மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 20 அக்டோபர், 2010மனசின் பக்கம் 20/10/2010

வணக்கங்க... என்ன எல்லாரும் நலமா? கடந்த வியாழக்கிழமை இரவு கட்டைவிரலுக்குப் பக்கத்தில் திடீரென வீங்கி, உயிர் போற வலிங்க... அடுத்த ரெண்டு நாளும் வார விடுமுறைங்கிறதால அறையில் இருந்து எங்கும் செல்லாமல் ஏகப்பட்ட பாட்டி வைத்தியங்கள். சுலுக்கா இருக்கும் என்று சிலரும்... இல்லப்பா இது நடக்கிறப்போ கால் லேசா மடிச்சுக்கிட்ட மாதிரி இருக்கு என்று சிலரும் சொல்ல ஊரிலிருந்து வந்த மருந்துகள் எல்லாம் தேய்த்து உருவி... சுடு தண்ணீர் ஒத்தரம் எல்லாம் கொடுத்தாலும் சில நேரம் வலி குறையும் பின்னர் மீண்டும் வலி எடுக்கும் நிலைதான் தொடர்ந்தது.

சனி இரவு வேதனை குறைந்தது போல் இருக்க ஞாயிறு காலை மெதுவாக நடந்து சென்று அலுவலக காரில் வேலை செய்யும் இடம் சென்றுவிட்டேன். ஆனால் அங்கு அமர்ந்து வேலை செய்யும் போது வேதனை விரிய ஆரம்பித்து... கால் வீக்கமும் வலி பொறுக்க முடியாத வேதனையைக் கொடுக்க ஆரம்பிக்க... எழுந்து நடக்க முடியாத நிலையாகிவிட்டது. அங்கு வந்த எங்கள் அலுவலக நண்பர் என் நிலை கண்டு அழைத்து வந்து அறையில் விட்டுச் சென்றார்.

மாலை மருத்துவரிடம் சென்றோம். அவர் மதுரைக்காரர், முன்னர் இருமுறை அண்ணனுக்காக அவரிடம் சென்றிருக்கிறோம்... ஞாபகம் வைத்துப் பேசினார். எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை எல்லாம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்றார். எல்லா அறிக்கைகளும் வந்த பிறகு அவர் பரிசோதித்து உடம்பில் யூரிக் ஆசிட் கூடியிருப்பதாகவும் அதனால் மூட்டுக்கு மூட்டு வலி வரும் என்றும் சொன்னார். சாதாரணமாக ஒருவர் உடலில் 6% இருக்க வேண்டிய யூரிக் ஆசிட் எனக்கு 10.6% இருக்கிறதாம்... அதை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று கூறி சிக்கன், மட்டன் என ஒரு லிஸ்டே கொடுத்து இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் அவர் எழுதிக் கொடுத்துள்ள மாத்திரைகள ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்.

திங்களன்று அலுவலகம் செல்லவில்லை. நேற்று வழக்கம் போல் அலுவலகம் வந்தேன். காலை வரும்போது சாதாரணமாக இருந்த கால் ஒரு மணி நேர பிரயாணம், அலுவலக வேலை என நேரம் செல்ல செல்ல வீக்கமும் வலியும் கூட ஆரம்பித்தது. மாலை மீண்டும் வலி அதிகரித்தது. இரவு மாத்திரை மருந்து எடுத்துவிட்டு படுக்க, காலையில் பரவாயில்லை. இன்று சற்று வலி குறைந்திருந்தாலும் சாதாரணமாக நடக்க முடியவில்லை... இன்னும் நடக்கும் போது வலிக்கத்தான் செய்கிறது.

****

நான் ஒரு மாதத்திற்கு முன்னர் மனசின் பக்கத்தில் எனது அத்தை பேத்திக்கு கான்சர் என்றும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எழுதியிருந்தேன். நீங்களும் அந்தக் குழந்தைக்காக பிரார்த்தனை செய்தீர்கள். நமது பிரார்த்தனை பொய்த்துப் போனது. ஒரு வாரத்திற்கு முன்னர் 21/2 வயதே ஆன அந்தப் பிஞ்சு உயிர் நீத்தது.

