மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கவிதை : வாலிப நேசம்...


'என்ன பண்றே..?'
என்பதிலிருக்கிறது அன்பு...
'எப்படி இருக்கே..?'
என்பதிலிருக்கிறது நேசம்...

ஆண்டுகள் பல
கடந்த போதிலும்
கேட்கும் வார்த்தையில்
குளிர்ந்து கிடக்கிறது செவி...

எத்தனையோ ஆசைகள்
அத்தனையும் மூட்டைகட்டி...
தனித்தனியே குடும்ப
பாரத்தைச் சுமந்து கடந்தோம்...

எத்தனை திருவிழாக்கள்...
எத்தனை திருமணங்கள்...
எத்தனை இறப்புக்கள்...
எத்தனை பிறப்புக்கள்...

காணும் போதெல்லாம்...
சின்னப் புன்னகையும்
சிதறாத வார்த்தையுமாய்
கடந்து போனது காலம்...

கிழப் பருவமெய்தி... 
நடை தளர்ந்து...
கம்பூன்றி... 
கடக்கும் போதும்...

நேசமாய் சிரித்து
வாஞ்சையாய் கேட்டுக்
கடக்கிறேன்... கடக்கிறாய்...
கடக்கிறோம்...
ஆரம்ப வரிகளை....

அதில் தெறிக்கும்
அன்பில் தொக்கி நிற்கிறது
வாலிப நேசம் இன்னும்
வயதாகாமல்...
-'பரிவை' சே.குமார்.

(குறிப்பு :  மன்னிக்க வேண்டும் நண்பர்களே... தொடர்கதை ஒரு சில காரணங்களால் மீண்டும்  நிறுத்தப்படுகிறது.... ஒரு வேளை புத்தகமாக்கும் பட்சத்தில்(!) மீண்டும் வாசிக்கலாம்... இனி கதைகள் தவிர்த்து மற்றவை மட்டுமே  இங்கு பகிரப்படும் - நன்றி. )

18 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

Unknown சொன்னது…

ஏனிந்த முடிவு! நண்பரே!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
கவிதை அருமை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை. பாராட்டுகள்.

துரை செல்வராஜூ சொன்னது…

>>> அதில் தெறிக்கும்
அன்பில் தொக்கி நிற்கிறது
வாலிப நேசம் இன்னும்
வயதாகாமல்...<<<

கவிதை.. கவிதை!..

KILLERGEE Devakottai சொன்னது…

OK
t.m.4

Kasthuri Rengan சொன்னது…

அருமை தோழர்
தம +

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல கவிதை குமார்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கவிதை அருமை! கதைகள் தவிர்த்து இங்கே பகிரப்படும் என்று சொல்லியிருப்பது எதனால்? பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் உத்தேசமா? அப்படியிருப்பின் வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.