யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.. பிக்பாஸ் பார்க்காத பிடிக்காத நண்பர்கள், உறவுகள் இந்தப் பதிவைக் கடந்து போய் விடுங்கள்... இது வேறொரு தளத்துக்காக (காசு தாரேன்னு சொன்னாங்கய்யா) எழுத ஆரம்பித்தது. வைகோ போன அரசியல் கட்சி மாதிரி அந்தத் தளம் நாம் போன கொஞ்ச நாள்லயே சில காரணங்களால் தற்காலிகமாக மூடப்பட்டபோது எழுத வேண்டாம் எனத்தான் நினைத்தேன். பிரதிலிபியிலும் பகிரப்பட்டதால் அங்கு சிலர் இங்காவது எழுதுங்கள் என குறுஞ்செய்தி அனுப்பியதால் தொடர்ந்து அவர்களுக்காக எழுதப்படுகிறது. அப்படியே சேமித்து வைப்பதற்காக இங்கும் பகிரப்படுகிறது... அவ்வளவே...
மீண்டும் சொல்கிறேன்... பிக்பாஸை விரும்பாதவர்கள் இதைத் தொடர்ந்து வாசிக்க வேண்டாம். நன்றி.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
காலையில எப்பவும் போல பாட்டைப் போட்டு எழுப்பி விட்டானுங்க... அபி ஒருபக்கம் லாஸ்லியா ஒரு பக்கம் ஆட, பசங்க ஒரு பக்கம் பக்கா ஆட்டம் போட்டானுங்க... ஆடிட்டிங்களாடா... எப்படா அடிச்சிக்குவீங்கன்னு பிக்பாஸ் காத்திருந்தார்.
தர்ஷன், கவின், சாண்டி... சில நாட்களாக இரட்டையர் தர்ஷனையும் இணைத்துக் கொண்டு மூவராகியிருக்கிறார்கள். அபி வந்து அண்ணன்கிட்ட இங்க நடக்கும் விஷயங்களால் எனக்குப் பட வாய்ப்பு பாதிக்குமோ அப்படின்னு கேக்குதுன்னு கவின்கிட்ட தர்ஷன் சொல்லவும் 'ஆமா... இவ பெரிய நயன்தாரா... கோடிகளை வச்சிக்கிட்டு கூப்பிடுறானுங்க... நேர் கொண்ட பார்வையில நடிச்சிட்டோம்ன்னு கோடம்பாக்கத்துப் பார்வை நம்ம மேல மட்டுமே விழுகும்ன்னு நினைச்சிருச்சு போல... சீக்குக் கோழி மாதிரி இருந்துக்கிட்டு அடிக்கடி அழுது மூக்கைச் சிந்திட்டா ராதிகா மாதிரி ஆயிருவாளா... மொத ரெண்டு சீசனுலயும் எத்தனை கதாநாயகிங்க உதயமாகியிருக்காங்க...மொதல்ல பட வாய்ப்பு வருமான்னு பார்க்கச் சொல்லு...'ன்னு ரொம்பக் கோபமாவே சொன்னான்.
சேரனைத் தூண்டிவிட்டு அது சேத்துல கிடக்க எருமை கணக்கா பேசாம இருக்கே.... ராத்திரி லாஸ்லியாதான் பயலுகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு உங்களை நாமினேட் பண்ணுறான்னு ஷெரினையும் அபியையும் ஏத்திவிட்டும் எதுவும் நடக்கலை... இன்னைக்கும் முகனை டார்க்கெட் பண்ணக் கூடாது... அபி அழுக கண்ணீர் இருக்காது... இன்னைக்கு டார்க்கெட் தர்ஷன்.. ஆனா அவனுக்கிட்ட நேரடியா மோத முடியாது... ஷெரினுக்கிட்டயும் அபிக்கிட்டயும் லாஸ்லியா பயக கூட சேர்ந்து உங்க முதுகுல குத்துறாடின்னு சொல்லியும் காலையில அவ கூடவே ஆடுறாளுக. இப்பக் கவினுக்கிட்டச் சொன்னா அந்த மரமண்டை பிரச்சினையைக் கிளப்பிரும்.... ஆனா நம்ம டார்க்கெட் பயகதானே... என்ன செய்யலாம்ன்னு வனிதாக்கா சீரியல் வில்லி மாதிரி சீரியஸா யோசிச்சிக்கிட்டு இருக்க, தானா வந்து மாட்டுச்சு மது.
