பிக்பாஸில் போன வாரத்தில் தாமரையின் காயினை எடுத்த விதமே பேசுபொருளாக அமைந்தது. அதுவே வாரத்தை நகர்த்திக் கொண்டிருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தாமரை கோபமாகப் பேசினாலும் கிராமத்தாளாக வார்த்தைகளை விட்டாலும் மற்றவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து மீண்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சின்னப்பொண்ணு பாடிய நாட்டுப்புறப் பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் செம.
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
செவ்வாய், 2 நவம்பர், 2021
வியாழன், 28 அக்டோபர், 2021
பிக்பாஸ் - 5 : 7. நெருப்பாய் மாறிய 'காற்று' தாமரை
கமலின் வருகைக்குப் பின், அபிஷேக்கின் வெளியேற்றத்துக்குப் பின் வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் சுறுசுறுப்பு குறைவாக இருப்பதாகவே எல்லாரும் காட்டிக் கொண்டார்கள். இனி வரும் வாரங்கள் பஞ்ச பூதங்களைப் பிரதிபலிக்கும் விதமாக ஐந்து காயின்களையும் வைத்து நகர்த்தப்படும், வாரம் ஒரு காயினை வைத்திருப்பவர் நாட்டாமை ஆகலாம் என பிக்கி கொளுத்திப் போட்டு முதல் வாரத்தில் பிரச்சனைக்குரிய இசையின் நெருப்பை அடுப்படிக்குள் வைத்தார்.
திங்கள், 25 அக்டோபர், 2021
பிக்பாஸ் -5 : 6. ஆள நினைத்து வீணாப்போன அபிஷேக்
காயினை எடுக்கவும் அடிச்சிக்கவுமாத்தான் இருந்தானுங்க, பிக்கி கூப்பிட்டு காயினை யார் யார் வச்சிருக்கீங்களோ அவங்களே வச்சிக்கங்க, உங்களுக்கு இன்ன இன்ன சக்தி கிடைக்கும் அப்ப சக்திமான் மாதிரி ஆகிக்கங்க, ஆனாலும் சூனாபானாக்களாச் சூதனமாப் பொழச்சிக்கங்க, கருவாட்டுப் பானையை பத்திரப்படுத்தாட்டி நாய் தூக்கிட்டுப் போற மாதிரி எவனாச்சும் ஆட்டையைப் போட்டுட்டா அந்தச் சக்தியெல்லாமே அவனுக்குப் போயிரும், அம்புட்டுத்தான்னு சொல்லிட்டாரு.
வெள்ளி, 22 அக்டோபர், 2021
பிக்பாஸ் - 5 : 5. அசிங்கப்பட்ட அபி
வியாழன், 21 அக்டோபர், 2021
பிக்பாஸ் - 5 : 4. பிக்கப் ஆகாத பிக்பாஸ்
சென்ற வார இறுதியில் கமல் வந்தார், என்னத்தைப் பேச என நினைத்துக் கதைகளில் நீந்தி - நீச்சலின் ஊடே நானும் ஐந்து வயதில், எங்கண்ணன் என்னய வளர்த்த விதம் என்றவற்றைத் தவறாமல் சொல்லி- பேசிக் கொண்டே போனார். இடையிடையே ஆம்புலன்ஸ் அரசியல் பேசினார்.