மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 6 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : தாஜ்மஹால்

புதிது புதிதாய் சட்டங்கள்...

வித்தியாசம் வித்தியாசமாய் திட்டங்கள்...

சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு நன்மை பயக்குமா என்பதெல்லாம் பற்றி யாருக்கும் கவலை இல்லை... என்ன சட்டம் போட்டாலும் என்ன திட்டம் போட்டாலும் எவனும் எதிர்த்துக் கேட்கமாட்டான் என்ற மதர்ப்பு அவர்களுக்கு அதிகமாகிவிட்டது. அதன் விளையே இந்த கேவலமான சட்டங்களும் திட்டங்களும்... இந்தக் கேடு கெட்ட சட்டங்களும் திட்டங்களும் மக்கள் நிலை மறந்து  மாநிலத்திலும் மத்தியிலும் குத்தாட்டம் போடுகின்றன. அப்படியான குத்தாட்டத்தில் ஒன்றுதான் சமீபத்திய தாஜ்மஹால் குறித்தான சட்டம்.

Image result for தாஜ்மஹால்

தாஜ்மஹால்...

என்ன ஒரு கம்பீரம்... என்ன ஒரு அழகு...

இந்தியாவின் சிறப்புக்களில் அதுவும் ஒன்று என்பது ஏன் இந்தக் கூமுட்டைகளுக்குத் தெரியவில்லை. மதமும் சாதியுமே இங்கே மரியாதைக்குரியதாய் இருப்பதுதான் இந்தியாவின் சாபக்கேடு. மொகலாயன் கட்டியது... இந்தியக் கட்டிடக் கலைக்கு எதிரானது என்பது எல்லாம் எவ்வளவு அபத்தமான பேச்சு... அது கட்டிடக் கலைக்கான சின்னம் என்பதைவிட காதலுக்கான... அதுவும் ஒரு ஆத்மார்த்த காதலுக்காக கட்டப்பட்ட காதல் சின்னம்... அதை சுற்றுலா இடங்கள் பட்டியலில் இருந்து நீக்குவது என்பது முட்டாள்தனமானது.  இந்த முட்டாள்களின் ஆட்சியில் இன்னும் என்ன என்ன அரங்கேறப் போகிறதோ தெரியவில்லை.

அபுதாபி வரும் முன்னர் சான்றிதழ்களை எல்லாம் தில்லியில் போய் சான்றொப்பம் (attestation) வாங்க வேண்டும் என்பதால் மிகப்பெரிய மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் மதுரையில் இருந்து சென்னை வந்து நாங்கள் மூவர் தில்லி நோக்கி இரயிலில் கிளம்பினோம்... நல்ல குளிர் காலம்... வெடவெடவென ஆட்டும் குளிர்... மூவரில் துணையாய் வந்த அண்ணனுக்கு அபுதாபி கொடுத்த அனுபவத்தால் ஹிந்தி அத்துபடி... நாம் தமிழர் என்பதால் ஹிந்தி தள்ளியே நின்றது... இப்பவும் அப்படித்தான் இருக்கு... அது வேற விஷயம். அவர் ஒரு ஹோட்டலில் தங்க வைத்து கையெழுத்து வாங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்க... முதல் நாள் போனபோது கூட்டத்தில் எங்களால் வாங்க இயலா நிலை... முதல் அங்க போ... அப்புறம் இங்க வா... கடைசியா அமீரகத் தூதரகம் போன்னு விரட்டியதால் முதல் நாள் அறைக்கு வெறுங்கையுடன் திரும்பி... மறுநாள் இரண்டு இடத்தில் வாங்கி விட, அமீரகத் தூதரகத்தில் நேரம் முடிந்துவிட்டது இன்று போய் நாளை வா என்றார்கள். மறுநாள் காலையில் சீக்கிரமாகப் போய் வரிசையில் நின்று கொடுத்தால் பணம் கட்டியதும் நாளை மறுநாள் வந்து வாங்கிக்கங்க என்று சொல்லிவிட பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்க முடிவு செய்து சுற்றினோம்.

