மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 6 ஆகஸ்ட், 2016மனசின் பக்கம் : மனதோடு பேசும் மாயநதி..!

சிறுகதை எழுத ஆரம்பிக்கும் போது இப்படி முடிக்கலாம் என்ற எண்ணம் வந்து அமர்ந்து கொள்ள, கதையின் போக்கோடு பயணித்து முடித்து நிமிரும்போது அது வேறு எப்படியோ முடிந்திருக்கும்... அப்படி முடிந்த கதைகளில் பல மனசுக்கு ரொம்பப் பிடித்த கதைகளாகிவிடும். நேற்று ஒரு கதை எழுதலாம் என அமர்ந்தபோது நாயை பற்றி கதையாக ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் கதை நகர, ஆரம்பித்த இடத்தில் கொஞ்சம் பிடிப்பில்லாமல் தெரிய, ஆரம்பத்தை அமெரிக்காவுக்கு கொண்டு போய்  அங்கிருந்து உறவுகளோடு பகட்டுக்காக வளர்க்கும் நாயில் நிறுத்தி நினைவை அப்படியே நம்ம சிவகங்கை மண்ணுக்கு கொண்டு வந்து நம்ம வீட்டு நாட்டுநாயோடு நகர்த்த, கதை உண்மையிலேயே 'செம'யாகிப் போச்சு... மனசுக்கும் பிடிச்சிப் போச்சு. என் நண்பன் சொல்வான்... உன் கதைகளில் வரலாறுகள் பேசணும்ன்னு நாமளே ஒழுங்காப் பேசமாட்டோம்... அப்புறம் எப்படி வரலாறுகள் பேசும்.. அதெல்லாம் சரி வாராது மண்வாசனைக்குள் வரலாறை எப்படி கையாளுவது என்று சொல்லிச் சிரிப்பேன்... இருப்பினும் அது போன்ற முயற்சியில் இறங்க வேண்டும் என்று ஆவல்... ஆவலாகவே இருக்கிறது... முயற்சி செய்ய வேண்டும். தொடர்கதை வேறு பாதியில் தொக்கி நிற்கிறது.  தொடரலாமா... வேண்டாமா... என்ற மனநிலையில் தொக்கி நிற்கிறது மனசு.

ண்பர் ஒருவர் என்ன மலையாளப் படத்துக்கு மட்டும் விமர்சனம் எழுதுறே... கபாலிக்கு எதிர்பார்த்தேன் அப்படின்னு சொன்னார். அட ஏம்ப்பா நாம மனசுல உள்ளதை எழுதி, அது பல பேருக்கு வருத்தத்தைக் கொடுக்கலாம். அது போக நமக்கும் ரஜினிக்கும்.... சரி விடு... கபாலிக்கு எழுதும் எண்ணம் இல்லை... மலையாளப் படம்ன்னு வச்சிக்கவே... நமக்கு கதை பிடிச்சிப் போயி அதனால எழுதுறோம்... இன்னும் மூணு படத்தோட விமர்சனம் ரெடியா இருக்கு... நாம எழுதுறதை வாசிச்சிட்டு சண்டைக்கு வர மலையாளிங்க யாரும் இதை படிக்கப் போறதில்லை.... சோ... நாம பாதுகாப்பா இருக்கோம்ல்ல என்று சிரித்ததும் கபாலி பற்றி பலவிதமான கருத்துக்கள்... உன்னோட மனசுல என்ன தோணுது சொல்லுன்னு சொன்னார். எதுக்குப்பா வம்பு... சும்மாவே முகநூல்ல ரஜினி ரசிகர்களான நம் நண்பர்கள் பலர், கபாலி பற்றி போட்டதைப் பார்த்துட்டு இப்ப நம்ம பக்கமே காணோம்... விழுந்த ஒண்ணு ரெண்டு லைக்கும் போயே போச்சு... இங்கயும் எதாச்சும் சொல்லி... வர்ற ஒண்ணு ரெண்டு கமெண்ட்ஸூம் போயிந்தே ஆயிடுச்சின்னா... அப்புறம் நான் வெறுங்கடையிலதான் டீ ஆத்தணும்... இப்பவே அப்படித்தான் ஆத்திக்கிட்டு இருங்கேங்கிறது வேற விஷயம் என்றாலும் நம்மள படிக்கிற பத்து பேரும் பொயிட்டா... ஆளை விடு சாமியின்னு சொல்லி ஜகா வாங்கிட்டேன்... நாங்க யாரு.. செட்டிநாட்டுக்காரனுக்கிட்டயே போட்டு வாங்குறாராம்... எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு...


