மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 29 ஜூலை, 2010

மனசைப் பாதித்த சில...



பாலைவன வாழ்க்கையில் பெற்றதும் இழந்ததும் என்று மனோ சாமிநாதன் அம்மா அவர்கள் கட்டுரை எழுதியிருந்தார்கள் (படிக்க : பகுதி-1 , பகுதி-2.) அவர்களது கட்டுரையில் எல்லாமே இங்கு நடந்த, நடந்து கொண்டிருக்கிறவைகளைத்தான் அதில் தெரிவித்திருந்தார். அதன் தாக்கமாக நானும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் எங்களால் சார் என்று அழைக்கப்படும் நாங்கள் மிகவும் மதிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த இஞ்சினியர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த அந்த சோகம் யாருக்குமே நிகழக்கூடாது என்பதே என் வேண்டுதல்...

அது....

அவர் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக இந்த பாலைவன பூமியில் இருக்கிறார். இடையிடையே குடும்பத்தையும் கொண்டு வந்து வைத்திருந்திருக்கிறார். நான் இங்கு வந்த பிறகு ஒருமுறை குடும்பத்தை கொண்டு வந்து வைத்திருந்தார். அவருக்கு ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என இரண்டு பிள்ளைகள். இருவரையும் நல்லா படிக்கவைத்து வேலைக்கும் போகிறார்கள்.

அவரது பெண்ணுக்கு 23 வயது இருக்கும். இவர் ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும் மகளுக்கு நகைகள் வாங்கிக் கொண்டு போவார். ஊருக்குப் போனால் மகளை சென்னைக்கு அழைத்துச் சென்ற வேண்டும் என்கிற பட்டுப்புடவைகளை வாங்கி கொடுத்து மகிழ்வார்.

சில தினங்களுக்கு முன் எங்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைக்காக எங்கள் அறைக்கு வந்திருந்து பிரியாணி செய்து சாப்பிட்டு சந்தோஷமாக கழித்தார். மறு நாள் காலை அவர் கிளம்பும்போது ஊரில் இருந்து போன் வந்துள்ளது. மகளுக்கு உடலநிலை சரியில்லை என்று சொல்லி சாதாரண காய்ச்சல்தான் என்றதும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்கு கிளம்பி இருக்கிறார். நிலமை சீரியஸ் என்று சில மணி நேரங்களில் மகன் போன் செய்யவும் அண்ணாவிடம் போனில் சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு மருத்துவமனையில் குளுக்கோஸ் போடுவதாகவும் கவலைப்பட வேண்டாம் என்றும் மகன் போன் செய்ய, அவரும் அலுவலக வேலையில் ஐக்கியமாகிவிட்டார். இரவு அண்ணன் போன் செய்ய, காய்ச்சல் கொஞ்சம் சிவியராத்தான் இருக்காம். குளுக்கோஸ் போய்க்கிட்டு இருக்காம் என்றதும் அண்ணா நீங்க உடனே ஊருக்கு போங்கள் என்றார். அதற்கு இல்லப்பா இப்பதான் பொயிட்டு வந்தேன் சாதாரண காய்ச்சல்தானாம் சரியாயிடும் என்றார்.

'அன்று இரவு அவர் யாருக்காக இத்தனை வருடங்கள் இந்த பாலைவன பூமியில் சம்பாதித்தாரோ அந்த தங்கம்... அவரது இதயம்... நினைவில்லாத நிலையிலேயே மரணித்து விட்டாள். தங்கக் கிளியாக வளர்த்த தந்தை முதல் நாள் சென்றிருந்தால் தனது ஆசை மகளுடன் எதாவது பேசியிருக்க்கலாம். ஆனால் அவள் இறந்த பிறகு சென்ற தந்தைக்கு அவளின் உயிறற்ற உடலுக்கு கடன் செய்வதுமட்டுமே மிஞ்சியது. இதை விட கொடுமை என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்?