மது நீ ஏன் குரல் கொடுக்கலைன்னு என்னைய கேக்குறாங்கக்கான்னு ஆப்பு மேல லாவகமா உக்காந்துச்சு.... பெட்ரமாஸ் லைட்டுக்கு காத்தடிக்க அடிக்க வெளிச்சம் பிரகாசமாகும்ல்ல அப்படி அக்கா நேக்கா உரு ஏத்த மது முகமெல்லாம் பிரகாசமாயி எங்க பிரச்சினையின்னு அலங்காநல்லூர் சல்லிக்கட்டுக் காளை மாதிரி தலையைத் தூக்கிக்கிட்டு நிக்க ஆரம்பிச்சாச்சு.
ஹோட்டல் டாஸ்க் முடிஞ்சி விருந்தாளியை வீட்டோடு வைச்சிக்கிறேன்னு பிக்பாஸ் சொல்லிட்டார்... பின்னே கலவர பூமிக்கு காரணமாயிருப்பவரை வெளியாக்க அவரென்ன ஈன்னாவாயரா... அப்புறம் யாரு மேன் ஆப் தி மேட்ச்ன்னதும் சாண்டி - கவின் - தர்ஷன் - லாஸ் பேசி வச்சபடி மதுவையும் ஷெரினையும் சொல்லிட்டாங்க... அடுத்து மேன் ஆப் தி சீரியஸ் யாருன்னு கேட்டதும் வனிதா சேரன் நல்லா விளையாண்டரேன்னு சொன்னதும் மதுவும் சேரன்னு சொன்னாங்க... விடுவானுங்களா கவினும் சாண்டியும் சேரனைச் சொல்லக்கூடாதுன்னு அபி மூலம் தர்ஷனை ஆரம்பிக்க வைத்து எல்லாரையும் தர்ஷன்னு சொல்ல வச்சிட்டானுங்க.
அடுத்து யாரு மோசமான ஆட்டக்காரர்கள் என்றதும் கஸ்தூரி என்பதை எல்லாருமே முடிவாய் வைத்திருந்தார்கள்... இடையில் வந்தவர் என்பதால் மனசுக்குள் சேரன் உள்பட அனைவருக்கும் கஸ்தூரி மீது காழ்ப்புணர்ச்சி. சேரன் லாஸ் என்றதும் கவின் துடிச்சிட்டான்... ஆஹா லாஸை மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்பிடுவானுங்களோன்னு பயபுள்ளக்கி அக்குல்ல வேர்த்திருச்சு... இங்கிலீஸ் பேசுன அபிதான்டா போகணும்ன்னு ஆரம்பிச்சி வைக்க, சாண்டி, தர்ஷனெல்லாம் தயிர் சாதம் செய்ய ஆரம்பித்து முடிவாய் கஸ்தூரி, அபி என்றார்கள்.
எல்லாரும் அடிதடி என காரசாரமாக இருக்க... சேரன் ஒரு ஓரமாப் போயி உக்காந்துட்டார்... ஏன்னா அவர் அப்செட்.
அலங்காநல்லூர் சல்லிக்கட்டுக் காளை இதுதான் சாக்குன்னு அத்துக்கிருச்சு... கவினுடன் காரசாரமான மோதல்... கவினைப் பொறுத்தவரை லாஸ் தப்பிச்சாச்சு... அபி போனா என்ன... ஷெரின் போனா என்ன... ஆனாலும் கம்பு சுத்தினான். அவனுக்கு ஆதரவாய் சாண்டியும் தர்ஷனும்.. கூடவே வீட்டுக்காரருக்கு உறுதுணையாய் லாஸ்லியாவும். மது விடலையே... காலைச் சுற்றிக்கிட்ட சாரைப்பாம்பு மாதிரி திருகிக்கிட்டு நின்னுச்சு. சேரன் எதுவுமே நடக்காதது போல ஓரமா உக்காந்து கவனிச்சிக்கிட்டு இருந்தார்... ஏன்னா அவர் அப்செட்.