மறுநாள் அதிகாலை ஆக்ரா நோக்கிப் பயணித்தோம் தாஜ்மஹாலையும் பார்க்க. அங்கு இறங்கியதும் இங்கு நமது பழனியில் ஏமாற்றுவது போல் ஆட்கள் நம்மை வட்டமிடத்தான் செய்கிறார்கள். அதெல்லாம் கடந்து தாஜ்மாஹால் நுழைவாயில் போய் டிக்கெட் எடுத்து உள்ளே கொண்டு போகக் கூடாது என்று சொன்னவற்றை கொண்டு போகாமல் புல்வெளியில் நடந்து யமுனை ஆற்றின்  கரையில் நிற்கும் அந்தக் காதலின் பொக்கிஷத்தை... வெள்ளை ஒவியத்தை... ஷாஜகானின் காதலை... மும்தாஜின் அழகு முகத்தை... ஒரு பகல் முழுவதும் சுற்றி ரசித்தோம்... ஆஹா எத்தனை ரசனையானவன் ஷாஜகான்... காதல் மனைவிக்கு ஒரு பளிங்கு மண்டபம்... என்ன அழகு... என்ன கம்பீரம்... இத்தனை அழகான கம்பீரமான ஒரு நினைவுச் சின்னத்தை கட்ட வேண்டுமெனில் எவ்வளவு நேசத்தை தன் மனைவி மீது வைத்திருந்திருப்பான் அந்த மொகலாயன்.

தாஜ்மாஹாலைக் கட்டியது யார்...? என்றதும் நாமெல்லாம் கொத்தனார் என்று சொல்லிச் சிரித்த காலமும் உண்டு... இப்பவும் இது போன்ற நகைச்சுவைகள் வலம் வருவதுண்டு. கொத்தனார்தான் கட்டினார் என்றாலும் தன் காதலுக்கு... தன் மனைவியின் மீதான நேசத்துக்கு... தாஜ்மஹால் என்னும் கட்டிடடத்துக்கு உயிர் கொடுத்தவன் ஷாஜகான் அல்லவா...? எப்படி அவனுக்குள் இப்படியொரு... நம் அன்பர்கள் சொல்வது போல் கல்லறை கட்ட வேண்டும் என்று தோன்றியது. எப்படி இவ்வளவு அழகான காதல் காவியத்தை இந்த மட இந்தியர்களுக்கு கொடுத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. இதற்கான திட்டத்தை எத்தனை காலம் தன் மனசுக்குள் தீட்டி... எத்தனை முறை கட்டிப் பார்த்திருப்பான். நம் இராஜராஜன் தஞ்சைக் கோவிலை பார்த்துப் பார்த்துக் கட்டியது போல்... இங்கும் கட்டிய கொத்தனார்களும் சிலை செய்த சிற்பிகளுமே காரணம் என விதண்டவாதம் பேசினாலும் அந்தக் கோவிலை இப்படிக் கட்ட வேண்டும்... அப்படிக் கட்ட வேண்டுமென இராப்பகலாக மனசுக்குள் திட்டம் தீட்டி... ஆலோசித்து... இரவு பகல் பாராது ஒரு அரசன் வேலையாட்களுடன் அலைந்து திரிந்து கட்டுவதென்பது சாதாரணக் காரியாமா...? இங்கு ஒரு வார்டு பிரதிநிதி கூட காரை விட்டு இறங்காமல்தான் திரிகிறார்கள்... பேருந்து நிறுத்தம் கட்டினால் அது காவு வாங்குகிறது. சுண்ணாம்பையும் கல்லையும் வைத்து ஆயிரம் ஆயிரம் காலத்துக்கும் அழகு குறையாமல் நிமிர்ந்து நிற்கும்படி கட்டியிருக்கிறானே இராஜராஜன், அவனைப் புகழாமல்... காலகாலத்துக்கும் காதல் சின்னமாய் நிற்கும்படி கட்டியிருக்கிறானே ஷாஜகான், அவனைப் புகழாமல்... வேறு யாரைப் புகழ முடியும்..? வேறு யாரைப் போற்ற முடியும்..?

இங்கு சமாதிகளில்தான் தர்மயுத்தமும் தியானமும் செய்கிறார்கள்... முக்கிய முடிவுகள்... அது என்னான்னு கேக்கக்கூடாது... அவர்களுக்குத் தேவையான முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்னர் சமாதிகளில் விழுந்து வணங்கி எழுகிறார்கள்.  நீங்களோ ஒரு காதலின் சின்னத்தை... இந்தியாவின் அடையாளத்தை அது ஒரு கல்லறை... நம் கட்டிடக் கலைக்கு எதிரானது... மொகலாயன் கட்டியது என்றெல்லாம் சொல்லி பட்டியலில் இருந்து நீக்குவது ஆணவத்தின் அடையாளமே...  உங்கள் ஆணவம் அழிவை நோக்கித்தான் கொண்டு செல்லும் என்பதை எப்போது உணர்வீர்கள்..? உங்கள் முடிவுகள் எல்லாமே தோல்வியின் பக்கத்தில் திரும்பியிருப்பதை உணர்ந்தும் உணராதது போல் இருப்பதால் என்ன பயன்..?

