மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 28 அக்டோபர், 2010மனசின் பக்கம் 28/10/2010

 சிவகெங்கை சோழபுரம் தந்த எங்கள் சித்தப்பு கருவேல நிழல் பா.ரா. அவர்கள் இல்லத் திருமண விழாவிற்கு சென்று வந்த சந்தோஷத்தைக் கொடுத்தது மாதவராஜ் அண்ணன் அவர்களின் பகிர்வும் போட்டோக்களும். அதில் அண்ணன் அவர்களை சித்தப்பா, தங்கையிடம் அறிமுகம் செய்யும்போது மாதவராஜ் என்றதாகவும் தங்கையும் அண்ணனை முன்பே அப்பா மூலம் அறிந்திருந்ததால் புன்சிரிப்புடன் பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.

வலையுலக நட்பு ஒரு பந்தமாக எப்படி இறுகிக்கிடக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதும். மேலும் திருமணப் போட்டோக்களை அகநாழிகை வாசு அவர்களும், பாசத்துடன் கூடிய நெகிழ்ச்சியான பதிவை சிவாஜி சங்கர் அவர்களும் பகிர்ந்துள்ளனர்.

இவர்களைப் போல் பலர் அந்தத் திருமண நிகழ்வைப் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக கவிதையில் வாழ்த்துச் சொன்ன தேனக்கா, ராகவன் அண்ணா எல்லோரிடமும் அன்புடன் பாசமும் பந்தமும் கலந்திருந்தது. நான் முன்பு ஒருமுறை எழுதியதுபோல் வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.

*****

எனக்கு சில நாட்களுக்கு முன் கல்லூரியில் நாங்கள் படிக்கும்போது படித்த அண்ணன் ஒருவர் புதுக்கோட்டையில் இருந்து பின்னூட்டமிட்டிருந்தார். எங்கள் ஆசானில் அரவணைப்பில் நாங்கள் எல்லாம் ஒன்றாக பாரதி விழாக்கள், கவியரங்கம் என எல்லாவற்றிலும் இணைந்திருந்தோம். அதை நினைவு கூர்ந்து என்னை நீங்கள் யார் என்று கேட்டிருந்தார்கள்.

பின்னர் நான் மின்னஞ்சலில் உங்களுடன் பழகியவன்தான் நான் என்பதையும் அந்த நாள் நினைவுகள் சிலவற்றையும் பகிர்ந்த உடன் மிகவும் மகிழ்வுடன் பதிலனுப்பினார். எங்கள் நட்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூக்க இணையம் உதவியது.

*****


2010 – உலகின் தலை சிறந்த ஹீரோவாக ஒரு தமிழரை உருவாக்குவோம் வாருங்கள். நாம் திரை நாயகர்களுக்கு பாலாபிஷேகம், மதுக்குடம், பால்க்குடம் எல்லாம் எடுப்போம். அவர்கள் உண்மையில் ரியல் நாயகர்கள்தானா? கண்டிப்பாக இல்லை... இங்கே... மதுரையில் 29 வயதேயான இளைஞர், உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

அதற்கு காரணம்... அவருடைய 21 வயதில் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைக்க, தனது பெற்றோரிடம் சொல்லிக் கொள்ள வந்தவரின் வாழ்க்கை ஒரு மனநலம் குன்றியவர் மாற்றிவிட்டார். ஆம்... ஒரு மனநலம் குன்றிய வயதான மனிதர் அவரது மலத்தையே உணவாக உண்ணும் அவலத்தைக் கண்டு அவரை சுத்தப்படுத்தியதுடன் அவருக்கு உணவும் வாங்கி ஊட்டியிருக்கிறார். இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இது. அன்று முதல் மனநலம் குன்றியவர்களுக்க்காக இவர் தன் வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்.

இந்த மனிதரின் பெயர் நாராயணன் கிருஷ்ணன். தலை சிறந்த மனிதரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு வலையில் நடக்கிறது. வாக்குப் பதிவுக்கான கடைசி நாள் : 25/11/2010. எதற்காகவோ மணிக்கணக்கில் நம் நேரத்தைச் செலவழிக்கும் நாம் ஒரு வாக்கிற்காக சில நிமிடங்களை செலவழிக்கலாமே.