இந்த சம்பவம் குறித்து நான் தற்பொழுது செல்லும் கவர்மெண்ட் அலுவலகத்தில் தமிழ் நண்பருடன் பேசும்போது, அவர் சொன்ன தகவல் என்னை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

அது...

அவர் இங்குள்ள கிளினிங் கம்பெனிக்கு வேலைக்கு வந்து ஆறு மாதத்தில் அப்பா இறந்துவிட இரவெல்லாம் அழுது காலையில் கம்பெனியில் கேட்டபோது, ' கிளினிங் கம்பெனியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் விடுப்பு வழங்கப்படும். வந்த ஆறுமாதத்தில் எப்படி விடுமுறை கிட்டும்' என்று எதேதோ பேசி, நீ போய் என்ன செய்யப் போறே என்று அவரை விடவில்லையாம். இந்த தகவலை அவர் சொன்னபோது அவரது கண்களில் கண்ணீர் அணை கட்டியதை நான் பார்த்தேன்.

இங்கு படித்தவர்கள் அலுவலகங்களில் குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து வேலை பார்த்து நல்லா சம்பாதிக்கலாம். படிக்காமல் கட்டிட வேலைகளுக்கு வருவோர் அடிக்கும் வெயிலில் நாப்பது, அம்பது மாடி கட்டிடங்களில் வேலை செய்து குறைந்த சம்பளத்தை வாங்கி அதற்குள் இங்கும் செலவு செய்து, ஊருக்கும் அனுப்பி அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது.

இதில் இன்னொன்று இங்குள்ள நண்பர்கள் வார விடுமுறை என்றாலே எதோ தண்ணி அடிப்பதற்காகவே விடுவது போல் காலையில் இருந்து இரவுவரை பாட்டிலுடன் தான் குடும்பம் நடத்துகிறார்கள். தண்ணியடித்துவிட்டு இவர்கள் அடிக்கும் லூட்டியை ஊரில் இருக்கும் இவர்களது குடும்பம் அறிய வாய்ப்பில்லை.

முன்னர் தங்கியிருந்த் கட்டிடத்தில் நாங்கள் இருந்த பிளாட்டில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் குடி குடி என்று இருந்து மோசமான நிலைக்குப் போய் மருத்துவமனையில் காண்பித்தும் குடியை நிறுத்தாததால் ஒரு நாள் காலை பாத்ரூமிற்குள் சென்றவர் அட்டாக்கில் அதற்குள்ளேயே இறந்துவிட, போலீஸ் வந்து பாத்ரூம் கதவை அறுத்து எடுத்தது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அவருக்கு திருமணமாகி ஆறே மாதம்... அதுவும் காதல் திருமணம். இவரது குடியால் இறந்தது இவரென்றால்... இருந்தும் அழிந்தது அந்த இளம்பெண்ணின் வாழ்க்கையல்லவா?

என்னடா இவன் ஒரே சோகமாக அடுக்குகிறானே என்று நினைக்காதீர்கள் நண்பர்களே... பணம் காய்க்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வெளிச்சத்திற்கு வராத இது போன்ற எத்தனையோ சோகங்கள் உண்டு.

இத்தனையும் கடந்து சம்பாதித்து ஊரில் உள்ளாவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

நண்பர் புலவன் புலிகேசி போபால் குறித்த பதிவுகளுக்காக போபால் என்ற வலைப்பூ ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் யார் வேண்டுமானாலும் போபால் கொடுமைகள் குறித்து எழுதலாம். அந்த வலைப்பூ படிக்க இங்கே சொடுக்கவும். வலைப்பூ குறித்த நண்பரின் விளக்கம் இங்கே.


-'பரிவை' சே.குமார்.



45 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்தால் இதெல்லாம் நடந்தே தீரும்... பொருள் வயின் பிரிவு...

