மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 27 மார்ச், 2013'நயன்தாராவை விரும்புகிறேனா?' - ஆர்யா.இன்றைய செய்தி :

சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான். நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்.

சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது.

இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம். எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது," என்றார்.இரண்டு நாட்களுக்கு முன் வந்த செய்தி:


 நடிகை நயன்தாரவுக்கும், ஆர்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் பரவியுள்ள நிலையில், நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்? என ஆர்யா விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். தற்போது `வலை', ராஜா ராணி, படங்களிலும் இணைந்து நடிக்கிறார்கள்.

பிரபு தேவாவுடனான காதலை முறித்துவிட்டு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததை ஆர்யா விருந்து வைத்து கொண்டாடியதாக கூறப்பட்டது. அப்போது நயன்தாராவை ஆர்யா தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு அவருக்கு ருசியான பிரியாணி விருந்து அளித்தார். எனவே, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது, 'எனது வீட்டில் அம்மா சுவையாக பிரியாணி சமைப்பார். நிறைய பேர் அதை சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததாக மற்றவர்களிடம் சொல்லி உள்ளனர். எனவே நிறைய பேர் பிரியாணி சாப்பிட ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்காக வீட்டில் விருந்து வைத்தேன். நயன்தாராவும் அந்த விருந்துக்கு வந்தார். மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் வந்து இருந்தார்கள். நயன்தாராவுக்கு மட்டும்தான் பிரியாணி விருந்து வைத்தேன் என்று வதந்தி பரப்பி விட்டார்கள். திருமணத்துக்கு நான் பெண் தேடுகிறேன். பொருத்தமான பெண் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்' என ஆர்யா கூறினார்.

சிம்பு, பிரபுதேவா வரிசையில் ஆர்யாவும் சேர்வாரா... இல்லை விரைவில் கெட்டிமேளம் கொட்டுவார்களா... சந்தைக்கு வந்தாச்சு எப்படியும் கடைவிரிக்காமலா போகப் போகிறார்கள்... பொறுத்திருந்து பார்ப்போம்...

நன்றி : தமிழ் இணையங்கள்...

-'பரிவை' சே.குமார்

1 கருத்து:

  1. என்னமோ போங்க குமார்,வெறு வாய் சப்பிட்டு அலைஞ்சவங்களுக்கு அவல் கிடைச்சிடுச்சு!

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...