மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 5 ஏப்ரல், 201712. என்னைப் பற்றி நான் - தேனம்மை லெக்ஷ்மணன்

ந்த வாரம் 'என்னைப் பற்றி நான்' பகுதியில் தன்னைப் பற்றிச் சொல்கிறார்... தேனம்மை லெக்ஷ்மணன்... வலையுலகில் பலருக்கு தேனு... என்னைப் போன்றவர்களுக்கு தேனக்கா.

பிரபல பத்திரிக்கை எழுத்தாளர்... பல புத்தகங்கள் எழுதியவர்... என்பதை எல்லாரும் அறிவோம் என்பதால் இவரைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. வலையுலகில் பிரபலம் இவர்.

இவர் தனது 'சும்மா' வலைப்பக்கத்தில் சாட்டர்டே ஜாலி கார்னர் என்று ஒரு பதிவு வெளியிட்டு வருகிறார். வலையுலக நட்புக்களிடம் ஏதாவது ஒன்று குறித்துக் கேட்டு அதை சனிக்கிழமை தோறும் வெளியிட்டு வருகிறார். அந்த ஜாலி கார்னரில் அடியேனும் 2014-ல் எழுதியிருக்கிறேன். அப்போது அக்கா கேட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே எழுதிக் கொடுத்தேன். ஊருக்கு பயணப்பட இருந்த நேரத்தில் கேட்டார்... எப்படி எழுதுவது... இரண்டு முறை ஞாபகப்படுத்த மின்னஞ்சல் விட்டதும் ஊரில் இருந்து எழுதி அனுப்பிக் கொடுத்தேன். நான் கேட்டதும் அதை எல்லாம் மனதில் வைக்காது நேரமில்லை தம்பி முடியும் போது எழுதித் தர்றேன் என்றார்... எழுதிக் கொடுத்துவிட்டார்.

பல சிறுகதைகள், கவிதைகளுக்கு பரிசுகளை வென்றவர்... நிறைய எழுதக் கூடியவர். தேனக்காவிடம் பிடித்த ஒன்று வலையுலக நட்புக்களுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிகள் குறித்த விபரங்களை பதிவாக எழுதி தெரிவிப்பதுதான்... நான் வலையில் அடி எடுத்து வைத்தது முதல் என் பதிவின் வாசகி... என்ன கருத்துத்தான் எழுதமாட்டார்...

மற்றபடி இவரைப் பற்றி எல்லாரும் அறிந்திருப்பீர்கள்... அக்காவுக்கு நம்ம மீது ஊர்ப்பாசம் கொஞ்சம் அதிகம்... எங்க ஊர் ஆச்சியில்ல... பாசம் கூடுதலாக இருக்கத்தானே செய்யும்.

நான் காரைக்குடிக்காரியாக்கும் என்று அடிக்கடி கம்பன் விழா, கண்ணதாசன் விழா என பதிவுகள் எழுதி நிரூபித்துவிடுவார்.

அப்படியே ஒரு விளம்பரம் அக்காவின் தளத்தில் எனது 'சாட்டர்டே ஜாலி கார்னர்' வாசிக்க இங்கு சொடுக்குங்க...

இனி அவரைப் பற்றி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம் வாருங்கள்....


முதலில் என்னைப் பற்றி நான் எழுத அழைத்த சகோ குமாருக்கு நன்றி. ஏன்னா சமீபகாலமாகத்தான் என்னைப் பற்றி நான் அதிகமா சிந்திச்சிக்கிட்டு இருக்கேன். என்ன செய்திருக்கேன். செய்ததெல்லாம் உருப்படியா செய்திருக்கேனா, இன்னும் என்ன என்ன செய்யணும்னு எல்லாம். தொடர்ந்து வலை உலகில் செயல்பட்டுவரும் ( கிட்டத்தட்ட 100 பேர் இருப்போம் ) வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் விதமா இந்தப் பதிவு அமைந்திருப்பதுக்கு முதலில் பாராட்டுகள் குமார் சகோ. குமார் சகோவின் சிறுகதைகள் மிக அருமையா இருக்கும் அதுக்கும் பாராட்டுகள் சகோ.