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

நீங்க குறிப்பிட்ட ரெண்டு சம்பவமும், மனதிற்கு மிகவும் வேதனையா இருக்குங்க..

இப்படி நிறைய விஷயம் நடக்குது.. வெளியில் பெரும்பாலும் தெரிவதில்லை...


இங்க வெளிநாட்டில் இருக்கிறோம் என்று பெயர்... நமக்கு உடம்பிற்கு எதுவும் வந்தால் நாம் ஊரில் உள்ளவர்களிடம் சொல்வதில்லை.. அதே தான் அங்குள்ளவங்களும், நம்மிடம் எதயும் சொல்வது இல்லை.. காரணம்.. சொன்னால் வருத்தப் படுவாங்களேன்னு...

vasu balaji சொன்னது…

kodumainga ithu:(

Chitra சொன்னது…

பணம் காய்க்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வெளிச்சத்திற்கு வராத இது போன்ற எத்தனையோ சோகங்கள் உண்டு.


......மனதை உலுக்கும் சோகங்கள் - பயங்கரங்கள் - ரணங்கள் - எல்லாம் உண்டு. எத்தனையோ பேர் மெளனமாக கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் தாய் நாட்டை விட்டு விட்டு வந்தவர்களும் உண்டு. ஆசைக்காகவும் மோகத்திலும் விட்டு விட்டு வந்தவர்களும் உண்டு. ம்ம்ம்ம்.....

அம்பிகா சொன்னது…

பணம் காய்க்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வெளிச்சத்திற்கு வராத இது போன்ற எத்தனையோ சோகங்கள் உண்டு.
உண்மைதான். வலிதரும் பகிர்வு.

அம்பிகா சொன்னது…

\\பணம் காய்க்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வெளிச்சத்திற்கு வராத இது போன்ற எத்தனையோ சோகங்கள் உண்டு\\.
வலிதரும் நிகழ்வுகள்.

அமுதா கிருஷ்ணா சொன்னது…

மிக கொடுமை..பணத்திற்காக இத்தனை கொடுமைகள்..

அன்புடன் நான் சொன்னது…

தாய் மண்ணை பிரிந்தவன் படும் பாட்டையும் அவனின் இன்னோரு பக்கத்தையும் பதிந்த உங்களுக்கு நன்றி.
நீங்க சொன்ன முதல் விடயம் மிக கொடுமை!

goma சொன்னது…

ரொம்பவே பாதித்து விட்டது

அன்புடன் நான் சொன்னது…

வெளிநாட்டு வேதனையை வெளியுலகிற்கு தந்த விதமும் உங்க பார்வையும் அவசியமானது... பிறர் அறிய வேண்டியதும்.

ஈரோடு கதிர் சொன்னது…

வேதனைதான்

க.பாலாசி சொன்னது…

இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கென்று விதிக்கப்பட்ட சாபக்கேடு இது... கொடுமைதான்...

Menaga Sathia சொன்னது…

mikavum kodumaiyana visayam...

vanathy சொன்னது…

நல்ல பதிவு. குடிப்பழக்கம் என்று சாதரணமாக சொல்லிவிட்டு போக முடியவில்லை. தனித்து இருக்கும்போது பெரும்பாலும் ஆண்கள் குடிக்கு அடிமையாகி விடுகிறார்கள். வேலையால் வீட்டிற்கு வந்தால் ஆண்களுக்கு பெரும்பாலும் ரிலாக்ஸ் செய்ய மூட் வந்துவிடுமாம். அதாவது வீட்டில் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் ஆண்களுக்கு. அப்படி இல்லாமல் வெளிநாடுகளில் தனித்து வசிப்பவர்கள் என்ன செய்வார்கள்? எவ்வளவு நேரம் டிவி பார்ப்பது, பிளேடு போடுவது. அதனால் தான் சில ஆண்கள் குடிக்கு அடிமையாகி விடுகிறார்கள். இப்படி நிறைய காரணங்கள் இருக்கு.

