மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 8 மார்ச், 2013மனசு: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?


பவர்ஸ்டார் என்று டாக்டர் சீனிவாசன் பட்டப் பெயர் வைத்தாலும் வைத்தார் அது கொடும்பாவி எரிப்பு வரை வந்திருக்கிறது. தங்களது தலைவருக்குக் கடும் போட்டியாக சீனி கிளம்பியிருப்பதைக் கண்டு கொதிப்படைந்த ஆந்திர பவர்ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள் நம்ம ஊர் பவர் ஸ்டாரின் கொடும்பாவியைக் கொளுத்தி விளையாடியுள்ளனராம். 

கூகுள், யாஹூ என தேடுபொறியில் பவர்ஸ்டார் என்று போட்டாலே அங்கு நம்ம சீனிவாசன் வருவதுதான் அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு காரணம். ஆந்திராவில் பவன் கல்யாண் பட்டப் பெயர் பவர் ஸ்டார்! அவரது பட போஸ்டர்கள் எல்லாவற்றிலும், பவர் ஸ்டார் பவன் கல்யான் என்றே போடப்படுகிறது. ஆனால், கூகுள், யாஹூ போய் ஆசை ஆசையாய் தெலுங்கு ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று டைப் செய்தால் எடுப்பான பற்களுடன் சிரித்தபடி ஒரு மூஞ்சிதான் வந்து நிற்குதாம்! கல்யாணராமன் கமல் போல நம்ம பவன் கல்யானின் புது படத்துக்கு, புது கெட்டப்போ என்று தெலுங்கு ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு விபரங்களை தேடியதில், தமிழில் ஒரு பவர் ஸ்டார் உலா வரும் விஷயம் அவர்களுக்கு தெரிந்தது. அப்புறம்தான் ஆவேசப்பட்டுள்ளனர் தெலுங்கு ரசிகர்கள்.

பவன் கல்யாண் தலைமை ரசிகர் மன்றத்தில் ஒன்று கூடிய ரசிகர்கள் சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் மீண்டும் சோதனை செய்து பார்த்துள்ளனர். ‘பவர் ஸ்டார்' என்று டைப் செய்தால், முதல் 4 பக்கங்களுக்கு தமிழ் பவர் ஸ்டாரின் விதவித போஸ்கள் வந்து 5-வது பக்கத்துக்கு பிறகுதான், போனால் போகிறதென்று பவன் கல்யாண் பற்றி வருகிறதாம்!

இதனால், கடந்த சில தினங்களுக்கு பவர் ஸ்டார் சீனிவாசனின் கொடும்பாவியை எரிச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பவன் கல்யாண் ரசிகர்கள்.

ஹீரோவும், காமெடியனும் எப்படி ஒண்ணாக முடியும்? இனிமேல் அப்படி வராதது மாதிரி சர்ச் இன்ஜினை மாற்றி அமைச்சுக் கொடுங்க என்று இவ்விரு இணைய தளங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து பவன் கல்யாணின் லட்சக்கணக்கான ரசிகர்கள் இமெயில் அனுப்பியிருக்கிறார்களாம்.

இணையதளத்தில் அதிக எண்ணிக்கையானவர்கள் எந்த பவர் ஸ்டாரை கிளிக் செய்கிறார்களோ, அந்த பவர் ஸ்டாரின் பெயர் முதலில் வருவதாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளன, கூகுள், மற்றும் யாஹூ சர்ச் இஞ்சின்கள். அந்த வகையில் அதிகம் கிளிக் செய்யப்படுவது, பவர் சீனிவாசனின் போட்டோக்கள்தானாம்.

சும்மாவே தனக்கு ஒரு கோடி ரசிகர்கள்(!) இருக்கின்றனர் என்று பேட்டி கொடுத்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், தன் கொடும்பாவி எரிக்கப்பட்டதை கேள்விப்பட்டு, "ஆஹா அற்புதம்... எட்றா ஒரு டிக்கெட்டு ஆந்திராவுக்கு. அங்கேயும் கலக்கணும்" என்று சொல்லி வருகிறாராம். ‘லத்திகா' படத்தை தெலுங்கில் டப் செய்து, ஆந்திராவில் ரிலீஸ் செய்யும்போது இரண்டு பவர்ஸ்டாரின் ரசிகர்களும் மோதிக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. சரி விடுங்க, எந்த மண்டை முதலில் உடையுதன்னு பார்ப்போம்...!

நன்றி : தமிழ் இணைய இதழ்

-'பரிவை' சே.குமார்1 கருத்து:

  1. //இணையதளத்தில் அதிக எண்ணிக்கையானவர்கள் எந்த பவர் ஸ்டாரை கிளிக் செய்கிறார்களோ, அந்த பவர் ஸ்டாரின் பெயர் முதலில் வருவதாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளன, கூகுள், மற்றும் யாஹூ சர்ச் இஞ்சின்கள்.//
    I dont know about yahoo.

    Google is not open about its algorithm. Anything you say can only be a guess, at best :-)

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...