மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 20 நவம்பர், 2010

சில சினிமாவும் சில வரி விமர்சனமும்..!

சில படங்கள் குறித்த எனது கருத்துக்களை சில வரிகளில் பதிவிட்டிருக்கிறேன். இது சினிமா விமர்சனம் அல்ல... படம் குறித்த சிறு பார்வையே...


உத்தமபுத்திரன்



* யாரடி நீ மோகினி, குட்டி வரிசையில் தனுஷ், ஜவஹர் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.

* முந்தைய படங்களின் வெற்றியை முறியடித்ததா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

* மற்ற படங்களில் பார்த்த அசால்ட்டான தனுஷ் மிஸ்ஸிங்...

* எல்லாப் படத்திலும் லூஸூப்பெண்ணாகத்தான் வருவேன் என்பது போல் லூசுத்தனமாக நடிக்கிறார் ஜெனிலியா.

* பாக்யராஜ், அம்பிகா, ரேகா, சுந்தர்ராஜன் என பெரிய கூட்டம் திரையை நிறைச்சிருக்கு.

* தெலுங்குப் படக் கதை என்பதால் வில்லன்கள் பேசும் போது கத்திக் கத்திப் பேசுவதால் தலைவலி வருவதை தவிர்க்க முடியவில்லை.

* விவேக் வசனங்களைக் குறைத்து முக பாவனையால் நடித்திருப்பது புதுசு.

* பாடல்களில் 'உசுமலரசே...', 'கல்யாணத்தேதி...' பாடல்கள் கலக்கல் ரகம். மற்ற பாடல்களையும் ரசிக்கலாம்.

அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றாலும் சில மைனஸ்களைத் தவிர்த்து விவேக்குடன் தனுஷ் கலக்கும் இரண்டாம் பாதிக்காக பார்க்கலாம்.


கௌரவர்கள்




* பழிக்குப் பழி வாங்கும் கதைதான்.
* சத்யராஜ் நடிப்பு படத்துக்கு பிளஸ் பாயிண்ட்.

* விக்னேஷ் பெரிய மீசையுடன் வித்தியாசமாக காட்சியளித்தாலும் நடிப்பு மிஸ்ஸிங்.

* மோனிகா அழகுப் பதுமையாய் வருகிறார்.

* யுவராணி, சச்சு, குயிலி, பானுச்சந்தர் எல்லாரும் படத்தில் இருக்கிறார்கள்.

* படத்தில் ரசிக்க முடியாத ஒன்று பானுச்சந்தரின் சிரிப்பு. அதை தவிர்த்திருக்கலாம்.

* முக்கிய கதாபாத்திரத்தின் பெரும்பாலான காட்சிகளில் பின்னணியில் பாடல் ஒலிப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

* பாடல்கள் சுமார் ரகம்.

* படத்தின் கிளைமாக்ஸ் வேறுமாதிரி இருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

* சத்யராஜ்க்காக ஒருமுறை பார்க்கலாம்.


ஒச்சாயி



* வன்முறைக் கலாச்சாரத்தை மையமாக வைத்து வந்திருக்கும் மற்றொரு படம்.

* ஒச்சாயி என்ற பெண் தெய்வத்தின் நாமகரணம் கதாநாயகிக்கு என்பது மட்டுமே பெயர்க்காரணம்.

* கதாநாயகன் தயாவுக்கு ரவுடி வேடம்...நன்றாக பொருந்தியிருக்கிறார்.

* நாயகி தாமரைக்கு நடிப்புக்கான வாய்ப்பு குறைவு. ஒரு இடத்தில் மட்டும் நறுக் வசவம் பேசுகிறார்.

* ராஜேஷ் நிறைவாக செய்திருக்கிறார்.

* ' நொச்சிக்காடு...', 'கம்மங்காட்டுக்குள்ளே..', 'சொந்தமெல்லாம்...' பாடல்கள் இனிமை.

* வரி விலக்கு பிரச்சினையில் சிக்கி வந்திருந்தாலும் வெற்றிக்கனியை பறித்ததா என்பது சந்தேகமே.

* மதுரை என்றாலே அரிவாளும் அடிதயும் நிறைந்ததுதான் என்று இன்னும் எத்தனை இயக்குநர்கள் சொல்ல இருகிறார்களோ தெரியவில்லை.



வ குவாட்டர் கட்டிங்





* முதல்வரின் வாரிசுகள் எடுத்த தண்ணி போடும்... சாரி தேடும் படம்.

* எஸ்.பி.பி.சரணின் நடிப்பு அருமை.

* கதாநாயகன் சிவா தண்ணியடிக்க சென்னை முழுவதும் அழைகிறார்.

* லேகா வாஷிங்டன் படத்தில் இருக்கிறார்.

* பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

* படம் பார்க்க மனதளவில் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

* இந்த படத்திற்கு வரிவிலக்கு கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி என்ற டைட்டில் கார்ட் போட்டிருந்தால் அய்யாவின் அபிமானிகள் படத்தை ஓட்டியிருப்பார்கள்.

-'பரிவை' சே.குமார்.

Photos  - Thanks to google

24 எண்ணங்கள்:

தினேஷ்குமார் சொன்னது…

சத்யராஜ்க்காக ஒருமுறை பார்க்கலாம்.

நானும் அவருக்காகத்தான் மூன்று முறை பார்த்தேன் கௌரவர்கள்

ஹரிஸ் Harish சொன்னது…

இது நல்லாஇருக்கே..

Sivatharisan சொன்னது…

இது நல்லாஇருக்கே.

Philosophy Prabhakaran சொன்னது…

கெளரவர்கள், ஒச்சாயி எல்லாம் எப்போ ரிலீஸ் ஆச்சு....

எல் கே சொன்னது…

நச் விமர்சனம்

Unknown சொன்னது…

இப்படியும் விமர்சனம் எழுதலாமா

short and sweet

Unknown சொன்னது…

புதிய பார்வை.

எஸ்.கே சொன்னது…

நல்லா இருக்குங்க!

r.v.saravanan சொன்னது…

இப்படியும் விமர்சனம் எழுதலாமா

sakthi சொன்னது…

நல்ல விமர்சனம் நச் வரிகளில் ரசித்தேன்!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தினேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹரிஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிவதர்ஷன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பிரபாகரன்...
ஒச்சாயி தீபாவளிக்கு முன்... கௌரவர்கள் பின்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க விக்கி உலகம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கலாநேசன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க எஸ்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சக்தி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Priya சொன்னது…

சுருக்கமாகவும் அதே சமயம் நன்றாகவும் இருக்கிறது தங்களின் விமர்சனங்கள்!

ஹேமா சொன்னது…

நீட்டிமுழக்காமச் சொல்லியிருக்கீங்க குமார்."ஒச்சாயி" பாத்தேன் இணையத்தில் !

Vidhya Chandrasekaran சொன்னது…

தெளிவான விமர்சனங்கள்.

vanathy சொன்னது…

super!

nistharmohamed சொன்னது…

romba nallairukhu vimarsanam

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நறுக் சுறுகுன்னு மனசுக்கு பட்டதை சொல்லிட்டீங்க..இப்படி எழுதினாவே போதும் விமர்சனத்தை ..விமர்ச்னம்ன்னு கதையே எழுதிடராங்க ;)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரியா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வித்யாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஸ்தர் முகமது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க முத்துலெட்சுமி அக்கா...
இனிமேல் இதுபோல் எழுதலாம் என்ற எண்ணம்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.