மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 13 பிப்ரவரி, 2013காதலர்களுக்காக... சில கவிதைகள்


புற்களே...
பூக்களைத் தூவுங்கள்
செருப்பில்லாமல்
என் காதலி..! காதலே நீ...
பேசிச் சென்ற
நாட்களைவிட...
பேசாமல் கொன்ற 
நாட்களே அதிகம்...! 
மழைக்கு ஒதுங்கினோம்
நிழற்குடையில்...
ஏனோ விலகமறுத்தது
மனசு..!
நீ நீரருந்திய 
டம்ளரை நான்
யாரையும் பயன்படுத்த
 விடுவதில்லை...
என்னைத் தவிர..!
நீ பூத்தது அறியாமல்
உன் வீட்டு வாசலில்
பூக்களோடு நான்..!
உன் அழைப்புக்காக
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது 
கையிலிருக்கும்
செல்போன்..!
துணைக்கு வருவாயா
தூறலே...
வெயிலில் என்னவள்..!


நண்பர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்....


(எனது கிறுக்கல்கள் வலைப்பூவில் எழுதியவை பிப்ரவரி-14  பகிர்விற்காக மீண்டும் ஒருமுறை இங்கே)


(படங்களுக்கு நன்றி இணையம் மற்றும் ஓவியர். இளையராசா)


-'பரிவை' சே.குமார்

3 கருத்துகள்:

  1. படங்களும் பதிவும் அருமை. வாழ்த்துக்கள், குமார்.

    பதிலளிநீக்கு
  2. குறுங்கவிதைகள் அனைத்தும் சிறப்பு! படங்களும் அழகு!

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...