தேவன் மாயம் சொன்னது…

மிக சோகமான க்தையல்ல நிஜங்கள்! மிக்க வருத்தமடைகிறேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில்...
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆனந்தி...
உங்க கருத்துக்கு நன்றி...

//இங்க வெளிநாட்டில் இருக்கிறோம் என்று பெயர்... நமக்கு உடம்பிற்கு எதுவும் வந்தால் நாம் ஊரில் உள்ளவர்களிடம் சொல்வதில்லை.. அதே தான் அங்குள்ளவங்களும், நம்மிடம் எதயும் சொல்வது இல்லை.. காரணம்.. சொன்னால் வருத்தப் படுவாங்களேன்னு...//
இதுதான் உண்மை நிலை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் சார்...
திருமண வயதில் தங்கக்கிளியை தூக்கிக் கொடுத்தது மிகவும் கொடுமைதான் சார்.
கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா...
ஆம்... கஷடத்திற்காக வந்தவர்கள் மத்தியில் இது போன்ற ஆட்களும் உண்டு. கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்பிகா...
ஆம் உண்மையில் இவை வலி தரும் நிகழ்வுகள்தான். கருத்துக்கு நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அமுதா கிருஷ்ணன்...
முதல் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கருணாகரசு...
ஆம்... எல்லாம் வாங்கிக் கொடுத்து இளவரசியாய் வைத்திருந்தவர் காவிரியில் அஸ்தியை கரைத்துவிட்டு வந்திருக்கிறார். அவர் எங்களுக்கு சொல்லும் அட்வைஸ்.... நான் என் மகளுக்கு எல்லாம் வாங்கிக் கொடுத்து வைத்திருந்தேன். எதுவும் குறைவைக்காததால் எல்லாம் அனுபவிச்சுட்டாள் என்று கடவுள் நினைத்துவிட்டான் போல அதனால் உங்கள் குழந்தைகளுக்கு உடனுக்குடன் வாங்கிக் கொடுக்காதீர்கள் என்கிறார் கண்களில் நீருடன்.
கண்டிப்பாக நண்பரே... இந்தப் பதிவை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே பல நாள் மனப் போராட்டத்திற்குப் பின் பதிந்தேன். கண்டிப்பாக பிரபல பதிவாக்க அல்ல.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க goma...
ம்... எல்லாரையும் பாதித்த சம்பவங்களே இவை.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கதிர் அண்ணா....
வேதனை என்றால் சொல்லிமாளாது. கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலாசி...
ஆம் சாபக்கேடுதான் வேறு என்ன சொல்லமுடியும். கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகாக்கா...
ரொம்ப கொடுமையான விஷயம் இது. கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
கருத்துக்கு நன்றி.
நீங்கள் குடிப்பதை ஆதரிப்பதுபோல் தெரிகிறது. எதோ மன நிம்மதிக்கு குடிக்கலாம் தப்பில்லை... அதுவே வாழ்க்கையாவதுதான் தவறு. மேலும் இப்பொழுது நாகரீகம் முற்றிவிட்டது. மனைவி ஊற்றிக் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேவன் மாயம்...
உண்மதான்... இதில் துளியும் கற்பனையல்ல்... 100% உண்மை மட்டுமே.

vanathy சொன்னது…

சரியாப் போச்சு. நான் ஆதரிக்கவில்லை. அவர்களின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும் என்று சொன்னேன். சரிங்களா, குமார் அண்ணாச்சி???

க ரா சொன்னது…

கொடுமைதான் :(

Madumitha சொன்னது…

பணத்துக்காக இழப்பவைகளின்
பட்டியல் மிக நீளமானதுதான்.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் said...