மறுபடியும் கிச்சன்ல போயி சண்டை... கண்ணம்மா கம்முன்னு கெடன்னு யாரும் சொல்லலை... விராட் ஹோலி மாதிரி விடாம அடிச்சிச்சு... செமையான சண்டை... ஏத்திவிட்ட வனிதாக்கா கேர் பண்ணாம கேரட் சீவிக்கிட்டு இருந்துச்சு. எப்பவுமே நாம நல்லா விளையாண்டோம்ன்னு சொல்லவே மாட்டேங்கிறாங்க... எல்லாரும் அவனுக சொல்றதைதான் கேக்குறாங்க... இந்தச் சண்டையை நான் கேட்கலை... பார்க்கலை... என்பதாய் காய் வெட்டிக் கொண்டிருந்தார் சேரன்... ஏன்னா மேன் ஆப் தி மாட்ச், மேன் ஆப் தி சீரியஸ் எப்பவுமே நமக்கு கிடைக்க விட மாட்டேங்கிறாங்களேன்னு யோசித்தபடி காயோடு பேசிக் கொண்டிருந்தார் சேரன்... ஏன்னா அவர் அப்செட்.
நாலு பேரை லவ் பண்ற மாதிரி நடிச்ச நீ பெண்களை யூஸ் பண்ணிக்கிட்ட மாதிரி ஆண்கள் எல்லாருமே பெண்களைத்தான் யூஸ் பண்றீங்க என பட்டிமன்றப் பேச்சாளர் மாதிரி மது அடிச்சி ஆடுச்சு... கவின் பெரிய வார்த்தையெல்லாம் பேசாதேன்னு எதிர்ப் பேச்சாளராய் சொல்லிக்கிட்டே இருந்தான். மது அப்படித்தான் பேசுவேன்னு வார்த்தைகளை திரும்பத் திரும்பத் துப்பிக்கிட்டு இருந்துச்சு.. சேரன் காய் வெட்டிக் கொண்டிருந்தார்... ஏன்னா சேரன் அப்செட்.
வனிதாவை மூவரணி தாக்க ஆரம்பித்தது... ஆனாலும் மது மனசுக்குள் நீ பேசு புள்ள... இன்னைக்குப் பேசலைன்னா என்னைக்குப் பேசப்போறே... பேசு புள்ள பேசுன்னு வனியக்கா சொல்லிக்கிட்டே இருந்திருக்கும் போல விடாமல் அடித்து ஆடிக் கொண்டிருந்தது. உடனே லாஸ்லியா வந்து கத்த ஆரம்பித்தார்... விளையாட்டில் எல்லாம் ஓரமாக இருப்பவர் கவினுக்காக களமாடினார்... சேரன் காய் வெட்டிக் கொண்டிருந்தார்... ஏன்னா அவர் அப்செட்.
ஒரு கட்டத்தில் 'என்ன இங்க சத்தம்...? என்ன இங்க சத்தம்'ன்னு வனிதாக்கா கேரட் வெட்டுறதை விட்டுட்டு களத்தில் இறங்கி 'டூ பி ஹானஸ்ட்... நான் முகத்துக்கு நேரதான் பேசுவேன்... மது நீ எங்கயோ பொயிட்டே... ஆரம்பிச்சது ஒரு இடத்தில... இப்ப போயிருக்கிறது வேற இடம்...' என்றார். 'ஓ அக்கா தர்ஷனுக்கிட்ட மோதச் சொன்னாங்க... நாமதான் கவினுக்கிட்ட காலை விட்டுட்டமோ... செரி ஆட்டிப் பார்ப்போம்...' என்ற யோசனையுடன் கவின் நீ பொண்ணுங்களை யூஸ் பண்றே என்றார். கவின் கதற, லாஸ் உதற, சாண்டி ஆர்ப்பரிக்க, தர்ஷன் குதிக்க... சேரன் காய் வெட்டிக் கொண்டிருந்தார்... ஏன்னா அவர் அப்செட்.
