மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 25 செப்டம்பர், 2014

வீடியோ : இது ஒரு பொன்மாலைப் பொழுது

ப்போதும் இசையை அனுபவிப்பது என்பது எல்லாருக்குமே அலாதியான விஷயம்தான். வயலில் நாற்று நடும் பெண்கள் கூட வேலையின் சுமை தெரியாமல் இருக்க நடவுப்பாடல்களைப் பாடியபடித்தான் நடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாக்களில் எல்லாம் குலவைப் பாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. அதே போல் மொளக்கொட்டுப் பாடலும் கேட்க இனிமையாக இருக்கும். எங்க அக்கா, அண்ணன்களின் குழந்தைகளுக்கெல்லாம் அம்மா தாலாட்டுப் பாடும் போது கேட்டு ரசிப்பதோடு நானும் சேர்ந்து பாடி இருக்கிறேன். ஏன் கிராமங்களில் இன்றும் கூட இறந்தவரின் உடலுக்கு முன்னர் ஒப்பாரிப் பாடல் பாடி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவார்கள். இதற்கு எங்கள் பக்கம் மாரடிக்கிறது என்று சொல்வார்கள்.

இப்போது அலுவலகப் பணி நேரத்தில் பெரும்பாலும் எனக்குத் துணையாக இருப்பது இங்கு பகிர்ந்திருக்கும் பாடல்களைப் போன்ற பாடல்கள்தான். இவையெல்லாம் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள். முக்கல் முனங்கல் இல்லாமல் வேற்று கிரக வாசிகளின் வார்த்தைகள் இல்லாமல் அடித்து நொறுங்கும் இசை இல்லாமல் அழகான வரிகளோடு இனிமையான இசையோடு லயித்துப் பாடும் பாடகர்களின் குரலில் என்றும் நம்மை கிறங்கச் செய்யும் பாடல்களாகத்தான் இவை இருக்கின்றன. நீங்களும் கேளுங்கள்... கண்டிப்பாய் ரசிப்பீர்கள்.

பாடல் : மண்ணில் இந்தக் காதல் இன்றி...
படம் : கேளடி கண்மணி



பாடல் : கேளடி கண்மணி...
படம் : புதுப்புது அர்த்தங்கள்


\

பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு...
படம் : சிகரம்




பாடல் : ஜாதி மல்லிப் பூச்சரமே...
படம் : அழகன்




பாடல் : செம்பூவே பூவே...
படம் : சிறைச்சாலை




பாடல் : பூவே செம்பூவே...
படம் : சொல்லத் துடிக்குது மனசு




பாடல் : ராஜ ராஜ சோழன் நான்...
படம் : ரெட்டை வால் குருவி




ராஜாவின் இசை ராஜ்ஜியமும் வைரமுத்துவின் வைர வரிகளும் கலந்து கட்டி ஆடியிருக்கும் 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.  இன்றைய வீடியோப் பகிர்வில் எப்போதும் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்றான நிழல்கள் படப்பாடல் இதோ


அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஜானகி அம்மாவின் வசீகரக் குரலில் வைரமுத்துவின் வைரவரிகளில் ராஜா புத்தும் புதுக்காலையை அவ்வளவு அழகாக வார்த்திருப்பார்... படத்தில் இந்தப் பாடல் இடம்பெறவில்லை.  ஆனால் ஆடியோவில் பட்டி தொட்டியெல்லாம் புத்தும் புதுக்காலை இப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதே புத்தும் புதுக்காலையை மேகாவில் ராஜா மீண்டும் வார்த்தார். அந்த இசையும் பாடகி அனிதாவின் அழகான குரலும் புத்தம் புதிய காலைக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றன. இங்கே பழைய புத்தம் புதுக்காலை உங்கள் பார்வைக்காக.... 



இன்றைய பாடல் பகிர்வில் அனைத்துப் பாடல்களையும் ரசித்திருப்பீர்கள். மீண்டும் மற்றுமொரு பாடல் பகிர்வில் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…


அனைத்துமே அற்புதமான பாடல்களே....

மகிழ்நிறை சொன்னது…

வழக்கம் போல அருமையான தொகுப்பு அண்ணா!

ஸ்ரீராம். சொன்னது…


எல்லாமே மிக அருமையான பாடல்கள் குமார்.

மகேந்திரன் சொன்னது…

அனைத்தும் அற்புதமான பாடல்கள் சகோதரரே..
பகிவிற்கு நன்றிகள் பல...

J.Jeyaseelan சொன்னது…


அனைத்தும் எனக்குப் பிடித்த இளையராஜா பாடல்கள் சொல்லவா வேணும், சோ நைஸ் சார்....பழைய புத்தம் புதுக் காலையை விட புதிய பாடல் நன்றாக இருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது???(எனக்கு மட்டுந்தானா??))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்துமே அருமையான பாடல்கள்......

தனிமரம் சொன்னது…

அருமையான பாடல்கள் சிகரம்படத்துக்கு இசை பாலுசாரின் கை வண்ணம் இப்படியான பாடல்களை நம் சந்ததி இன்று தொலைத்துவிட்டது ஐயா!