ருப்படி இல்லாத ஒரு பட்ஜெட்... அம்மா புகழ் பாடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்ட கேவலமான ஒரு நிதியமைச்சர்... சொன்னதை எல்லாம் இந்த இரண்டு மாதத்தில் நிறைவேற்றி வருகிறோம் என காதில் பூச்சுற்றல்... உருப்படியான எதுவுமே செய்யாமல் நகரும் உதவாக்கரை அரசின் மோசமான பட்ஜெட்... கண்டுகொள்ளாத மீடியாக்களும் மக்களும்...இருபத்தி ஒன்பது வீரர்களுடன் பயணித்த இராணுவ விமானம் என்னாச்சு... வீரர்கள் நிலை என்ன... முக்கியத்துவம் கொடுக்காத மீடியாக்களும் மக்களும்... அட அம்புட்டு ஏன் கிரிக்கெட் கிரிக்கெட்டுன்னு பைத்தியமாய் திரிந்தாலும் அது குறித்தும் எதுவும் பேசாத மீடியாக்களும் மக்களும்.. இவை அனைத்துக்கும் ஒரே காரணம் கபாலி. ரஜினி என்றாலே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது இல்லையா..? ஆனாலும் முக்கிய நிகழ்வுகளை விட...கிரிக்கெட் முக்கிய நிகழ்வான்னு கேட்கலாம்...  அதுவும் இப்ப தேசிய விளையாட்டு போலத்தானே... அப்ப முக்கியம்தானே... சரி அதை விடுங்க... மற்றது முக்கியமில்லையா...? நம்ம தலையில மிளகாய் அரைக்கும் அரசின் பட்ஜெட்... மக்களைக் காக்கும் பணியில் இருக்கும் 29 ராணுவ வீரர்களின் உயிர் இதெல்லாம் முக்கியமில்லையா... நாம் என்று நடிகனை நடிகனாய்... சக மனிதனாய்ப் பார்க்கிறோமே அன்றுதான் நாடு உருப்படும். அப்படி நடந்தால்... மகிழ்ச்சி. (தமிழக பட்ஜெட் மற்றும் கபாலி ஜுரம் இருந்த நாளில் கிறுக்கியது இது)


ட்ரா மச்சான் விசிலு... நடிகனுக்கும் ரசிகனுக்குமான பாசமும் மோதலும்தான் கதை... பவர் ஸ்டார் இதில் நடிகர் பவர்ஸ்டாராக... அவரின் ரசிகர்களாக சிவாவும் இன்னும் மூவரும்... பவரின் மேனேஜராக சிங்கமுத்து... படம் முழுக்க நகைச்சுவையில் சிக்ஸர் அடிக்கிறார்கள்... தொய்வில்லாமல் நகரும் கதையில் தலைவன்னு கெடக்காதீங்கடா... உங்க வாழ்க்கையைப் பாருங்கடான்னு சொல்லியிருக்காங்க... ஒவ்வொரு காட்சியிலும் நடிகரை மரண கலாய்... பெரும்பாலும் உச்ச நட்சத்திரத்தைத்தான் குறி வைத்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. நாயகி பரவாயில்லை... பாட்டெல்லாம் கேக்குற மாதிரி இருக்குங்க... பவருக்கு பாலாபிஷேகம் எல்லாம் பண்றாங்க... அவரோட நகைச்சுவையை ரசிக்க முடிந்தாலும் குளோசப் காட்சிகளில் எல்லாம் ஸ்ஸ்ஸ்... அப்பா... சரி விடுங்க... நடிக்கத் தெரியாட்டியும் மனுசன் வாழ்றானா இல்லையா... அது போதும்ய்யா... ஆயிரங்கள் கொடுத்து ஆப்பை வாங்கி அடிச்சிக்கிட்டு வர்றதைவிட நிர்ணயித்த விலைக்கே டிக்கெட் வாங்கி சிரிச்சிட்டு வரலாமே... எனக்கு சிவா படம் எப்பவுமே பிடிக்காது... பவருக்காக படம் பார்க்க ஆரம்பித்து நல்லாயிருக்கேன்னு முழுசும் பாக்க முடிந்தது. சிங்கமுத்து பல இடங்களில் கடுப்படிக்கிறார்... எதற்காக விஐயகாந்த் மாதிரி ஒரு இடத்தில் பேசுகிறார் என்பது தெரியவில்லை... காசுக்காக மாறடிக்கும் இவர்கள் திரையில் சக நடிகனை... மற்றவர்களுக்கு உதவியாய் இருப்பவனை கிண்டல் செய்ய என்ன இருக்கிறது..? சினிமா வேறு அரசியல் வேறு என்பதை சிங்கமுத்து போன்றோர் புரிந்து கொண்டால் நல்லது. கதை இருக்கோ இல்லையோ கருத்துச் சொல்லாமால் சும்மா ஜாலியா ஒரு படம் பயணித்தால் போதுமே... அதை இந்தப் படம் கொடுத்ததில்... மகிழ்ச்சி.