இதில் கொடுமை என்னவென்றால் மதுரையில் பிரபலமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்தக் குழந்தை முதல் நாள் இரவே இறந்திருக்கிறது... கண்களை மட்டும் கட்டி வைத்துவிட்டு மூக்கில் இரண்டு டியூப்பை சொருகி உயிர் இருக்கிறது என்று நாடகம் ஆடியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அடுத்த நாள் மதியம் எல்லாருக்குமே குழந்தை இறந்துவிட்டது என்பது தெரிந்தாலும் 95% உங்க குழந்தை மரணத்தை நோக்கி போயாச்சு... இருந்தாலும் கடைசி 1% வரை நாங்க முயற்சிப்போம் என்று வசனம் வேறு பேசியிருக்கிறார்கள். அன்று இரவு 11 மணிக்கு மேல்தான் குழந்தை இறந்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு அவர்களது பில்தொகை முழுவதையும் கட்டியபிறகு குழந்தையை கொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் நான் எனது மச்சான் ஒருவரிடம் பேசியபோது அவர் கூறிய செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்தது. 'ஐத்தான்... நான் குழந்தையை பார்த்தேன்... கண்ண கட்டி வச்சிருக்காங்க... ஒண்ணும் இல்ல ஐத்தான்... இருந்தாலும் இங்க ரெண்டு நாளைக்குள்ள ரெண்டு குழந்தைங்க இறந்திருப்பதாலயும் ஆள் நடமாட்டம் அதிகமா இருப்பதாலயும் நம்ம குழந்தையை கொடுத்தால் ஆஸ்பத்திரிக்கு பேர் கெட்டுப் போயிடுமுன்னு நினைக்கிறாங்க... ராத்திரித்தான் தருவாங்க என்றார்.

அவர் கூறியது போல்தான் நடந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் குறைந்த பிறகே கொடுத்திருக்கிறார்கள். தங்கள் மருத்துவமனையில் சம்பாதிக்க மட்டுமே நினைத்து மனிதாபிமானத்தை மரணிக்க வைத்துவிட்டு மருத்துவப்பணி செய்யும் இவர்களும் மனிதர்கள்தான்..

நான் அந்த குழந்தையின் தந்தையான என் அத்தை பையனிடம் நேற்றுதான் பேசினேன். அந்தத் தந்தையின் வருத்தத்தையும் அழுகையையும் என்னவென்று சொல்வது?

***

சச்சின்... கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். முதல் டெஸ்டில் லஷ்மண், இஷாந்த் வெற்றிக்கு அழைத்து சென்றால் இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 200க்கு மேல் அடித்து தன்னுடன் விளையாடிய விஜயும் முதல் சதம் அடிக்க உறுதுணையாக இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர் விளாசி 50க்கு மேல் எடுத்து வெற்றிக்கனியை இந்தியாவை ருசிக்க வைத்தார். 14000 ரன் களைக் கடந்த முதல் வீரர் என்ற மற்றுமொரு மைல் கல்லை எட்டினார். அவரது சாதனைகளுக்கு எல்லையில்லை. சிங்கம் என்றும் சிங்கம்தான்.

***

சில நாட்களுக்கு முன்னர் ஜீ தொலைக்காட்சியில் 'சொல்லத் துடிக்குது மனசு' என்ற ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அதில் ஒரு ஏழை விவசாயியும் அவரது மகளும், மகனும் கலந்து கொண்டனர். அவர்களது பிரச்சினை என்னவென்றால் அந்தப் பெண்ணை பரம்பக்குடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை மலேசியாவில் இருக்கிறார். திருமணம் முடிந்து எட்டு வருஷமாச்சாம், திருமணம் முடிந்து மலேசியா சென்றவன் வரவேயில்லையாம். போனும் செய்வதில்லையாம். அந்த நிகழ்ச்சி மூலமாக போனில் அவனைத் தொடர்பு கொண்டால் மலாயில் பேசிவிட்டு ராங் நம்பர் என்று வைத்துவிட்டான்.

