மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 மே, 2012

செல்லரிக்காத நினைவுகள்

எனக்கும் உனக்குமான காதல்
துருப்பிடித்த இரும்பைப் போல்
தூரக் கிடக்கிறது...

வெற்றிடத்தை நிரப்பும்
காற்றைப் போல் மனதெங்கும்
வியாபித்திருக்கும் நினைவுகள்
எனக்குள் மட்டுமல்ல...
உனக்குள்ளும்தான்...

உறவுப் பார்வைக்குள்
உன் ஒற்றைப் பார்வை மட்டும்
சத்தமில்லாமல் சண்டையிடுகிறது
பார்த்தும் பார்க்காமல்
காதல் போர்க்களத்தில்
நிராயுதபாணியாய் நான்...

நம்மை தெரிந்த உறவுகள்
கூர்ந்து கவனிக்கின்றன
நம் குழந்தைகளின் பெயரை...
அவர்களுக்குத் தெரியுமா
நம் காதல் செல்லப்பெயர்கள்...



சொந்தமான நமக்குள்
பந்தமற்ற வாழ்வைக் கொடுத்த
கருணையற்ற காலத்தை
நினைத்து மறுதலிக்கும்
மனங்களின் முகவரியாய்
தவிக்கும் கண்கள்...

மணிக்கணக்கில் பேசும் நீ
மனதால் பேசுகிறாய்
எப்போதும் உதிர்க்கும்
ஒற்றைப் புன்னகையை
உலர்வாய் உதிர்த்தபடி...
உறவுகளோடு உறவாய்...
  காதலைச் சுமக்கும்
கல்லறை இதயத்துக்குள்
நீ பூத்த உலர் புன்னகையும்
உலராத புதுவரவாய்...

என் சிந்தைக்குள் நீயும்
உன் சிந்தைக்குள் நானும்
இப்போதும்... எப்போதும்...
செல்லரிக்காத நினைவுகளாய்...

-'பரிவை' சே.குமார்.

நன்றி : படம் இணையத்திலிருந்து

22 எண்ணங்கள்:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நல்லா இருக்கு குமார்..

\\நம்மை தெரிந்த உறவுகள்
கூர்ந்து கவனிக்கின்றன
நம் குழந்தைகளின் பெயரை...
அவர்களுக்குத் தெரியுமா
நம் காதல் செல்லப்பெயர்கள்...// :))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

காதல் என்ற எழுத்துக்களின் விரிவாக்கம் இந்தக் கவிதை.
ஓவியர் ஸ்யாமின் ஓவியம் கவிதைக்கு மிகப் பொருத்தம்.

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை.

கருணையற்ற காலம் கனியும் ஓர்நாள் நிச்சயம்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை கவிதை அருமை அருமை....!!!

செய்தாலி சொன்னது…

ம்ம்ம்
மனதை வருக்டுகிறது தோழரே
வார்த்தைகளும் கவிதையும்

Yoga.S. சொன்னது…

வணக்கம்,குமார் சார்!அருமையான காதல் கவிதை.அதிகம் படிக்காதவர்களும் புரிந்து கொள்ளக் கூடிய எழுத்து நடை,வாழ்த்துக்கள்!!!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//உறவுப் பார்வைக்குள்
உன் ஒற்றைப் பார்வை மட்டும்
சத்தமில்லாமல் சண்டையிடுகிறது
பார்த்தும் பார்க்காமல்
காதல் போர்க்களத்தில்
நிராயுதபாணியாய் நான்..//

அருமை.. ரொம்பவும் ரசிச்ச வரிகள்.

சத்ரியன் சொன்னது…

//நம்மை தெரிந்த உறவுகள்
கூர்ந்து கவனிக்கின்றன
நம் குழந்தைகளின் பெயரை...//

உலகெங்கும் இதேநிலை தான் போல.


மனதை அரிக்கும் வரிகள், குமார்.

சென்னை பித்தன் சொன்னது…

//என் சிந்தைக்குள் நீயும்
உன் சிந்தைக்குள் நானும்
இப்போதும்... எப்போதும்...
செல்லரிக்காத நினைவுகளாய்...//
உண்மைக்காதல் அதுதான்.நன்று.

மனோ சாமிநாதன் சொன்னது…

கவிதையும் அதன் உணர்வுகளும் அருமை!!

r.v.saravanan சொன்னது…

உறவுப் பார்வைக்குள்
உன் ஒற்றைப் பார்வை மட்டும்
சத்தமில்லாமல் சண்டையிடுகிறது

அருமை வரிகள் குமார்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி அக்கா...
நலமா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாமுதீன்...
ரொம்ப நாளாச்சு...
நீண்ட நாட்களாக பதிவுலகின் பக்கம் இல்லை போல...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமலெக்ஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மனோ அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. செய்தாலி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க யோகா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சாரல் அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கவிஞர் சத்ரியன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சென்னை பித்தன் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹேமா சொன்னது…

\\நம்மை தெரிந்த உறவுகள்
கூர்ந்து கவனிக்கின்றன
நம் குழந்தைகளின் பெயரை...
அவர்களுக்குத் தெரியுமா
நம் காதல் செல்லப்பெயர்கள்...//

சரியாகப் புரிந்துகொண்டால்...இந்தக் கவிதையின் உச்சமே இந்தப் பந்திதான்.நல்லாயிருக்கு குமார் !

vanathy சொன்னது…

super.

அனிதா ராஜ் சொன்னது…

அருமை சகோ......