாலியா பிக்பாஸ் பாக்கலாம். பயபுள்ள புல்லுக்கட்டைப் பார்த்த காளை மாதிரியில்ல ஓடுது.

அப்புறம் ஏர்டெல் கார்டுகளின் விளம்பரத்தை சரியாக ஒட்டவேண்டிய டாஸ்க்... சேரன், சரவணன் நடுவர்... சாக்சி-ஷெரின்-மது, கவின்-முகன்-சாண்டி, அபி-தர்ஷன்-லாஸ்லியான்னு மூணு ஜோடி, ஜெயிச்சது தர்ஷன் ஜோடி... கிடைச்சது கேக்... தின்னது எல்லாரும்.

சமையல் பண்ண நின்னுக்கிட்டிருந்த சரவணனுக்கு பிக்பாஸிடம் இருந்து அழைப்பு... நாம பேசும் அறைக்கு வாங்கன்னு சொல்லி, நீ என்னைக்கோ சுட்ட வடைக்கு கடலைப்பருப்பு சரியான பதமில்லை நாங்க சொல்ல, நீயும் ஆமாம் பதமில்லைன்னு ஏத்துக்கிட்டே.... ஆனா அந்த வடையை இன்னைக்கு வரைக்கும் எல்லாரும் எடுத்துப் பார்த்து... எடுத்துப் பார்த்து பருப்பு சரியான பதமில்லைன்னு வெறுப்பாச் சொல்றாங்க... நாங்க வடை விஷயத்துல எப்பவுமே நல்லவனுங்க... அதனால நீ எவனுக்கிட்டயும் சொல்லாம இப்படியே ஓடிப்போயி வீட்டுல பருப்பு பதமாப் போட்டு வடை சுடுன்னு சொல்லி விரட்டிட்டாங்க.

இந்த பெண்களை இடித்த கதைக்காக இப்படி வெளியில் செயல்வினை ஆற்றுபவர்களை நினைத்துச் சிரிப்பதா அழுவதான்னே தெரியலை. எவனுமே இதைச் செய்யவில்லை, செய்ததில்லைன்னு புத்தனாட்டம் பேசுவதுதான் கேவலமாயிருக்கு... 

இந்த வார்த்தைதான் தமிழ் நாட்டின் தலைகுனிவுக்குக் காரணாமாய் நிற்பதாய் கம்பு சுற்றுபவர்களை என்ன சொல்வது..? ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் சொன்ன கருத்துக்காக இந்தியா முழுவதும் பிரச்சினை என்பதாய் சொல்வதெல்லாம்... கேட்கச் சிரிப்பாய் இருக்கிறது. உள்ளத்தில் உள்ளதைச் சொன்னவன் குற்றவாளியாம்... என்னென்னமோ நடக்குது நாட்டுல... டிவி நிகழ்ச்சிக்குப் பொங்கிப் பொங்க வைக்கிறவனுங்கள்லாம் ரொம்ப நல்லவனுங்களாம்... நம்பிட்டோம்.

நீ குற்றவாளி விஜய் டிவி மன்னிக்காதுன்னு சொல்லி அனுப்புன பிக்பாஸை என்ன சொல்றது..? விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் எல்லாருமே காமநெடியாகத்தான் பேசுகிறார்கள்... பார்த்துச் சிரிக்கிறோம்... நாடங்களில் எல்லாக் களியாட்டமும் நடக்கிறது... பார்த்து ரசிக்கிறோம்... ஆனால் உள்ளத்தில் உள்ளதைச் சொன்ன ஒருவன் மன்னிப்புக் கேட்ட பின்னும் இதன் காரணமாக உன்னை அனுப்புறோம்ன்னு சொல்றதெல்லாம் ரொம்பவே அதிகம்.

கமல் ஞாயிறன்று கூடுவிட்டு கூடு பாய்ந்து பேசச் சொன்ன போது 'பிக்பாஸ் இவனுக்கிட்ட சொல்லி கோர்த்து விடுறான்'னு சரவணன்  சொன்னதற்காகவே இந்த வெளியேற்றம் என்றும் சேரனைத் திட்டிய நிகழ்வில் திரைப்படத்துறையில் இருந்து நெருக்குதல் இருந்ததாலேயே சரவணன் வெளியேற்றம் என்றும் சொல்லப்படுவது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. இந்த விஷயத்தில் சேரனைக் குற்றம் சொல்லுதலும் முறையல்ல... கமலின் பார்வை நேர் கொண்ட பார்வையாக இருந்திருக்க வேண்டும்... அது இல்லை என்பதுதான் வருத்தமே.

சரவணனின் குடும்பத்தில் ஏதோ பிரச்சினை அதன் காரணமாக அவர் வெளியேற்றப் பட்டிருக்கிறார். இதை வெளியில் சொல்வதைவிட நாங்கள் பெண்களைத் தெய்வமாக மதிக்கிறோம் சரவணன் பெண்களைக் கேவலமாகப் பேசியதால்தான் போகச் சொல்கிறோம் என்பதாய் காட்சிப்படுத்தினால் சேனலுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதால்தான் இப்படி ஒரு நாடகம் என்றே தெரிகிறது.

எது எப்படியோ சண்டை போட்டாலும் மனதில்பட்டதைச் சொல்லிக் கொண்டிருந்த ஒருவர் வெளியானதில் பிக்பாஸ்க்குப் பின்னடைவே. சரவணன் சென்றதால் இந்த முறை நாமினேசனில் வெளியேற்றம் இருக்க வாய்ப்பில்லை.

பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

டிஆர்பி-யை ஏத்துகிறார்களாம்...!