மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 1 அக்டோபர், 2010

காந்தி ஜெயந்தி


நாளக்கி லீவு...
பின்பக்கமா வா...
எப்பவும் போல
எல்லாங் கிடைக்கும்
விலக்கி மேல
ரெண்டு மூணு
கொடுக்கணும்...
குடிமகன்களிடம்
மறக்காமல் சொன்னான்
டாஸ்மாக் ஊழியன்..!

-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

தமிழ்க்காதலன் சொன்னது…

அருமை அருமை தோழா.., இந்த தேசத்தின் அவலத்தை அற்புதமாய் காட்டிவிட்டீர். இந்த குடிமகன்களுக்கு "எதைப் பற்றிய" சிந்தனையும் கிடையாது..., தோழா. ஒரு பாட்டில் சாராயம்.., ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் தங்கள் வாழ்வை அடிமை சாசனம் அழுதி தரும் சோர புத்திக் கொண்ட சோம்பேறிக் கூட்டம்.... நம் தேசத்தை பாழ் படுத்தி விட்டது நண்பா, இன்னமும் வெறிப் பிடித்து ஆட்டம் போடும் இந்த கும்பல் "அரசியல்" சாயம் பூசிக் கொண்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் வெளியே திரிகிறார்கள். இதை யார் முடிவுக்கு கொண்டு வந்து, சாமானியன் கையில் இந்த தேசத்தை ஒப்படைபார்களோ.....?

எஸ்.கே சொன்னது…

பலருக்கு தேசிய விழாக்கள் இன்னொரு விடுமுறை நாளாக மட்டுமே அமைந்துவிடுகின்றன. அன்று என்ன தினம் என்று கூட அவர்கள் அறிவதில்லை.
இந்த நாளில் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை நினைத்து பார்ப்போம். அவரின் கொள்கைகளை பின்பற்ற முயற்சிப்போம்!

thamizhparavai சொன்னது…

கடமையுணர்ச்சி அதிகம் போல. :-)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்க்காதலன்...
உங்கள் கூற்று உண்மையே... இனி இந்த தேசம் சாமானியன் கைக்கு வருமா...? அது எப்படி நடக்கும்? நடப்பதற்கான வாய்ப்பே இல்லை.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எஸ்.கே....
உண்மைதான்...விடுமுறை நாளாக மட்டுமே நாம் எண்ணுகிறோமே தவிர அந்த தினத்தின் முக்கியத்துவத்தை யாரும் அறிவதில்லை.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்ப்பறவை...
ஆமா... கடமை உணர்ச்சி அதிகம்தான்... முதலாளி சொல்லியிருப்பாருல்ல... காந்தி ஜெயந்தி அன்னைக்கு விக்கிற பாட்டிலுக்கு உனக்கு கமிஷன் உண்டுன்னு...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மோகன்ஜி சொன்னது…

குமார்.. யதார்த்த நிலையை சொல்கிறது கவிதை. இங்கு மகாத்மாவுக்கும் மரியாதை இல்லை. நாளெல்லாம் டீவீயில் 'உலகத்திலேயே முதல் முறையாக' சினிமா பார்த்து விட்டு,காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக் கிழமை வந்து விட்டாலோ,லீவு போச்சே என் வருத்தப் பட்டு வாழும் சராசரிகள் ஆகி விட்டோம்.

Unknown சொன்னது…

தலைவரே சென்னையில் கிடைக்கவில்லை ... ரொம்ப வருத்தமா இருக்கு ...

ஹேமா சொன்னது…

காந்தித்தாத்தா பிறந்தநாளிலும் குடிமகன்களை நினைக்கிறீர்கள்.நல்லது குமார்.

r.v.saravanan சொன்னது…

மகாத்மா காந்தி அவர்களின் கொள்கைகளை பின் பற்ற முயல்வோம்

vanathy சொன்னது…

நல்லா இருக்கு கவிதை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மோகன்ஜி...
வாங்க செந்தில்...
வாங்க செந்தில்...
வாங்க ஹேமா...
வாங்க சரவணன்...
வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.