மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

சட்டைக்காரி

 ந்த எழுத்து என்ன கொடுத்தது..?

என்னடா இது எப்ப எழுதினாலும் இந்த வரியை எழுதுகிறான் என நீங்கள் நினைக்கலாம்... ஆனால் இந்த வார்த்தைகள் நான் அடிக்கடி கேட்கும், கடந்து வரும் வார்த்தைகள்... இதைத் தாண்டித்தான் என் எழுத்துப் பயணம் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த எழுத்து நிறைய நட்பைக் கொடுத்திருக்கிறது... என் எழுத்தை விரும்பும், மாற்றுக் கருத்துக்களை யோசிக்காமல் சொல்லும் பல நல்ல நட்புக்களையும் கூடுதலாகக் கொடுத்திருக்கிறது... சில நண்பர்கள் எதை எழுதினாலும் முதலில் எனக்கு அனுப்பி வாசித்துச் சொல் என்று கேட்கும்  உரிமையைக் கொடுத்திருக்கிறது... இவற்றைவிட வேறென்ன செய்து விட முடியும் இந்த எழுத்து..? செய்வதை சிறப்பாகவே செய்து கொண்டிருக்கிறது.

அப்படித்தன எழுத்தாளர் கரன் கார்க்கியின் புதிய நாவலான சட்டைக்காரியை எழுதிய சூடு ஆறும் முன், அவர் மீண்டும் பிழைகள் திருத்தும் முன், அவரின் முந்தைய நாவல்களில் இரண்டே இரண்டு நாவல்களை வாசித்து நான் எழுதிய பதிவின் வழி என்னை அழைத்துப் பேசியதன் மூலமாக மட்டுமே, ஏதோ ஒரு புள்ளியில் நட்பாகி எனக்கு அனுப்பிக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். 

உண்மையில் நண்பர்களின் எழுத்து என்பது என் எழுத்துப் போல... உரிமையாய் அவர்கள் அனுப்புவதும் நான் வாசிப்பதும் சில வருடங்களாகத் தொடர்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தான் எழுதிய நாவலை நீ வாசித்துச் சொல் எனக் கொடுப்பது என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.

சட்டைக்காரியை வாசிக்க ஆரம்பித்து எங்கும் நிறுத்த முடியாமல் வேலை காரணமாக இடை நிறுத்தி இரண்டு மூன்று நாளில் அவர் அனுப்பிய முன்னூற்று அம்பது பக்கத்துக்கு மேலான, திருத்தம் செய்யப்படாத, ஆசிரியரின் மனதில் என்ன தோன்றியதோ அதை அவர் எழுதிய அதே விதத்தில் அப்படியே வாசித்தேன். அப்பவே அது குறித்து எழுத மனம் துடித்தாலும் இன்னும் அச்சுக்குப் போகவில்லையே என்பதால் எழுதவில்லை.

எழுதவில்லை என்றாலும் அவருடன் அது குறித்து நீண்ட உரையாடல் செய்ய வாய்த்தது. எனக்குத் தோன்றிய சில முரணான விஷயங்கள் குறித்துப் பேசினோம். எல்லாவற்றுக்கும் விரிவான விளக்கம் கொடுத்தார். ஒருவருக்குப் பிடித்தது மற்றொருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக எழுத்தைத் தப்பெனச் சொல்லும் உரிமை யாருக்கும் இல்லைதானே... அவரின் விளக்கமும் விரிவான பேச்சும் சட்டைக்காரியைவிட இன்னும் சிறப்பாக இருந்தது. நிறையத் தெரிந்து கொண்டேன்.

இப்போது புத்தகமாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் ஆசிரியரின் அனுமதியுடன் அது குறித்து எழுத முடிந்தது. விரிவாகவே எழுதியிருக்கிறேன்... நீண்ட பதிவுதான்... முகநூலிலோ இங்கோ பகிர்வதை விட எதாவது ஒரு தளத்தில் பகிரலாம் என்ற எண்ணம் வந்ததும் அவருடன் பேசும்போதே இரண்டு தளங்களை முன் வைத்தேன். அதில் என் எழுத்துக்கு ஒரு களம் அமைத்து கொடுத்து பிக்பாஸ் பதிவுகளை எழுத வைத்த தமிழ் டாக்ஸ் தளத்தில் பகிரலாம் என்ற எண்ணம் வலுவானபோது சகோதரர் எழுத்தாளர் கவிஞர் சிவமணியிடன் விபரம் சொல்லி அனுப்பிக் கொடுத்தேன்.

சட்டைக்காரி நாவலுக்கான அட்டைப்படம் இன்னும் வராததால் கிடைத்த படத்தை சகோதரர் சிவமணிக்கு அனுப்பிக் கொடுக்க, அதை அவர் பதிவேற்றும் போது அவர்களின் தளம் ஏற்றுக் கொள்ளவில்லை, பின்னர் நீலம் இதழில் ஒரு அத்தியாயம் பகிரப்பட்ட போது அவர்கள் பகிர்ந்த படத்தை எடுத்து அந்த ஒரு அத்தியாயம் என்பதை நீக்கிப் பகிர்ந்த போதும் எடுத்துக் கொள்ளவில்லை... படம் இணைப்பதில் சிக்கல் இருப்பதையும் அவரின் படத்தைப் போட்டுப் பகிரலாமா என்ற எண்ணத்தையும் சிவமணி என்னிடம் சொன்னபோதும் நான் முயற்சிக்கிறேன் என அதே படத்தை எடுத்து மாற்றம் செய்து அனுப்பிய போது அதைத் தளம் உள் வாங்கிக் கொள்ள, உடனே தளத்தின் நூல் முகம் பகுதியில் பகிர்ந்து விபரமும் சொன்னார். நன்றி சிவமணி.

தளத்துக்குக் கொடுக்கும் முன் எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களுக்கு அனுப்பியதும் வாசித்து ரொம்ப நல்லாயிருக்கு நித்யா என்றார்.  இதை விட வேறென்ன கொடுத்து விட முடியும் இந்த எழுத்து... நீலம் இதழிலும் கொஞ்சம் சுருக்கி வெளியிடலாம் என்றும் சொல்லியிருக்கிறார். 

வாசித்து நாலைந்து மாதம் ஆன போதிலும், சில பெயர்களை மட்டும் மீண்டும் தேடிப் பார்த்துக் கொண்டாலும் கதை என் மனதுக்குள் அப்படியே இருந்தது. அதைத்தான் அசைபோட்டு எழுதினேன். மறு வாசிப்பு எல்லாம் செய்யவில்லை. புத்தகமானபின் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும்.

சட்டைக்காரி நாவல் குறித்தான பார்வையை வாசித்து உங்கள் கருத்தை அங்கும் இங்கும் சொல்லுங்கள். பதிவை வாசிக்க இங்கே சொடுக்குங்கள். இதுவரை 38 பேர் பதிவைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

தமிழ்டாக்ஸ் தளத்தில் 'சட்டைக்காரி'

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

வெளிவரப்போகும் கதைக்கான முன்னோட்டமாய்...   சிறப்பு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விமர்சனம் அருமை குமார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான கதை என்று உங்கள் எழுத்திலிருந்தே தெரிகிறது. தமிழ்டாக்ஸ் தளத்தில் சென்று படித்தேன். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் குமார். பாராட்டுகள். நூலாசிரியருக்கும் வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி...

ஸ்ரீராம் அண்ணா....

தனபாலன் அண்ணா...

வெங்கட் அண்ணா...