மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 22 ஜூலை, 2020

யாவரும்.காமில் 'பனைமரம்'

தோ ஒரு விதத்தில் மனச்சோர்வு அதிகமாயிக்கும் வேளையில், வாழ்க்கை மீதான பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வரும் வேளையில் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதே நிலை முருகா எனக் கந்தனை அழைத்த போதும் மனம் ஏனோ மகிழ்வின்றியே நகர்ந்து கொண்டிருந்தது... கொண்டிருக்கிறது.

இதன் தாக்கமே எழுத நினைத்த கதைகளை எழுதாமலேயே விட்டு விட்டுப் பயணிக்க வைக்கிறது. தினமும் ஏதாவது எழுதலாமென நினைத்தாலும் மனசு வேதனைகளை மட்டுமே சுமப்பதால், எழுதும் எண்ணம் தோன்றுவதில்லை... புதிய கதைகளுக்கான திறப்பு ஏற்படுவதும் இல்லை... வலுக்கட்டாயமாக எழுத நினைத்து ஆரம்பித்தாலும் ஏனோ அக்கதைக்குள் மனம் லயிப்பதில்லை.

பெயரிடப்படாத நாவல் ஒன்றை எழுத ஆரம்பித்து, வேகமாய் வளரும் போது இச் சூழ்ச்சிக்குள் சிக்கி நின்றது. இப்படித்தான் முன்பெழுதிய கதைகள் சிக்கி நின்று திருப்பாமல் போனது என்பதால் இதை எழுதி முடிக்க வேண்டுமென வாரத்தில் மூன்று நாள் இரவில் ஒரு அத்தியாயம் என எழுதி முன்னூறு பக்கங்களைக் கடந்தாகிவிட்டது... இது விடாப்பிடியாய் எழுத ஆரம்பித்ததால் தொடர முடிந்தது. இன்னும் எழுதணும்... அதன்பின் எங்க பக்க வட்டார வழக்கு நன்கு அறிந்த ஒருவரிடம் கொடுத்துத் திருத்தி வாங்க வேண்டும்... இதுவரை நாவல் நன்றாகவே பயணிப்பதாய்த் தோன்றுகிறது.

நேற்றுக் காலை சகோதரர் பால்கரசு வந்திருந்தார்...அவருடன் ஒரு டீ, வடையுடன் கொஞ்ச நேரம் பேச முடிந்ததே ஆசுவாசம்தான்... வீட்டிலிருந்து வேலை... தொடர்ந்து கட்டிலில் அமர்ந்து வேலை பார்ப்பதென்பது காலக் கொடுமை... முதுகுவலி வந்ததுதான் மிச்சம்... இப்படியான நட்புக்கள் வரும்போது படிவழி இறங்கி ஓடி, கொஞ்ச நேரம் பேசி வருவதே மகிழ்ச்சி.

அவரிடம் பேசும் போது யாவரும் தளத்தில் பகிரும் கதைகள் குறித்துப் பேசினோம்... அப்போதெல்லாம் மாலையே நம் கதை அங்கு பகிரப்படும் என்பதெல்லாம் தெரியாது. சில நாட்கள் முன்னர் திரு.ஜீவகரிகாலன் அவர்கள், நான் தொடர்ந்து கதைகளை வாசித்துக் கருத்திடுவதால் (எனக்குப் பிடித்த கதைகளுக்கு மட்டும்) ஒரு வரலாற்றை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதையை வாசிக்காததால், எனக்கு முகநூல் அரட்டையில் இணைப்பு அனுப்பினார். அப்போதுதான் நானும் கதை அனுப்பியிருந்தேன்... அது உங்கள் தரத்துக்கு இருக்காது போல... தேர்வாகவில்லை என்று நினைக்கிறேன் என்று சொன்னேன்.

