மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 3 நவம்பர், 2010

தீபாவளிக் கதைகள்

கதை -1

தீபாவளிக்கு அப்பா ரெண்டு டிரஸ், அம்மா ஒரு டிரஸ், தாத்தா பாட்டி ஒரு டிரஸ் என நான் கு புது வரவுகளால் சந்தோஷத்தில் திளைத்த ரகு, எடுத்து எடுத்துப் பார்த்து சந்தோஷப்பட்டான்.


தீபாவளிக்கு முதல் நாள் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருக்காமல் வெளியே விளையாட ஓடிய ரகுவை, 'தெருப்பயக கூட விளையாட போகாதே... வீட்ல வீடியோ கேம் விளையாடு... அப்பா வந்தா அடிப்பாரு' என்று கடிந்து கொண்டாள் அம்மா. 'போம்மா போரா இருக்குது... நான் ரமேஷ் கூட விளையாட போறேன்' என்றபடி ஓடினான். அவனை நிப்பாட்ட முடியாது என்று தெரிந்து கொண்ட அம்மா, 'சீக்கிரம் வந்துடு' என்று சொல்லி வைத்தாள்.

விளையாடிவிட்டு திரும்பிய ரகு முகம் வாடியிருந்தது. அவனைப் பார்த்த அப்பா, 'என்ன வெயில்ல ஆட்டமா?' என்றார். 'இல்லப்பா நிழல்லதான் வெளாண்டோம்...' என்றவன் 'அப்பா...' என்று இழுத்தான். 'என்னடா... இங்க வா' அவனை இழுத்து உச்சி மோர்ந்த அப்பா ' உனக்கு என்ன வெடி வேணும் வாங்க போகலாமா..?' என்றார்.

'அப்பா... ரமேசுக்கு இன்னும் டிரஸ்ஸே எடுக்கலையாம்... பாவம்ப்பா அவன்... எனக்குத்தான் நாலு டிரஸ் இருக்கே... அவனுக்கு ஒண்ணு கொடுக்கலாமா... எல்லாரும் புது டிரஸ் போடுறப்போ அவன் மட்டும் பழைய டிரஸ்ஸோட... பாவமில்லைப்பா... ப்ளீஸ்ப்பா...'

பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் அடுத்தவனுக்கு இறங்கும் அந்த பிஞ்சின் பேச்சு அப்பாவுக்கு சில பல உண்மைகளை உணர்த்த, 'ம்... கொடுக்கலாமே... ஈவ்னிங் போயி நாம கொடுத்துட்டு வரலாம்' என்றதும், 'தாங்கஸ் அப்பா' என்று கட்டிக் கொண்டான்.

----------------------

கதை - 2

"என்ன வீரையா...புள்ளைகளுக்கெல்லாம் டிரஸ் எடுத்துட்டியா...?"

"இல்ல முதலாளி... இன்னைக்கு நீங்க கொடுக்கிற பணத்துல இருந்துதான் வாங்கிட்டுப் போவணும்... விடிஞ்சா தீவாளி... கொஞ்சம் சீக்கிரம் விட்டிங்கன்னா போயி புதுத்துணி வாங்கிட்டு கருக்கல்ல வீட்டுக்குப் போயிடுவேன்..."

"சரி... சரி... போகலாம்... இப்ப பாலைப் பாத்து எடயக்கட்டு... தண்ணியா வச்சிட்டின்னா எவனும் டீக்குடிக்க வரமாட்டான்... அழகர் வந்தோடனே போயி வாங்கிக்கிட்டு வந்துடு... முன்னப்பின்ன ஆனா கடைய அடைச்சாலும் அடச்சிடுவாங்க..." என்றபடி 200 ரூபாயை அவனிடம் நீட்டினார்.

"முதலாளி... வூட்டுக்காரிக்கும் பொடவை வாங்கணும்... இது பத்தாது... ஒரு 500 ரூபா கொடுத்தியன்னா..."

"ஏம்ப்பா... காசு என்ன கொடியிலயா காக்கிது... சம்பளம் போக இது தீபாவளிக்காசுதான்... இதுல வாங்கப் பாரு... தீபாவளிச் சாமான் வாங்கணுமுன்னு சம்பளத்தையும் பைசா பாக்கியில்லாம வாங்கிட்டே... ம்..." என்றபடி ஒரு 50 ரூபாயை எடுத்து "இந்தா இதுக்குள்ள வாங்கப் பாரு... சும்மா அதிக காசை துணியில போடாம.." என்றார்.

"சரி முதலாளி..."

'அப்பா' என்றபடி வந்தான் அவரது செல்ல மகன்.

"என்னப்பா... எதுவும் வாங்கணுமா?"

"வெடி வாங்கணும்... காசு வேணும்..."

"எவ்வளவு வேணும்... ஆயிரம் போதுமா..."

"ம்ம்ம்... போதுமுன்னு நினைக்கிறேன்..."

"இந்தா... அப்புறம்... இதை பெட் ரோல் போட வச்சுக்க... நாளைக்கு வெளிய தெருவ போவேயில்ல..." என்றபடி 1500 ரூபாயை கொடுக்க...