நான் இல்லத்தரசி. 2009 ஜூலை 13 ஆம் தேதியில் இருந்து சும்மா என்ற வலைப்பூவில் எழுதிட்டு வரேன். இதுக்குப் பேர் வைக்கும்போது என் மூத்த பிள்ளை சொன்னது மறக்க முடியாது. சும்மா வெட்டியாத்தானே வீட்டுல இருக்கீங்க அதுனால சும்மான்னு வைப்போம்னு. நானும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினேன். ப்லாகில் எழுதினால் போதும்னு J

அப்புறம் கோலங்கள், சமையல் குறிப்புகள், டைரிக் கிறுக்கல்கள்னு இன்னும் 4 ப்லாகுல எழுதிட்டு இருக்கேன். CHUMMA அப்பிடின்னு ஆரம்பிச்சது இப்போ ஆங்கில சமையல் ப்லாகா பாதில நிக்குது. சும்மாவைத் தொடர ஊக்கம் கொடுத்த வலைத்தள நட்புகள் லிஸ்ட் பெரிசு. இராகவன் நைஜீரியா, விஜய், நேசன், பாரா, சங்கர்ஜி, ஐ எஸ் ஆர் செல்வகுமார், சுரேஷ் சூர்யா, டிடி, முனியப்பன் சார், சீனா சார், விஜிகே சார், தமிழ் உதயம், ஆர் ஆர் ஆர், ராமலெக்ஷ்மி, சாந்தி, துளசி, வல்லிம்மா, ரமணி சார், வெற்றிவேல் சார், மேனகா, ஆனந்தி, ஹேமா, கலையரசி, சரஸ்மா, யாழ்பாவண்ணன் சகோ , பகவான் ஜி, கில்லர் ஜி, குமார் சகோ, வெங்கட் சகோ, ஜெயக்குமார் சகோ, பாலா சார், ஸ்ரீராம், கீதா மேம், விஸ்வநாத், ஜம்பு சார், துளசி சகோ, கீதா, கீத்ஸ், செந்தில் சகோ, நவாஸ் சகோ, அக்பர் சகோ, ஜமால் சகோ, ப்ரகாஷ் சகோ, இளங்கோ சார், நாகேந்திர பாரதி சகோ, சுரேஷ் சகோ, இன்னும் பலருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்

அப்புறம் நண்பர் ஐ எஸ் ஆர் செல்வகுமார் கொடுத்த ஊக்கத்தால் பத்ரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிச்சேன். பத்ரிக்கைகளுக்குக் கவிதை கதை கட்டுரை மட்டுமில்ல சமையல் குறிப்புகளும் கோலங்களும் எழுதி இருக்கேன். நிறையப் பிரபலங்களை நேர்காணல் & பேட்டி எடுத்திருக்கேன். மருத்துவ விழிப்புணர்வு பற்றிய பேட்டிகளும் எடுத்திருக்கேன். ப்லாகர் என்று போட்டே பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்புப் பேச்சாளரா அழைக்கப்பட்டிருக்கேன் என்பதே சந்தோஷம். தேனு, தேனம்மைலெக்ஷ்மணன், ஆண்டாள், தேனாஞ்சி, சபா வெங்கட், கோதை என்ற பெயர்களில் எல்லாம் எனது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன.