ம்மாவுக்கு சசியாலதான் பிரச்சினை என்பது அப்பட்டமாகத் தெரிந்தும் விடாது கருப்புங்கிறது மாதிரி அதையே பிடிச்சிருக்கு... அதான் கடவுள் சசிகலா புஷ்பா மூலமா மீண்டும் கோடிட்டு காட்டியிருக்கிறான்... புரிஞ்சிக்கிட்டா சரி...  ஆமா.. வேட்பாளரை விஜயகாந்த் அடித்தார்ன்னு கட்டம் கட்டி காட்டுன நடுநிலை தொலைக்காட்சிங்க, பத்திரிக்கைங்க எல்லாம்ஜெ இப்ப அம்மா அடிச்சதை காட்டலையே... எங்கப்பா உங்க நடுநிலை...?  சிவபுஷ்பா... அட பேரு மாறிப்போச்சு... சசிகலா புஷ்பா தண்ணிய போட்டுட்டு என்ன பேச்சு பேசுது... இதெல்லாம் இருக்க வீடு வெளங்கிடும்... இவளுகளையும் நாம தலையில தூக்கி வச்சி ஆடுறோம்... எல்லாம் காலக் கொடுவினை அன்றி வேறென்ன... 

னித மிருகங்களால் சித்திரவதைக்கு உட்பட்டு இறக்கும் பெண்கள் எல்லாரும் மனிதர்கள்தான்... இந்த ஈனச் செயலைச் செய்பவர்கள் எவராக இருந்தாலும் சரியான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இறந்தவர் என்ன மதம். என்ன சாதி என்று பார்த்து அவரின் பெயரோடு சாதி வந்து ஒட்டிக் கொள்வது வேதனையளிக்கிறது. எல்லாரும் சகோதர சகோதரிகளாக வாழும் போது சாதியைப் போட்டு சண்டை மூட்டும் செயலில் முகநூல் முன்னுக்கு நிற்கிறது. சமீப கால நிகழ்வுகள் முகநூலை விட்டு வெளியில் வருவது நலம் எனத் தோன்ற வைக்கிறது. சினிமா, கொலை என எல்லாவற்றிலும் சாதிச் சாயம் பூசாதீர்கள்... வேண்டாம்... அது நம் நேசத்தைக் கொன்று வாழ்வை அழித்துவிடும்.

கீழே இருப்பது முகநூலில் கிறுக்கியது... இதுதான் நிதர்சனம்... வாராவாரம் நாம் ஒவ்வொரு பிரச்சினையின் பின்னேயும் தீவிரமாக பயணிக்கிறோம்... ஆனால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணாமலேயே என்பதுதான் வேதனை.
ஸ்வாதியில் புலம்பி
கபாலியில் கனன்று
சசிகலா  பின்னே
சொக்கி நிற்கிறது
பத்திரிக்கையும்
இணையமும்..!

ப்பனுக்கும் மகனுக்கும் ஒரே நேரத்தில் வலது குதிகால் பகுதியில் அடிபட்டிருக்கிறது. மகன் சைக்கிளில் அமர்ந்து செல்லும் போது காலைக் கொடுத்து வெட்டி எடுத்துவிட கட்டுப் போட்டிருக்கிறான்... அப்பனுக்கு நடந்து வரும் போது கால் புரட்டிக் கொள்ள... கட்டுப் போட்டிருக்கிறது. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில்... ஒரே காலில்... அதுவும் குதிகால் பகுதி... ஆஹா... என்ன ஒரு ஒற்றுமை...

#பாசம்....டா...! 
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. பல்சுவைப்பதிவு. அப்பாவும் பிள்ளையும் ப்ளீஸ் டேக் கேர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம் அண்ணா....
   தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா...

   உடல் நலம் இப்போ பரவாயில்லை அண்ணா...

   நீக்கு
 2. //ஒவ்வொரு பிரச்சினையின் பின்னேயும் தீவிரமாக பயணிக்கிறோம்... ஆனால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணாமலேயே என்பதுதான் வேதனை//

  இதுதான் நண்பரே உண்மையான உண்மை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா....
   தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா...

   நீக்கு
 3. தொடர்ந்து எழுதுங்கள்.
  பதிவில் ஒவ்வொன்றையும் ரசித்தேன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி....
   தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

   நீக்கு
 4. பல்நிலையிலான செய்திகளைக் கொண்ட பதிவு. அருமை.

  பதிலளிநீக்கு
 5. //ஒவ்வொரு பிரச்சினையின் பின்னேயும் தீவிரமாக பயணிக்கிறோம்... ஆனால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணாமலேயே என்பதுதான் வேதனை// உண்மை இதுதான் குமார். இரு கோடுகள் தத்துவம் போன்றுதான்...

  மகனும் நீங்களும் கவனித்துக் கொள்ளுங்கள் ....சரியாகிவருகிறதா...விஷாலின் கால் இப்போது எப்படி உள்ளது?

  பதிலளிநீக்கு
 6. பகிர்வுக்கு நன்றி! விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. Superdealcoupon aims to provide our visitors the latest coupon codes, promotional codes from leading e-commerece stores and brands.Our goal is to create one ultimate savings destination to save you time and money every day.

  பதிலளிநீக்கு
 8. //சினிமா, கொலை என எல்லாவற்றிலும் சாதிச் சாயம் பூசாதீர்கள்... வேண்டாம்... அது நம் நேசத்தைக் கொன்று வாழ்வை அழித்துவிடும்.//

  உண்மையான வார்த்தைகள்.

  காலில் அடி - கவனமாக இருங்கள்...

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...