சொன்னதற்கு காரணம் இருக்கு... என் கதையைப் போடுங்கள் என்பதற்காக அல்ல, அது வேறொரு காரணம்... அங்கு பகிரப்படும் கதைகளின் தரம் வேறு மாதிரியானது. பெரிய எழுத்தாளர்களின் பவனி... வித்தியாசமான கதைக்களம்... என அது வேறு பக்கமாய் பயணிக்கும் இடம். முதலில் கொரோனா காலக் கதைகளுக்கும் ஒன்று அனுப்பினேன்... இப்பவும் ஒன்று அனுப்பினேன்... இரண்டுக்கும் வாய்ப்பில்லை என்னும் போது 'யாவரும்' தரத்துக்கான வட்டத்துக்குள் நம் கதை இல்லை என்பதால் சொன்னதுதான்... நான் எப்போதும் என் கதையைப் பகிருங்கள் என யாரிடமும் கேட்பதில்லை... கதை நல்லாயிருந்தா அது அதற்கான இடத்தை தானாகவே பெற்றுக் கொள்ளும் என்பதே என் எண்ணம். அப்படித்தான் என் கதைகள் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

நேற்று மாலை உங்க கதையைப் படித்தேன்... எப்படியோ எங்கோ எடுத்து வைத்துவிட்டேன் போல... எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது எனச் செய்தி அனுப்பி, உங்க படம் ஒன்று வேண்டும் என்றார்... சும்மா ஜகஜகன்னு எழுத்தாளர் லுக்குல இருக்கமாரி, எங்க சுபான் அண்ணா எடுத்த போட்டோவத் தேடி எடுத்து அனுப்பினா, என்னோட முகநூல் பக்கத்தில் இருந்து கருப்புவெள்ளை போட்டோ ஒன்றை எடுத்து இதைப் பயன்படுத்திக்கிறேன் எனச் செய்தி அனுப்பினார். அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்த படம்தான் பெரும்பாலும் அதைத்தான் எல்லா இடத்திலும் பயன்படுத்துவேன்.

கதையையும் பகிர்ந்து விட்டார்... யாவரும்.காம் தளத்தில்.... பனைமரம் என்பது அதன் பெயர்...கதையை வாசித்து அங்கு கருத்து இட்டீர்கள் என்றால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். செய்வீர்களா..? 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: நித்யா குமார், உரை


வாசிச்சிட்டு சொல்லுங்க பனைவோலையின் வாசம் எப்படின்னு... நன்றி.

-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதையில் : இந்த தண்டனை தேவை தான்...

காட்சிகள் கண்முன்னே தோன்றும்படி எழுத்து + உரையாடல்... பாராட்டுகள் குமார்...

பனை மரம் அழிவு - மனித குல அழிவிற்கான ஆரம்பம் - நம்மாழ்வார்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றிண்ணா...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதே நடக்கும். நம்பிக்கை கொள்வோம் குமார்.

உங்கள் கதை அத்தளத்தில் சென்று படிக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இணைப்பிற்குச் சென்று படிக்கிறேன் வாழ்த்துகள்
மனச்சோர்வு அதிகரிக்கும் காலம்தான் இது
ஆனால் இதுவும் கடந்து போகும்

Kasthuri Rengan சொன்னது…

வாழ்த்துகள்
நம்புவோம்
நல்லத நடக்கும்மென

koilpillai சொன்னது…

நண்பரே,

வாழ்த்துகள்.

உங்கள் ப்ரொபைலில் பிடித்த சினிமா - சலங்கை ஒளி என்றிருக்கிறது அது சலங்கை ஒலி என்றிருக்கவேண்டும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கதை மிக அருமையாக இருக்கிறது குமார். வாழ்த்துகள்!

துளசிதரன்

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லது நடக்கும் குமார், கண்டிப்பாக

துளசிதரன்

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

யாவரும் லும் போய் கருத்து போடுகிறேன் குமார்

கீதா

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

மிகவும் அருமை குமார் சகோ. வட்டார வழக்கு என் சொந்த ஊரையும் உறவுகளையும் நினைவுபடுத்துகிறது. பன ஓல வாசம் வந்துருச்சே உங்க கதையப் படிச்சி!
பனைகள் தொலைந்தது வேதனை தான்..ஆமாம், நமக்கென்ன தெரியும்,,தொலச்சுட்டு நிக்குறோம்.
நீங்க முகநூலில் பகிர்ந்த அன்றே வாசித்தேன், கருத்திட முடியவில்லை. ஆனால் என்னைவிட்டகலாமல் கதை மீண்டும் அழைத்து வந்தது. வாழ்த்துகள் சகோ.