மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 17 பிப்ரவரி, 2014நண்பேன்டா : நவநீதன்ங்கள் குழுவில் எல்லோரையும் மாப்பிள்ளை என்று கூப்பிட்டு எல்லாருக்கும் மாப்பிள்ளை ஆன செல்ல மாப்பிள்ளை இவன். 

சருகணிக்கு அருகில் உருவாட்டி என்ற ஊரில் இருந்து வந்தவன். உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் தேர்த்திருவிழா மிகப் பிரபலம்.வீரம் விநாயகம்(அஜீத்) போல நான்கு தம்பிகளுக்கு மூத்த அண்ணன். வீட்டில் அம்மாவுக்கு செல்லப்பிள்ளை. கல்லூரியில் ஆட்டம் போட்டால் ஆதிக்கு இணையாக பாய்ச்சல் காட்டும் கல்லூரிக் காளை. எப்பவும் முகத்தில் இழையோடும் புன்னகை.

எல்லாரிடமும் சகஜமாகப் பழகும் இவனுக்கு பெண்கள் என்றால் பிடிக்காது. எங்கள் நண்பர் குழுவில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் பெண்களுடன் பேசுவது இல்லை. மதியம் சாப்பிட்டால் பாட்டு, தாளம், அரட்டை என மணித்துளிகள் கரையும். மாலை கல்லூரி விட்டதும் எங்கள் பயணம் பேருந்து நிலையம் நோக்கிப் பயணிக்கும்... பெரும்பாலும் அவர்கள் பேருந்தில் ஏறியதும் நானும் ராமகிருஷ்ணன் கிளம்புவது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் செயிண்ட்மேரிஸ் வரை வந்து அப்படியே அண்ணாத்துரை, சேவியருடன் இராம்நகர் போய்விடுவேன்.

ஒரு முறை நவநீதன் ஊருக்கு எல்லாருமாகச் சென்றோம். அவனது அப்பத்தா தனது இனப்பற்றுக் கொண்டவர், 'ஏய்யா... யாரு இது? வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போறே?" அப்படின்னு வாசல்ல இருந்து கேட்டுக்கிட்டே இருந்தாங்க... அவுக அப்புடித்தான் பேசுவாங்கப்பா... நீங்க வாங்க என்று அம்மாவும்... ஆத்தா தம்பியோட படிக்கிற புள்ளக வந்திருக்குக... சும்மா சத்தம் போட்டுக்கிட்டு என்று அப்பாவும் சத்தம் போட அப்பத்தா கப்சிப்... அப்புறம் இரண்டு நாள் அங்கதான்.. அப்படியே காளையார் கோவில் தெப்பத் திருவிழாவுக்கு போயி சுத்திட்டு வந்து சேர்ந்தோம்.

நவநீதனுக்கு எல்லாரோட அப்பா பெயரையும் சொல்லி கேலி பேசுவது என்பது கைவந்த கலை. அவங்க அப்பா பேரு சேது... எங்கப்பா பேரு சேதுராமன்... திடீர்ன்னு இந்த சேது தொல்லை தாங்கலைடா... எப்பப் பார்த்தாலும் அதைப் பண்ணாதே இதைப் பண்ணாதேன்னு... ஆமா உங்க வீட்ல சேது எப்படின்னு கேப்பான். எல்லாருடைய அப்பா பேரையும் சொல்லி கேள்விகளை அடுக்குவான்.

பின்னர் பி.எல் படித்து காளையார் கோவிலில் அலுவலகம் போட்டு சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கறிஞராயிட்டான். அவனைப் பார்க்க இருமுறை சென்று ஒருமுறை பார்த்து வந்தேன். பின்னர் அவனுடனான தொடர்பு குறைந்தது. காளையார் கோவில் செல்லும் எண்ணமும் என்னுள்ளே இல்லை. அதிமுக வழக்கறிஞராகிவிட்டான் என்று சொன்னார்கள். எனக்குச் சந்தோஷம்.

சென்ற முறை ஒரு நாள் காலையில் தினமலர் பேப்பர் பார்க்கும் போது அதிமுக வழக்கறிஞராக அவனது விளம்பரம் ஒன்று வந்திருந்தது. உடனே அதில் இருந்த செல் நம்பரில் கூப்பிட்டேன். டேய் மாப்ள எப்படிடா இருக்கே என சிவகங்கை மாவட்டத்துக்கே உரிய வாஞ்சையுடன் கேட்டவன் அதிக நேரம் பேசினான்.

இந்த முறை கண்டிப்பாக மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும்.

நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. நட்பு காயாத பூ!
  விவரித்த விதம் அருமை !

  பதிலளிநீக்கு
 2. #எல்லாரிடமும் சகஜமாகப் பழகும் இவனுக்கு பெண்கள் என்றால் பிடிக்காது. #
  நவநீதன் என்றால் கண்ணன் ஆச்சே ,அவருக்கு அந்த பெயர் வச்சது யார் ?
  த ம 3

  பதிலளிநீக்கு
 3. நட்பின் உரிமை என்றும் ஆனந்தம்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. அன்பில் உறைந்த நட்பு மேலும் அழகாய்த் தொடர வாழ்த்துக்கள்
  சகோதரா .

  பதிலளிநீக்கு
 5. நட்புக்கு சிறப்பு . செய்த பதிவு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அருமையான நினைவலைகள்...! வாழ்த்துக்கள்...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...