பின்னர் அவன் நண்பனிடம் பேசினால் அவன் இங்கு ஒரு செட்டப்பாத்தான் இருக்கான்... இந்தியாவுல இருந்து போன் வந்தாலே மலாயில் பேசி ராங் நம்பர் என்று சொல்லி வைத்துவிடுவான். நாங்களும் அவனை நாட்டிற்கு அனுப்பிவைக்க முயற்சிக்கிறோம். கண்டிப்பாக அவனை அனுப்பி வைப்போம். நீங்கள் செய்தி.. அது... இது என்று கலவரம் பண்ணினால் அவன் எங்களைவிட்டுப் பிரிந்து சென்றாலும் சென்றுவிடுவான் என்றார்கள்.

அப்புறம் நிகழ்ச்சியில் ஒரு சட்ட ஆலோசகர் அவர்களது பிரச்சினைக்கு சில ஆலோசனைகள் வழங்கினார். மனம் ஒத்து மணம் செய்தவன் மனம் மாறக் காரணம் என்ன? திருமணம் பிடிக்கவில்லை என்றாலோ அல்லது வேறு எதாவது காரணமாக இருந்தாலோ ஏன் ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுக்க வேண்டும்? மாமனார் மாமியாரின் ஆதரவு இருந்தும்... கணவன் அவளை ஒதுக்க அவர்களுக்குள் என்ன பிரச்சினை? விவாகரத்து வேண்டாம் அவருடன் வாழவே ஆசைப்படுகிறேன் என்று கண்ணீருடன் சொல்லிய அந்தப் பெண்ணுக்கு வாழ்வு கிடைக்குமா?

***

காமன்வெல்த் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னர் எத்தனை பிரச்சினைகள்... போட்டிகள் முடிந்து இப்ப விசாரணைகள் வேகமாக நடந்து வந்தாலும் போட்டிகளில் அதிக பதக்கங்களைக் குவித்து இந்தியாவை பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நிற்க வைத்த நம் வீரர்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

34 கருத்துகள்:

 1. விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள். உடம்பை கவனித்துக்கொள்ளவும். இரண்டாவது செய்தி மனதை கனக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 2. வலிகள் நீங்க பிரார்த்தனைகள்.

  இரண்டாவது செய்து :((((

  பதிலளிநீக்கு
 3. அந்த‌க் குழ‌ந்தைக்கு என் ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல்க‌ள்..வேதனை..

  பதிலளிநீக்கு
 4. உடம்மை கவனித்துக்கொள்ளுங்கள்...2வது செய்தி படித்ததும் கஷ்டமாயிடுச்சு..குழந்தைக்கு என் அஞ்சலி...

  பதிலளிநீக்கு
 5. உடல் நலனில் அக்கறை கொள்ளவும்.சகோ.நல்ல ரெஸ்ட் எடுங்க.டாக்டர் சொன்னதை பின் பற்றுங்க.ஊருக்கு ரிப்போர்ர்ட்டை அனுப்பி வேறொரு கன்சல்டேஷன் கேட்டு தெரிந்து கொள்ளவும்.கைப்பக்குவம் எதுவும் இருந்தாலும் ஊரில் தெரிவிப்பார்கள்.
  மாத்திரைகளை எடுப்பதோடு பத்திய உணவையும் கடைபிடித்து வரவும்.விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. போட்டிகளில் அதிக பதக்கங்களைக் குவித்து இந்தியாவை பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நிற்க வைத்த நம் வீரர்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.

  ....பெருமைப்பட வைக்கும் விஷயம்.

  ...அந்த மருத்துவமனை சம்பவம் - வேதனையானது.

  பதிலளிநீக்கு
 7. உயிர் காக்கும் பணியை காசுக்கு விக்கும் ஈனர்களை நினைச்சா.. ச்சேய்..

  குழந்தை பற்றி படிச்சதும் வார்த்தை வரல.. சாந்தி அடையட்டும்னு சொல்ற வயசா இது.. நிம்மதியா தூங்கட்டும்.

  கால் சீக்கிரம் சரி ஆகட்டும் குமார்.

  பதிலளிநீக்கு
 8. வாங்க எல்.கே...
  நன்றிங்க...இப்ப பரவாயில்லை...

  வாங்க வித்யா...
  உங்கள் அன்புக்கு நன்றிங்க...

  பதிலளிநீக்கு
 9. வாங்க அஹமது...
  ஆமா... மிகவும் வேதனையான சம்பவம் அது.
  உங்கள் வருகைக்கு நன்றி.

  வாங்க மேனகாக்கா...
  உங்கள் அன்பிற்கு நன்றி.
  வருத்தமான செய்திதான்... என்ன செய்ய அந்தக் குழந்தையை இறைவன் அழைத்துக் கொண்டானே...

  பதிலளிநீக்கு
 10. வாங்க ஆயிஷாக்கா...
  ரொம்ப நன்றிக்கா... கண்டிப்பா ஊருக்கு அனுப்பி செக் பண்ணச் சொல்கிறேன்... உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன். உங்க அன்புக்கு நன்றிக்கா.

  வாங்க சித்ராக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க ஐயா...
  ரொம்ப நாளாச்சு. அன்புக்கு நன்றி.

  வாங்க சுசிக்கா...
  உண்மைதான்... பணமே அவர்களின் மனிதாபிமானமாகிப் போச்சு. உங்கள் அன்புக்கு நன்றிக்கா.

  பதிலளிநீக்கு
 12. எனதினிய சிநேகத்துக்கு... வணக்கம். உங்கள் உடல் நலம் பெற மனமுறுகி பிரார்த்திக்கிறேன். தோழமையே... இந்த நிலையிலும் எழுத நினைக்கும் தங்கள் தைரியம் பாராட்டுக்குரியது. ஒரு சக நண்பனிடம் பகிர்வது போல் உங்கள் உணர்வுகள், சம்பவங்கள் பகிர்கிற அந்த எண்ணத்துக்கு நன்றி. உங்கள் அத்தைப் பையன் குழந்தையின் இழப்பு மனதைப் பிசைகிறது. வேதனையையும் எழுதி..... உடனே சச்சின் பற்றி எழுதி ஒரு வெற்றியை யோசிக்கிற உங்கள் சமயோசிதப் புத்தி புரிகிறது. இந்த நடுநிலை மனம் எல்லாருக்கும் வாய்க்காது. மிக்க நன்றி. உடல் நலம் கவனியுங்கள். மீண்டும் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. நலம் பெற வேண்டுதல் செய்கிறேன். . குழந்தை நிலை மிக்வும் கவலையளிக்கிறது.
  மருந்துகளை ஒழுங்காக் எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக் நீர் அருந்துங்கள். நலமோடு வாழ்க

  பதிலளிநீக்கு
 14. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  பதிலளிநீக்கு
 15. உங்கள் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் குமார்..
  விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. ந்த‌க் குழ‌ந்தைக்கு என் ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல்க‌ள்..வேதனை..

  பதிலளிநீக்கு
 17. விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

  மதுரை மருத்துவமனை சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

  குழந்தையின் மறைவால் தவிக்கும் அத்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்க என் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 18. நலம்பெற வாழ்த்துக்கள்!
  தொகுப்பு நன்று!

  பதிலளிநீக்கு
 19. உடம்பை முதல்ல கவனிங்க தம்பி! நல்ல டாகடராப் பார்த்து முழுமையா பரிசோதனைகள் செய்துக்குங்க.

  குழந்தையைப் பற்றி படித்ததும் மனசு கனத்துப் பொய் விட்டது.. அந்த மருத்துவ மனையை எரிக்க கண்ணகி இல்லையே!

  பதிலளிநீக்கு
 20. குழந்தை இறந்த செய்தி மனதைக் கனக்கச் செய்கிறது.

  மருத்துவமனையின் குளறுபடிகளைச் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால் அது எந்த மருத்துவமனை என்பதையும் சொன்னால்தான் மற்றவர்களும் ஏமாறாமல் இருப்பார்கள்.

  உங்கள் உடம்பையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க..

  பதிலளிநீக்கு
 21. வாங்க தமிழ்...
  அன்புக்கும் பரிவுக்கும் ரொம்ப நன்றிங்க... கண்டிப்பாக அனைத்தையும் உங்களிடம் பகிர்வதில் ஒரு மன நிறைவும் சந்தோஷமும் கிடைக்கிறது என்றால் அது மிகையாகாது.

