மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010என்னைப் பற்றி நானே


சுதந்திர தின வாழ்த்துக்கள்.

'பதிவுலகத்தில் நான்' என்ற தொடர் பதிவில் களம் இறங்க வேண்டும் என்று என் அன்புத்தோழி கயல் அவர்கள் அழைத்திருந்தார். எனக்கும் தொடர்பதிவுக்கும் ரொம்பத்தூரங்க. நான் இதில் கலந்துக்க விரும்புவதில்லை. எல்லாரும் சொன்னதன் கலவையைத்தான் நாமும் சொல்லமுடியும். இருந்தாலும் அழைப்பை நிராகரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதனால் மனதில் உள்ளதை மனங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நன்றி கயல்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சே.குமார்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அதே... அதேதான் நம்ம உண்மையான பேருங்க (விட்டா பிறப்புச் சான்று கேட்பாங்க போல)

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

இது ஒண்ணும் தங்கமலை ரகசியமில்லைங்க. சில வலைப்பூக்களைப் பார்த்தப்போ நாமளும் எழுதலாமேன்னு தோணுச்சு. அப்ப நம்ம நண்பர் மோகனன் வலைப்பூ ஆரம்பித்திருந்தார். அவரிடம் சில விளக்கங்கள் கேட்டு என்ன வந்தாலும் பரவாயில்லை என்று கிறுக்கல்கள் என்ற வலைப்பூ ஆரம்பித்து கிறுக்க ஆரம்பித்தாச்சு.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா அப்படின்னா என்னங்க..? கொஞ்சம் சொல்லுங்களேன். நாம எழுதுறது எல்லாமே நமக்கு பிரமாதமானதுதான். மனசுக்குள்ள அடைகாத்து அதை எழுத்தில் பார்க்கிற சந்தோஷமே பெருசுங்க... இதுல பிரபலம் அப்படிங்கிறதுல எல்லாம் நம்பிக்கையில்லைங்க.

தமிழ் மணம், தமிழிஷ், உலவு எல்லாத்துலயும் இணைச்சாச்சு. நம்ம எழுதுறதை நாலு பேர் படிச்சுட்டு அவங்க மனசுல தோன்றதை எழுதுறப்ப கிடைக்கிற சந்தோஷத்தைவிட பிரபலம் பெருசாங்க... ப்ளீஸ் யாரவது சொல்லுங்களேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஒரு சில பகிர்வுகளில் சொந்த விசயங்களை பகிர்ந்திருக்கலாம். ஆனால் சொந்த விசயங்களை பகிர மட்டுமே வலைப்பூ என்ற ஒன்று தேவையில்லை. மனதில் எழுவதை எழுதுவதற்கே வலைப்பூ என்பது என் எண்ணம். (உண்மைதானேங்க)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாதிக்கலாமா...? அப்படின்னா ஏங்க பாலைவன பூமியில வந்து கிடக்கிறோம். ஊருல உக்காந்து கம்ப்யூட்டர் பொட்டியில எழுதியே சம்பாரிச்சிருப்போமே. சம்பாரிக்கிற வழிய யாராவது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க... ப்ளீஸ். வேலைக்குப் பொயிட்டு வந்துட்டு மன சந்தோஷத்துக்காக மட்டுமே என் எழுத்துக்களை வலைப்பூவில் தொடுக்கிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நாலில் இருந்து ஒண்ணாச்சு. எல்லாமே தமிழ்தாங்க... மத்தமொழியிலயா... ஹி..ஹி... ஆர்வக்கோளாறுல ஹைக்கூ கவிதைக்கு கிறுக்கல்கள் (100க்கு மேல கிறுக்கியாச்சு), கவிதைக்கு நெடுங்கவிதைகள் (65), சிறுகதைகள் (20), மனசு என நான் கு வலையை மேய்ச்சுப் பார்த்து வேலைப்பளுவின் காரணமாக மனசுக்கு எல்லாத்தையும் மாற்றியாச்சு. எப்ப மீண்டும் ஒண்ணு எப்ப நான்காகும் என்பது தெரியவில்லை.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமைப்பட என்னங்க இருக்கு. திறமையிருக்கவன் திண்ணையில இருக்கான்... இல்லாதவன் தரையில இருக்கான். எனக்கு நல்லா கவிதை எழுதுற, கதை எழுதுற எல்லாரையும் மிகவும் பிடிக்கும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

//உன்னை அறிந்தவனாய் நான்.......
..என்னை அறியாதவளாய் நீ.......
எனக்குள் மட்டும் இதயக் குடைச்சலாய்.........அருமையான வரிகள்.