வாங்க கருணாகரசு...
ஆம்... எல்லாம் வாங்கிக் கொடுத்து இளவரசியாய் வைத்திருந்தவர் காவிரியில் அஸ்தியை கரைத்துவிட்டு வந்திருக்கிறார். அவர் எங்களுக்கு சொல்லும் அட்வைஸ்.... நான் என் மகளுக்கு எல்லாம் வாங்கிக் கொடுத்து வைத்திருந்தேன். எதுவும் குறைவைக்காததால் எல்லாம் அனுபவிச்சுட்டாள் என்று கடவுள் நினைத்துவிட்டான் போல அதனால் உங்கள் குழந்தைகளுக்கு உடனுக்குடன் வாங்கிக் கொடுக்காதீர்கள் என்கிறார் கண்களில் நீருடன்.
கண்டிப்பாக நண்பரே... இந்தப் பதிவை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே பல நாள் மனப் போராட்டத்திற்குப் பின் பதிந்தேன். கண்டிப்பாக பிரபல பதிவாக்க அல்ல. //

உண்மைதான் குமார்.... அந்த வலி அவருக்குதான் தெரியும்.... அவருக்கு ஆறுதலா இருங்க....
இதை நினைவு படுத்த வேண்டாம்.

வானவர்கோன் சொன்னது…

பணம் காய்க்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வெளிச்சத்திற்கு வராத வலிகள் ஏராளம் தான், அருமை.

ஹேமா சொன்னது…

வெளிநாடு பணம் சம்பாதிக்க என்று வந்து எவ்வளவோ இழக்கிறோம்.
நீங்கள் சொன்ன அத்தனையும் கொடுமையான விஷயங்கள் குமார்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

மறுபடியும் வந்தமைக்கு நன்றி வானதி...
ஆதரவுக்குரலோ என்று நினைத்தேன். தவறாகிவிட்டது. உங்கள் கூற்று சரியே... இருந்தாலும் அதுதான் வாழ்க்கை என்று இருக்க வெளிநாட்டு வாழ்க்கை தேவையில்லையே... ஊரிலேயே எதாவது வேலை பார்த்துக் கொண்டு மாலை டாஸ்மார்க்கில் தஞ்சம் புகலாமே...?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கண்ணன்...
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மதுமிதா...
உண்மைதான் பணத்துக்காக இழக்கும் பட்டியல் நீளமானதும் திரும்பக் கிடைக்காததுமே ஆகும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கருணாகரசு அவர்களே....
உடனே கருத்திட்டமைக்கு நன்றி.
அவருக்கு தற்பொழுது நாங்கள்தான் ஆதரவாய் இருக்கிறோம். நாட்டில் அவரது மனைவி மகள் நினைவில் தவிக்கிறார். அவர் முடித்துக் கொண்டு சென்று மனைவிக்கு துணையாக இருக்கலாம் என்று நினைக்கிறார். அதுவும் சரியெனவே படுகிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா அக்கா,
உண்மைதான்... இழப்புக்களே அதிகம்.

சுசி சொன்னது…

மனசு கனத்துப் போச்சுங்க..

Priya சொன்னது…

மனதிற்கு மிகவும் வேதனையா இருக்கு;(

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசி...
உண்மைதான். மனசைக் கனக்கச் செய்யும் நிகழ்வுகள்தான் இவை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரியா...
கண்டிப்பாக எல்லோர் மனதை பாதித்த சம்பவங்கள்தான் இவை.

மனோ சாமிநாதன் சொன்னது…

இங்குள்ள வேதனைகளை விவரிக்கும் தெளிவான பதிவு! இன்னும் எழுதுங்கள் குமார்!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார்

நெஞ்சம் அழுகிறது - பணம் பணம் - இன்றையத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பணம் - சம்பாதிக்க அயலகங்கள் - குடும்பம் தாயகத்தில் - நிகழ்வுகள் நடைபெறும் போது வர இயலாத நிலை. என்ன செய்வது - காலத்தின் கோலம்

நல்ல கதை குமார்
நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா