மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 17 மார்ச், 2014

நண்பேன்டா : முத்தரசு பாண்டியன்


னது நட்பின் வரிசையில் அடுத்து வருபவன் முத்தரசு பாண்டியன். தேவகோட்டைக்கு அருகில் பூங்குடி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். முதலாம் ஆண்டு தொடக்கத்தில் ராமகிருஷ்ணன், பிரான்சிஸ் மற்றும் இவன் ஒரு குழுவாக இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குழுவில் இணைந்தாலும் ராமகிருஷ்ணன், பிரான்சிஸ் அளவுக்கும் இவன் எங்களுடன் ஒட்டவில்லை. 

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் ஒட்ட ஆரம்பித்தவன் பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கும் எங்கள் அரட்டைப் பயணத்தில் இணைந்து கொண்டான். கலைஞரின் மேல் தீவிரப் பற்றுக் கொண்டவன். திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து மணிக்கணக்கில் பேசுவான். எப்பவும் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அந்தச் சட்டப்படி இந்தச் சட்டப்படின்னு பாயிண்ட் எடுத்துத்தான் பேசுவான். அதனால்தான் இன்றைக்கு தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கிறான்.

எங்கள் நட்பில் எல்லாருடைய வீட்டிற்கும் சென்றிருக்கிறோம். ஏனோ தெரியவில்லை ராமகிருஷ்ணன் தவிர வேறு யாரும் இவ்ன் வீட்டிற்குச் செல்லவில்லை. காலையும் மாலையும் நாங்கள் அனைவரும் கூட்டாகச் செல்லும் போது இவனையும் திருநாவையும் லேசாக மோதவிட்டு விட்டால் போதும் கல்லூரியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வரை எங்களுக்கு எந்த அலுப்பும் தெரியாது.

திருநாவுக்கு கருணாநிதியை அறவே பிடிக்காது. பக்கா அதிமுகக்காரன். இவனோ திமுக பேர்வழி அப்புறம் என்ன சொல்லவா வேண்டும். ஆள் குட்டையாகத்தான் இருப்பான். கையை ஆட்டி ஆட்டி 1967 என்று ஆரம்பித்தால் போதும் எத்தனையோ விவரங்களை அள்ளி விளாசுவான். திருநாவும் இதற்குச் சளைத்தவன் இல்லை... இவன் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கத்துக்கும் திருப்பி பதில் கொடுத்தபடி வருவான். எங்களுக்கு எல்லாம் ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் வேலை.

இவனும் ராமகிருஷ்ணனும்தான் எப்பவும் பேசிக்கொண்டே இருப்பார்கள். வகுப்பறையில் இருந்து ஒரு பிரிவேளை கூட வெளியில் வரமாட்டான். மற்ற வகுப்புக்களிலும் அதிக நண்பர்கள் வைத்துக் கொள்ளமாட்டான். எதிலும் அலட்டிக் கொள்ளமாட்டான். ம்... அப்படியா என்று சொல்வதுடன் சரி. பிரான்சிஸ் உடல்நிலை சரியில்லாத போது அவனுக்காக.... அவன் சரியாக வேண்டும் என்பதால் பெரும்பாலான நேரங்களை அவன் வீட்டில் கழித்தவன்.

படிப்பதிலும் சரி.... பொது அறிவிலும் சரி இவனுக்கு நிகர் இவனே. யாருடனும் அதிகம் பேசுவதில்லை... கல்லூரியில் அடிதடி சண்டை என்றாலே எங்கள் அணி பெரும்பாலும் வேடிக்கை பார்ப்பதுடன் சரி... வகுப்பறை வாசலில் நின்றால் கூட எங்க பேராசிரியர் கே.வி.எஸ். சார் என்ன இங்க எதுக்கு நிக்கிறீங்க... வீட்டுக்குப் போங்க... என்று அன்பாக விரட்டி விடுவார். சார் விரட்டும் முன்னரே வாங்கய்யா போவோம்... இங்க நின்னு என்ன பண்ணப் போறோம் என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.

துறைத்தலைவன் தேர்தல் என்பது எங்கள் கல்லூரியில் நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும் வரை இல்லை. மூன்றாம் ஆண்டில்தான் தேர்தல் வைக்க வேண்டும் என போராட்டம் நடந்தது. எனவே சேர்மன் தேர்தல் எல்லாம் இல்லை துறைத்தலைவர் தேர்தல் மட்டும் வைக்கப்படும் எனச் சொல்ல, எங்கள் வகுப்பில் நாங்கள் தனியாக இருப்போம். இன்னும் இரண்டு குழுவும் இருந்தது. அவர்களுக்குள் எப்பவும் பாம்பும் கீரியும்தான். நாங்கள் யாரை ஆதரிக்கிறோமோ அவர்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை. எங்களை இருவரும் கவிழ்க்கப் பார்க்க, நாம் ஏன் ரவுடிக் குரூப்புக்குப் பின்னால நிக்கணும்... நம்மள்ல ஒருத்தர் நிக்கலாம் என ராம்கிருஷ்ணனை முன்மொழிந்தவன் இவன்தான்.

சென்ற முறை சென்றபோது நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் தம்பி ஒருத்தனைப் பார்க்கப்போகும் போது இவனைப் பார்த்தேன். நீண்ட நேரம் பேசினான். நீதிபதி ஆகணும்டா... அதுக்காகத்தான் படிச்சிக்கிட்டு இருக்கேன். எப்படியும் ஆயிடுவேன் என்று சொன்னான். அப்படி அவன் ஆகும் பட்சத்தில் மிகச் சிறந்த நீதிபதியாகத் திகழ்வான் என்பதில் எனக்கு நூறு சதவிகித நம்பிக்கை உண்டு.

நண்பனின் எண்ணம் நிறைவேற உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

நட்பு இன்னும் உலா வரும்...
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நண்பர் நீதிபதியாக வாழ்த்துக்கள் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma.2

J.Jeyaseelan சொன்னது…

நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால் கலூரிக் காலங்கள் ஓடுவதே தெரியாது, உண்மைதான் ஐயா! நண்பர் நீதிபதி ஆவதற்கு வாழ்த்துகள்!

J.Jeyaseelan சொன்னது…

நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால் கலூரிக் காலங்கள் ஓடுவதே தெரியாது, உண்மைதான் ஐயா! நண்பர் நீதிபதி ஆவதற்கு வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் பால்ய கால நட்பு வட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் இங்கே சிலாகித்து எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது குமார்.....

தொடரட்டும் நட்பு வட்டம்.

ஸ்ரீராம். சொன்னது…

நண்பர்களின் நினைவு சுகம்தான். உங்கள் நண்பரின் லட்சியத்தில் வெற்றிபெற எங்கள் வாழ்த்துகளும்.

Unknown சொன்னது…

உங்களுக்கு கிடைத்த நண்பர்கள் அருமையானவர்கள்.உங்கள் நண்பர் நீதிபதியாகி நல்ல பல தீர்ப்புகள் வழங்க வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான நினைவுகள்...

இனிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

எதிரும் புதிருமான நண்பர்கள் ..இளமைக்கால நினைவுகள் என்றும் இனிமைதான் !
த ம +1

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நண்பரின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்! இனிய பகிர்வு! நன்றி!

r.v.saravanan சொன்னது…

நண்பர் நீதிபதியாக வாழ்த்துக்கள் குமார்

மாதேவி சொன்னது…

நண்பர் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

ஜோதிஜி சொன்னது…

மூன்றாம் வகுப்பில் என்னுடன் படித்த பன்னீர் செல்வத்தின் சொந்த ஊர் பூங்குடி.

Unknown சொன்னது…

நட்பு வலியது! அதற்கு ஈடாக ஏதுமில்லை!

Unknown சொன்னது…

நினைத்தது நடக்க இறைவனை பிராத்திக்கிறேன்