சில ஞாபங்கள் தீ மூட்டும் சில ஞாபங்கள் தாலாட்டும்.
பாராட்டுக்கள்//

மேலே உள்ள வரிகள் நிலாமதி அவர்கள் அளித்த பின்னூட்டம். இதுதான் எனது எழுத்துக்களை ஊக்குவித்த முதல் விதை. நன்றி நிலா.

அதன்பின்னர் ஒரு நாள் நாடோடி இலக்கியன் அவர்களின் வலையில்...

//சே.குமார்: கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,

விளைநிலம்:

விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..! //

மேலே உள்ள வரிகளை நொறுக்குத்தீனி என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அதுதான் என்னை இன்னும் எழுதத்தூண்டிய இரண்டாம் விதை. நன்றி இலக்கியன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னங்க அது கடைசியா... நான் எழுதுனது போதுமுன்னு நினைக்கிறீங்களா..? ஏம்பா அவ்வளவு சோதிக்கிறேனா?.. . நான் ஒன்றும் பிரபலமில்லை... என்னைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை.

இப்ப எல்லாரும் நல்லா எழுதுறாங்க. அவங்கவங்க திறமைமேல் நம்பிக்கை வச்சு எழுதினா எல்லாரும் நல்ல இடத்தை அடையலாம் (பிரபலமாகலாமுன்னு நான் சொல்லமாட்டேன். பிரபலத்தில் நம்பிக்கை இல்லை)

அப்புறம், தனி மனித தாக்குதல், அடுத்தவர் எழுதியதை காப்பி செய்வது, மத சம்பந்தமான இடுகைகளால் மற்றவர் மனதை புண்படுத்துவது போன்ற அநாகரீக செயல்களை தவிர்த்து எழுதினால் நான் முன்பு எனது பதிவு ஒன்றில் சொன்னது போல் வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்லலாம்.

குறிப்பிட்ட நபரை பதிவை தொடருங்கள் என்று சொல்ல முடியவில்லை. காரணம் எனக்குத் தெரிந்து எல்லோரும் எழுதியாச்சு. இதுவரை எழுதாத நண்பர்கள் தொடருங்கள்.

நன்றி. வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்

24 கருத்துகள்:

 1. மெலிதான நகைச்சுவை இழையோடும் பதில்கள். பிறப்பு சான்றிதழ் இன்னும் இணைக்கவில்லையா???

  பதிலளிநீக்கு
 2. பதில்கள் மிகவும் அருமை நண்பரே....

  உங்களுக்கு என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. எப்படித்தான் 4 மெயிண்டெய்ன் பண்ணுனீங்களோ?.கிரேட்.

  பதிலளிநீக்கு
 4. //திறமையிருக்கவன் திண்ணையில இருக்கான்... இல்லாதவன் தரையில இருக்கான்.//

  thathuvam

  பதிலளிநீக்கு
 5. தங்களைப் பற்றிய விளக்கங்களையும்
  தங்கள் மன ஓட்டங்களையும் வெகு
  சிறப்பாக வெளிப்படுத்தினீர்கள். நன்று!

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதில்கள்!!வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 7. பதில்கள் அனைத்தும் அருமை!!

  பதிலளிநீக்கு
 8. வாங்க வானதி
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  பிறப்புச் சான்றிதழ் இருக்கா என்று அம்மாவிடம்தான் கேட்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. வாங்க வெறும்பய அண்ணா...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க செந்தில்...
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க பின்னோக்கி...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  ஆமா... நீங்க எந்த நாலை சொல்றீங்க.? அதை இல்லையில்ல... ஹா... ஹா... சும்மாதான்.

  பதிலளிநீக்கு
 11. வாங்க எல்.கே...
  தத்துவம் எல்லாம் இல்லைங்க... எதோ எழுதும் போது வந்தது... சரி நல்லாத்தானே இருக்குன்னு விட்டா தத்துவமா... அப்படின்னா?

  பதிலளிநீக்கு
 12. வாங்க வானம்பாடிகள் ஐயா...
  நன்றி.

  வாங்க கலாநேசன்...
  நன்றி.

  வாங்க கௌசல்யா...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க நிஜாமுதீன்...
  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  வாங்க தேவன் மாயம்...
  உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  வாங்க மேனகா மேடம்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 14. யதார்த்தமான பதில்கள்; பகிர்வும்.
  :-))

  பதிலளிநீக்கு
 15. வாங்க அம்பிகா...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  சுதந்திர தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. பிரம்மிப்பாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 18. பதில்கள் அருமை நண்பரே ரசித்தேன்

  உங்களுக்கு என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. வாங்க சிநேகிதன் அக்பர்..
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கமலேஷ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கயல்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...