தாஜ்மஹாலை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் கோமாளிக்குத் தெரியவில்லை... அது சுற்றுலாத் தளமல்ல... ஒவ்வொரு இந்தியனின் மனசுக்குள்ளும் உட்கார்ந்திருக்கும் காதலின் சின்னம்... நம் இந்தியாவின் அடையாளம். இது போன்ற கேனத்தனங்களை அரங்கேற்றுவதை விடுத்து மக்கள் நலனுக்கான... இந்திய முன்னேற்றத்துக்கான திட்டங்களை எப்போது தீட்டுவீர்கள்...? மக்கள் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எப்போது எடுப்பீர்கள்..?

தாஜ்மஹால் மத சின்னம் அல்ல... அது இந்தியர்களின் அடையாளம்...

-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

ராஜி சொன்னது…

கிறுக்கு பய ஊரில்.. பழமொழி தெரியும்தானே?!

KILLERGEE Devakottai சொன்னது…

தாஜ்மஹால் மதச்சின்னம் அல்ல... அது இந்தியர்களின் அடையாளம்.
முடிவில் முத்தாய்ப்பான வார்த்தைகள் அருமை நண்பரே
த.ம.2

ஸ்ரீராம். சொன்னது…

சர்ச்சைகளைக் கிளப்பவே இது மாதிரி அறிவிப்புகள் வெளியிடுவார்கள் போல!

'பசி'பரமசிவம் சொன்னது…

சந்தேகமில்லை. அவர்கள் அழிவை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வேதனை

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் சர்ச்சையைக் கிளப்பவே இது போன்ற அறிவிப்புகள் என்றே தோன்றுகிறது...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தாம் செய்யும் சில செயல்களை மறைப்பதற்காக அவ்வப்போது அரசியல்வாதிகள் நம்மை திசை திருப்ப இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தாஜ்மகால், தாஜ்மகால்தான். அதன் கம்பீரத்திற்கு முன்னால் இவர்களின் வெற்றுச்சொற்கள் வீணாகிவிடும் என்பதே என் நம்பிக்கை.

துரை செல்வராஜூ சொன்னது…

தேவையில்லாத வேலைகளிலேயே அந்தக் கூட்டத்தின் கவனம் சென்று கொண்டிருக்கின்றது..

ஒருவழி செய்யாமல் ஓய மாட்டார்கள்!..

தவிரவும் -

பெரிய கோயில் கட்டுமானத்தில் காரை இல்லையே.. கற்களின் இணைப்பு தானே!..

துரை செல்வராஜூ சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Thenammai Lakshmanan சொன்னது…

sariya soneengka Kumar sago. athu kattidamalla. ovvoruvar manathukkulum irukkum kathal sinnam !

vimalanperali சொன்னது…

சர்ச்சைதான்...!

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

tha.ma.9

Unknown சொன்னது…

இப்போது சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது ,இன்னும் சில காலங்களில் கிழிந்து விடுவார்கள் ஜி :)

settaikkaran சொன்னது…

மேம்படுத்தப் பட வேண்டிய சுற்றுலாத் தளங்கள் என்ற பட்டியலில் தாஜ் மஹால் பெயர் இடம்பெறவில்லை என்பதை மறைத்து என்னமோ தாஜ் மஹாலை இருட்டடிப்பு செய்ய உ. பி. அரசு முயற்சி செய்வது போல ஒரு பிம்பத்தைத் தோற்றுவித்து இதை வைத்து ஒரு பரபரப்பை கிளப்பி இல்லாததை இருப்பதுபோல சொல்லி முரண்டு பிடிப்பது என்ன நடுநிலை. கேட்கிறவன் கேனயன் என்றால் கேப்பையில் நெய் என்பது சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. நடத்துங்க.

settaikkaran சொன்னது…

தமிழகத்தில் இருக்கிற மதுரை மீனாட்சி கோவில் இந்தியாவில் மிக சுத்தமான ஆலயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி எல்லாம் எழுதினால் அது தப்பு. :-)

settaikkaran சொன்னது…

சரிதான் கிறுக்குப் பய ஊரில் யார் எது சொன்னாலும் உடனே அதை ஆராயாமல் உடனே ஆமாம் சாமி போடணும். :-)

settaikkaran சொன்னது…

கூடிய சிக்கிரம் 'அவமானச் சின்னம்' என்ற தலைப்பில் தாஜ் மஹால் ரகசியங்கள் குறித்து எழுதுவேன். :-)

பெயரில்லா சொன்னது…

குமார், யாரும் எதையும் நீக்கவில்லை. நீக்கவும் முடியாது. முதலில் உங்களுள் இருக்கும் வெறுப்பை, கோபத்தை நீக்குங்கள். இது போன்ற பதிவுகள் உங்களுக்கு அழகல்ல.