'காசை கரியாக்குனாலும் ஆக்குவாங்க... வேலை பாக்குறவனுக்கு கொடுக்க மனசு வராது... என்ன செய்ய எல்லாம் நம்ம தலையெழுத்து' என்று நினைத்தபடி பாய்லரை சூடாக்கியவன் மனசு கொதித்தது.


----------------------

கதை - 3

விடிந்தால் தீபாவளி... கடந்த ஒரு மாத காலமாகவே தையற்கடையில் இராப்பகல் பார்க்காமல் உழைத்த கிட்டு, தைத்த துணிகளெல்லாம் கொடுத்தவர்கள் வாங்கி சென்றதால் சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் விதமாக அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது பார்வையில் பட்டது அவனுக்கு நெருக்கமானவர்களும் பழகிய கடைக்காரர்களும் கொடுத்த சுவீட் பாக்ஸ்.

ஒவ்வொன்றாக எடுத்து சுவீட் கடையின் பேரை வாசித்து பிரபலக் கடைகளின் பாக்ஸ்களைஎடுத்து கீழே வைத்துவிட்டு மற்றவற்றை மேலே வைத்தான். அதை பார்த்துக் கொண்டிருந்தான் காசாப்பையன்.

தன்னிடம் வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு கணக்கு முடித்து அனுப்பும் போது அவன் வேண்டாமென்று ஒதுக்கிய சுவீட் பாக்ஸ் ஒன்றை கொடுத்து 'சந்தோஷமாக் கொண்டாடுங்க...' என்றான். எல்லாரும் போக, காசாப்பையனை அழைத்து அவனுக்கு பணம் கொடுத்து சுவிட் பாக்ஸ் கொடுக்க,

"வேண்டாண்ணே... யாரும் சாப்பிட மாட்டாங்க.. எதுக்கு வீணாவுல..." என்றான்.

"அட சும்மா புடிடா..." கட்டாயப்படுத்தி கையில் திணிக்க, போகும் வழியில் சாக்கடையில் வீசிவிட்டு 'கொக்காலி சுகருல்ல வேகுறான்... அவன் திங்கப்போற மாதிரி நெய் சுவிட்ட எடுத்து வச்சிட்டு... அந்து முறிஞ்சத நமக்கு தாரான்... கோத்தா எங்கம்மா சுடுவாங்கடா சூப்பரா... எனக்கெதுக்கு இந்த காஞ்சது..." என்று சத்தமாக சொல்லிக் கொண்டே தரையை உதைத்தான்.


-'பரிவை' சே.குமார்.

25 எண்ணங்கள்:

r.v.saravanan சொன்னது…

நல்லாருக்கு குமார்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

உங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்ததுக்கள்!

RVS சொன்னது…

கதை நம்பர் ரெண்டு டச்சிங்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-)

Unknown சொன்னது…

யோசிக்க வைத்த கதைகள் .. நான் தீபாவளியைக்கொண்டாடுவதில்லை காரணம் இம்மாதிரி நிறைய நிகழ்வுகளை பார்த்ததுதான்...

மோகன்ஜி சொன்னது…

என் வோட்டும் கதை நம்பர் டூவுக்கே!
தீபாவளி நல் வாழ்த்துக்கள் குமார்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தீபாவளி வாழ்த்திற்கும் நன்றி.

வாங்க வெறும்பய அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தீபாவளி வாழ்த்திற்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க RVS...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தீபாவளி வாழ்த்திற்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில்...
இதுபோல் நிறைய கதைகள் இருக்குங்க...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தீபாவளி வாழ்த்திற்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தீபாவளி வாழ்த்திற்கும் நன்றி.

சுசி சொன்னது…

நல்ல கதைகள் குமார்.

உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

vimalanperali சொன்னது…

நிதர்சனமான நடப்புகளே கதையாய் விரிந்திருக்கிறது.

Unknown சொன்னது…

சிந்திக்க வைக்கிற கதைகள். தீபாவளி வாழ்த்துகள்.

vasu balaji சொன்னது…

மூன்றும் அருமை

Chitra சொன்னது…

மனதை கனக்க வைக்கும் கதைகள்.

Philosophy Prabhakaran சொன்னது…

கதை நம்பர் மூணு சூப்பர்...

// கொக்காலி சுகருல்ல வேகுறான்... அவன் திங்கப்போற மாதிரி நெய் சுவிட்ட எடுத்து வச்சிட்டு... அந்து முறிஞ்சத நமக்கு தாரான்... கோத்தா எங்கம்மா சுடுவாங்கடா சூப்பரா... எனக்கெதுக்கு இந்த காஞ்சது... //

இந்த வரிகள் அருமை...

பெயரில்லா சொன்னது…

கதைகள் அருமை..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.. :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கும் நன்றி.

வாங்க விமலன்...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சேது...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா மேடம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பிரபாகரன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க பாலாஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்

Pavi சொன்னது…

தீபாவளி நல் வாழ்த்துக்கள் குமார்

vanathy சொன்னது…

super stories. Happy deepavali.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அப்துல் காதர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

முதல் ரெண்டு கதையும் சூப்பர்..... அதிலும் ரெண்டாவது கதையில் "காசைக் கரி ஆக்கினாலும் ஆக்குவாங்க.. அடுத்தவருக்கு குடுக்க மனசு வராது..." ரொம்பவே அருமை.. :-))

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆனந்தி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.