மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 8 மார்ச், 2013

சினிமா வாய்ப்பு... பெண்கள் ஏமாறவேண்டாம் - இயக்குநர் சசிகுமார்



என்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தி சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக வெளியாகும் செய்திகள் அல்லது நபர்களை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம் என்று இயக்குநரும் நடிகருமான எம் சசிகுமார் அறிவித்துள்ளார். 

சசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லி, போலி ஈ-மெயில் முகவரிகளை வைத்தும், வலைத் தளங்களை வைத்தும் சிலர் மோசடி செய்து வருகிறார்களாம். இதுபற்றி ஏற்கெனவே ஒருமுறை எச்சரித்திருந்தார் சசிகுமார். இப்போது மீண்டும் அத்தகைய மோசடிகள் அரங்கேறி வருவதால், மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 அதில், "சினிமா என்ற பிரமாண்ட உலகை நோக்கி நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர்.இது வரவேற்கத் தக்கதுதான். ஆனால் எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட்டால் போதும் என்ற ஆர்வத்தில் போலிகளை நம்பி ஏமாந்துவிடுவது வருத்தமளிக்கிறது. சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர் சினிமா வாய்ப்புத் தருவதாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது நேரடியாக என் கம்பெனிக்கே அழைத்துப் பேசுவதுதான் வழக்கம். போனிலோ, ஈ மெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வழக்கம் கிடையாது." 

"என் பெயரில் போலி ஈ மெயில் முகவரிகளையும், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளையும் சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள். இதுநாள் வரை எந்த சமூக வலைத் தளங்களிலும் நான் இல்லை. அதனால் வலைத் தளத் தகவல்களையோ, ஈ மெயில்களை வைத்தோ என் படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக , சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரணம், சினிமா உலகம் எந்த அளவுக்கு அழகானதோ, அதே அளவுக்கு ஆபத்தானதும கூட". 

"சினிமாவை நோக்கி வருபவர்கள் ஜெயிக்கிறார்களோ, இல்லை போராடுகிறார்களோ, எந்த விதத்திலும் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என நினைப்பவன் நான். என்னுடைய பெயரை வைத்தே சிலர் ஏமாற்று வலை விரிப்பது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. என் பெயரை மட்டுமல்ல, வேறு யார் பெயரைச் சொல்லி வாய்ப்பு தருவதாகக் கூறி வலை விரித்தாலும் அதுகுறித்து தீர விசாரியுங்கள் என்பதே என் வேண்டுகோள்". 

"சினிமாவில் பெண்களின் சாதிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு ஆர்வமும் அவசரமும் மட்டுமே இருந்தால் போதாது, ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும் இருக்க வேண்டும்," என கூறியுள்ளார்.

நன்றி : தமிழ் இணைய இதழ்கள்
-'பரிவை' சே.குமார்

6 எண்ணங்கள்:

Yoga.S. சொன்னது…

வணக்கம்,குமார்!///பகிர்வு சினிமா மோகம் கொண்டு அலைவோருக்கு உதவும்!பகிரங்க அறிவித்தல் கொடுத்த இயக்குனர் சசிகுமார் போற்றுதலுக்குரியவர்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//இலக்கை அடைவதற்கு ஆர்வமும் அவசரமும் மட்டுமே இருந்தால் போதாது, ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும் இருக்க வேண்டும்," என கூறியுள்ளார்.//

மிகச்சரியாக சொல்லியிருக்கிறார்.

நல்லதொரு பதிவு.

அம்பாளடியாள் சொன்னது…

போலிகளைக் கண்டு ஏமாறும் உறவுகள்தான் இப்போதும்
அதிகரித்த வண்ணம் உள்ளது .சிறப்பான தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .

புரட்சி தமிழன் சொன்னது…

good mesage

arasan சொன்னது…

உங்கள் தளத்தைப் பற்றி சிறு விளக்கம் ...
காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_12.html

Asiya Omar சொன்னது…

சகோ.உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
http://www.asiya-omar.blogspot.ae/2013/03/blog-post_11.html