ஒரு மூணு ஆசையை வீட்டுல சொல்லி இருக்கேன். அது குறித்து இங்கேயும் பிரஸ்தாபிக்கிறேன். ஜெயாம்மா கையால விருது வாங்கணும்னு நினைச்சேன். அப்புறம் சங்கர் டைரக்‌ஷனில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஒரு சினிமா பாடல் எழுதி அது உலகப் புகழ் பெறணும்னு. மூணாவதா சாகித்ய அகாடமி விருது வாங்கணும்னு. ஹாஹா முதல் ஆசை கோவிந்தா கோவிந்தா. அம்மா இலக்கிய விருதைக் கூட வாங்க முடியுமா தெரில. அடுத்து சங்கர் இப்ப படம் எடுக்கிறாரா என்னன்னே தெரில. மூணாவதா இப்பிடி என்னோட சொந்த ப்லாக் மொக்கைகளிலேயே தினம் தினம் குளிச்சு எந்திரிச்சுப் பொழுதைக் கழிக்கும்போது ஆழ்ந்த ஒரு பொருளைப் பற்றி நாவல் எழுதி அது சாகித்ய அகாடமி விருது வாங்கிஹ்ம்ம். இருந்தாலும் நான் நம்பிக்கையைக் கைவிடலை. எப்பவாவது இது மூணும் நிகழக் கூடிய சாத்யக்கூறு இருக்கு. அதுக்குத் தகுந்த சூழலை நான் உருவாக்கிக்கலை, என்னை மேம்படுத்திக்கலைன்னே சொல்வேன். சரி முயற்சிதானே வாழ்க்கை. மெல்ல முயல்வோம்.

எதிர்காலத் திட்டம்னா தொடர்ந்து ப்லாக் எழுதணும். இன்னும் மேம்படுத்தப்பட்ட படைப்புகளோட எல்லாரையும் சந்திக்கணும். இன்னும் பல நாடுகள் பல உணவுகள் பற்றி எழுதணும். ப்லாக் எழுத்தின் மூலமே பெருந்தலைகளை அசைக்கும் வல்லமை பெறணும். அவ்ளோதான். 

என்னைப் பற்றி நான் எழுதி என் மனோ வியாகுலங்களையும் மனோ ராஜ்ஜியங்களையும் வெளிப்படுத்த இடம் கொடுத்த சகோ பரிவை சே குமார் அவர்களுக்கு நன்றியும் அன்பும்.

நன்றி...

நட்புடன்,
தேனம்மை லெக்ஷ்மணன்.

ன்னைப் பற்றி நான் தொடர் வாராவாரம் மெருகேறிக் கொண்டே செல்வதற்கு நீங்கள்தான் காரணம் என்பதை வாராவாரம் சொல்ல வேண்டும் என்பதில்லை என்ற போதிலும் இத்தொடர் தொடர்ந்து பனிரெண்டு வாரங்கள் போகும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்ட பத்துப்பேரில் பலர் தராத நிலையில் அடுத்தடுத்து கேட்கக் கேட்க மற்றவர்கள் கொடுத்து உதவ, இதுவரை பதிவு நிறுத்தப்படாமல் சென்று கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சி அனைத்தும் இதுவரை எழுதிக் கொடுத்த, இனி எழுதிக் கொடுக்க இருக்கிற, வாசித்து கருத்துக்களை வாரிக் கொடுத்த அனைத்து உறவுகளையுமே சாரும்... அனைவருக்கும் நன்றி.

இன்னும் மூன்று வாரத்துக்கான பதிவு கைவசம் இருக்கிறது. பதிவு என் கைக்கு வந்ததும் எத்தனாவது பதிவு என எண் மற்றும் பெயரோடு சேமித்து வைப்பதால் யார் அனுப்பினாலும் இத்தனாம் தேதி தங்கள் பதிவு வரும் என்று மின்னஞ்சல் அனுப்பிவிடுவேன். அதன்படி செல்வா அண்ணன் பதிவு தவிர மற்ற பதிவுகள் பதியப்பட்டு வந்திருக்கின்றன. இனியும் இந்த நடைமுறை தொடரும்.

ஊருக்குப் போனாலும் 'என்னைப் பற்றி நான்' பதிவுகள் மட்டும் தொடர்ந்து வரும்.

நன்றி.

-அடுத்த வாரம் மற்றொரு வலைப்பதிவர் தொடர்வார். 
-'பரிவை' சே.குமார்.

33 கருத்துகள்:

 1. அவ்வப்போது இவர்களின் பதிவுகளை படிட்து இருக்கிறேன் இவரின் மூன்று ஆசைகளில் கடைசி இரண்டு ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அஹா நன்றி அவர்கள் உண்மைகள் :)

  பதிலளிநீக்கு
 3. அருமையான எதிர்பார்ப்புகள், அவரது விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துகள். எழுத்தில் நம்பிக்கை வைத்தால் வெற்றி!

  பதிலளிநீக்கு
 4. தேனம்மையின் சாதனைகள் எவ்வளவு!
  அடக்கமாய் தன்னைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
  தினம் ஒரு பதிவு வருகிறது, கதை, கட்டுரை, பத்திரிக்கைகள் என்று அவர் எழுதி வருவது வியக்க வைக்கும்.
  வாழ்த்துக்கள் தேனம்மைக்கு.
  அவர் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம். நான் ஸ்ரீநாத். எழுத்தாளன். ஜெமினி சினிமா ஸ்ரீநாத் என்று அழைப்பர். வயது 68. தற்சமயம் பாக்யராஜ் சாரின் பாக்யா பத்திக்கையில் இருக்கிறேன்.நம் வலைப்பூ நண்பர்களுக்கு உதவி செய்ய கடமைபட்டிருக்கிறேன். அன்புடன் ஸ்ரீநாத்.srrinath@ yahoo.com.

   நீக்கு
  2. வணக்கம். நான் ஸ்ரீநாத். எழுத்தாளன். ஜெமினி சினிமா ஸ்ரீநாத் என்று அழைப்பர். வயது 68. தற்சமயம் பாக்யராஜ் சாரின் பாக்யா பத்திக்கையில் இருக்கிறேன்.நம் வலைப்பூ நண்பர்களுக்கு உதவி செய்ய கடமைபட்டிருக்கிறேன். அன்புடன் ஸ்ரீநாத்.srrinath@ yahoo.com.

   நீக்கு
  3. அஹா மிக்க நன்றி கோமதி மேம் !

   நீக்கு
  4. மிக்க நன்றி ஸ்ரீநாத் சார்

   நீக்கு
 5. நம் செட்டிநாட்டு சகோவுக்கு முதலில் வாழ்த்துகள் நானும் பலமுறை தளங்களுக்கு செல்வதுண்டு நல்லதொரு எழுத்து நடைக்கு சொந்தக்காரர்.

  தங்களது இரண்டு ஆசைகளும் நிறைவேற இறையருள் கிட்டட்டும் முதல் ஆசை நான் இஷ்டப்படவில்லை காரணம் தாங்கள் குறிப்பிட்டவரை விட தாங்கள் உயர்ந்தவர் என்பது எனது ஆணித்தரமான கருத்து.

  ஆனால் உங்கள் கருத்துகள், ஆசைகள் உங்களுக்கு சொந்தமானது எனது கருத்தை எப்பொழுதும் வெளிப்படையாக உண்மையை எழுதுபவன் நான்.

  குறிப்பு - நான் எந்தக்கட்சி தொண்டனும் அல்ல... இனியும்.
  மீண்டும் வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
 6. ஹை ..தேனக்காவா இன்னிக்கு வாழ்த்துக்கள் .உங்க ஆசைகள் நிறைவேறட்டும் சங்கர் படத்தில் arr இசையில் சூப்பர் ஸ்டார் நடிக்கப்போகும் படம் ஒன்னு 2020 இல் வரபோதாம் அதுக்கு நீங்க தான் பாட்டு :)எழுதப்போறீங்கன்னு பட்சி சொல்லுது :))

  பதிலளிநீக்கு
 7. நானும் சாட்டர்டே ஜாலி கார்னரில் அக்காவால் வெளிக்காட்டப்பட்டேன் :)

  பதிலளிநீக்கு
 8. தேனக்கா என்றால் புன்னகை பூக்கள் தூவி சுற்று வட்டாரமே கலகலப்பா இருக்கும்

  பதிலளிநீக்கு
 9. அக்கா பிளாக்ல எப்பவும் பின்னூட்டத்தில் //வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!// எனும் வாசகம் தவராது இடம்பெறும் ..எனக்கு ரொம்ப பிடிக்கும்..

