மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 7 நவம்பர், 2010

கலைஞானி '56'

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ நட்சத்திரங்கள் மின்னினாலும் தனி நட்சத்திரமாய் ஜொலிப்பவர் கமலஹாசன். எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபத்திரத்திற்கு தகுந்தபடி தனது நடை, உடை பாவனைகளை மட்டுமல்லாது உடலையும் மாற்றிக் கொள்ளும் நாயகன். இன்றைய இளம் நடிகர்கள் எல்லாம் தங்கள் உடம்பை குறைக்கவும் கூட்டவும் செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்னோடி கமல்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இன்று பிறந்த நாள் காணும் கலைஞானி, கலைத்தாயின் செல்லப்பிள்ளை கமலஹாசன் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி பரம்பக்குடியைச் சேர்ந்த சீனிவாசன் - ராஜலெட்சுமி தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.

1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 'அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என்ற பாடலில் அருமையாக நடித்ததில் ஆரம்பித்த அவரின் நடிப்பு மீதான காதல் இன்று வரை கூடிக்கொண்டேதான் போகிறது குறையவில்லை. களத்தூர் கண்ணம்மாவில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றவர்.


பணமே பிரதானம் என்று நடிக்காமல் மன நிறைவுக்காகவும் ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கும் மனிதர் இவர். ஆரம்ப காலங்களில் சூப்பர் ஸ்டாரும் இவரும் சேர்ந்தே நடித்தனர். பின்னர் பிரிந்து நடிப்பது என முடிவு செய்து இருவரும் இருவேறு வழிகளில் இமயத்தை தொட்டாலும் இன்னும் ஆரம்ப கால நட்பை ஆழமாய் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

கமலின் படங்கள் எல்லாமே எதாவது ஒரு விதத்தில் நம்மை கவர்ந்து விடும். அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, நாயகன், சிப்பிக்குள் முத்து, அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், விருமாண்டி, தேவர் மகன், அவ்வை சண்முகி, தசாவதாரம் என இன்னும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கவர்ந்த படங்களில் மிகவும் பாதித்த, அதிகம் கவர்ந்த படம் 'அன்பே சிவம்', நகைச்சுவையை மட்டுமே மையமாய் வைத்துப் படமெடுத்து வந்த் சுந்தர்.சியின் இயக்கத்தில் கமல், மாதவன் நடித்த அருமையான படம். படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை என்றாலும் எடுத்துக் கொண்ட கதைக்களம் மிகவும் அருமை. அதிலும் குறிப்பாய் விபத்தில் உருக்குலைந்த ஒரு மனிதனின் முக நடை பாவனைகளை தத்ரூபமாக கொண்டு வந்திருப்பார் கமல்.

கமலுக்கு விருதுகளால் கௌரவம் இல்லை... கமலால் விருதுகளுக்கே கௌரவம். அவர் வாங்காத விருதுகளே இல்லை என்று சொல்லலாம். பிலிம்பேர் விருதுகளை பதினெட்டு முறை பெற்றிருக்கிறார். தேசிய விருதுகளை மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக பெற்றிருக்கிறார். பத்மஸ்ரீ விருதும் இவருக்கு கிடைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.


கமல் தனது கனவுப்படமான மருதநாயகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாய் இருக்கிறார். அதற்கான முயற்சிகளிலும் இருக்கிறார். சில நாட்களாக மருதநாயகம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிவது போல் பேசி வருகிறார். சன் பிக்ஸர்ஸ் எடுக்கப் போவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. இது உண்மையா அல்லது வதந்தியா என்று தெரியவில்லை. மருதநாயகம் வெளிவந்தால் அவரது ரசிகர்களுக்கு மறக்கமுடியாத மகிழ்வான நிகழ்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



நடிகர், பாடகர், இயக்குநர், கதாசிரியர், கவிஞர் என பல அவதாரங்களில் ஜொலிக்கும் கமல் அவர்கள் இன்று தனது 56வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி..!

30 எண்ணங்கள்:

மனோ சாமிநாதன் சொன்னது…

நல்ல பகிர்வு!

'நாயகன்' பார்த்து விட்டு இரண்டு நாட்கள் உறக்கம் சரியாக வராமல் மனம் கலங்கிக் கிடந்தது நினைவில் எழுகிறது. 'சலங்கை ஒலியில்' மழைத்தூறலில் 'தகிட தகிட' என்று பாடியபடியே நடித்தது என்றுமே மறக்க இயலாத காட்சி!!

Unknown சொன்னது…

நம்மவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் சொன்னது…

அவருக்கு நிகர் அவர் தான் நடிப்பில்.

Unknown சொன்னது…

கலையுலகில் நடிப்பில் அவருக்கு நிகர் வேறு யாரும் இருக்கமுடியாது...

கானா பிரபா சொன்னது…

சிறப்பான பதிவுக்கு நன்றி

ஹேமா சொன்னது…

நம்பவே முடியாத வயசு இந்த மார்க்கண்டேயருக்கு.மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

குமார்...உங்களுக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துகள்.

vanathy சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு நடிகர் இவர் தான்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள், குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அம்மா...
உண்மைதான். சலங்கை ஒலியிலும் நாயகனிலும் மட்டுமல்ல... இன்னும் உன்னால் முடியும் தம்பி, சிப்பிக்குள் முத்து, குணா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கலாநேசன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க அப்துல்காதர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிநேகிதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க கானா பிரபா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு குமார்.

Asiya Omar சொன்னது…

தீபாவளியன்று விஜய் டீவியில் கமல் காஃபி வித் அனுவில் முடிவில் கமல் சொன்ன கவிதையை கேட்டு பிளந்த வாயை நான் மூட அதிக நேரமானது.எத்தனை பேர் பார்த்தீங்கன்னு தெரியலை.அருமையான பகிர்வு.

ம.தி.சுதா சொன்னது…

கமல் ஒரு பெரும் கலைஞர் அவருக்கு எனது வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran சொன்னது…

கமல் பற்றி அருமையான தொகுப்பு... நன்றி...

Chitra சொன்னது…

Present, sir!

Lenard சொன்னது…

நடிகர்க்கெல்லாம் '' தல '' இன்னும் சாதிக்க வேண்டும்
தமிழர் நாம் பெருமையே கொள்ளவேண்டும்
வாழ்த்துக்கள்.....

Jackiesekar சொன்னது…

கமல்பற்றி நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்..

போளூர் தயாநிதி சொன்னது…

parattugal
polurdhayanithi

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க நண்பா..

r.v.saravanan சொன்னது…

நல்ல பதிவு குமார் நன்றி கமல்ஹாசன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kumar,good post.கமல் பற்றிய பகிர்வுக்கு நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

பகிர்வுக்கு நன்றி.. :-))

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
நான் அந்த நிகழ்ச்சிய பார்க்க முடியாமல் போய்விட்டது. நெட்டில் டவுன்லோட் பண்ணியிருக்கிறேன், பார்க்க வேண்டும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க பிரபாகரன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா மேடம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க லெனார்ட்...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜாக்கி அண்ணா....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க போளூர்தயாநிதி...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க உழவன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி.செந்தில் குமார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஆனந்தி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.