மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 3 ஏப்ரல், 2017

நாம் ஒன்று சொல்வோம்

நேற்றைய பதிவு முக்கனிச் சுவையாய் மூவரின் பிறந்தநாள் குறித்தான பகிர்வு... இன்றைய பகிர்வு மலைத்தேனாய் ஒரு கவிஞரின் பிறந்தநாள் பகிர்வு...

வாழ்க்கையின் எதார்த்தங்களை வரிகளாக்குவதில் வல்லவர் இவர்... இவரின் கவிதைகள் வாழ்வியலின் மெல்லிய துக்கமும் துயரமும் பேசும்... எழுத்தில் அடித்து ஆடும் இவர் மேடைப் பேச்சில் சிறு குழந்தைதான் என்பதை தனது தளத்தில்... தான் ஒரு முறை கவிதை வாசிக்க ஏறிய கதையைச் சொன்ன போது சொல்லியிருந்தார். கவிதை வரிகளின் வீச்சை வார்த்தை வீச்சாய் அள்ளித் தெளிக்கவில்லை என்றாலும் சோடை போகாத வாசிப்புத்தானே அது... அதென்ன வாசிக்கப் பயமென்ற ஒரு சொல் என பலர் கேட்க, இப்போது வரிகளை சில மேடைகளில் வார்த்தையாய் வீசுவதாய் கேள்வி.

அப்பத்தாவும் தெருவோர கடைகளும் இவரின் கவிதைகளில் வரியாய் வாழ்வார்கள். இவரின் கவிதைகள் கிராமத்து வாழ்க்கை மட்டுமே பேசும் என்று நினைத்தால் அது அபத்தம்... பல கவிதைகள் அரசியல் பேசும்... மக்கள் பிரச்சினைகளில் கேள்விகள் கேட்கும்... கவிதையின் பாடு பொருள் எதுவாக இருந்தாலும் அதன் கரு உருப்பெற்று கவனம் ஈர்க்கும்.

முண்டாசு கட்டாத கவிஞனாய்... மீசை முறுக்கிய பாரதியாய்... பாரதிதாசனாய்... பட்டுக்கோட்டையாய் வாழும் கவி... நம் புதுக்கோட்டை கண்டெடுத்த கவிஞர் அவர்... இப்போது பலருக்கு இந்தக் கவிஞர் யாரென்று தெரிந்திருக்கும் இல்லையா...?

இவர் பட்ட கஷ்டங்கள்... தன் காதலி மனைவியானதும் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றம் என எல்லாமே நம் 'என்னைப் பற்றி நான்' பகுதியில் சொல்லிவிட்டார். தனது அன்பு மகள் சக்திக்கு இவர் எழுதும் கடிதங்கள் வலையுலகில் பிரபலம். எதை எடுத்து எழத வேண்டுமோ அதை கருப்பொருளாக்கி கேள்விக் கணைகள் தொடுத்து மிகச் சிறப்பாக எழுதுவார்.

ஊருக்கு வரும்போது நாம் சந்திக்க வேண்டும் என இவரும், தனபாலன் அண்ணாவும் சொல்லிக் கொண்டே இருக்க, ஒரு மாத விடுமுறையில் ஊருக்குப் போறவன் பக்கத்தில் இருக்கும் புதுக்கோட்டை செல்ல முடியாமல் திரும்பி விடுவதில் முடிந்து விடுகிறது. இடையில் ஒரு முறை போனில் பேசினேன்... குடும்ப பாரத்தை சுமந்த, எங்க மூத்த அண்ணனைப் போல பேச்சில் ஒரு வாஞ்சை... பாசம்... இந்த முறை நீங்க இங்க வாறீங்க... நாம சந்திக்கிறோம் என்ற அன்புக்கட்டளை இட்டிருக்கிறார். தனபாலன் அண்ணனும் கூட சமீபத்தில் பேசும் போது இந்த முறை சந்தித்தே ஆகவேண்டும் என்றார். கண்டிப்பாக இந்த முறை புதுக்கோட்டை பயணம் உண்டு.

வலைப்பதிவர் அதிகமிருக்கும் இடம் புதுக்கோட்டை என்பதை நாம் அறிவோம். அவர்களுக்குள் ஒரு வட்டம் அமைத்து மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். அந்த வட்டத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து அன்போடு உறவுகொள்ளும் கவிஞர் இவர். இதுவரை எனது எல்லாப் பதிவுகளுக்கும் கருத்து இட்டு வருகிறார். நான் அவர் தளம் வருகிறேனா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை... இப்போ சில நாட்களாக நான் அதிகம் அவரின் தளம் பக்கம்... அவரின் தளம் என்றில்லை.... பல தளங்களுக்குச் செல்லவில்லை என்பதே உண்மை. இருப்பினும் வலையிலும் முகநூலிலும் கருத்துக் கொடுக்க அவர் மறப்பதில்லை.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க... சமீபத்தில் மின்னூலாக வெளிவந்த அவரின் சின்னவள் கவிதைத் தொகுப்பு மிகச் சிறப்பாக இருப்பதாக பலர் எழுதியிருக்கிறார். நான் இன்னும் வாசிக்கவில்லை... புதுக்கோட்டை வீதி இலக்கிய வட்டத்தில் இந்த முறை அவரின் சின்னவள் குறித்தான பார்வையும், அதற்காக அவர் வழங்கிய ஏற்புரையும் சிறப்பாக அமைந்ததாக தென்றல் கீதா அக்கா எழுதியிருந்தாங்க.