  பதிலளிநீக்கு
 10. அட இந்த வாரம் தேனம்மை சகோவா..... பாராட்டுகளும் வாழ்த்துகளும்... அவர் ஆசை நிறைவேறட்டும்.

  என்னையும் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 11. சகோதரியின் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. தேனம்மை லட்சுமணன் அவர்களுடைய எழுத்துக்களை வாசித்து வருகிறேன். அவரைப் பற்றி அவரே கூறும்போது மேலும் சில கூடுதல் செய்திகளை அறிந்தேன். அவரது இலக்கில் நிறைவேற பாராட்டுகள். ஊக்குவிப்போர் பட்டியலில் என் பெயரையும் கண்டேன். அவரவர் எழுத்தின் வெற்றியே இந்த ஊக்குவிப்பு. பாராட்டுகள். பகிர்ந்த குமார் அவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அன்றே சகோ/தேனு பற்றி வாசித்து கருத்திட முடியாமல் போய்விட்டது நெட் பிரச்சனையால். பின்னர் பல பதிவுகள் பார்த்து நெட் பிரச்சனைக்கிடையில் கருத்திட முடியாமல் போய்விட்டது. வருந்துகிறோம் சகோ!! முதலில் எங்கள் மனமார்ந்த நன்றிகள் தன்னை ஊக்குவிப்போர் பட்டியலில் எங்களையும் இணைத்துக் கொண்டது நாங்கள் எதிர்பாராத ஒன்று. பெரிய எழுத்தாளர். எழுத்துலகில் பிரகாசிப்பவர். எங்களையும் குறிப்பிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி! சகோ மிக்க மிக்க நன்றி.

  அவர்களது தளத்தை தொடர்கிறோம். சாட்டர்டே கார்னரில் எங்களில் ஒருவரான துளசியையும் அறிமுகப்படுத்தினார். நன்றி நன்றி! சிலவற்றிற்கு கருத்து இடுகிறோம் சிலது மிஸ் ஆகி விடுகிறது. அவர் எழுத்தை ரசிப்பவர்களும் கூட. அவரைப் பற்றி அவரது தளம் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தாலும் இங்கு கூடுதலாக அறிந்து கொண்டது அவரது 3 இலட்சியங்கள்!!! ஒரு குடும்பத் தலைவி குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எழுத்துலகிலும் பிரகாசிக்க முடியும் என்பதற்கு சான்று. அவரது புன்னகையே அவருக்குப் பலம்! மிகவும் பாசிட்டிவ். அவரது தளத்தில் எப்போதும் குறிப்பிடும் வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் என்று குறிப்பிடுவது நாங்கள் ரசிப்பது!! சகோ/தேனு உங்களின் இலட்சியங்கள் நிறைவேறிட எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!! நிச்சயம் நிறைவேறும்!! வலையுலகமே இருக்குல்ல உங்களுக்கு!! வாழ்த்துகள். குமார் உங்களுக்கும் நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத்ஸ் சாட்டர்டே போஸ்டுக்கு நீங்களும் அனுப்பி வைக்கவும். ப்ளீஸ் :)

   நீக்கு
 14. அக்காவின் பகிர்வுக்கு கருத்துச் சொன்ன அனைவருக்கும் அக்காவின் சார்பாக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சிறப்பான அறிமுகத்துக்கும் பதிவிட்டு என்னை வெளிப்படுத்த உதவியமைக்கும் அன்பும் நன்றியும் குமார் சகோ :)

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...