  பதிலளிநீக்கு
 22. வாங்க நிலாமதி...
  ரொம்ப நன்றிங்க... மருந்துகளெல்லாம் எடுத்து வருகிறேங்க... குழந்தையை இழந்த பெற்றோரின் நிலை ரொம்ப கஷ்டங்க...

  பதிலளிநீக்கு
 23. வாங்க பிரபாகரன்...
  உங்கள் பரிவுக்கு ரொம்ப நன்றிங்க...


  வாங்க ஸ்வேதா...
  நன்றிங்க... ஏற்கனவே இணைந்தாச்சு.... ஆனால் தொடரத்தான் முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 24. வாங்க பாலாஜி...
  உங்கள் அன்புக்கும் பரிவுக்கும் நன்றி.

  வாங்க தியா....
  உங்கள் அன்புக்கும் பரிவுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க வெறும்பய அண்ணா...
  வேதனைதான்... சொல்ல முடியாத வேதனை வாழ்நாளெல்லாம்...

  வாங்க ராமலெஷ்மி அக்கா...
  உங்கள் அன்புக்கும் பரிவுக்கும் நன்றி.
  மதுரை மருத்துவமனை பிரபலமானது... ஆனால் இதுபோல் பல துயரங்களை சுமந்து கொண்டு கம்பீரமாய் நிற்கிறது.
  உங்கள் ஆறுதலுக்கு ரொம்ப நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 26. வாங்க எஸ்.கே...
  நானும் எல்லா இடத்திலும் (yeskay) என்றுதான் போடுவேன். உங்கள் அன்புக்கும் பரிவுக்கும் நன்றி.


  வாங்க மோகன் அண்ணா...
  உங்கள் அன்புக்கும் பரிவுக்கும் நன்றி. கண்டிப்பாக செய்கிறேன். அது நல்லாயிருக்கு எத்தனை கண்ணகி வந்தாலும் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது.

  பதிலளிநீக்கு
 27. வாங்க ஸ்ரீஅகிலா...
  அந்த சம்பவம் மிகக் கொடுமையானது.
  அந்த மருத்துவமனையின் பெயரைச் சொல்வதால் என்ன லாபம். எல்லாம் அந்த மதுரை மீனாட்சிக்கே வெளிச்சம். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சரியா சகோதரி.
  உங்கள் அன்புக்கும் பரிவுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. அந்த குழந்தையின் தந்தையான என் அத்தை பையனிடம் நேற்றுதான் பேசினேன். அந்தத் தந்தையின் வருத்தத்தையும் அழுகையையும் என்னவென்று சொல்வது?

  அந்த வலிக்கு வார்த்தைகள் இல்லை குமார்
  அந்த குழந்தைக்கு என் அஞ்சலி

  பதிலளிநீக்கு
 29. உடல் நலத்தை முதலில் கவனியுங்கள்!
  ஊரிக் ஆசிட் அதிகம் இருந்தனால் ஏற்பட்ட வலியென்றால் இதற்குள் குறைந்திருக்க வேண்டுமே! எதற்கும் இன்னொரு மருத்துவரிடம் பரிசோதனை செய்வது நல்லது!

  பதிலளிநீக்கு
 30. //உடம்பில் யூரிக் ஆசிட் கூடியிருப்பதாகவும் அதனால் மூட்டுக்கு மூட்டு வலி வரும் என்றும் சொன்னார்//
  சமீபத்தில் எங்கள் நண்பர் ஒருவர் இதே போல் டாக்டர் கூறினார் என்றார்... பாவம் அவர் சிக்கன் பிரியர்... இப்போ சாப்பிட வழி இல்லைன்னு புலம்பல்

  இரண்டரை வயசா... ரெம்ப பாவம் அந்த குழந்தை... அதை விட பெற்றோர்... விதி தான்... ச்சே

  பதிலளிநீக்கு
 31. அந்த பிஞ்சை இழந்ததுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னே தெரியலை.. அதேசமயம், மருத்துவமனைகள் இப்படி நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...