யூஸ் பண்றேங்கிறது வேற மாதிரி வார்த்தை... அதெல்லாம் சொல்லாதே... கிஸ் பண்றேன்னு மட்டும் சொல்லுன்னு கவின் குதிக்க, 'டூ பி ஹானஸ்ட்... மது விடு... இன்னைக்கு இது போதும்... நாளைக்கு வேற ஆளை வச்சிச் செய்யலாம்' என்றபடி வனிதாக்கா மீண்டும் கேரட் சீவப் போயிட்டாங்க... கவினுக்கு வனிதாக்கா நல்லவங்க... ஷெரினும் மதுவை ரூட் மாறிட்டே தலன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.... சேரன் காய் நறுக்கிக் கொண்டிருந்தார்.... ஏன்னா அவர் அப்செட்.
மூவரணியும் லாஸ்லியாவும் கோபம் வந்த கோழி மாதிரி வெளியில உக்காந்து முக்கிக்கிட்டு இருந்தாங்க... கவின் அழ, லாஸூக்கு மூஸ்ஸே நின்னுருச்சு... சாண்டி ரணகளத்துலயும் குதுகலமாய் இதுக்கெல்லாம் காரணம் சேரன் எனச் சொல்லி செரிமானமாகத தன் எண்ணத்தைச் செரிக்க வைத்துக் கொண்டிருந்தான். கவினுக்கு அப்பத்தான் அழுகை விடுத்து சிரிப்பு வந்தது. அப்பவும் சேரன் காய்தான் வெட்டிக் கொண்டிருந்தார்... ஏன்னா அவர் அப்செட்.
மது நீ ஆண்களெல்லாம் அப்படின்னு சொன்னது தப்பு... உனக்குப் பிடிக்கலையா ஒதுங்கியிரு... அதை விட்டுட்டு முள்ளுக்குத்துன ஓநாய் மாதிரி ஏன் கத்துறேன்னு சொல்லியபடி வெட்டிய காய்கறியை எடுத்துக் கொண்டு எழுந்தார் சேரன்... அதுக்கு மேல ரொம்பப் பேசலை... ஏன்னா அவர் அப்செட்.
வெளியில் இருந்து வனிதா, மது, சேரனுக்கு வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் சாண்டி... லாஸ்லியா, தர்சனெல்லாம் உருண்டு புரண்டு ரசித்தார்கள்... சிறைக்குள் இருந்து அபியும் ரசித்தார். ரோபோ ரஜினி மாதிரி கிச்சனில் நின்று கொண்டிருந்தார் சேரன்... ஏன்னா அவர் அப்செட்.
கஸ்தூரியை காக்கா என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டது குள்ளநரி கவின்.
அதன் பின்னே உனக்காக நான் குரல் கொடுத்தேன்... நாளைக்குப் போய் அவனுககிட்ட உப்பு மூட்டை ஏறு மவளே வச்சிக்கிறேன்னு மது அபிக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்துச்சு... அப்ப பக்கத்துல ஷெரின் குந்திக்கிட்டு இருந்துச்சு... மதுவுக்கு நாக்குல சனியா... இல்ல வனியான்னு இன்னைக்குத் தெரிஞ்சிருக்கும்... எதுவாயிருந்தாலும் குத்துப்படப் போறது மது.
எல்லாத்தையும் அத்திவரதர் மாதிரி அமைதியாப் பாத்துக்கிட்டு இருந்தார் சேரன்.... ஏன்னா அவர் அப்செட்.
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
1 எண்ணங்கள்:
// அத்திவரதர் மாதிரி // ஏன்னா அவர் அப்செட்... //
ஹா... ஹா... ஹா... ஹா...
கருத்துரையிடுக