அவரின் மகள்கள் இருவரும் வலைப்பதிவர்கள்தான்... இருவரும் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். 

கஷ்டப்பட்ட வாழ்க்கையை இஷ்டப்பட்டு வாழ்ந்து இன்று மிகச் சிறப்பான இடத்திற்கு உயர்ந்திருக்கும்... கவிஞராய்,.. கட்டுரையாளனாய்... மிகச் சிறந்த எழுத்தாளனாய் பரிணமிக்கும் அன்பின் அண்ணன்... வாழும் வரிகளை கவியாக்கும் மிகச் சிறந்த எழுத்தாளன்... எழுத்தின் ஆளுமைகளில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கும் 'நான் ஒன்று சொல்வேன்' மீரா செல்வக்குமார் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




கவிஞரை நீங்களும் வாழ்த்துங்க....

அவரின் கவிதை வரியில் கொஞ்சம் கீழே...

"சின்னவள்தேர்வெழுதப்போகிறாள்...
சட்டெனவிரையும் காலம்
சின்னவளைதேர்வெழுதச் சொல்கிறது..
அவள்தேவதை குணம்நிறைந்தவள்..
தேவபாஷைஅவள் மொழி..
கள்ளமில்லாஅவள்
சின்னப்புன்னகையால்
யாவும் வெல்லும்சாகசக்காரி..."

கவிதை முழுவதையும் வாசிக்க இங்கே சொடுக்குங்க...

நன்றி.

புதன் கிழமை தவிர்த்து நேரம் இருப்பின்... உறவுகளின் பிறந்தநாள் தெரிய வந்தால் கண்டிப்பாக எனக்கு அறிந்த வரையில் இங்கு எழுதி வாழ்த்து தெரிவிக்கப்படும்.

-'பரிவை' சே.குமார்.

19 எண்ணங்கள்:

மீரா செல்வக்குமார் சொன்னது…

குமார்...
என் மனமார்ந்த நன்றி..

சந்திப்போம்

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

வணக்கம் நண்பரே! நலமா? சின்னவளைப் படிக்காமலே இவ்வளவு அருமையாக எழுதும் நீங்கள், படித்தபின் இன்னும் இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள் என்பதும் உண்மை! கவிஞருக்கு இன்று (04-04) பிறந்தநாள் வாழ்த்துவோம் வாருங்கள்! (அடுத்த கவிதைத் தொகுப்பும் பிறக்கிறது இன்றே... விவரம் அவரே சொல்வார்!)

துரை செல்வராஜூ சொன்னது…

கவிதை - அன்பின் நிதர்சனம்..

மகிழ்ச்சி..

Avargal Unmaigal சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான மதிப்பீடு. அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

நிஷா சொன்னது…

பிறந்தநாள் நல் வாழ்த்துகள் செல்வகுமார் சார்.

கோமதி அரசு சொன்னது…

வாழ்த்துக்கள் மீரா செல்வகுமார், வாழ்க வளமுடன்.
என் சின்ன மாமனார் பெண் தங்கம் வள்ளிநாயகம் முகநூலில் விமர்சனம் செய்து இருந்தார்கள் அருமையாக. அதற்கு முன் வெங்கட்நாகராஜ் பதிவில் சின்னவள் கவிதைகள் படித்தேன் அருமை.
பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

ஸ்ரீராம். சொன்னது…

கவிஞர் மீரா செல்வக்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

G.M Balasubramaniam சொன்னது…

மீரா செல்வகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Kasthuri Rengan சொன்னது…

கவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
அறிமுகத்திற்கு நன்றி

KILLERGEE Devakottai சொன்னது…

எமது வாழ்த்துகளும்

Angel சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ

கீதமஞ்சரி சொன்னது…

சின்னவளைப் பெற்றவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் செல்வா.....

நேற்று வெளியிட்டிருக்கும் கவிதைத் தொகுப்பிற்கும்....

Thiratti சொன்னது…

Dear sir., try this new tamil website www.thiratti.in

Yarlpavanan சொன்னது…

நண்பருக்கு வாழ்த்துகள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! இதையும் மிஸ் செய்திருக்கிறோம்...செல்வா மிக மிக வருந்துகிறோம்...தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்!! தங்கள் கவிதைத் தொகுப்பிற்கும் சேர்த்து!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்...
வாழ்த்துச் சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி.