மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 4 டிசம்பர், 2015

மனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்

ழையின் கோரத் தாண்டவத்தில் வீடு, உடமைகள் இழந்து வாடும் நம் சென்னை மற்றும் கடலூர் சொந்தங்கள் இந்த மீளாத்துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவனைப் பிரார்த்திப்போம்.


ண்பர்களே... தயவு செய்து நடிகர்களைத் தொங்காதீர்கள்... உதவி செய்வது அவரவர் விருப்பம். சித்தார்த்தும் ஆர்.ஜே. பாலாஜியும் வெள்ளத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களிடம் நல்ல மனது இருக்கிறது. எல்லோரிடமும் நாம் அதை எதிர்பார்க்க வேண்டாம். நடிகர்கள் அவர்கள் தொழிலில் பணம் சம்பாரிக்கிறார்கள். அதில் நீ உதவலை... நீ உதவியது பத்தலைன்னு எல்லாம் சொல்லி எந்தக் காரியமும் ஆகப் போவதில்லை. நம் தமிழக மக்களுக்கு ஜாதி மத பாகுபாடுயின்றி நல்ல மனது இருக்கிறது. எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் நான் இதைத் செய்தேன்... நான் இதைச் செய்யலாமென காத்திருக்கிறேன் என்றெல்லாம் விளம்பரம் தேடிக் கொள்ளாமல் உதவி செய்யும் அவர்களைப் பாராட்டுவோம்.

ர்ப்பிணிப் பெண்கள் பிரசவ வலியால் துடிக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று முகநூல் பக்கத்தில் பகிர்வதைப் பார்க்கும் போதும் மனசு கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்து குழந்தை பிறந்ததும் தாயும் சேயும் நலம் என போட்டோ போடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முகநூலும் டுவிட்டரும் ஆக்கப்பூர்வமான பணிக்கு பயன் படுத்தப்படுவதில், முக்கியப் பங்காற்றுவது குறித்தும் நட்புக்கள் முனைப்புடன் செயல்படுவது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சி.

வ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் அரசோ, மந்திரிகளோ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அம்மாவின் ஆணைப்படி நடக்கும் அரசு அதிகாரிகளும் நமக்கு நாமே என்று உதார் நாடகம் நடத்தியவர்களும் மாற்றம் முன்னேற்றம் முதல்வர் நாற்காலியே என்று சொல்லியவர்களும் எங்கே போனார்கள்..?. இத்தனை பேரிடரிழும் மற்றவர் செய்யும் உதவிகளை தங்கள் செய்ததாய்ச் சொல்லும் ஈனப்பிறவிகள் இவர்களை இனம் காட்டிய மழைக்கு நன்றி என்றுதான் சொல்ல வேண்டும்,

ன்று நம்மைப் பார்த்து செய்வீர்களா...? செய்வீர்களா...? என்றார்கள். இன்று நாம் அவர்கள் செய்வார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்காமல் நமக்கு நாமே உதவிகளைக் குவித்து வருகிறோம். முகநூல் பக்கமெல்லாம் உதவிகள்... உதவிகள்... நாங்கள் மதத்துக்குள்ளும் ஜாதிக்குள்ளும் சிக்கியவர்கள் அல்ல... தமிழர்கள்... மனிதாபிமானம் நிறைந்த தமிழர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் நம் சொந்தங்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே... அவர்களை வாழ்த்துவோம்.

வடியில் இருக்கும் நண்பனின் வீடு வெள்ளத்திற்குள்... அவனுக்கு நெஞ்சளவு தண்ணீர் இருப்பதாய்ச் சொன்னான். சின்னக் குழந்தைகள் வேறு... இப்போது அருகில் இருக்கும் குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருப்பதாகவும் நலமுடன் இருப்பதாகவும் சொன்னான். மனசு சந்தோஷப்பட்டாலும் இதுபோல் எத்தனை குடும்பங்கள்... தவித்துக் கொண்டிருக்கும் என்று நினைத்தால் வேதனை அதிகமாகிறது.

(அடுத்தவன் அனுப்பியதில் அம்மா போட்டோ... வாழ்க அம்மா)
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் மற்றும் அத்தியாவசியப் பண்டங்களை அதிக விலைக்கு விற்கும் கடைக்காரர்களே சற்றே சிந்தியுங்கள். இந்த இயற்கை... சென்னையையும் கடலூரையும் புரட்டிப் போட்டு விட்டு ஆங்காங்கே உங்களைப் போன்ற சிலரை விட்டு வைத்திருக்கிறது என்றால் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். இப்படி ஒருவன் சாகக்கிடக்கும் போது அவன் வயிற்றில் அடித்து சொத்து சேர்த்து எங்கு கொண்டு போகப் போகிறீர்கள்...? யோசியுங்கள்... இந்த நேரத்தில் தவிக்கும் ஒரு குழந்தைக்கு நீங்கள் செய்யும் உதவியே உங்களை வாழவைக்கும் என்பதை மறக்காதீர்கள்.

ம் வலைப்பூ நட்புக்கள், முகநூல் நட்புக்கள் எல்லாம் களப்பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கொடுத்து உதவுவதிலும் தீவிரமாய் இருப்பது கண்டு, எங்கோ இருந்து கொண்டு எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் எங்கு என்ன தேவை, யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற செய்திகளை உடனுக்குடன் தாங்கள் பகிர்ந்து கொள்வதுடன் இவரை அழையுங்கள் அவரை அழையுங்கள் என்று சொல்லும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

க்கள் அவதிப்படும் நிலையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் பதில் பேசமால் ஓடும் அமைச்சர்கள்தான் நாளை உங்களுக்கு சேவை செய்வேன் என பணத்தோடு வந்து நிற்பார்கள் ஓட்டுக்காக... இனி அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். இன்று நம்ம முதல்வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்மா அவர்களின் தொகுதியில் அமைச்சர்களை மக்கள் விரட்டி, செயலாளரை நையப் புடைத்தார்களாமே அப்படி அடித்து விரட்ட வேண்டும்.

க்களுக்கு உணவு வழங்க வெள்ளத்திற்குள் வாகனத்தில் பயணித்த வைகோ, மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் காப்பாற்றி உணவளித்த இளையராஜா,  ஒரு கோடி கொடுத்து தனது உயர்ந்த உள்ளத்தைக் காட்டிய லாரன்ஸ், தனது வீடுகளை தங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளச் சொன்ன மம்முட்டி, நிவாரணப் பணிக்காக உண்டியல் ஏந்தி வசூலித்த கர்நாடகா மக்கள் பள்ளிக்குழந்தைகள், நிவாரணப் பணிக்கு பணம் கொடுத்த பீகார் மற்றும் ஜார்கண்ட் முதல்வர்கள், இரண்டு மாதங்களுக்கு சாப்பாடு, உணவு என எல்லாம் கொடுக்கிறேன் என்றும் தனது வீடு, திருமண மண்டபம், முதியோர் இல்லம் என எல்லா இடத்திலும் தங்கச் சொன்ன அஜீத், மண்டபங்களைத் திறந்து விட்ட ரஜினி, விஜய், நிவாரணத் தொகை கொடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககாரா, முதல் மாத சம்பளத்தைக் கொடுத்த பீகார் துணை முதல்வர், அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள், இவற்றிற்கெல்லாம் மேலாக டோல்கேட்களை எல்லாம் டிசம்பர் 11ம் தேதி வரை திறந்து விட வைத்த ஷாஜகான் சார் என எல்லாருக்கும் நன்றிகள்.

மேலே சொன்னவர்கள் எல்லாம் பிரபலங்கள்.... இவர்கள் விளம்பரம் தேவையில்லை என்று சொன்னாலும் மீடியாக்கள் விடுவதில்லை... விரட்டிப் பிடிப்பார்கள்... ஆனால் இவர்களின்றி எந்த விளம்பரமும் இல்லாமல் சாப்பாடு, உடை, போர்வை, பால், மாத்திரைகள்,  நாப்கின் என இன்னும் இன்னுமாய் வண்டி வண்டியாய் ஏற்றி அனுப்பும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்.

டோல்கேட்டில் பணம் வசூலிக்காமல் திறந்து விட வேண்டும் என்று திரு.ஷாஜஹான் சார் செய்த செயலை ஏதோ தாங்கள் செய்தது போல் காட்டிக் கொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகளை என்ன செய்வது..? 

(கடலூரில் இருக்கும் கிராமத்தில் களப்பணியில் இருக்கும் நண்பன் எடுத்த போட்டோ)
டலூர் நகரைத்தை விட அதைச் சுற்றி இருக்கும் 80க்கும் மேற்பட்ட கிராமங்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பாதாகச் சொல்கிறார்கள். கடலூரைக் கண்டு கொள்ளவில்லை என்று முகநூலில் தம்பி தினேஷ் உள்ளிட்ட நிறைய நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். இன்று போதுமான ஆட்கள் களப்பணி செய்கிறோம்... நிறைய பொருட்களை மக்கள் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய செய்தி.

டலூர் களப்பணியில் எனது நண்பன் தமிழ்க்காதலன் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறான். தமிழ்க்குடில் அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்ட இன்னும் உதவிகள் போகாத கிராமங்களுக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறான். நான் அவனிடம் சொன்னதெல்லாம் உதவி செய்... நீயும் பாதுகாப்பாய் இரு என்பதே... அறக்கட்டளை மூலமாக உதவும் நண்பனையும் அவனுக்கு உறுதுணையாக இருக்கும் காயத்ரி அக்கா உள்ளிட்ட உறவுகளுக்கும் நன்றி. 

ஷ்டப்பட்டு பொருட்களைச் சேகரித்துக் கொடுத்தால் அதை ஆளும் கட்சியும் ஆளத் துடிக்கும் கட்சியும் திருடி தாங்கள் கொடுப்பது போல் கொடுக்க நினைக்கிறார்கள் என்ற செய்திகளைக் கேட்கும் போது 'சே... கேவலப்பட்ட ஜென்மங்கள்... இவர்கள் இதிலும் அரசியல் பண்ணி என்னத்தை சாதிக்கப் போகிறார்கள்... மலம் தின்னும் மனிதர்கள்' என்றே எண்ணத் தோன்றுகிறது.

ன்று எங்கள் வரிப்பணத்தில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் என உங்கள் படங்களைப் போட்டுக் கொடுத்தீர்கள். இன்று தவிக்கும் மக்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களை எல்லாம் பறித்து அதில் உங்கள் படத்தை ஓட்டிக் கொடுக்க நினைக்கும் கேவலம் உலகில் வேறு எங்கும் நிகழுமா..? இப்படிப் பெயரெடுத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்...? வாழ வைக்க வேண்டாம்... வாழ வைக்க நினைக்கும் ஒரு சாமானியன் கொடுக்கும் பத்து ரூபாய் பண்டத்தில் உன் போட்டோ போட நினைக்கும் கேவலத்தை நிறுத்தச் சொல்லுங்கள். தமிழனுக்கு தமிழன் மட்டுமின்றி உலகமே உதவும் போது கோடிகளில் புரளும் நீங்கள் எல்லாம் பிடுங்கி பெயரெடுக்க நினைக்கிறீர்களே.... இது எந்த வகையில் நியாயம்...? யோசிப்பீர்களா...? யோசிப்பீர்களா..?

க்களின் வரிப்பணம் என்னாச்சு என்று கமல் காட்டமாய்க் கேட்டதை பலர் கேலி செய்கிறார்கள். நம் வரிப்பணத்தை விலையில்லா கிரைண்டர், மிக்ஸியாகக் கொடுத்து விட்டு இப்போது பேசாமல் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களை என்ன செய்வது..? அவர் சராசரி தமிழனாய் கேட்டிருக்கிறார்... உடனே நீ பணம் கொடுத்தாயா என்று கேள்வி எழுப்புகிறோம். அவர் கொடுக்க வேண்டும் என்று நாம் எதற்காக எதிர்பார்க்கிறோம்... அப்படியே அவர் கொடுத்தாலும் விளம்பரம் பண்ணிக் கொண்டு கொடுக்க வேண்டுமா என்ன.. கேட்டால் எங்கள் பணம்தானே உன்னிடம் இருக்கு என்று வேறு சொல்கிறோம். இனி எவன் படத்தையும் தியேட்டரில் பார்க்காதீர்கள்... எவனுக்கும் கட்-அவுட்டும் பாலாபிஷேகமும் செய்யாதீர்கள்... இப்படி இருப்பீர்களா..? சகஜநிலைக்கு மாறியதும் அவர்கள் படம் வரும்போது நாம் மீண்டும் பால்குடம் எடுக்கத்தானே போறோம்... அவர்களை திட்டுவதை விடுத்து நாம் திருந்துவோம்.


முகநூலில் தொடர்ந்து செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கும் ஜாக்கி சேகர் அண்ணா, முகநூல் நண்பர்கள் ராஜ் அருண், வசந்த் பாலாஜி, கனி ஓவியா அக்கா,சுபஸ்ரீ ஸ்ரீராம் அக்கா, கிருத்திகா தரன் அரவிந்த் நிவி, திருமதி. ஜோதிமணி சென்னிமலை மற்றும் வலைச்சித்தர் அண்ணன் திண்டுக்கல் தனபாலன், சுவிஸ்சில் இருக்கும் ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா, 'தமிழ்க்குடில்' காயத்ரி அக்கா,  சகோதரிகள் தேன் மதுரத்தமிழ் கிரேஸ், மைதிலி கஸ்தூரி ரங்கன் உள்ளிட்ட இன்னும் நம் உறவுகள் அனைவருக்கும் நன்றி.

க்களைக் காக்கும் பணியில் தன் இன்னுயிரை ஈந்த சகோதரன் பரத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ப்போது மீண்டும் மழை வலுத்திருப்பாதாக செய்திகள் சொல்கின்றன. குடந்தை சரவணன் அண்ணனிடம் பேசிய போது மழை பெய்கிறது என்றும் முதல் முறையாக மழை மீது கோபம் வருகிறது என்றும் சொன்னார். உறவுகளே பத்திரமாய்... பாதுகாப்பாய் இருங்கள்.

(மீண்டும் அடுத்த வெள்ளி)
-'பரிவை' சே.குமார்.

24 எண்ணங்கள்:

நிஷா சொன்னது…

நிரம்ப எழுதணும் குமார். ஆனால் மனமிருக்கும் நிலையில் எழுதவே முடியல்ல.. என் நிலை தான் சொல்லிட்டேன்ல.. ரெம்ப முடியாமல் தானிருக்கு. கூடவே வெள்ளம் குறித்த செய்தி அறியும் போது மனம் பதைக்கின்றது. மன்சில் நிரம்ப நிரம்ப செய்யணும் என ஆர்வம் இருந்தாலும் உடல் நிலை ஒத்துழைக்க மறுக்குதுப்பா.

என்ன சொல்வது என புரியல்ல. கடவுள் கண் மூடிகொண்டா இருக்கின்றார். ஆனாலும் இந்த வெள்ளம் மனிதர்களின் சுய ரூபத்தினை கிளித்து எறிந்திருக்கின்றது. இனியாவது மக்கள் விழிப்படையட்டும்.

நிஷா சொன்னது…

இராணுவ வீரர்கள், மினாரிய ஊழியர்கள், மானகராட்சி பணியாளர்கள், பேருந்து பணி யாளர்கள் , முக்கியமான மீன்வர்கள். அனைவருக்கும் நன்றி என ஒரு வார்த்தை சொல்லி விலகிட முடியாது.

இதிலும் மதம் பிடித்து அலையும் மதவாதிகளை என்ன சொல்வது. இப்படி நாட்டையும் மக்களையும் கெடுத்து அலைக்கழிக்கும் மதவாதிகளையும் அரசியல் வாதிகளையும் நடுத்தெருவில் நிற்க வைத்து அடிக்கணும்பா.

துரை செல்வராஜூ சொன்னது…

வேதனையான சூழ்நிலையிலும் விலையை ஏற்றி விற்கும் பாதகர்கள்.. அடுத்தவன் செய்யும் உதவிகளில் தன் பெயரைப் பதித்துக் கொள்ளும் புல்லர்கள்.

Fbook - இதனில் பகிரப்படும் செய்திகளைப் படித்துப் படித்து மனம் நொந்து போனது.. தங்கள் பதிவினிலும் சுட்டிக் காட்டியிருக்கின்றீர்கள்.. இந்தக் கேவலங்களை எல்லாம் சரியான வழியில் தவிர்த்திட வேண்டும்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தினேஷ் அவர்கள் சொன்னது சரி தான்...

விரைவில் சீராக ஆண்டவனை வேண்டுகிறேன்...

KILLERGEE Devakottai சொன்னது…

மலம் தின்னும் மனிதர்களே... உண்மை
அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் இனம் கண்டோம் இதை மறக்காமல் இருந்தால் இனியெனும் மக்களுக்கு வாழ்வு
த.ம.3

மனோ சாமிநாதன் சொன்னது…

துயரத்தில் விழுந்து கண்ணீருடன் கலங்கி நிற்கும் மக்களுக்கு உதவும் நல்ல மனங்களுக்கு உங்களைப்போலவே நானும் நன்றி கூறுகிறேன்!

மீரா செல்வக்குமார் சொன்னது…

உங்கள் பதிவின் தொகுப்பு அருமையாக இருக்கிறது...உங்கள் பதிவின் தீவிர வாசகனாய் மாறியிருக்கிறேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
முதலில் உடல் நலம் பாருங்கள்....
பிறகு எழுதலாம்.
மக்கள் படும் பாடு நினைத்து ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
மதவாதிகள் இதில் குளிர் காய்கிறார்கள்... அதுதான் வேதனை...
அரசியல்வாதிகள் எல்லாம் செத்துட்டானுங்கன்னு நினைக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
இந்த வேதனை சொல்லி மாளாது...
விரைவில் சரி செய்யப்பட வேண்டும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
விரைவில் மக்கள் நல்ல நிலைக்கு வர ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
அதெல்லாம் 500, 1000 வரும் போது நாம் எல்லாம் மறப்போம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
நல்ல மனங்களை நாம் வாழ்த்துவோம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
ரொம்ப நன்றி...
நானும் தங்களைத் தொடர்ந்து வருகிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் அரசோ, மந்திரிகளோ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அம்மாவின் ஆணைப்படி நடக்கும் அரசு அதிகாரிகளும் நமக்கு நாமே என்று உதார் நாடகம் நடத்தியவர்களும் மாற்றம் முன்னேற்றம் முதல்வர் நாற்காலியே என்று சொல்லியவர்களும் எங்கே போனார்கள்..?. இத்தனை பேரிடரிழும் மற்றவர் செய்யும் உதவிகளை தங்கள் செய்ததாய்ச் சொல்லும் ஈனப்பிறவிகள் இவர்களை இனம் காட்டிய மழைக்கு நன்றி என்றுதான் சொல்ல வேண்டும்,//

உண்மை குமார். தனியார் செய்யும் தொண்டிலும் கூட கட்சியின் தலைவர்/தலைவியின் படம் போட வேண்டும் என்று இல்லை என்றால் பொருட்கள் சென்றடையாது என்று மறியல் வழியிலேயே. கொள்ளையும் நடக்கின்றது.

கமல் கேட்ட கேள்வி நியாயமானதே. எல்லா சாதாரண மக்களின் மனதில் இருக்கும் கேள்விதான் அது. அந்தப் பணத்தைக் கொண்டு நீரிணைப்புகளை முதலிலேயே சுத்தம் செய்து வழி வகுத்திருந்தால் இன்று இத்தகைய பாதிப்பு நேர்ந்திருக்காது. எல்லோரும் சொல்லும் காரணம் இயற்கைச் சீற்றம் என்பது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (சென்னையிலும் சுற்றுப் புறத்திலும் இப்படி நிறைய இருக்கின்றன. ஆனால், அவை மற்ற நாட்களில் வறண்டு இருப்பதால் நம்மவர்கள் ஹாயாக வீடுகட்டிக் கொண்டு இருந்துவிட்டு இப்போது கூப்பாடு வெள்ளம் என்று!)

3 நாட்கள் முன்பே இந்திய வானிலை அறிக்கை மையம் அரசிற்கு அஃபிசியல் அறிக்கை, கடிதம் சமர்ப்பித்துள்ளது. அப்போதாவது ஆற்றின் கரைகளில் உள்ளவர்களை வேறு இடங்களுக்கு மாறச் சொல்லவேண்டாமோ அரசு? அது ஆணையாக அல்லவா பிறப்பிக்கப்பட வேண்டும்? போர்க்கால நடவடிக்கை போல பின்னால் எடுத்ததை முன்னால் எடுத்திருக்க வேண்டாமோ...

மக்களும் அறிவிலிகள். ஆள்பவர்களும் ...ஹும் என்ன சொல்ல என்று தெரியவில்லை. இப்போது அடுத்து பயமுறுத்துவது பொது சுகாதாரம்...

இந்தப் பாடத்தைக் கற்பார்கள் என்று நினைக்கின்றீர்களா? இன்னும் 6 மாதம் தானே...அடுத்து யாரோ? அதற்கான ஏற்பாடுகள் தான் நடக்குமே அல்லாமல் பாடம் படிக்கப் போவதில்லை. 10 நாட்களில் மறக்கப்படும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கமலுக்கு ஓ.ப. செ. கொடுத்த பதிலைப் பார்த்தீர்களா குமார்? ஒரே புகழ் மாலை யாரைக் குறித்து என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சென்னையில் இப்போது ஆட்டோக்காரர்கள் கொள்ளை அடிக்கின்றார்கள். ஆட்டோ ஓட்டாமல் இருக்கலாம் ஆனால் அவர்கள் வயிற்றுப் பிழைப்பு. கொள்ளை எதற்கு என்றால் தண்ணீரில் ஓடும் போது ஆட்டோவிற்குப்பாதிப்பு ஏற்படும் அதற்கும் செலவழிக்க வேண்டுமே...ஹும் என்ன சொல்ல...

இந்த வெள்ளத்திலும் இறங்கி, சுயநலம் பாராது பல உயிர்களைக் காத்த எல்லா சகோதரர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்.

நாலுகால் உயிர்களையும் காத்த பலருக்கும் நன்றி. பாராட்டுகள்

Yarlpavanan சொன்னது…

தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்

வானிலிருந்து - கடவுள்
தன் திருவிளையாடலைக் காட்ட
தரையிலிருந்து - மக்கள்
துயருறும் நிலை தொடராமலிருக்க
கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

கடவுளே! கண் திறந்து பாராயோ!
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

அன்பே சிவம் சொன்னது…

உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்கள்...
இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
மணிதம் இன்னும் மரிக்கவில்லை
என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
நிறையவே நாம் ஜாக்கிரதையாக
செயல்பட வேண்டிய தருணம் இது...

அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
வேண்டுதல்கள்..

1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்,தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட USB மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடையூறுகள்
செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
ஆமாம் மக்கள் அறிவிலிகள்... இன்னும் கொஞ்ச நாளில் அப்படியே பழையபடி மாறிவிடுவார்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
ஆமா... ஆமா... அம்மா அம்மாதான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
எல்லாப் பக்கமும் கொள்ளை என்றாலும் மழையில் பாதுகாப்பாய் கொண்டு போய் சேர்க்கிறார்களே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.