நான் என் வாக்கைப் பதிந்துவிட்டேன் நீங்களும் வாக்கைப் பதிய இங்கே சொடுக்குங்கள்.


இது குறித்த விரிவான இடுகைகள் நம் நண்பர்கள் பலரின் வலைப்பூவில் வந்துள்ளது. சகோதரி கௌசல்யா அவர்களின் பதிவைப் படிக்க....


*****
 சச்சின் மட்டும்தான் சதம் அடிப்பாரா... நாமளும் அடிச்சாச்சுல்ல... அதாங்க நம்ம நட்பு வட்டம் 100ஐ புடிச்சாச்சு... முகம் அறியாமல அம்மா, அப்பா, சித்தப்பா, சகோதரன், சகோத்ரி, நண்பன் என ஒரு அன்பு வளையத்துக்குள் நம்மை வரவைத்த வலைப்பூவில் என் உறவுகள் நான்கு வலையிலுமாக 200 தொட்டாலும் கடந்த சில மாதமாக வேலைப்பளூவின் காரணமாக மனசில் மட்டுமே எழுதுகிறேன். எனவே என் மனசைத் தொடரும் 100 உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்... நன்றியும்... தொடருங்கள் தொடரட்டும் நம் நட்பு என்றும் நட்போடும் சந்தோஷத்தோடும்....

-'பரிவை' சே.குமார்.

22 கருத்துகள்:

 1. கலவையாய்

  எல்லாம் மகிழ்ச்சியானவைகளாய்...!

  பதிலளிநீக்கு
 2. சதத்திற்க்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 3. வோட்டியாச்சு... சதத்திற்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. நூற்றுக்கு நூறு!!! சூப்பர்!
  Congratulations!

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் குமார்,வோட் போட்டாச்சு

  பதிலளிநீக்கு
 6. நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. நூறுக்கு வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 8. நல்ல தொகுப்பு. சதத்துக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 9. நல்ல பதிவு குமார்ண்ணா! இப்படி வலைபூ நட்புகள் எல்லாம் அருமையாக அமைய கொடுத்து வைத்திருக்கணும்.

  பதிலளிநீக்கு
 10. நூறுக்கு வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 11. அன்பு தோழா வணக்கம். உங்களைப் போலவே நானும் பேப்பரில் மதுரைக்காரர் பற்றிப் பார்த்தேன். நெஞ்சம் உருகிப் போனேன். மிக்க மகிழ்ச்சி. நல்ல விசயங்கள் செய்ய கொடுத்து வைக்க வேண்டும். அதிலும் தமிழனுக்கு....!
  உங்கள் உடல் நலம் இன்னும் நலமில்லை எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். விரைவில் குணமடைய வேண்டுகிறேன். நம்முடைய சொந்த பந்தங்கள் எல்லாம் நலமா? வந்து போங்கள்..நம்மப் பக்கம். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் குமார்.

  38வது ஓட்டு என்னது.

  பதிலளிநீக்கு
 13. வாங்க கதிர் அண்ணா....

  வாங்க பத்மாக்கா...

  வாங்க மேனகாக்கா...

  வாங்க தமிழ்ப்பறவை...

  வாங்க சித்ராக்கா....

  வாங்க சி.பி....

  வாங்க சந்தானகிருஷ்ணன்...

  உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 14. வாங்க பாலாஜி சரவணா...

  வாங்க ராமலெஷ்மி அக்கா...

  வாங்க இலா...

  வாங்க வெறும்பய சார்...

  வாங்க வித்யாக்கா....

  வாங்க தமிழ்க் காதலன்....

  வாங்க சுசிக்கா....

  உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. அந்த உண்மையான ஹீரோவிற்கு எல்லோரும் உதவணும்....
  தங்களின் சதத்தினள் 71 வது ஓட்டமாய் அமைந்ததை பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 16. பகிர்வு அருமை குமார்.. வாழ்த்துக்கள் சதமடித்ததற்கு.. என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 17. வாங்க ம.தி.சுதா....

  வாங்க தேனம்மை அக்கா...

  வாங்க தாராபுரத்தான்...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...